search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "startling information"

    • ஓட்டேரி, புளியந்தோப்பு உள்ளிட்ட காவல் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
    • அஞ்சலையைத் தொடர்ந்து மேலும் இரண்டு ரவுடிகளை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் ரவுடி கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் திருவேங்கடம் என்ற ரவுடி போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

    இந்த நிலையில் போலீசாரால் தேடிவரப்பட்ட பெண் தாதாவான அஞ்சலை புளியந்தோப்பில் இன்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது ஓட்டேரி, புளியந்தோப்பு உள்ளிட்ட காவல் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

    பெண் தாதாவான அஞ்சலை ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளுக்கு ரூ.10 லட்சம் பணத்தை வழங்கி இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதன் அடிப்படையில் போலீசார் அவரை தீவிரமாக தேடிவந்தனர்.

    புளியந்தோப்பு போலீஸ் நிலையத்தில் உள்ள ரவுடிகள் சரித்திர பதிவேட்டில் அஞ்சலையின் பெயர் உள்ளது. கந்து வட்டி வசூலிப்பது தொடர்பாக அவர் மீது புகார்கள் உள்ள நிலையில் பி.வகை ரவுடிகள் பட்டியலில் அஞ்சலை இடம் பெற்றிருக்கிறார். இந்த கொலை வழக்கில் அஞ்சலைக்கு தொடர்பு இருப்பதை தொடர்ந்து பாஜக அவரை கட்சியில் இருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது.

    அஞ்சலையைத் தொடர்ந்து மேலும் இரண்டு ரவுடிகளை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை ஐஸ் ஹவுஸை சேர்ந்த எல்லப்பன் என்ற ரவுடியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறைவாசிகளுக்கு வெளியில் இருந்து பண உதவி, சிறைவாசிகளிடம் இருந்து வெளியில் தகவல்களை கூறுபவராக எல்லப்பன் செயல்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

    ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய கோடாரி ஒன்றை வாங்கியதும், அதனை ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய பயன்படுத்தியதும் தெரிய வந்துள்ளது. முதல் திட்டம் வேலூரில் இருந்து தொடங்கியுள்ளது.

    முதலில் வேலூரில் வைத்து அருள், பொன்னை பாலுவை மூளை சலவை செய்துள்ளார். அதற்காக பாலு, தங்க பிரேஸ்லெட்டை வைத்து ரூ.3.50 லட்சம் பணமாக்கியுள்ளார். சம்போ செந்தில் இன்ஸ்டாகிராம் மூலமாக ஹரிஹரனுக்கு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். கோடாரி ஒன்றை வாங்கி ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய அதனை பயன்படுத்தியதும் தெரிய வந்துள்ளது. மேலும் பல உண்மைகள் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.

    • மர்ம கும்பல் வழிமறித்து ஆதித்யனை வெட்டி கொலை செய்தது.
    • போலீசார் 7 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் செய்து வேடம்பட்டு மாவட்ட சிறையில் அடைத்தனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம்அருகே விக்கிரவாண்டி போலீஸ் சரகம் கப்பியாம்புலியூரை சேர்ந்தவர் ஆதித்யன். (வயது45) பா.ம.க.மாவட்ட துணைச் செயலாளர். இவர் கடந்த 24 -ந் தேதி இரவு மோட்டார் சைக்கிளில் பனையபுரத்தில் இருந்த ஊருக்கு திரும்பி கொணடிருந்தார். மண்டபம் கிராமம் அருகே சென்ற ேபாது மர்ம கும்பல் வழிமறித்து ஆதித்யனை வெட்டி கொலை செய்தது. இது பற்றி ஆதித்யன் மனைவி சாந்தி புகாரின் பேரில் மாவட்ட எஸ்.பி.,ஸ்ரீநாதா மேற்பார்வையில் டி.எஸ்.பி .,பார்த்திபன் இன்ஸ்பெக்டர் வினாயக முருகன் மற்றும் தனிப்படைபோலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த கொலையை கோலியனூரை சேர்ந்த மெக்கானிக் ராகவன், மதன் ,கப்பியாம் புலியூரை சேர்ந்த ராமு , குயில் என்கிற லட்சுமி நாராயணன் , வினோத் ,விஷ்ணு , பரந்தாமன், ஆகியோர் சேர்ந்து செய்தது தெரிய வந்தது. மேலும் விசாரணை செய்ததில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த பைக் மீது டிப்பர் லாரி மோதிய சாலை விபத்தில் கப்பியாம்புலியூரை சேர்ந்த இவர்களது நண்பரும், ராமுவின் டிரைவருமான பிரேம்குமார்,20: என்பவர் இறந்தார்.

    மேலும் ராமு கடந்த ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் நின்ற போது தோற்றுப் போனார். இதில் ரூபாய் 50 லட்சம் மேல் ராமுவிற்கு நஷ்டமாகி குடும்பத்து டன் ஊரைவிட்டு சென்னை சென்று விட்டார் இதற்கெ ல்லாம் காரணம் ஆதித்யன் தான் என ராமு தரப்பினருக்கு முன்விரோதம் இருந்தது. இதில் பலமுறை ஆதித்யனை கொலை செய்ய முயற்சித்தும் முடியவில்லை. கடந்த 22 ம் தேதி வினோத் தனது மகளுக்கு 2-வது பிறந்த நாளை கொண்டாட கப்பியாம்புலியூரில் நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மது அருந்திய போது ஆதித்யனை கொல்ல சதி திட்டமிட்டனர். சம்பவத்தன்று ஆதித்யனை முதலில் நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி செய்துள்ளார் அது தோல்வியுற்றதால் பின்னர்கத்தியால் வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.

    விக்கிரவாண்டி போலீசார் 7 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் செய்து வேடம்பட்டு மாவட்ட சிறையில் அடைத்தனர். பாமக பிரமுகர் கொலை சம்பந்தமாக இரண்டு நாட்களாக நிலவிய பதட்டமான சூழ்நிலை 7 பேர் கைது செய்ததன் மூலம் பரபரப்பு அடங்கியது.மேலும் காப்பி அவர்களுக்கு கிராமத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ×