search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Starvation"

    • உலகம் முழுவதும் அண்மைக்காலங்களில் வீகன் டயட் முறை மிகவும் பிரபலமாகி வருகிறது
    • இந்த வீகன் உணவு முறையால் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் கிடைக்காமல் போகலாம் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்

    உலகம் முழுவதும் அண்மைக்காலங்களில் வீகன் டயட் முறை மிகவும் பிரபலமாகி வருகிறது. வீகன் டயட் முறையை பின்பற்றுபவர்கள் இறைச்சி உணவுகள் மட்டுமில்லாமல், கால்நடைகளின் மூலம் கிடைக்கும் பால், தயிர், முட்டை போன்ற உணவுப் பொருட்களையும் உட்கொள்ள மாட்டார்கள்.

    முழுக்க முழுக்க காய்கறி, பழங்களை மட்டுமே மையப்படுத்திய இந்த உணவு முறையால் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் கிடைக்காமல் போகலாம் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனாலும் உலகம் முழுவதும் பலர் இந்த உணவு முறையை பின்பற்றுகின்றனர்.

    இந்நிலையில் ரஷ்ய நாட்டில் வீகன் டயட் முறையை பின்பற்றுவதாக கூறி, உணவு, தண்ணீர், தாய்ப்பால் என எதுவும் கொடுக்காததால் பிறந்த குழந்தை ஒன்று 1 வயது நிறைவடைவதற்குள் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

    வீகன் டயட் முறையை தீவிரமாக பின்பற்றும் 44 வயதான மாக்சிம் லியுட்டி, ஒரு வயதுக்கும் குறைவான மற்றும் 1.5 கிலோ எடையுள்ள தனது குழந்தைக்கு சூரிய ஒளியில் இருந்து ஊட்டச்சத்து கிடைக்கும் என்று பட்டினி போட்டுள்ளார்.

    குழந்தையின் தாயான ஒக்ஸானா மிரோனோவா (34) தனது குழந்தைக்கு தாய்ப்பால் கூட கொடுக்க கூடாது என மாக்சிம் லியுட்டி தடுத்துள்ளார்.

    மேலும் தனது குழந்தையை வைத்து பரிசோதனை செய்த அவர், குழந்தைக்கு சூரிய ஒளியால் கிடைக்கும் நன்மைகள் குறித்து மற்றவர்களுக்கு எடுத்து கூறியுள்ளார்.

    உணவு, தண்ணீர், தாய்ப்பால் கொடுக்கப்படாததால் உடல் மெலிந்த குழந்தை நிமோனியா நோயால் உயிரிழந்துள்ளது என்று மருத்துவ அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தனது மகனை பட்டினி போட்டு கொலை செய்த குற்றத்தில் மாக்சிம் லியுட்டிக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    இதே போல் கடந்தாண்டு தீவிர வீகன் டயட் உரையை பின்பற்றிய 39 வயது பெண்மணி ஸன்னா சம்சனோவா பரிதாபமாக மரணமடைந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    ரஷ்யாவை சேர்ந்த அவர், உணவு தண்ணீர் எடுக்காமல் தீவிரமாக வீகன் டயர் முறையை பின்பற்றினார். இதனால் நாளுக்கு நாள் உடல் மெலிந்து வந்த அவர் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் உயிரிழந்தார்.

    கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வீகனாக இருந்து வரும் இவர் பலருக்கும் வீகன் டயட் முறையை பின்பற்றுவது குறித்து இன்ஸ்டாவில் ரீல்ஸ் போன்றவற்றை தயார் செய்து பலருக்கும் முன்னுதாரணமாகவும் இருந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 10 வருடங்களுக்கு மேலாக இத்தகைய உணவு முறை சிறப்பானது என கூறி வந்தார்
    • சாம்சோனோவா சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை

    சைவ உணவு உண்பவர்களை வெஜிடேரியன்கள் என்றும் சைவ உணவுகளிலும் கூட பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களான தயிர், யோகர்ட், மோர், பாலாடை கட்டி மற்றும் வெண்ணெய் போன்றவற்றையும் உண்ணாதவர்கள் வேகன் என அழைக்கப்படுவார்கள்.

    இந்த வேகன் உணவுகளை சமைக்காமல், பச்சை காய்கறிகளாகவும், கனிகளாகவும் மட்டும் உண்டு வந்து, பிறரையும் உண்ண பிரசாரம் செய்து வந்தவர் ரஷியாவை சேர்ந்த ஜன்னா சாம்சோனோவா (39).

    சுமார் 10 வருடங்களுக்கு மேலாக இத்தகைய உணவு முறை சிறப்பானது என கூறி சமூக வலைதளங்களில் ஜன்னா டார்ட் எனும் பெயரில் பிரச்சாரம் செய்து வந்தார்.

    "என் உடலும், மனமும் தினமும் மாறுவதை நான் காண்கிறேன். இப்பொழுது உள்ள என் புதிய 'என்னை' நான் விரும்புகிறேன். பழைய உணவு பழக்கங்களுக்கு போக விரும்பவில்லை" என வலைதளங்களில் பதிவு செய்திருந்தார். கடந்த 7 வருடங்களாக சாம்சோனோவா, பலாப்பழமும், டூரியன் பழங்களும் மட்டுமே உண்டு வந்தார்.

    இந்நிலையில் சாம்சோனோவா, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வந்தார்.

    இலங்கையில் சுற்றுப்பயணம் செய்தபோது, சில மாதங்களுக்கு முன் அவர் மிகுந்த களைப்புடன் இருந்தார். அவர் கால்கள் வீங்கி இருந்தன. நீண்ட சிகிச்சைக்காக அவரை மருத்துவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை.

    பிறகு அவர் தாய்லாந்து சென்றார். அங்கு அவரது உடல்நிலை மேலும் மோசமாகியது. அவரை சிகிச்சை எடுத்து கொள்ள சொல்லி அவரது நண்பர்கள் வற்புறுத்தியும் அவர் மறுத்துவிட்டார்.

    இந்நிலையில் அவர் பட்டினியால் உயிரிழந்தார்.

    பட்டினியால் ஏற்பட்ட களைப்பினாலும், முழுவதும் வேகன் உணவாகவே உண்டு வந்ததால் ஏற்பட்ட அழுத்தத்தாலும், காலரா நோயால் பாதிக்கப்பட்டவரை போல் மாறி தன் மகள் இறந்ததாக அவரின் தாயார் தெரிவித்தார்.

    சாம்சோனோவாவின் இறப்பிற்கான அதிகாரபூர்வ காரணம் தெரிவிக்கப்படவில்லை.

    உணவு மற்றும் ஊட்டச்சத்துக்களுக்கான வல்லுனர்களின் ஆலோசனையின்படியே உணவு பழக்கங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும், தகுந்த மருத்துவ வழிகாட்டுதல் இல்லாமல் செய்து கொள்ளும் இதுபோன்ற மாறுதல்கள் உடல்நலத்தை மோசமடைய செய்து உயிருக்கும் ஆபத்தாகலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

    டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுமிகள் பட்டினி காரணமாக இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #MysteriousDeath #BlamedStarvation
    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு நேற்று முன்தினம் 3 சிறுமிகளை ஒரு பெண்ணும், ஆணும் கொண்டு வந்தனர். அவர்களை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்தபோது 3 பேரும் இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் சிறுமிகளின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அப்போது பட்டினி காரணமாக 3 சிறுமிகளும் இறந்தது தெரியவந்தது. இறந்த 3 சிறுமிகளும் அக்காள், தங்கைகள். இந்த சிறுமிகளில் இளைய சகோதரிக்கு 2 வயதும், அடுத்த சகோதரிக்கு 5 வயதும், மூத்த சகோதரிக்கு 8 வயதும் இருக்கும். சிறுமிகளின் தந்தை ரிக்‌ஷா ஓட்டும் தொழிலாளி. கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது ரிக்‌ஷா காணாமல் போய் விட்டது.

    பிழைப்புக்கு வழி இல்லாததால், தனது நண்பர் ஒருவரது வீட்டில் மனைவி, குழந்தைகளுடன் தங்கி இருந்துள்ளார். இந்த நிலையில் தான் 3 சிறுமிகளும் இறந்து உள்ளனர். சிறுமிகள் இறப்பு முதலில் இயற்கையான இறப்பு என்று கூறப்பட்டது. ஆனால் அவர்கள் தங்கி இருந்த குடியிருப்பில் இருந்து சில மருந்து பாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டன.

    எனவே சிறுமிகளின் உடல்கள் பிரேதபரிசோதனை செய்யப்பட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதற்கிடையே சிறுமிகள் இறப்பு குறித்து நீதி விசாரணை நடத்த டெல்லி அரசு உத்தரவிட்டு உள்ளது.  #Tamilnews 
    ஜப்பானில் உள்ள கங்வா என்ற இடத்தில் 5 வயது பெண் குழந்தையை தாயே பட்டினி போட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    டோக்கியோ:

    ஜப்பானில் உள்ள கங்வா என்ற இடத்தை சேர்ந்த இளம்பெண் யூரி (வயது 25). இவர், வாலிபர் ஒருவருடன் வாழ்ந்து வந்தார்.

    அவர்களுக்கு யுவா என்ற பெண் குழந்தை பிறந்தது. பின்னர் யூரி அந்த வாலிபரை பிரிந்து புனாட்டோ (33) என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

    முதல் கணவருக்கு பிறந்த யுவாவையும் தன்னுடன் வைத்து வளர்த்து வந்தார். நாளடைவில் அந்த குழந்தை மீது யூரிக்கு வெறுப்பு ஏற்பட்டது. 2-வது கணவர் புனாட்டோவும் வெறுப்பை காட்டினார்.

    அவர்கள் இருவரும் குழந்தை யுவாவை கொடுமைப்படுத்தினார்கள். தற்போது அவளுக்கு 5 வயது ஆகி இருந்தது. தொடர்ந்து கொடுமைப்படுத்தியதுடன் உணவும் கொடுக்காமல் பட்டினி போட்டனர். இதில், அந்த குழந்தை இறந்து விட்டது.

    இதன் பிறகு போலீசுக்கு புனாட்டோ போன் செய்து தனது குழந்தை திடீரென மயங்கி விழுந்து விட்டதாகவும், இதய துடிப்பு இல்லை என்றும் கூறினார்.

    போலீசார் அங்கு வந்து பார்த்தனர். அந்த குழந்தை இறந்து கிடந்தது. 5 வயதில் குழந்தைகள் 20 கிலோ வரை எடை இருக்கும். ஆனால், இந்த குழந்தை 12 கிலோதான் எடை இருந்தது. மிகவும் ஒல்லியாக இருந்தது. எனவே, சந்தேகம் அடைந்த போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    யுவாவின் நோட்டு புத்தகத்தை பார்வையிட்டனர்.

    அப்போது ஒரு இடத்தில் தனது தாயும், வளர்ப்பு தந்தையும் தன்னை தினமும் கொடுமைப்படுத்துகிறார்கள். இதை யாராவது தடுத்து நிறுத்துங்கள் என்று எழுதப்பட்டு இருந்தது.

    அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்திய போது, கணவன் - மனைவி இருவருமே அந்த குழந்தைக்கு உணவு வழங்காமல் பட்டினி போட்டு கொன்றதாக கூறினார்கள். இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். #Tamilnews
    ×