search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "State Assembly Elections"

    • முதலமைச்சரின் உணர்வோடு நீங்கள் செயல்பட வேண்டும்.
    • யார் எதிர்த்து நின்றாலும் திமுக தான் வெற்றி பெறும் என்ற நிலையில் நிர்வாகிகள் செயல்பட வேண்டும்.

    விழுப்புரம் மாவட்டத்தில் கலைஞர் அறிவாலயத்தில் அம்மாவட்ட பொறுப்பாளர் கவுதமசிகாமணி தலைமையில், விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் பொன்முடி, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சுமணன், அன்னியூர் சிவா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அப்போது, வனத்துறை அமைச்சர் பொன்முடி பேசியதாவது:-

    வரும் 2026 சட்டசபை தேர்தலில் யார் வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும், ஏன் தனக்கே கூட இடம் இல்லாமல் போகலாம்.. அதனால், யார் நிறுத்தபட்டாலும் யார் எதிர்த்து நின்றாலும் திமுக தான் வெற்றி பெறும் என்ற நிலையில் நிர்வாகிகள் செயல்பட வேண்டும்.

    சட்டசபை தேர்தலில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 7 தொகுதிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் போட்டியிடுவார்கள் என்பதை யார் நிறுத்தினாலும் வெற்றி பெற செய்யவேண்டு

    தலைவர் யாரை கழக வேட்பாளராக நிறுத்துகிறாரோ அவர்தான் நம் கண் முன் தெரிய வேண்டுமே தவிர வேறு எதுவும் இருக்கக்கூடாது.

    முதலமைச்சரின் உணர்வோடு நீங்கள் செயல்பட வேண்டும். கழகத்திற்காக பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆந்திராவில் மக்களவைத் தேர்தலோடு சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.
    • ஒடிசாவில் உள்ள 147 தொகுதிகளில் ஆட்சியை பிடிக்க 74 இடங்கள் தேவை.

    ஆந்திராவில் மக்களவைத் தேர்தலோடு சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. இதன்படி 175 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த மே 13-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

    ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 175 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் சந்திரபாபு நாயுடுதலைமையிலான தெலுங்கு தேசம், ஜனசேனா, பாஜக ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

    கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 98-120 தொகுதிகளைக் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு 55-77 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஒடிசா

    ஒடிசாவில் 147 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் பா.ஜ.க. அதிக தொகுதிகளை பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அக்கட்சிக்கு 62 முதல் 80 இடங்கள் வரை கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.

    அதேநேரம், பிஜு ஜனதா தளம் (பிஜேடி) கட்சி 62 முதல் 80 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஒடிசாவில் அடுத்து யார் ஆட்சி என்பதில் பா.ஜ.க. மற்றும் பி.ஜே.டி. இடையே கடுமையான போட்டி இருக்கும். அதேநேரம், காங்கிரஸ் கட்சிக்கு இந்த தேர்தலில் 5 முதல் 8 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்பது கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

    இன்றைய கள நிலவரத்தை பொறுத்த வரையில் ஆந்திராவில் உள்ள 175 தொகுதிகளில் ஆட்சியை பிடிக்க 88 இடங்கள் தேவை. ஒடிசாவில் உள்ள 147 தொகுதிகளில் ஆட்சியை பிடிக்க 74 இடங்கள் தேவை. எனவே ஆந்திரா மற்றும் ஒடிசா மாநில சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை அமைக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×