search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "State Secretary"

    • அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மிகுந்த மனவருத்தத்துடன் ராஜினாமா செய்கிறேன்.
    • மூன்று ஆண்டுகள் தங்களுடனும் மக்கள் நீதி மய்யம் உறவுகளுடனும் இணைந்து பயணிக்க வாய்ப்பளித்தமைக்கு நன்றி.

    மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர் அனுஷா ரவி பதிவிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது

    மாற்றத்திற்கான அரசியலில் கடந்த மூன்று ஆண்டுகள் தங்களுடனும் மக்கள் நீதி மய்யம் உறவுகளுடனும் இணைந்து பயணிக்க வாய்ப்பளித்தமைக்கும், கட்சியில் பொறுப்புகள் வழங்கியமைக்கும் நன்றி. இந்த மூன்று ஆண்டுகளில் நீங்கள் வழங்கிய பொறுப்புக்களை உங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப மிகச்சிறப்பாக செயல்படுத்தி உங்கள் பாராட்டுக்களை பெற்றதில் மகிழ்ச்சி.

    இருப்பினும். தேர்தல் அரசியலில் மய்யம் பங்கேற்காமல் இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதினால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மிகுந்த மனவருத்தத்துடன் ராஜினாமா செய்கிறேன் என்று அவர் கடிதத்தில் பதிவிட்டுள்ளார்.

    • மாநில பொருளாளர் மற்றும் தேசிய செயலாளராக ஸ்ரீவை சுரேஷ்தேவன் உள்ளிட்ட நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
    • இளைஞரணி செயலாளர்கள் சின்னதம்பி, பிரபாகரன் மற்றும் நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், ஆளுயர மாலை அணிவித்தும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

    திருப்பூர்:

    அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில குழு கூட்டம் கடந்த 8-ந்தேதி மதுரையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கான புதிய பொறுப்பாளர்கள் பெயர்கள் மத்திய குழுவிடம் பரிந்துரை செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கட்சியின் அகில இந்திய தலைவர் நரேன் ஜெட்டர்ஜி, தேசிய தொழிற்சங்க பொதுச்செயலாளர் சிவசங்கர் ஆகியோர் வழிகாட்டுதலின்படி, தேசிய பொதுச்செயலாளர் தேவராஜன் தமிழக புதிய பொறுப்பாளர்களை டெல்லி நேதாஜி பவனில் அறிவித்தார்.

    இதன்படி அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில தலைவராக முன்னாள் எம்.எல்.ஏ. பி.வி.கதிரவன், மாநில பொதுச்செயலாளராக எஸ்.கர்ணன், மாநில பொருளாளர் மற்றும் தேசிய செயலாளராக ஸ்ரீவை சுரேஷ்தேவன் உள்ளிட்ட நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

    மாநில பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு எஸ்.கர்ணன் திருப்பூருக்கு முதல்முறையாக வந்தார். அவருக்கு திருப்பூர் எல்லையான தாராபுரம் ரோடு கோவில்வழியில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் திருப்பூர் மாநகர் மாவட்ட தலைவர் மகாலிங்கம், மாவட்ட செயலாளர் மகேஷ்குமார் ஆகியோர் தலைமையில் துணைத்தலைவர் ரவி, அமைப்புச் செயலாளர் காளீஸ்வரன், இளைஞரணி செயலாளர்கள் சின்னதம்பி, பிரபாகரன் மற்றும் நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், ஆளுயர மாலை அணிவித்தும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

    மேலும் அங்குள்ள கருப்பராயன் கோவிலில் சிறப்பு பூஜையும் நடைபெற்றது. பின்னர் கட்சியின் மாநகர் மாவட்ட தலைமை அலுவலகத்தில் முக்குலத்தோர் தேசிய கழகத்தின் நிறுவனத்தலைவர் எஸ்.பி.ராஜா, மாநில இளைஞரணி செயலாளர் சுரேஷ் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மாநில பொதுச்செயலாளர் கர்ணனுக்கு சால்வை அணிவித்தும், புத்தகம் வழங்கியும் வாழ்த்து தெரிவித்தனர்.

    இதேபோல் பல்வேறு கட்சிகளை சேர்ந்த அரசியல் முக்கிய பிரமுகர்கள் நேரிலும், செல்போன் மூலமாகவும் கர்ணனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மாநில பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள கர்ணன் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக இருப்பதுடன், மாநில துணைத்தலைவர், மாவட்ட பொதுச்செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளையும் வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

    • கூடுதல் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ஆய்வு நடத்தினர்.
    • திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடந்தது.

    திருப்பூர் :

    நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் பொன்னையா ஆகியோர் திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ஆய்வு நடத்தினர். பின்னர் திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் முன்னிலை வகித்தார். உதவி கமிஷனர்கள், பொறியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் மாநகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி, அம்ரூத் திட்டம், பொது நிதி, தொகுதி வளர்ச்சி நிதி, 15வது நிதிக்குழு மானியத் திட்டப்பணிகள், வரி உள்ளிட்ட வருவாய் இனம் குறித்த நிலவரம் என அனைத்து பணிகளும் ஆய்வு செய்யப்பட்டது. குடிநீர் சப்ளை நடைமுறை குறித்தும் அவர்கள் கேட்டறிந்தனர்.

    மாநகராட்சி நிர்வாகத்தில் வரியினங்கள், வாடகை உள்ளிட்ட கட்டண வசூல் ஆகியன விரைவுபடுத்தி வசூல் பணிகள் மேம்படுத்த வேண்டும். வரி மறு சீரமைப்பு பணிகள் துரிதகதியில் செய்து முடித்து நிலுவையின்றி வசூலிக்க வேண்டும். வளர்ச்சிப் பணிகள் குறித்த காலத்துக்குள் விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். பணிகள் தரமாகவும், எந்த புகாருக்கும் இடம் தராத வகையிலும் முறையாக மேற்கொள்ள வேண்டும்.சுகாதாரப்பணிகள், குடிநீர் வினியோகம் ஆகியன எந்த தடையுமின்றி பொதுமக்கள் நலன் சார்ந்து மேம்படுத்தும் வகையில் மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டது.

    தெலுங்கானா மாநில காங்கிரஸ் கட்சிக்கு புதிதாக மூன்று செயலாளர்களை அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி நியமித்துள்ளார். #RahulGandhi #AICC #Telangana

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநில காங்கிரஸ் கட்சி செயலாளராக சதீஷ் ஜார்கிஹோலி செயல்பட்டு வந்தார். இந்நிலையில், அவரை நீக்கிவிட்டு, அதற்கு பதில் புதிதாக மூன்று செயலாளர்களை அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி நியமித்துள்ளார்.

    கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த என்.எஸ்.போஸ் ராஜூ, சலீம் அகமது மற்றும் கேரளாவை சேர்ந்த ஸ்ரீனிவாசன் கிருஷ்ணன் ஆகிய மூன்று பேரையும் தெலுங்கானா மாநில செயலாலர்களாக நியமித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று உத்தரவிட்டுள்ளார். #RahulGandhi #AICC #Telangana
    ×