என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Street Lights"
- தெருவிளக்குகள் எரியாததால் இரவில் கிராமமே இருளில் மூழ்கி கிடக்கிறது.
- சுவிட்ச் கோளாறு,மின் இணைப்பில் பிரச்சினை இருந்தால் அதை மின்வாரியமே சரி செய்ய வேண்டும்.
புதியம்புத்தூர்:
புதியம்புத்தூர் அருகே உள்ள ஜம்புலிங்கபுரம் ஊராட்சியை சேர்ந்த மேல வீரபாண்டியபுரம் கிராமத்தில் 30 தெரு மின்விளக்குகள் உள்ளன. இந்த தெரு மின்விளக்குகள் கடந்த 20 நாட்களாக எரியவில்லை. இதனால் இரவில் கிராமமே இருளில் மூழ்கி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த ஊரைசுற்றி விவசாய தோட்டங்கள் இருப்பதால் பாம்பு போன்ற விஷ சந்துகளால் பொதுமக்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. தெரு விளக்கு பராமரிப்பு பணியை ஊராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. தெரு விளக்கு சுவிட்ச் கோளாறு மற்றும் மின் இணைப்பில் பிரச்சினை இருந்தால் அதை மின்வாரியமே சரி செய்ய வேண்டும். ஜம்புலிங்கபுரம் மன்ற தலைவி செல்வராணி தெரு விளக்கு எரியாதது குறித்தும், அதை சரி செய்ய புதியம்புத்தூர் மின்வாரிய அலுவலகத்தில் பலமுறை தெரிவிதும் மின் இணைப்பு கோளாறு சரி செய்யப்படவில்லை.
மற்ற பணிகளை விட மின்விளக்கு எரிய வைப்பது மின்வாரியம் முக்கியத்துவம் கொடுத்து மின் இணைப்பு பழுதை சரி செய்து மேலவீரபாண்டியபுரம் கிராமத்தில் எரியாமல் இருக்கும்30 தெரு விளக்குகளையும் எரிய வைக்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சமத்துவபுரத்தில் உள்ள நகர்ப்புற மேம்பாட்டு குடியிருப்பில் புதிதாக 30 தெரு விளக்குகள் ஒதுக்கபட்டுள்ளது
- நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில் தகவல்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை சமுத்துவபுரம் நகராட்சி தொடக்கப்பள்ளியில், காலை உணவு வழங்கும் திட்டத்தை, நகர் மன்ற தலைவர் திலகவதி செந்தில் நேரில் ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களுக்கு உணவு பரிமாறிய அவர், அவர்களுடன் அமர்ந்து கிச்சடி சாப்பிட்டார். அதை தொடர்ந்து நகர் புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தினால் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். தினமும் காலையில் வாகனம் மூலம் குப்பைகள் சேகரிப்படுகிறதா என்பது குறித்து அங்கு கேட்டறிந்தார்.
அதன் பின்னர் நமது செய்தியாளரிடம் அவர் கூறும்போது, நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தினால் கட்டப்பட்டுள்ள 42 பிளாக்களில் 1920 வீடுகள் உள்ள பகுதிக்கு 30 தெரு விளக்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தெரு விளக்குகள் விரைவில் பொருத்தப்படும் என்று அவர் கூறினார். அதன் பின்னர் தைலா நகரில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது கவுன்சிலர்கள் மதியழகன், பழனிவேல் உடனிருந்தனர் .
- 352 கிலோமீட்டர் தூரத்திற்கு குடிநீர் இணைப்பு விடுபட்டு உள்ளது தெரிய வந்துள்ளது.
- ரூ.99 கோடியே 80 லட்சம் மதிப்பில் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட உள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி அவசர கூட்டம் இன்று காலை மேயர் தினேஷ் குமார் தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு கமிஷனர் பவன் குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மேயர் தினேஷ்குமார் பேசியதாவது:- திருப்பூர் மாநகராட்சி பகுதியில் பல ஆண்டுகளாக இருந்து வந்த தெரு விளக்கு பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக முதல் கட்டமாக 3 மற்றும் 4 வது மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் 4755 தெரு விளக்குகளுக்கு டெண்டர் விடப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.அதேபோல் 1 மற்றும் 2-வது மண்டலம் உட்பட்ட பகுதிகளில் 4,238 தெரு விளக்குகளுக்கும் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் மின் சிக்கனத்தை கடைபிடிக்கும் வகையில் சோடியம் விளக்குகளுக்கு பதிலாக எல்இடி., விளக்குகள் பொருத்தும் பணிக்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது.இந்தப் பணிகள் அனைத்தும் நாளை தொடங்கப்பட உள்ளது.மாநகர் முழுவதும் சுமார் 14,000 தெரு விளக்குகள் பொருத்தப்பட உள்ளது.
இதே போல் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் நான்காவது கூட்டு குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதிகளில் எடுக்கப்பட்ட பிரத்யேக ஆய்வில் 352 கிலோமீட்டர் தூரத்திற்கு வீடுகள்இ வணிக வளங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு குழாய்கள் பதிப்பது மற்றும் குடிநீர் இணைப்பு வழங்குவது விடுபட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து ரூ.56 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஜூன் இறுதிக்கு முன்பாக இந்த பணிகள் தொடங்கப்படும்.மாநகர் முழுவதும் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.99 கோடியே 80 லட்சம் மதிப்பில் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட உள்ளது.
மாநகர் பகுதிகளில் பாதாள திட்டப்பணிகள் 89 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. கோடை காலத்தில் குடிநீர் பிரச்சினை இல்லாத வகையில் நான்கு நாட்களுக்கு ஒரு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்திலேயே நமக்கு நாமே திட்டத்தில் அதிக நிதியை திருப்பூர் மாநகராட்சி பெற்றுள்ளது தற்போது ரூ.1கோடியே 80 லட்சம் மதிப்பில் பணிகள் நடந்து வருகிறது. மழைநீர் பிரச்சனைக்கு தீர்வாக தண்ணீர் தேங்கும் இடங்களில் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டது என்றார்.
- மேலச்செல்வனூரில் தெரு விளக்குகள்-மின் மாற்றிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஊராட்சி மன்றத்தலைவர் மகரஜோதி கோபாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சாயல்குடி
சாயல்குடி அருகே மேலச்செல்வனூர் ஊராட்சி மன்றத்தலைவராக இருப்பவர் மகரஜோதி கோபால கிருஷ்ணன். என்ஜினீயரான இவர் தனது மக்கள் பணி குறித்து கூறியதாவது:-
மேலச்செல்வனூர் கிராமத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து அம்மன் கோவில் வரை ரூ.10 லட்சத்திலும், மேலச்செல்வனூர் யாதவர் தெருவில் ரூ.6.56 லட்சத்தி லும், அங்குள்ள அம்மன் கோவில் பகுதியில் இருந்து பிள்ளையார் கோவில் வரை ரூ.4 லட்சத்திலும், மேலச்செல்வனூர் மருது பாண்டியர்நகர் பகுதியில் ரூ.2.70 லட்சத்திலும் பேவர் பிளாக் சாலைகள் அமைக்க ப்பட்டுள்ளது. மேலச்செல்வ னூர் யாதவர் தெருவில் 100 மீட்டரும், ஆதி திராவிடர் காலனி பகுதியில் 100 மீட்டரும் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
மேலச்செல்வனூர் பொது ஊரணியில் ரூ.4 லட்சத்தில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு உள்ளது. ஊருணியில் படித்துறை ரூ.50 ஆயிரத்தில் பழுது பார்க்கப்பட்டுள்ளது. மேலச்செல்வனூர் கிராமத்தில் 1½ கிலோ மீட்டர் தூரத்தில் பைப் லைன் விஸ்தரிப்பு செய்து கிராம மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.
பொது மயானத்தில் ரூ 17 லட்சத்தில் சுற்றுச்சுவர், எரிமேடை, காத்திருப்போர் கூடம், சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. மேல செல்வனூர் கிராமத்தில் பஸ் நிறுத்தம், கண்ணன் கோவில், ஆதி திராவிடர் தெரு, கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் தனித்தனியாக பிளாஸ்டிக் தொட்டி அமைத்து குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.
மேலச்செல்வனூர் கிராமத்திலும், எம். எஸ். புது குடியிருப்புக்கும் தலா ரூ.8 லட்சத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு உள்ளது. எஸ் ஆலங்குளம் கிராமத்தில் பிளாஸ்டிக் தொட்டி அமைத்து குடிநீர் வழங்கப்பட்டு உள்ளது. தேரங்குளம் கிராமத்தில் திறந்தவெளி கிணறு ரூ. 12 லட்சத்தில் அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பாப்பாக்குளம் கிராமத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு பசுமை ஊராட்சியாக மாற்றப்பட்டுள்ளது.
ஜல் ஜீவன் திட்டத்தில் மேலச்செல்வனூர் கிராமத்தில் 331 வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு உள்ளது. என.பாடு வனேந்தல் கிராமத்தில் 100 மீட்டர் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. கடையக்குளம் கிராமத்தில் குடிநீர் வினியோகம் மற்றும் பைப் லைன் விரிவாக்கம் செய்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தேரங்குளம் கிராமத்தில் குடிநீர் கிணற்றிலிருந்து மின்மோட்டார் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.
மேலச்செல்வனூர் அரசு உயர்நிலைப்பள்ளி சமையல் அறை கட்டிடம் ரூ.7.40 லட்சம் மதிப்பீட்டில் பணி கள் நடைபெற்று வருகிறது. மாவட்ட நிர்வாகம் மேலச்செல்வனூர் ஊராட்சிக்கு நீதி ஒதுக்கி கீழ்க்கண்ட பணிகள் நடைபெற உதவ வேண்டும்.
மேலச்செல்வனூர் கிராமத்தில் இருந்து மடத்தாகுளம் கிராமத்திற்கு புதிய சாலை அமைக்க வேண்டும். 2007-2008-ம் ஆண்டில் மேலச்செல்வனூர் பள்ளி உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. பள்ளி கட்டிடம் இல்லாததால் அங்குள்ள தொடக் கப்பள்ளி கட்டிடத்திலேயே இயங்கி வருகிறது. உயர்நிலைப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும். உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக மாற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடிநீர் பற்றாக்குறையை போக்க மேலச்செல்வனூர் கிராமத்தில் 60 ஆயிரம் லிட்டர் கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க வேண்டும். எம்.எஸ்.புதுக்குடியிருப்பு கிராமத்தில் 30 ஆயிரம் லிட்டர் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி, தேரங்குளம் கிராமத்தில் 10 ஆயிரம் லிட்டர் நீர்த்தேக்க தொட்டி, பாப்பாகுளம் கிராமத்தில் 30 ஆயிரம் நீர்த்தேக்க தொட்டி அமைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும்.
பறவைகள் சரணாலயம் உள்ள மேலச்செல்வனூர் சுற்றுலா தலமாக உள்ளதால் அத்துறை சார்பில் இங்கு கழிப்பறை, ஓய்வு அறை, உணவு அருந்தும் கூடம் கட்டித்தர வேண்டும். மேலும் வருவாய் ஆய்வாளர் கட்டிடம் கட்டித்தர வேண்டும். மேலச்செல்வ னூர் ஊராட்சி முழுவதும் தெரு விளக்குகள் விஸ்தரிப்பு செய்ய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
மேலச்செல்வனூர் மற்றும் எம்.எஸ்.புதுக்குடி யிருப்பு கிராமத்தில் திறந்த வெளி கிணறு அமைக்க வேண்டும். மேலச் செல்வனூர் கிராமத்தி ற்கு 2 மின்மாற்றிகள், எம்.எஸ்.புதுக்குடியிருப்புக்கு ஒரு மின் மாற்றி, கடையக்குளம் கிராம த்திற்கு ஒரு மின்மாற்றி அமைத்து கூடுதல் மின்சாரம் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும்.
மேலச்செல்வனூர் கிராமத்தை பசுமை கிராமமாக மாற்றுவதற்கு பொது ஊரணி மற்றும் பறவைகள் சரணாலயம் கண்மாயில் 300 மரக்கன்றுகள் நடப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- திருமங்கலத்தில் தெருவிளக்குகள் எல்.இ.டி. விளக்குகளாக மாற்றப்படும்.
- நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
திருமங்கலம்
திருமங்கலம் நகராட்சி கவுன்சில் கூட்டம் தலைவர் ரம்யா முத்துக்குமார் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் ஆதவன் அதியமான், ஆணையாளர் டெரன்ஸ் லியோன் முன்னிலை வகித்தனர். பொறியாளர் முத்து வரவேற்றார்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் வார்டுகளில் உள்ள பிரச்சினைகளை தெரிவித்தனர். தலைவர் ரம்யா முத்துக் குமார் கொண்டு வந்த சிறப்பு தீர்மானத்தின்படி திருமங்கலம் நகரில் 1,952 தெருவிளக்குகளை பொது மக்களின் நலன்கருதியும், நகராட்சி நிதி நிர்வாகத்தை கருதியும் எல்.இ.டி. தெரு விளக்குகளாக மாற்ற வேண்டும் என்றார்.
இதற்கு அனைத்து கவுன்சிலர்களும் ஆதரவு தெரிவித்தனர். திருமங்கலம் நகரில் உள்ள அனைத்து தெருவிளக்குகளையும் விரைவில் எல்.இ.டி.தெரு விளக்குகளாக மாற்றுவது எனவும், இதற்கு ரூ.2 கோடியே 38 லட்சம் ஒதுக்கீடு செய்வதும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
இதேபோல் நகரின் விரிவாக்கப்பகுதிகளில் 534 எல்.இ.டி. தெரு விளக்குகள் புதிதாக அமைக்க ரூ.1 கோடியே 7லட்சத்து 70 ஆயிரம் மாநில நகர்ப்புற அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் அமைப்பதும் என்றும் முடிவு செய்யப் பட்டது.
இந்த திட்டத்தின் நிதியை நகராட்சிக்கு கடனாக வழங்குவதுடன், இந்த கடனை 6 ஆண்டுகளுக்குள் 5 சதவீத வட்டியுடன் திரும்ப செலுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
சுகாதாரத்திட்டத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் ரூ.64.60 லட்சம் மதிப்பீட்டில் 6 ஆயிரம் லிட்டர் கழிவுநீர் அகற்றுதல் உறிஞ்சு வாகனம் வாங்குவது, 15-வது நிதிக்குழு மானியத்தில் 2022-23-ல் ரூ.10.60 லட்சம் மற்றும் ரூ.13.40 லட்சம் மதிப்பீட்டில் முறையே பேவர் பிளாக்சாலை மற்றும் தார்சாலை பணிகளை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக திருமங்கலம் ெரயில்வே பீடர் ரோட்டில் யூனியன் அலுவலகம் முதல் ெரயில்வேகேட் வரையில் குண்டும் குழியுமான சாலையை சீரமைப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மாநகர கூட்டரங்கில் மேயர் ஜெகன்பெரியசாமி தலைமையில இன்று காலை நடைபெற்றது.
- நகர்புற வாழ்வாதார மையம் மூலம் 12 பேர் தினக்கூலி அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மாநகர கூட்டரங்கில் மேயர் ஜெகன்பெரியசாமி தலைமையில இன்று காலை நடைபெற்றது. கமிஷனர் சாருஸ்ரீ, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் தொடங்கியதும் மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார். அவர் பேசிய தாவது:-
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு தற்போது கடற்கரைச்சாலை, பாளையங்கோட்டை ரோடு, அண்ணாநகர், சத்திரம் தெரு, சிதம்பரம் நகர், முனியசாமிபுரம், செல்வநாயகபுரம், செயின்ட் தாமஸ், குருஸ்புரம், போல்டன்புரம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பாட்டில் உள்ளது.
இதற்கான உந்து சக்தி நிலையங்களில் பராமரிப்பு செய்து பம்ப் இயக்குவதற்கு நகர்புற வாழ்வாதார மையம் மூலம் 12 பேர் தினக்கூலி அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
மாநகரில் உள்ள பக்கிள் ஓடை சுத்தம் செய்தல், ஆக்கிரமிப்புகளை அகற்று தல், தெருக்களில் உள்ள மண்மேடுகளை அகற்று தல், கட்டுமான கழிவுகளை அகற்றுதல், மாநகராட்சி பூங்காக்களில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளுதல் போன்ற பணிகளை மேற்கொள்ள ஜே.சி.பி. எந்திரத்தை இயக்குவதற்கு நிரந்தர ஓட்டுநர்கள் இல்லாத தால் கூடுதலாக பணி யாற்றுவதற்கு செலவினை தொகையை அனுமதித்தல் குறித்து விவாதித்தல்.தெற்கு மண்டலம் 57-வது வார்டில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 501 மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர் 53 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அந்தப் பள்ளிக்கு புதிய குடிநீர் இணைப்பு வழங்க வரி விலக்கு அனுமதி கோருதல்,
தூத்துக்குடி மாநகராட்சி யில் உள்ள 60 வார்டுகளிலும் தெருவிளக்குகள் இல்லாத பகுதிகளில் 2,887 எல்.இ.டி. விளக்குகள் அமைக்க ரூ.5கோடியே 53 லட்சத்தில் பணிகள் மேற்கொள்ள 15-ம் நிதிக்குழு மானிய நிதியில் இருந்து மேற்கொள்ள அனுமதி பெறப்பட்டுள்ளது.
மேலும் தூய்மை இந்தியா திட்டம் 2.0 கீழ் தருவை பகுதியில் 2 நுண் உரம் மையம் ரூ.115 லட்சத்தில் மேற்கொள்ள ரூ.63 லட்சம் மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, மற்றும் தனிநபர் கழிப்பிடம், வீட்டு கழிப்பிடம், சிறுநீர் கழிப்பிடங்கள், சமுதாய மற்றும் பொது கழிப்பிடங்கள் கட்டுவதற்கு நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மண்டல தலைவர்கள் கலைச்செல்வி திலகராஜ்,அன்னலட்சுமி கோட்டுராஜா, நிர்மல்ராஜ், பாலகுருசாமி,நகரமைப்பு குழு தலைவர் ராம கிருஷ்ணன், பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், கல்விக் குழுத் தலைவர் அதிர்ஷ்டமணி, கவுன்சிலர்கள் டாக்டர் சோமசுந்தரி, ரெங்கச்சாமி, விஜயகுமார், சுயம்பு, பச்சிராஜ், ராஜதுரை, வெற்றிச் செல்வன், ஜெயலட்சுமி சுடலை மணி, மந்திரமூர்த்தி உட்பட அனைத்து கவுன்சி லர்களும்,மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையர் நேர்முக உதவி யாளர் துரைமணி, அதிகாரி கள் சரவணன், காந்திமதி, பிரின்ஸ், சேகர், ராமச்சந்திரன், சேகர், ஹரி கணேஷ், ராஜபாண்டி உட்பட அதிகாரிகள், அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்