search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "stubbs"

    • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 343 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய அயர்லாந்து 169 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.

    அபுதாபி:

    அயர்லாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் அபுதாபியில் நடைபெறுகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வென்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி நடந்தது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 343 ரன்கள் குவித்தது. அந்த அணியின் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அதிரடியாக ஆடி சதமடித்து 112 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். வெரைன் அரை சதமடித்து 67 ரன்கள் எடுத்தார். வியான் முல்டர் 43 ரன்னும், ரியான் ரிக்கல்டன் 40 ரன்னும் எடுத்தனர்.

    தொடர்ந்து 344 என்ற கடின இலக்கை நோக்கி விளையாடிய அயர்லாந்து, தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சில் திணறியது. சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.

    இறுதியில், அயர்லாந்து 30.3 ஓவரில் 169 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் தென் ஆப்பிரிக்கா 174 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன் தொடரை 2-0 என கைப்பற்றியது.

    தென் ஆப்பிரிக்கா தரப்பில் லிசாட் வில்லியம்ஸ் 3 விக்கெட்டும், நிகிடி, பார்டுயின் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இரு அணிகள் மோதும் 3-வது போட்டி நாளை நடக்கிறது.

    • நேற்று நடந்த 2-வது அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தியது.
    • இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 4 ஓவர் வீசி 19 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார்.

    பார்படாஸ்:

    டி20 உலகக் கோப்பை 2வது அரையிறுதியில் இங்கிலாந்து அணியை 68 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 4 ஓவர் வீசி 19 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இந்நிலையில், கிரேடு கிரிக்கெட்டர் போட்காஸ்டில் பங்கேற்ற தென் ஆப்பிரிக்காவின் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இந்திய அணியின் குல்தீப் யாதவ் பந்துவீச்சுக்கு புகழாரம் சூட்டியுள்ளார். அப்போது, கடந்த மாதம் தான் வெளியிட்ட பதிவை நினைவுபடுத்தினார்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பயிற்சி அமர்வுகளில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் எனக்கு பந்து வீசமாட்டார்.

    2024 டி20 உலகக் கோப்பைக்கு முன் குல்தீப் பந்துவீசாமல் இருப்பது சுழற்பந்து வீச்சாளரின் கவனமான முடிவு.

    டெல்லி அணியுடனான பயிற்சி வலைகளில் குல்தீப்பை எதிர்கொள்ள ஆர்வமாக இருந்தேன்.

    உலகக் கோப்பைக்கான எனது சொந்தத் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    • மெக்கர்க் 27 பந்தில் 11 பவுண்டரி, 6 சிக்ஸ் உடன் 84 ரன்கள் விளாசினார்.
    • ஸ்டப்ஸ் 25 பந்தில் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி டெல்லி அணியின் பிரேசர் மெக்கர்க்- பொரேல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மெக்கர்க் முதல் பந்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் ஓவரில் மூன்று பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாசினார்.

    2-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாசினார். இந்த ஓவரில் டெல்லிக்கு 18 ரன் கிடைத்தது.

    3-வது ஓவரை துஷாரா வீசினார். இந்த ஓவரில் மெக்கர்க் 3 பவுண்டரி விளாசினார். இந்த ஓவரில் டெல்லிக்கு 18 ரன் கிடைத்தது.

    4-வது ஓவரை பியூஷ் சாவ்லா வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை சிக்சருக்கு தூக்கிய மெக்கர்க் 15 பந்தில் அரைசதம் விளாசினார். மேலும் இந்த ஓவரில் ஒரு பவுண்டரி அடித்தார். டெல்லி அணிக்கு இந்த ஓவரில் 14 ரன் கிடைத்தது.

    5-வது ஓவரை ஹர்திப் பாண்ட்யா வீசினார். இந்த ஓவரில் இரணடு பவுண்டரி, இரண்டு சிக்ஸ் விளாசினார். இந்த ஓவரில் டெல்லிக்கு 20 ரன் கிடைத்தது.

    6-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரில் பும்ரா 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுக்க டெல்லி அணி பவர்பிளேயான முதல் ஆறு ஓவரில் விக்கெட் இழப்பின்றி 92 ரன்கள் குவித்தது.

    ஹர்திக் பாண்ட்யா வீசிய 7-வது ஓவரில் பொரேல் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடித்தார். மெக்கர்க் ஒரு சிக்ஸ் அடித்தார். ஓவர் த்ரோ மூலம் ஐநது ரன்கள் கிடைக்க டெல்லி 21 ரன்கள் குவித்தது.

    அடுத்த ஓவரை சாவ்லா வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் மெக்கர்க் ஆட்டமிழந்தார். மெக்கர்க் 27 பந்தில் 11 பவுண்டரி, 6 சிக்ஸ் உடன் 84 ரன்கள் விளாசினார். இவர் ஆட்டமிழக்கும்போது டெல்லி 7.3 ஓரில் 114 ரன்கள் குவித்திருந்தது.

    அதன்பின் ரன் உயர்வு மெல்லமெல்ல குறைய ஆரம்பித்தது. பொரேல் 27 பந்தில் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். டெல்லி அணி 12 ஓவரில் 150 ரன்னைத் தாண்டியது. ஷாய் ஹோப் ஐந்து சிக்சருடன் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    16.1 ஓவரில் டெல்லி அணி 100 ரன்னைத் தொட்டது. 18-வது ஓவரை வுட் வீசினார். இந்த ஓவரில் ஸ்டப்ஸ் ஐந்து பவுண்டரி, ஒரு சிக்சருடன் 26 ரன்கள் விறாசினார்.

    19-வது ஓவரை பும்ரா வீசினார். இநத் ஓவரில் ரிஷப் பண்ட் 19 பந்தில் 29 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் பும்ரா 6 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்தார்.

    கடைசி ஓவரை துஷாரா வீசினார். இந்த ஓவரில் 2 சிக்ஸ் உடன் 17 ரன்கள் கிடைக்க டெல்லி அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் குவித்துள்ளது. ஸ்டப்ஸ் 25 பந்தில் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அக்சர் பட்டேல் 6 பந்தில் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    ×