என் மலர்
நீங்கள் தேடியது "SU Arun Kumar"
- விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது.
- விக்ரம் 62 படத்தை அருண் குமார் இயக்குகிறார்.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடிப்பதில் புகழ் பெற்றவர் விக்ரம். இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் விக்ரம் 62 படத்தின் அறிவிப்பை படக்குழு வீடியோ மூலம் வெளியிட்டு உள்ளது.
இந்த வீடியோவில் வரும் காவல் நிலைய காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. வீடியோவின் படி விக்ரம் 62 படத்தினை எஸ்.யு. அருண் குமார் இயக்குகிறார். இவர் முன்னதாக பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா போன்ற படங்களை இயக்கி இருக்கிறார்.
விக்ரம் 62 படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தை ரியா ஷிபு தயாரித்துள்ளார்.
- படத்தின் எஸ்.ஜே சூர்யா காவல் அதிகாரியாக நடித்துள்ளார்.
- எஸ் ஜே சூர்யா இயக்குனர் அருண் குமாரை புகழந்து எகஸ் தளத்தி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
சேதுபதி, சித்தா படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் தனது 62 - வது படமான 'வீர தீர சூரன்' படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷரா விஜயன், சித்திக் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தை எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார். ஜி. வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
இப்படத்தில் விக்ரம் கிராமிய தோற்றத்தில் காளி என்ற கேங்ஸ்டராக நடிக்கிறார். படத்தின் டைட்டில் டீசர் மற்றும் போஸ்டர்கள் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்கள் கவனத்தை பெற்றது.
படத்தின் எஸ்.ஜே சூர்யா காவல் அதிகாரியாக நடித்துள்ளார். படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்பொழுது முடிடைந்துள்ளது. இதை கொண்டாடும் வகையில் படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடினர். இது குறித்து எஸ் ஜே சூர்யா இயக்குனர் அருண் குமாரை புகழந்து எகஸ் தளத்தி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் " வீர தீர சூரன்' படத்தில் எனக்கும் விக்ரமுக்கும் , சிராஜ் க்கும் இடையே ப்ரீ கிளைமேக்ஸ் காட்சி மதுரையில் நேற்று படமாக்கப்பட்டது. அதற்கு முன் அந்த காட்சியை அதே இடத்தில் இயக்குனர் அவர்து குழு மற்றும் உதவியாளர்களை வைத்து மூன்று நாட்கள் ஒத்திகை பார்த்தார், தற்போது இன்று அதிகாலை 5.05 மணிக்கு அவர் நினைத்ததை கொண்டு வந்து விட்டார். அவரை பற்றி நான் ஒன்றே ஒன்றுதான் சொல்ல வேண்டு கலைத்தாயின் இளையமகன் ஐயா நீங்கள்" என்று மிகவும் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
அதற்கு பதிலளிக்கும் வகையில் தயாரிப்பாளர் ரியா ஷிபு - உங்களிடம் இருந்து இந்த வார்த்தையை கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது சார். உங்களை மற்றும் பல நட்சத்திரங்களை ஒன்றாக வைத்து தயாரிக்கும் படத்தின் அவுட் கம்மை பார்ப்பதற்கு ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கடந்த 2023 ஆம் ஆண்டு சித்தார்த் நடிப்பில் சித்தா திரைப்படத்தை இயக்கினார்.
- விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.
2014 ஆம் ஆண்டு வெளியான பண்ணையாரும் பத்மினியும் திரைப்படத்தை இயக்கி எஸ்.யு அருண் குமார் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகினார். இப்படம் பல திரைப்பட விழாக்களில் வெளியாகி மக்களின் மனதை வென்றது. 6 தமிழ்நாடு மாநில அரசு விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு சேதுபதி திரைப்படத்தை இயக்கினார். இப்படத்தில் விஜய் சேதுபது மற்றும் ரம்யா நம்பீசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தனர்.இப்படம் மிகப் பெரிய கமெர்ஷியல் வெற்றி திரைப்படமாக அமைந்தது. மீண்டும் 2019 ஆம் ஆண்டு விஜாய் சேதுபதி நடிப்பில் சிந்துபாத் திரைப்படத்தை இயக்கினார் ஆனால் இப்படம் மக்களிடம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.

கடந்த 2023 ஆம் ஆண்டு சித்தார்த் நடிப்பில் சித்தா திரைப்படத்தை இயக்கினார். இப்படம் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக் சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார். இரு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் 2-ம் பாகத்தை முதலில் வெளியிட உள்ளனர்.

இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இன்று இயக்குனர் அருண் குமாருக்கு திருமணம் நடைப்பெற்றது. இந்த திருமண விழாவில் நடிகர்களான, சீயான் விக்ரம், விஜய் சேதுபதி, துஷரா விஜயன், விக்னேஷ் சிவன், சித்தார்த்,பால சரவணன், கலந்துக் கொண்டனர். திருமணத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.