search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    `கலைத்தாயின் இளையமகன்  ஐயா நீங்கள் - SU அருண் குமாரை புகழ்ந்த எஸ்.ஜே சூர்யா
    X

    `கலைத்தாயின் இளையமகன் ஐயா நீங்கள்' - SU அருண் குமாரை புகழ்ந்த எஸ்.ஜே சூர்யா

    • படத்தின் எஸ்.ஜே சூர்யா காவல் அதிகாரியாக நடித்துள்ளார்.
    • எஸ் ஜே சூர்யா இயக்குனர் அருண் குமாரை புகழந்து எகஸ் தளத்தி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

    சேதுபதி, சித்தா படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் தனது 62 - வது படமான 'வீர தீர சூரன்' படத்தில் நடித்து வருகிறார்.

    இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷரா விஜயன், சித்திக் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தை எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார். ஜி. வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

    இப்படத்தில் விக்ரம் கிராமிய தோற்றத்தில் காளி என்ற கேங்ஸ்டராக நடிக்கிறார். படத்தின் டைட்டில் டீசர் மற்றும் போஸ்டர்கள் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்கள் கவனத்தை பெற்றது.

    படத்தின் எஸ்.ஜே சூர்யா காவல் அதிகாரியாக நடித்துள்ளார். படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்பொழுது முடிடைந்துள்ளது. இதை கொண்டாடும் வகையில் படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடினர். இது குறித்து எஸ் ஜே சூர்யா இயக்குனர் அருண் குமாரை புகழந்து எகஸ் தளத்தி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

    அதில் " வீர தீர சூரன்' படத்தில் எனக்கும் விக்ரமுக்கும் , சிராஜ் க்கும் இடையே ப்ரீ கிளைமேக்ஸ் காட்சி மதுரையில் நேற்று படமாக்கப்பட்டது. அதற்கு முன் அந்த காட்சியை அதே இடத்தில் இயக்குனர் அவர்து குழு மற்றும் உதவியாளர்களை வைத்து மூன்று நாட்கள் ஒத்திகை பார்த்தார், தற்போது இன்று அதிகாலை 5.05 மணிக்கு அவர் நினைத்ததை கொண்டு வந்து விட்டார். அவரை பற்றி நான் ஒன்றே ஒன்றுதான் சொல்ல வேண்டு கலைத்தாயின் இளையமகன் ஐயா நீங்கள்" என்று மிகவும் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

    அதற்கு பதிலளிக்கும் வகையில் தயாரிப்பாளர் ரியா ஷிபு - உங்களிடம் இருந்து இந்த வார்த்தையை கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது சார். உங்களை மற்றும் பல நட்சத்திரங்களை ஒன்றாக வைத்து தயாரிக்கும் படத்தின் அவுட் கம்மை பார்ப்பதற்கு ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×