என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Suburban Train"
- சென்ட்ரல் - திருவள்ளூர் இடையேயான மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
- கோளாறை சரி செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.
சென்னை சென்ட்ரல் - ஆவடி இடையேயான மின்சார ரெயில் சேவை இன்று (ஆகஸ்ட் 30) மாலை பாதிக்கப்பட்டது. சென்னை சென்ட்ரல் - திருவள்ளூர் இடையேயான மின்சார ரெயில் சேவையும் பாதிக்கப்பட்டது.
சென்னை வியாசர்பாடி ரயில் நிலையம் அருகே உயர் மின் அழுத்த கம்பி பழுது காரணமாக மின்சார ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை - அரக்கோணம் மார்க்கத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
கோளாறு ஏற்பட்டத்தை அடுத்து ரெயில்வே அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு, பாதிப்பை சரி செய்தனர். இதன் காரணமாக சுமார் அரை மணி நேரம் வரை ரெயில்கள் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். தற்போது கோளாறு சரி செய்யப்பட்டு வழக்கம்போல் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
- ஆவடி ரெயில் நிலையத்தில் இன்று காலையில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
- ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் அவர்கள் ரெயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்து பஸ்களில் ஏறி பயணம் செய்தனர்.
ஆவடி:
சென்னை ஆவடி ரெயில் நிலையத்தில் பழைய நடைபாதை மேம்பாலம் உள்ளது. இந்த நடை மேம்பாலத்தை இடித்து அப்புறப்படுத்தும் பணிகள் நேற்று இரவு நடந்தது. இந்த பணிகள் இரவு 10 மணிக்கு தொடங்கி அதிகாலை 4.30 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்காக சென்னை சென்ட்ரல், திருவள்ளூர், அரக்கோணம் இடையே இரவு நேரத்தில் 10 ரெயில்கள் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ஆவடி ரெயில் நிலையத்தில் நேற்று இரவு நடைபாதை மேம்பாலத்தை இடிக்கும் பணிகள் தொடங்கியது. இதையடுத்து நேற்று இரவில் 10 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.
ஆனால் இன்று அதிகாலை 4.30 மணிக்கு முடிய வேண்டிய பணிகளில் திடீரென்று காலதாமதம் ஏற்பட்டது. இதனால் காலை 6.30 மணி வரை பணிகள் நடந்தன. இதையடுத்து இன்று காலை 6.30 மணி வரை ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக காலை நேரத்தில் ரெயில் நிலையங்களுக்கு வந்த பயணிகள் தவித்தனர். குறிப்பாக ஆவடி ரெயில் நிலையத்தில் இன்று காலை யில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
காலை 6.30 மணிக்கு பிறகு அரக்கோணம் மற்றும் திரு வள்ளூரில் இருந்த சென்ட்ர லுக்கு வரும் புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டன. இந்த ரெயில்கள் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் செல்லும் பாதை யில் இயக்கப்பட்டதால் பட்டாபிராமில் இருந்து பட்டரவாக்கம் வரை இடை யில் உள்ள எந்த ரெயில் நிலையங்களிலும் ரெயில்கள் நிறுத்தப்படவில்லை.
இதன் காரணமாக இந்த ரெயில் நிலையங்களில் ரெயிலுக்காக காத்திருந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். இந்த மார்க்கத்தில் வந்த ரெயில்கள் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்குள் வர அனுமதிக்கப்பட்டன. இதனால் சென்ட்ரலில் இருந்து திரு வள்ளூர் மார்க்கத்தில் இன்று காலையில் செல்லும் 4 புறநகர் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. சென்ட்ரலில் இருந்து இன்று அதிகாலை 5.20 மணிக்கு நெல்லூர் செல்லும் ரெயில், 5.40 மணிக்கு திருவள்ளூர் செல்லும் ரெயில், 6.15 மற்றும் 6.20 மணிக்கு பட்டாபிராம் செல்லும் ரெயில்கள் ஆகியவை ரத்து செய்யப்பட்டன. இதன் காரணமாக சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திலும் இன்று காலையில் பயணிகள் தவித்தனர்.
ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் அவர்கள் ரெயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்து பஸ்களில் ஏறி பயணம் செய்தனர். அதன் பிறகு ரெயில் போக்குவரத்து தொடங்கினாலும் பயணிகள் கூட்டம் அதிகரித்தே காணப்பட்டது. காலை 8 மணிக்கு பிறகு நிலைமை சீரடைந்தது. இதற்கிடையே ஆவடி ரெயில் நிலையத்தில் நடை பாதை மேம்பாலத்தை இடித்து அப்புறப்படுத்துவதில் மீதமுள்ள பணிகள் இன்று இரவு நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- திரிசூலம்- மீனம்பாக்கம் இடையே தண்டவாளத்தில் விரிசல்.
- நேற்று செங்கல்பட்டு அருகே சரக்கு ரெயில் தடம் புரண்டதால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை வரையிலான மின்சார ரெயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திரிசூலம்- மீனம்பாக்கம் இடையே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஊழியர்கள் விரிசலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். வேலைக்குச் செல்லும் நபர்கள் மின்சார ரெயில்களை அதிக அளவில் பயன்படுத்துவார்கள். இதனால் அவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்று செங்கல்பட்டு அருகே சரக்கு ரெயில் தடம் புரண்டதால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. தற்போது 2-வது நாளாக மற்றொரு சம்பவத்தில் மின்சார ரெயில் போக்குவரத்தில் தடை ஏற்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்