search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "successful women"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பள்ளியில் "லிப் ரீடிங்" முறையில் விடாமுயற்சியுடன் கல்வியை பயின்றார்
    • 2021ல் பார் தேர்வில் வெற்றி பெற்று வழக்கறிஞர் ஆனார்

    கர்நாடகாவின் தலைநகர் பெங்களூரூவை சேர்ந்தவர் 27 வயதான சாரா சன்னி (Sarah Sunny).

    இவருக்கு மரியா சன்னி எனும் சகோதரியும் பிரதிக் குருவில்லா எனும் சகோதரனும் உள்ளனர். பிரதிக் அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். மரியா பட்டய கணக்காளராக பணிபுரிகிறார்.

    இவர்கள் மூவருக்கும் சிறு வயது முதலே இரண்டு செவிகளிலும் கேட்டல் குறைபாடு உண்டு. இருந்தும்  அதனை பொருட்படுத்தாமல் தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியால் சமுதாயத்தில் உயர்ந்த நிலையை இவர்கள் அடைந்தனர்.

    இவர்களது பெற்றோர், கேட்டல் குறைபாடு உள்ளவர்களுக்கான பிரத்யேக பள்ளிகளில் இவர்களை படிக்க வைக்காமல், இத்தகைய குறைபாடுகள் உள்ளவர்களையும் பிற குழந்தைகளுடன் படிக்க அனுமதிக்கும் பள்ளிகளிலேயே இவர்களை சேர்த்தனர்.

    பள்ளியில் சாரா "லிப் ரீடிங்" (lip reading) எனும் உதடுகளின் அசைவை உணரும் வழிமுறை மூலமாக கல்வி கற்று கொண்டார். பெங்களூரூவில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் சட்ட கல்வியில் சேர்ந்தார். அங்கும் அதே முறையில் பயின்றார்.

    2021ல் பார் தேர்வில் வெற்றி பெற்று வழக்கறிஞர் ஆனார்.

    இந்நிலையில், சில நாட்களுக்கு முன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் முன்பாக தனது கட்சிக்காரருக்காக வாதாடினார்.

    சாராவிற்காக ஒரு சைகை மொழி மொழிபெயர்ப்பாளரை (sign language interpreter) வைத்து கொள்ள உச்ச நீதிமன்றம் உதவியது. சைகை மொழி மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் இவர் தனது வாத பிரதிவாதங்களை வைக்க, அதனை தலைமை நீதிபதி பதிவு செய்து கொண்டார்.

    இந்திய சட்ட வரலாற்றில் உச்ச நீதிமன்றத்தில் இத்தகைய குறைபாடு உள்ள ஒருவர் வாதாடியது இதுவே முதல் முறை.

    சன்னிக்கு கிடைத்த இந்த வாய்ப்பின் மூலம் இந்தியாவில் எதிர்காலத்தில் சட்டத்துறையில் கல்வி பெறவும், வழக்கறிஞராக பணியாற்றவும் இவரை போன்ற பலர் ஆர்வத்துடன் பங்கேற்பார்கள் என பிரபல உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

    ×