என் மலர்
நீங்கள் தேடியது "sudha seshayyan"
- தமிழக முதலமைச்சரை தலைவராக கொண்ட நிறுவனத்தின் துணைத்தலைவராக சுதா சேஷையன் 3 ஆண்டுகள் செயல்படுவார்.
- சுதா சேஷையன் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத்தலைவராக டாக்டர். சுதா சேஷையனை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைவராக கொண்ட நிறுவனத்தின் துணைத்தலைவராக சுதா சேஷையன் 3 ஆண்டுகள் செயல்படுவார்.
சுதா சேஷையன் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- வெளி மாநிலங்களில் இருந்து இந்த மோசடியை அரங்கேற்ற ஒரு கும்பல் தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
- வெளி மாநிலங்களில் இருந்து மோசடியை அரங்கேற்ற ஒரு கும்பல் தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
சென்னை:
தமிழகத்தில் ஆன்லைன் மூலம் மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. உயர் பதவிகளில் இருப்பவர்களின் பெயர்களை சொல்லி போலியான செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு அவர்கள் பேசுவது போலவே பேசி பரிசு கூப்பன்களை வாங்கி அனுப்புமாறு மோசடி ஆசாமிகள் தொடர்ச்சியாக பேசி வருவது தொடர் கதையாகி வருகிறது.
போலீஸ் சூப்பிரண்டுகள், மாவட்ட கலெக்டர்களின் பெயரிலும் இது போன்ற மோசடிகளை அரங்கேற்ற கும்பல் ஆன்லைனில் வரிசை கட்டி நிற்கிறது.
இது தொடர்பாக காவல் துறை அதிகாரிகளும், அரசு துறைகளில் இருப்பவர்களும், தங்கள் பெயரில் மோசடியில் ஈடுபட ஒரு கும்பல் திட்டமிட்டு செயல்படுவதாகவும், எனவே தங்களுக்கு கீழ் பணியாற்று பவர்கள் உஷாராக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் கிண்டி எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான டாக்டர் சுதா சேஷய்யன் பெயரிலும் மோசடியில் ஈடுபடுவதற்கு ஒரு கும்பல் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இது தொடர்பாக சுதா சேஷய்யன் சென்னை மாநகர காவல் துறையில் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்து உள்ளார்.
ஆனாலும் மோசடி பேர்வழிகள் தொடர்ச்சியாக புதுப்புது செல்போன் எண்களில் இருந்து சுதா சேஷய்யன் தொடர்பு கொண்டு பேசுவது போல வாட்ஸ் அப் மூலம் சாட்டிங் செய்து பேராசியர்களிடம் பரிசு பொருட்களை கேட்டு தொந்தரவு செய்து வருகிறார்கள்.
கடந்த செப்டம்பர் மாத இறுதியில் தொடங்கிய இந்த மோசடி முயற்சி தொடர்ச்சியாக அரங்கேற்றப்பட்டு வருகிறது. இது தொடர்பாக டாக்டர் சுதா சேசய்யனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
எனது போட்டோவை வாட்ஸ்அப் டி.பி.யில் வைத்துக்கொண்டு நான் தொடர்பு கொண்டு பேசுவது போல பேராசிரியர்களின் செல்போன் எண்களில் ஒரு கும்பல் தொடர்ச்சியாக சாட்டிங் செய்து பேசி வருகிறது. இது தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்து உள்ளேன். இதன் பின்னரும் புதுப்புது எண்களில் இருந்து மோசடி செய்வதற்கு முயற்சிகள் நடந்து கொண்டே இருக்கின்றன.
கடந்த மாதம் 22-ந் தேதி முதல் முறையாக எனது பெயரில் இந்த மோசடி முயற்சி நடந்துள்ளது. இதன் பின்னர் இதுவரை 8 செல்போன் எண்களில் இருந்து மோசடியில் ஈடுபட முயற்சி நடந்துள்ளது.
நான் அவரச கட்டத்தில் இருப்பது போல சாட்டிங் செய்து அமேசான் பரிசு கூப்பன்களை வாங்கி அனுப்புங்கள் என்று பேராசிரியர்களிடம் கேட்டு வருகிறார்கள்.
நான் யாரிடமும் எந்த பரிசு பொருட்களையும் வாங்குவது கிடையாது. என்னை சந்திக்க வருபவர்கள் மலர்செண்டு கொண்டு வருவதற்கு கூட நான் அனுமதிப்பது இல்லை. இதனால் எனது பெயரில் பரிசு பொருட்கள் கேட்கப்படுவதை நம்பாமல் பேராசிரியர்கள் என்னை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து வருகிறார்கள். வெளி மாநிலங்களில் இருந்து இந்த மோசடியை அரங்கேற்ற ஒரு கும்பல் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதுவரை யாரும் அவர்களை நம்பி ஏமாறவில்லை.
இருப்பினும் இதுபோன்று தொடர்ச்சியாக நடைபெறும் சம்பவங்களால் மன உளைச்சல் ஏற்படுகிறது. நேரமும் விரயமாகிறது.
தகவல் தொழில்நுட்பம் நன்றாக வளர்ந்துள்ள இந்த கால கட்டத்தில் பலர் இதுபோன்று அதனை தவறாக பயன்படுத்துகிறார்கள்.
எனவே மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இது போன்ற மோசடி, தவறுகள் நடப்பதற்கு இடம் கொடுக்கக் கூடாது.
யாருடைய பெயரில் இருந்து இது போன்ற தகவல்கள் வந்தாலும் சம்பந்தப்பட்ட நபர்களிடம் போன் செய்து உறுதிபடுத்துவதற்கு தயங்கக்கூடாது.
எனது பெயரை சொல்லி மோசடியில் ஈடுபட முயற்சி செய்யும் நபர்கள் எப்படி யாவது மோசடியாக பரிசு கூப்பன்களை பெற்று விட வேண்டும் என்பதற்காக துணிச்சலுடன் பொய்களை கூறி வருகிறார்கள்.
பேராசிரியர் ஒருவர் உஷாராகி "மேடம், இது உங்கள் நம்பர் இல்லையே" என்று கேட்டதும், எதிர்முனையில் இருந்த மோசடி கும்பல் இது எனது இன்னொரு நம்பர். இதனை, தான் எப்போதும் பயன்படுத்த மாட்டேன்.இப்போது தான் பயன்படுத்துகிறேன் என்றும் ஏமாற்றி உள்ளனர். ஆனால் இதுவரை யாரும் ஏமாறவில்லை.
இருப்பினும் தொடர்ச்சியாக இந்த சம்பவங்கள் நடந்துகொண்டே இருக்கிறது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு சுதா சேஷய்யன் கூறினார்.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக இருந்த கீதா லட்சுமி நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார்.
இதையடுத்து புதிய துணை வேந்தரை தேர்வு செய்ய ஆலோசனை நடந்து வந்தது.
எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு முன்னாள் துணை வேந்தர் டாக்டர் மயில் வாகனன் நடராஜன் உள்பட 48 பேர் விண்ணப்பித்து இருந்தனர். மயில்வாகனன் நடராஜன் பல்கலைக்கழகத்தின் சட்டப்படி மீண்டும் துணை வேந்தர் பதவியைப் பெற சட்ட உதவியை நாடி உள்ளார்.
30 வயதில் டாக்டராக சேவையை தொடங்கிய சுதா சேஷய்யன் இன்று மருத்துவ துறையின் உயர் பதவிக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மிகச் சிறந்த எழுத்தாளரான அவர் மருத்துவம், ஆன்மிகம் தொடர்பாக பல்வேறு புத்தகங்களை எழுதி உள்ளார்.
சிறந்த பேச்சாளரான அவர் லலிதா சகஸ்ரநாமம் உள்ளிட்ட ஆன்மீக இசையிலும் சிறந்து விளங்குபவர். முக்கிய பிரமுகர்களின் பொதுநிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் தனித்துவம் வாய்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. #MGRMedicalUniversity #Banwarilalpurohit #SudhaSeshayyan