search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sugar mill"

    • தினமும் 2000டன் ஆக இருந்த கரும்பு அரவை தற்பொழுது 500டன் ஆக குறைந்து உள்ளது.
    • சர்க்கரை ஆலையை புனரமைக்க தமிழக அரசு ரூ.250கோடி வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    உடுமலை:

    புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருணசாமி உடுமலை அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரிகளிடம் கரும்பு அரவை மற்றும் உற்பத்தி குறித்தும் ஆலையின் பிரச்சனைகள் குறித்தும் கேட்டறிந்தார்

    பின்பு செய்தியாளர்களிடம் கூறும் போது,

    தினமும் 2000டன் ஆக இருந்த கரும்பு அரவை தற்பொழுது 500டன் ஆக குறைந்து உள்ளது. இதனால் சுற்று வட்டார பகுதியில் உள்ள ஏராளமான விவசாயிகள் மிகவும் பாதிப்பு அடைகின்றனர். அவ்வப்போது போராட்டங்கள் நடத்துகின்றனர் . ஏராளமான விவசாயிகள் கரும்பு சாகுபடியை கைவிட்டு உள்ளனர் சர்க்கரை அலையை புனரமைக்க தமிழக அரசு ரூ.250கோடி வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். நிர்வாக சீர்கேடுகள் தொடர்ந்தால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

    • நடப்பாண்டு ஒரு லட்சத்து ஆயிரம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • 10 கோடி ரூபாய் செலவில் பராமரிப்பு பணி மட்டும் துவங்கியது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு திருப்பூர், திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளிடமிருந்து அரவைக்கு 2,184 ஏக்கர் பதிவு செய்யப்பட்டு நடப்பா ண்டு ஒரு லட்சத்து ஆயிரம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கரும்பு அரவை துவக்கு வதற்காக, ஆலையிலுள்ள பாய்லர்கள் இளஞ்சூடு ஏற்றும் பணி கடந்த 10ந் தேதி துவக்கப்ப ட்டு நேற்று முதல் ஆலையில் கரும்பு அரவை துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அமராவதி சர்க்கரை ஆலையிலுள்ள பழமையான எந்திரங்களை புதுப்பிக்க விவசாயிகள் வலியுறுத்தி வந்த நிலையில் மாநில அரசு நிதி ஒது க்கவில்லை. நடப்பாண்டு, 10 கோடி ரூபாய் செலவில் பராமரிப்பு பணி மட்டும் துவங்கியது. குறிப்பாக ஆலை அரவைக்கு, வாகனங்களி லிருந்து கரும்பு எடுத்து கன்வேயருக்கு வழங்கும் ரோப் வகை நவீன எந்திரங்கள் நிறுவும் பணி ரூ.2 கோடி மதிப்பில் துவங்கியது. நிதி வழங்குவதில் தாமதம் காரணமாக பணி முடியவில்லை. இதனால் ஏற்கனவே அறிவித்த தேதியில் அரவை துவக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கரும்பு வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. குறிப்பி ட்ட காலத்தில் அறுவடை செய்யாவிட்டால் எடை இழப்பு ஏற்படும். கடந்த ஆண்டு ஏப்ரல் 10-ந் தேதி அரவை துவக்கி யும், எந்திரங்கள் பழுது, ஆட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்க ளினால் மகசூல், சர்க்கரை கட்டுமானம் குறைந்து பாதிப்பு ஏற்பட்டது. நடப்பாண்டும், அரசு மற்றும் அதிகாரிகள் அலட்சியம் காரணமாக கரும்பு அரவை துவங்காமல் கரும்பு காய்ந்து நஷ்டமடைந்து வருகிறோம் என்றனர்.

    இது குறித்து சர்க்கரை ஆலை மேலாண் இயக்குனர் சண்முகநாதன் கூறுகையில், எந்திரம் பொருத்தும் பணி வரும் 24-ல் முடிக்கப்பட்டு சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்படும். வரும் மே 1-ந் தேதிக்குள் அரவை துவங்கும் என்றார்.

    • ஆலையில் உள்ள எந்திரங்கள் பழமையானதால் அடிக்கடி எந்திரங்கள் பழுதடைந்து விடுகிறது.
    • கரும்பு வெட்டுவதற்கு 13 மாதங்களாவதால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

    மடத்துக்குளம் :

    உடுமலையை அடுத்து கிருஷ்ணாபுரத்தில் உள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 6 மாத காலத்தை கரும்பு அரவைப்பருவமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

    2021-2022-ம் ஆண்டு அரவைப்பருவத்திற்கான கரும்பு அரவை கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி தொடங்கியது. இந்த ஆலை நாள் ஒன்றுக்கு 1,200 டன் கரும்பு அரவைத்திறன் கொண்டது.

    ஆனால் ஆலையில் உள்ள எந்திரங்கள் பழமையானதால் அடிக்கடி எந்திரங்கள் பழுதடைந்து விடுகிறது. அதனால் தினசரி முழு அரவைத்திறனுக்கு ஆலை இயங்குவதில்லை. பெரும்பாலான நாட்களில் அரவைத்திறனுக்கு குறைவாகவே கரும்பு அரவை செய்யப்படுகிறது.

    கரும்பு அரவை அடிக்கடி நிறுத்தப்படுவதால் குறுப்பிட்ட காலத்திற்குள் கரும்பு வெட்டப்படாமல், கரும்பு வெட்டுவதற்கு 13 மாதங்களாவதால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர். அதனால் குறிப்பிட்ட காலத்திற்குள் கரும்பை வெட்டுவதற்கான நடவடிக்கைகளை ஆலை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று கரும்பு விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

    கர்நாடகாவில் செயல்பட்டு வரும் சர்க்கரை ஆலையில் கொதிகலன் வெடித்துச் சிதறியதில் 6 பேர் பரிதாபமாக பலியாகினர். #BoilerBlastinaSugarMill
    பெங்களூரு:

    கர்நாடகம் மாநிலம் முதால் மாவட்டத்தில் உள்ள குலாலி கிராமத்தில் முன்னாள் மந்திரி முர்கேஷ் நிரானிக்கு சொந்தமான சர்க்கரை ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது.

    அந்த ஆலையில் இயங்கி வந்த கொதிகலன் இன்று காலை திடீரென வெடித்துச் சிதறியது. இதில் அங்கு பணியில் இருந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. 
     


    கொதிகலன் வெடித்து சிதறியதில் சர்க்கரை ஆலையின் பல்வேறு சுவர்கள் பாதிப்பு அடைந்துள்ளன. தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள கோவிலில் பிரசாதம் சாப்பிட்ட பக்தர்கள் 13 பேர் பலியான சில தினங்களுக்குள் மீண்டும் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #BoilerBlastinaSugarMill
    பெரம்பலூர் சர்க்கரை ஆலைகளை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகள் 94 பேரை போலீசார் கைது செய்தனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் பொதுத்துறை சர்க்கரை ஆலை நிர்வாகம் ரூ.50 கோடி பாக்கி தொகையையும், பெரம்பலூர் தனியார் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு எப்.ஆர்.பி. மற்றும் எஸ்.ஏ.பி. விலைக்குரிய பாக்கி தொகையையும் கரும்பு விவசாயிகளுக்கு உடனடியாக வழங்கிட வேண்டும். வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரை செய்தபடி வேளாண் உற்பத்தி செலவினை கணக்கிட்டு 1½ மடங்கு கூடுதல் விலையை அறிவிக்க வேண்டும். கரும்புக்கான கொள்முதல் விலையை உயர்த்திட வேண்டும்.

    கரும்புக்கான மாநில அரசு பரிந்துரை விலையை அறிவிக்காததை கண்டித்தும், கரும்பு விவசாயிகளை பாதிப்பு ஏற்படுத்திடும் ரெங்கராஜன் கமிட்டி பரிந்துரையை அமல்படுத்தி வருவதனால் விவசாயிகள் கோரிக்கைகளை ஏற்காத மத்திய-மாநில அரசுகளை கண்டித்து அனைத்து விவசாயிகள் சங்கம் மற்றும் டிராக்டர் உரிமையாளர் சங்கம் ஆகியவை இணைந்து பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக சென்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர். இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர்.

    இதனால் நேற்று புதிய பஸ் நிலையத்தில் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், பெரம்பலூர் சர்க்கரை ஆலை கரும்பு உற்பத்தியாளர் சங்க தலைவர் அன்பழகன், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ராஜா சிதம்பரம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணை செயலாளர் ஏ.கே.ராஜேந்திரன் மற்றும் கரும்பு விவசாயிகள் சங்கம், பாட்டாளி கரும்பு விவசாயிகள் சங்கம், கரும்பு வளர்ப்போர் முன்னேற்ற சங்கம், பங்குதாரர் மற்றும் கரும்பு வளர்ப்போர் சங்கம் ஆகிய அனைத்து விவசாயிகள் சங்கத்தை சேர்ந்தவர்களும், டிராக்டர் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் தேவேந்திரன் ஆகியோர் ஊர்வலமாக சென்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக புதிய பஸ் நிலையத்தில் நேற்று காலை ஒன்று திரண்டனர்.

    ஊர்வலமாக செல்வதற்கும், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கிடையாது என்று விவசாயிகளிடம் போலீசார் கூறினர். இதையடுத்து அவர்கள் கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாத மத்திய-மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் திடீரென்று விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்கு புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் விவசாயிகள் திடீரென்று பஸ் நிலையம் முன்பு உள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து வேனில் ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    சாலை மறியலில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகள் 94 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரையும் போலீசார் ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
    ×