என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "summit"
- கடைசியாக கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த மாநாடு டெல்லியில் வைத்து நடைபெற்றது.
- மேற்கு நாடுகள் இந்த சந்திப்பை பொறாமையுடன் மிகவும் உன்னிப்பாகவும் கவனித்து வருகிறது.
ரஷிய தலைநகர் மாஸ்கோவில் வைத்து நடக்கும் 22 வது இந்தியா - ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மோடி இன்று மதியம் ரஷியா செல்ல உள்ளார். இன்று மற்றும் நாளை [ஜூலை 8-ஜூலை 9] ரஷியாவில் தங்க உள்ள மோடி அதிபர் புதினிடம் இருநாட்டு பொருளாதார, வணிக மற்றும் ராஜ்ய உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கிடையிலும் வணிக ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடைசியாக கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த மாநாடு டெல்லியில் வைத்து நடைபெற்றது. அதன்பின் 2022 , 2023 ஆகிய ஆண்டுகளில் மாநாடு நடைபெறாத நிலையில் தற்போது இந்த வருடத்திற்கான மாநாடு நடைபெறுகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததற்கு பிறகு முதல் முறையாக மோடி ரஷியா செல்ல உள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு ரஷியாவில் நடந்த பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக கடைசியாக ரஷியா சென்றிருந்தார் மோடி.
மோடியின் வருகை குறித்து ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்லின் செய்தி தொடர்பாளர் திமித்ரி பெஷ்கோவ் பேசுகையில், 'மோடி - புதினின் சந்திப்பு விரிவானதாக இருக்கும். மோடியின் வருகையை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக நாங்கள் கருதுகிறோம். இரு தலைவர்களும் ராஜ்ய உறவுகள் என்பதையும் தாண்டி இயல்பாக பல விஷயங்களை பேசுவர் என்று எதிர்பார்கிறோம்.மேற்கு நாடுகள் இந்த சந்திப்பை பொறாமையுடன் மிகவும் உன்னிப்பாகவும் கவனித்து வருகிறது. இதனாலேயே இந்த சந்திப்பு மமுக்கியத்துவம் பெருகிறது' என்று தெரிவித்துள்ளார். உக்ரைன் போரினால் ரஷியா மீது மேற்கு நாடுகள் பொருளாதர தடைகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- இத்தாலி வந்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்யும் செயல்கள் அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்துள்ள்ளது.
- சுமார் 30 வினாடிகள் ஆடாமல் அசையாமல் ஜோ பைடன் நின்றுகொண்டிருந்தது அவர் தூங்கிவிட்டாரோ என்று தோன்றும்படி இருந்தது.
அமெரிக்கா, ஜப்பான், கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ஜி7 கூட்டமைப்பின் 50-வது உச்சி மாநாடு இன்று [ஜூன் 14] முதல் 15-ந்தேதி வரை இத்தாலியில் உள்ள அபுலியாவில் வைத்து நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அவர் இத்தாலி சென்றுள்ளார்.
இத்தாலியில் குழுமத்தொடங்கியுள்ள உலகத் தலைவர்களை அந்நாட்டு பிரதமர் ஜியோர்ஜியோ மெலோனி இந்திய முறையில் நமஸ்தே சொல்லி வரவேற்கும் வீடியோ வைரலானது.
இந்நிலையில் இந்த மாநாட்டில் பங்கேற்க இத்தாலி வந்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்யும் செயல்கள் அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்துள்ள்ளது.
ஜி7 நாடுகளின் சக தலைவர்களான கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இத்தாலி பிரதமர் மெலோனி, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் பிரதமர் இமானுவேல் மேக்ரோன், ஆகியோருடன் நடந்து செல்லும்போது அவர்களை விட்டு தனியாக பிரிந்து கால் போன போக்கில் ஜோ பைடன் உலாவினார். பின்னர் அவரை இத்தாலி பிரதமர் மெலோனி மீண்டும் அனைவரும் இருக்கும் இடத்துக்கு அழைத்து வந்தார்.
முன்னதாக தன்னை வரவேற்ற மெலோனிக்கு பைடன் விநோதமான முறையில் வணக்கம் வைத்த வீடியோ வைரலாக நிலையில் தற்போது கால் போன போக்கில் பைடன் உலாவும் வீடியோ வைரலாகி வருகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை அமேரிக்காவில் வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் சுமார் 30 வினாடிகள் ஆடாமல் அசையாமல் ஜோ பைடன் நின்றுகொண்டிருந்தது அவர் விழித்துக்கொண்டே தூங்கிவிட்டாரோ என்று தோன்றும்படி இருந்தது.
ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் சிக்கி குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. தனது மகனை மன்னிக்க மாட்டேன் எனவும், சட்டப்படி என்ன நடந்தாலும் அதை ஏற்கிறேன் எனவும் பைடன் தெரிவித்திருந்தார். அமெரிக்க அதிபர் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் இஸ்ரேல் - பாலஸ்தீன போரை முடிவுக்குகொண்டுவர ஜோ பைடன் அழுத்தம் கொடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.
- தமிழக அரசின் மீது நம்பிக்கை வைத்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு வந்துள்ளதில் மகிழ்ச்சி.
- அரசின் ஆக்கப்பூர்வமான முயற்சிகளில் உலக அளவிலான முதலீட்டாளர்கள் பங்குபெற வேண்டும்.
சென்னை எம்.ஆர்.சி நகரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உலகளாவிய தமிழ் ஸ்டார்ட் அப் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது.
இதில், முதலீட்டாளர்களை இணைக்கும் இணையதளத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது :-
தமிழக அரசின் மீது நம்பிக்கை வைத்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு வந்துள்ளதில் மகிழ்ச்சி.
தொழில்துறையில் 13வது இடத்திலிருந்து முதலிடத்திற்கு வந்துள்ளோம். தொழில் தொடங்க உகந்த இடம் என்ற இடத்தில் தமிழகம் முன்னேறியுள்ளது.
பெண்கள் தொடங்கும் புத்தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் அளிக்கப்படுகிறது.
புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மதுரை, நெல்லை, ஈரோடு மாவட்டங்களில் தொழில் ஆலோசனை மையம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மீது முதலீட்டாளர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.
புத்தொழில் நிறுவனங்கள் உருவாக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அரசின் ஆக்கப்பூர்வமான முயற்சிகளில் உலக அளவிலான முதலீட்டாளர்கள் பங்குபெற வேண்டும்.
மும்பை, டெல்லி போன்ற நகரங்களைவிட சென்னையில் அதிக புத்தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியினர் புத்தொழில் நிறுவனம் தொடங்கினால் மானியம் அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்காவின் ஓக் ரிடேஜ் தேசிய சோதனைக்கூடத்தில் உள்ள விஞ்ஞானிகள் மிக அதிவேகமான சூப்பர்கம்ப்யுட்டரை வடிவமைத்து சாதனைப் படைத்துள்ளனர். சம்மிட் என பெயரிப்பட்டுள்ள இந்த கம்ப்யூட்டர் இதற்கு முன் இருந்த சூப்பர்கம்ப்யூட்டரை விட 8 மடங்கு அதிக திறன் கொண்டது. அறிவியல் கணக்குகளை ஒரு நொடியில் 3 பில்லியன் பில்லியன் துல்லியமான முறையில் தீர்த்து வைக்கும்.
ஒரு நிமிடத்திற்கு 2 லட்சம் டிரில்லியன் கணக்குகளுக்கு தீர்வு காணும் திறன் கொண்டது. உயர்திறன் கொண்ட பொருட்கள், ஆற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவுகளை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் 4 ஆயிரம் சர்வர்கள் மற்றும் இரண்டு பிராசஸ்ர்கள் மற்றும் 6 ஆக்சிலேட்டர்கள் உள்ளன. இது 10 மெகாபைட் தகவல்களை சேகரித்து வைக்கும் திறன் கொண்டது.
அதிவேக திறன் கொண்ட இந்த கம்ப்யூட்டர்கள் அறிவியல் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமையும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். #supercomputer
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோரது வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு இன்று காலை சிங்கப்பூரில் நடைபெற்றது.
டிரம்பும், கிம்மும் பரஸ்பரம் கைகுலுக்கி கொண்டனர். இவர்கள் தங்களது அணு ஆயுத ஒழிப்பு, பொருளாதார தடைகளை நீக்குதல் உள்ளிட்டவை பற்றி பேச உள்ளனர்.
இதையடுத்து, இரு நாட்டு தலைவர்களின் பேச்சுவார்த்தை முடிந்தது. இரு நாட்டு தலைவர்களும் சுமார் 45 நிமிடம் பேசினர்.
இந்த பேச்சுவார்த்தை குறித்து டிரம்ப் கூறுகையில், வட கொரியா அதிபர் கிம் ஜாங் அன் உடனான பேச்சுவார்த்தை நன்றாக அமைந்தது என தெரிவித்தார். #KimJongUn #DonaldTrump #SingaporeSummit
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோரது வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு இன்று காலை சிங்கப்பூரில் நடைபெற்றது.
டிரம்பும், கிம்மும் பரஸ்பரம் கைகுலுக்கி கொண்டனர். இவர்கள் தங்களது அணு ஆயுத ஒழிப்பு, பொருளாதார தடைகளை நீக்குதல் உள்ளிட்டவை பற்றி பேச உள்ளனர்.
தென் கொரியாவில் உள்ள சியோல் நகரில் ரெயில் நிலையங்களில் அமைக்கப்பட்டிருந்த பெரிய திரைகளில் அந்நாட்டு மக்கள் இருவரது சந்திப்பையும் பார்த்தனர். இதேபோல், உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு பகுதிகளில் டிரம்ப் - கிம் சந்திப்பை பார்த்து ரசித்தனர்.
வடகொரியா உருவான பின்னர், வடகொரியா மற்றும் அமெரிக்க அதிபர்கள் சந்தித்திக் கொள்வது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. #KimJongUn #DonaldTrump #SingaporeSummit
வடகொரியாவும் அமெரிக்காவும் நிரந்தர பகை நாடுகளாக உள்ளன. சீனா மற்றும் தென்கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக கிம் ஜாங் அன் தனது மிரட்டல் போக்கை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசமாக செல்ல முன்வந்தார்.
இதற்கிடையே, டிரம்ப் - கிம் சந்திப்பு சிங்கப்பூரில் 12-ம் தேதி நடைபெறும் என்றும், இவர்கள் சிங்கப்பூரில் உள்ள சென்ட்டோசா தீவில் கேபெல்லா ஓட்டலில் இன்று காலை 9 மணிக்கு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
இந்நிலையில், சந்திப்பு நடக்கவுள்ள ஓட்டலுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் முதலில் சென்றடைந்தார். அவரை சந்திக்க வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் தான் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து காரில் புறப்பட்டு சென்றார்.
இதைத்தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் சந்தித்தனர். இருவரும் பரஸ்பரம் கைகுலுக்கினர். #KimJongUn #DonaldTrump #SingaporeSummit
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்