search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sun's heat"

    • மழை, வெயில், குளிர் என 3 சீதோஷ்ண நிலைகளும் அந்தந்த காலத்திற்கு ஏற்ப அதிகரித்து காணப்படும்.
    • 100 டிகிரிக்கு மேல் சுட்டெரிக்கும் வெயிலால் பரிதவிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.

    காங்கயம் :

    கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே சேவூர் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. மழை, வெயில், குளிர் என 3 சீதோஷ்ண நிலைகளும் அந்தந்த காலத்திற்கு ஏற்ப அதிகரித்து காணப்படும். குறிப்பாக வெயில் மிகச்சாதாரணமாக 100 டிகிரியை கடந்து சுட்டெரிக்கும். அதற்கேற்ப இந்த ஆண்டும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 2 வாரக்காலமாக வெயிலின் தாக்கத்தினை அதிகமாக காண முடிகிறது. பகல் நேரங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு அஞ்சுகிறார்கள்.கோடை தொடங்குவதற்கு முன்பாகவே 100 டிகிரிக்கு மேல் சுட்டெரிக்கும் வெயிலால் வாகன ஓட்டிகள், குழந்தைகள், முதியவர்கள் பரிதவிப்பிற்கு ஆளாகியுள்ளனர். சேவூரில் வெயிலின் தாக்கத்தால் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையோரம் உள்ள மரங்களின் நிழலில் நின்று இளைப்பாரி செல்வதை காண முடிகிறது. பொதுமக்களின் உடல் நலனை பாதுகாக்கும் வகையில் வெள்ளரிப்பிஞ்சு விற்பனை சேவூர் பகுதிகளிலும், சிறு வியாபாரிகள் சைக்கிள்களில் சென்று ஊர் பகுதிகளிலும் விற்பனை செய்து வருகின்றனர். இதனை பொதுமக்கள் வாங்கிச் செல்கின்றனர்.

    கோடை வெயிலின் தாக்கத்தை சமாளிக்க, உடலிலிருந்து வெளியேறும் தண்ணீர் அளவு குறைவை சமாளிக்க பொதுமக்கள், பள்ளி குழந்தைகள் மதிய வேளையில் இந்த வெள்ளரி பிஞ்சுகளை அதிகமாக வாங்கி சாப்பிடுகிறார்கள். குறிப்பாக மற்ற குளிர்பான பொருளை விட விலை மிக குறைவாக (ஒரு வெள்ளரி பிஞ்சு ரூ.10 முதல்) கிடைப்பதால் சூட்டை தணிக்கும் வெள்ளரிப்பிஞ்சு விற்பனை சூடு பிடித்துள்ளது.

    இதுகுறித்து திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த வெள்ளரிப்பிஞ்சு வியாபாரி கூறுகையில், வெள்ளரிப்பிஞ்சு சாறு உடல் உஷ்ணத்தை குறைக்கும். வெள்ளரி பிஞ்சுகளில் நீர் சத்து அதிகமாக இருப்பதால் தண்ணீர் தாகம் எடுக்காது. அதனால் வெயில் காலங்களில் இதை விரும்பி வாங்கி சாப்பிடுகிறார்கள். மார்ச் மாதம் முதல் மே மாதம் முடிய வெள்ளரிப்பிஞ்சு விற்பனை நன்றாக இருக்கும். நாங்கள் சைக்கிள்களில் சென்று ஒவ்வொரு வீதியிலும் விற்பதாலும், வீட்டின் அருகிலேயே கொண்டு சென்று வெள்ளரிப்பிஞ்சு விற்பனை செய்வதாலும், வெயிலுக்கு அஞ்சி வீட்டை விட்டு வெளியே வர முடியாத முதியோர்கள் உள்பட குழந்தைகள் வரை வெள்ளரி பிஞ்சை வாங்கி சாப்பிடுகிறார்கள் என்றார்.

    ×