என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Surfing Competition"
- மாமல்லபுரத்தில் சர்வதேச அலைச்சறுக்கு போட்டி கடந்த 12-ந்தேதி தொடங்கியது.
- வீராங்கனைகள் சாரா வகிதா முதலிடமும், ஷினோ மட்சுடா 2-ம் இடமும் பிடித்து சாதனை படைத்தனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் சர்வதேச அலைச்சறுக்கு போட்டி கடந்த 12-ந்தேதி தொடங்கியது.நேற்று அரையிறுதி மற்றும் இறுதி சுற்று போட்டியுடன் நிறைவடைந்தது. இதில் ஆண்கள் இறுதி போட்டியில் ஜப்பான் நாட்டை சேர்ந்த டென்ஷி இவாமி முதலிடம் பிடித்தார். சுவீடன் நாட்டை சேர்ந்த கியான் மார்ட்டின் 2-ம் இடத்தை பிடித்தார். பெண்கள் இறுதி போட்டியில் ஜப்பான் நாட்டை சேர்ந்த வீராங்கனைகள் சாரா வகிதா முதலிடமும், ஷினோ மட்சுடா 2-ம் இடமும் பிடித்து சாதனை படைத்தனர்.
நிகழ்ச்சியில் கூடுதல் தலைமை செயலர் அதுல்யா மிஸ்ரா, இளைஞர் நலன் விளையாட்டுத்துறை உறுப்பினர்செயலர் மேகநாதன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் ஆகியோர் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்கினர்.
- 9 அடி நீளம் கொண்ட தக்கையை காலில் இணைத்து கொண்டு விளையாடினர்.
- போட்டியில் வெற்றி பெற்றவர்கள் தொடர்ந்து மாமல்லபுரம், கோவளம் ஆகிய இடங்களில் நடைபெறும் அலை சறுக்கு போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் இந்திய அலைச்சறுக்கு சம்மேளனம் சார்பில் தேசிய அளவிலான அலைச் சறுக்குப்போட்டி தொடக்க விழா புதுவை தலைமை செயலம் எதிரில் நேற்று நடைபெற்றது.
இதில் புதுச்சேரி, தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் கடலோர மாநிலங்களை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் 80 பேர் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
தக்கை பலகையின் (சர்ப்போர்ட்) மீது வீரர்கள் நின்று கொண்டு சீறும் அலைகளில் முன்னேறி நகர்ந்து சென்று அசத்தினர். 9 அடி நீளம் கொண்ட தக்கையை காலில் இணைத்து கொண்டு விளையாடினர்.
சீறும் அலைகளில் அதிக நேரம் பயணித்து சாகசம் செய்த வீரர், வீராங்கனைகள் புள்ளிகள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வெளிநாடுகளில் நடப்பது போன்று புதுச்சேரி கடலில் அலைச்சறுக்கு விளையாட்டில் வீரர், வீராங்கனைகளின் சாகசங்களை கடற்கரைக்கு வந்த உள்ளூர் மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு வியந்தனர்.
இதன் இறுதிப் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா இன்று மாலை நடக்கிறது. போட்டியில் வெற்றி பெற்றவர்கள் தொடர்ந்து மாமல்லபுரம், கோவளம் ஆகிய இடங்களில் நடைபெறும் அலை சறுக்கு போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
ஒட்டு மொத்தமாக நடக்கும் போட்டிகளில் பங்கேற்று அதிக புள்ளிகள் பெறும் சிறந்த விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் மாமல்லபுரத்தில் நடை பெறும் சர்வதேச அலைச்சறுக்கு போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவார்கள்.
- ஏப்ரல் மாதம் 13-ந்தேதி எவரெஸ்ட் மலையடிவார முகாமில் இருந்து தனது பயணத்தை தொடங்கினார்.
- 8,850 மீட்டர் உயரத்தை கடந்த 19-ந்தேதி அதிகாலை 5.30 மணியளவில் அடைந்தார்.
சென்னை:
சென்னை கோவளத்தில் உள்ள மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர். 27 வயதான இவர் அலைச் சறுக்கு போட்டிகளில் சர்வ தேச அளவில் பல வெற்றிகளை குவித்துள்ளார்.
அலைச்சறுக்கு பயிற்சியாளராக இருந்த ராஜசேகருக்கு மலையேற்றத்தில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சுமார் 1 வருட காலம் மலையேற்றத்திற்கான பயிற்சிகளை எடுத்தார். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதிக்க வேண்டும் என்பது அவரது கனவு.
இதற்காக கடுமையான பயிற்சியில் ஈடுபட்டார். 6 மலைகளில் ஏறி அதற்காக தன்னை தயார் படுத்திக்கொண்டார்.
எவரெஸ்ட சிகரத்தில் ஏறும் போது கடுமையான பனி, குளிரை தாங்க வேண்டும் என்பதற்காக மணாலி, சோலாங், நேபாள பகுதிகளில் தங்கி உடலை யும், மனதையும், குளிருக்கு தயார் செய்தார். இதையடுத்து அவர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற தயார் ஆனார்.
கடந்த ஏப்ரல் மாதம் 13-ந்தேதி எவரெஸ்ட் மலையடிவார முகாமில் இருந்து தனது பயணத்தை தொடங்கினார். 8,850 மீட்டர் உயரத்தை கடந்த 19-ந்தேதி அதிகாலை 5.30 மணியளவில் அடைந்தார். இதன் மூலம் அவர் தனது கனவை நனவாக்கியுள்ளார்.
ஒரு மாதத்துக்கும் மேலான பயண அனுபவத்தில் பல கடுமையான சோதனைகள், தடைகளை கடந்து எவரெஸ்ட் சிகரத்தை ராஜசேகர் அடைந்து சாதித்து காட்டியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்