என் மலர்
நீங்கள் தேடியது "surya fans"
- நடிகர் சூர்யா ‘கங்குவா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தை இயக்குனர் சிவா இயக்குகிறார்.
இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யு.வி. கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 3டி முறையில் சரித்திர படமாக உருவாகும் கங்குவா 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. 'கங்குவா' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.
'கங்குவா' படத்தின் சண்டைக்காட்சிகள் படமாக்கும் போது, நடிகர் சூர்யா விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் சூர்யாவின் தோள் பட்டையில் லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக நசரத் பேட்டை போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், நடிகர் சூர்யா விரைவில் குணமடைய வேண்டி அவரது ரசிகர்கள் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து அன்னதானம் வழங்கினர். அதுமட்டுமல்லாமல் மாற்று திறனாளி குழந்தைகளுக்கும் அன்னதானம் வழங்கியுள்ளனர்.