search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Surya Kumar yadav"

    • பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் முதலிடத்தில் நீடிக்கிறார்.
    • ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா 7-வது இடம் பிடித்துள்ளார்.

    துபாய்:

    டி20 கிரிக்கெட் போட்டியின் தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது.

    இந்நிலையில், பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 861 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் நீடிக்கிறார்.

    இங்கிலாந்து வீரர் பில் சால்ட் 2-வது இடத்திலும், பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் (781 புள்ளி) 3-வது இடத்திலும் உள்ளனர்.

    மற்றொரு இந்திய வீரர் ஜெய்ஸ்வால் 714 புள்ளிகள் பெற்று 6-வது இடம் பிடித்துள்ளார்.

    பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் 726 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். இலங்கை வீரர் ஹசரங்கா 2-வது இடமும், வெஸ்ட்இண்டீஸ் வீரர் அகில் ஹூசைன் 3-வது இடமும் பிடித்துள்ளனர். இந்திய வீரர்கள் அக்ஷர் பட்டேல் 4-வது இடமும், ரவி பிஷ்னோய் 5-வது இடமும் பிடித்துள்ளனர்.

    ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் இலங்கை வீரர் ஹசரங்கா மற்றும் வங்காளதேச வீரர் ஷகிப் உல்-ஹசன் ஆகியோர் 228 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளனர். ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி 3-வது இடத்தில் உள்ளார். இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா 7-வது இடம் பிடித்துள்ளார்.

    • இங்கிலாந்து கேப்டன் பட்லர் ஐ.சி.சி. கனவு அணிக்கு கேப்டனாக தேர்வு பெற்றுள்ளார். விக்கெட் கீப்பர் மற்றும் தொடக்க வீரரும் ஆவார்.
    • இந்தியா தரப்பில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தேர்வு பெற்றுள்ளனர். ஹர்திக் பாண்ட்யாவுக்கு 12-வது வீரர் வாய்ப்பு கிடைத்து உள்ளது.

    மெல்போர்ன்:

    ஐ.சி.சி. 20 ஓவர் உலக கோப்பையை பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி கைப்பற்றியது. அந்த அணி இறுதி போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    20 ஓவர் உலக கோப்பை போட்டியின் அடிப்படையில் மதிப்பு மிக்க வீரர்கள் கொண்ட அணியை ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) வெளியிட்டுள்ளது. வல்லுனர்கள் குழு ஐ.சி.சி. 20 ஓவர் கோப்பை கனவு அணியை தேர்வு செய்தது.

    இந்த அணியில் இந்தியா தரப்பில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தேர்வு பெற்றுள்ளனர். ஹர்திக் பாண்ட்யாவுக்கு 12-வது வீரர் வாய்ப்பு கிடைத்து உள்ளது. விராட் கோலி இந்த தொடரில் 296 ரன்கள் எடுத்து முதல் இடத்தை பிடித்தார். சூர்யகுமார் யாதவ் 234 ரன்கள் எடுத்துள்ளார்.

    இங்கிலாந்து கேப்டன் பட்லர் ஐ.சி.சி. கனவு அணிக்கு கேப்டனாக தேர்வு பெற்றுள்ளார். விக்கெட் கீப்பர் மற்றும் தொடக்க வீரரும் ஆவார். மற்றொரு தொடக்க வீரர் அலெக்ஸ் ஹால்ஸ் ஆவார்.

    ஐ.சி.சி. கனவு அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் (பேட்டிங் வரிசையில் இருந்து) வருமாறு:-

    அலெக்ஸ் ஹால்ஸ், பட்லர் (கேப்டன், இங்கிலாந்து), விராட் கோலி, சூர்ய குமார் யாதவ் (இந்தியா), பிலிப்ஸ் (நியூசிலாந்து), சிக்கந்தர் ராசா (ஜிம்பாப்வே), ஷதாப் கான் (பாகிஸ்தான்), சாம் கரன் (இங்கிலாந்து) ஆன்ரிச் நோர்க்கியா (தென் ஆப்பிரிக்கா), மார்க்வுட் (இங்கிலாந்து), ஷகீன்ஷா அப்ரிடி (பாகிஸ்தான்) 12-வது வீரர்:- ஹர்திக் பாண்ட்யா (இந்தியா)

    போட்டியை நடத்திய ஆஸ்திரேலிய அணியில் இருந்து ஒருவர் கூட ஐ.சி.சி. கனவு அணியில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • அரைஇறுதியில் இங்கிலாந்தை அடிலெய்டில் சந்திக்க உள்ளோம்.
    • இந்த மாதிரி அதிரடியாக விளையாடுவதை வெளியில் இருந்து பார்க்கும்போது வீரர்கள் அமர்ந்திருக்கும் பகுதியில் நெருக்கடி தணிந்து விடுகிறது.

    வெற்றிக்கு பிறகு இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் இது ஒரு முழுமையான ஆல்ரவுண்ட் செயல்பாடு. இதைத்தான் நாங்கள் எதிர்பார்த்தோம். ஏற்கனவே அரைஇறுதிக்கு தகுதி பெற்று விட்ட நிலையில், இந்த ஆட்டத்தில் களம் இறங்கி விரும்பிய மாதிரி விளையாட வேண்டும் என்று நினைத்தோம்.

    அதை செய்து இருக்கிறோம். சூர்யகுமார் யாதவின் பேட்டிங் அற்புதம். அவர் இந்த மாதிரி அதிரடியாக விளையாடுவதை வெளியில் இருந்து பார்க்கும்போது வீரர்கள் அமர்ந்திருக்கும் பகுதியில் நெருக்கடி தணிந்து விடுகிறது. அத்துடன் எதிர்முனையில் நிற்கும் பேட்ஸ்மேனின் அழுத்தத்தையும் அவர் குறைந்து விடுகிறார்.

    அரைஇறுதியில் இங்கிலாந்தை அடிலெய்டில் சந்திக்க உள்ளோம். அங்குள்ள சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப எங்களை சீக்கிரம் மாற்றிக்கொள்வது முக்கியமாகும்.

    ஏற்கனவே அங்கு நாங்கள் விளையாடி இருக்கிறோம். ஆனாலும் அதற்கு ஏற்ப மாற்றிக் கொள்வது அவசியமாகும். இங்கிலாந்து நல்ல அணி. இது சிறந்த போட்டியாக இருக்கும்' என்றார்.

    • நான் தினேஷ் கார்த்திக் உடன் மிகப்பெரிய பாட்னர்ஷிப் அமைக்க வேண்டும் என்று நினைத்தேன்.
    • இனி வரும் போட்டிகளிலும் எனது சிறப்பான ஆட்டத்தை தொடருவதில் மட்டுமே எனது எண்ணம் இருக்கும்

    இந்திய - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 228 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 178 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. நேற்றைய போட்டியில் தினேஷ் கார்த்திக் 4-வது இடத்தில் களமிறங்க என்ன காரணம் என்பது குறித்து சூர்யகுமார் யாதவ் விளக்கம் அளித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நான் எப்பொழுதுமே புள்ளி விவரங்களை பற்றி யோசிப்பது கிடையாது. போட்டிக்கு என்ன தேவையோ அதைப்பற்றி மட்டுமே தான் யோசிப்பேன். ஆனால் எனது நண்பர்கள் எனக்கு வாட்ஸ் அப் மூலம் என்னுடைய புள்ளி விவரங்களையும், சாதனைகளையும் அனுப்புவார்கள். ஆனால் அதை எல்லாம் நான் பெருசாக எடுத்துக் கொள்வதில்லை.

    என்னுடைய ஆட்டத்தில் மட்டும் கவனத்தை செலுத்தி வருகிறேன். நான் எவ்வாறு விளையாட வேண்டும் என்று நினைக்கிறேனோ அதனை மகிழ்ச்சியுடன் விளையாடி வருகிறேன். நான் தினேஷ் கார்த்திக் உடன் மிகப்பெரிய பாட்னர்ஷிப் அமைக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அது முடியாமல் போனது. இந்த போட்டியில் எனக்கு முன்னால் தினேஷ் கார்த்திக் களமிறங்க காரணம், அவருக்கு இன்னும் பேட்டிங் செய்ய நிறைய நேரம் கொடுக்க வேண்டும் என நினைத்தோம்.

    அதன்படி அவர் முன்கூட்டியே களமிறங்கினால் அவர் களத்தில் நீண்ட நேரம் நின்று விளையாட முடியும் என்பதனாலே அவருக்கு விளையாட ஒரு வாய்ப்பாக இந்த பிரமோஷன் வழங்கப்பட்டது. அவரும் நான்காவது இடத்தில் பிரமாதமாக விளையாடினார். தற்போது என்னுடைய இடம் ஆபத்தில் இருப்பதாக நினைக்கிறேன். ஆனாலும் அதைப்பற்றி நான் யோசிக்க போவதில்லை. இனி வரும் போட்டிகளிலும் எனது சிறப்பான ஆட்டத்தை தொடருவதில் மட்டுமே எனது எண்ணம் இருக்கும்

    இவ்வாறு சூர்யகுமார் யாதவ் கூறினார்.

    • பந்து வீச்சில் புவனேஸ்வர் குமார், நோர்க்கியா ஆகிய இருவரும் 658 புள்ளிகளுடன் உள்ளனர்.
    • வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த நிக்கோலஸ் பூரன் 5 இடங்கள் முன்னேறி 8-வது இடத்தை பிடித்துள்ளார்.

    ஐசிசி டி20 போட்டிக்கான பேட்டிங் மற்றும் பந்து வீச்சு தரவரிசை பட்டியலை இன்று ஐசிசி வெளியிட்டுள்ளது. பேட்டிங்கில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சூர்ய குமார் யாதவ் டாப் 10-ல் இடம் பிடித்துள்ளார். அவர் 44 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார்.

    இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் அவர் டாப் 10-ல் இடம் பிடித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த நிக்கோலஸ் பூரன் 5 இடங்கள் முன்னேறி 8-வது இடத்தை பிடித்துள்ளார்.

    புவனேஸ்வர் குமார்

    புவனேஸ்வர் குமார்

    இதேபோல் பந்து வீச்சில் இந்திய அணியின் புவனேஸ்வர் குமார் டாப் 10-ல் இடம் பிடித்தார். அவர் தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் நோர்க்கியாவுடன் 7-வது இடத்தை பகிர்ந்துள்ளார். இருவரும் 658 புள்ளிகளுடன் உள்ளனர்.

    • சேசிங்கில் சதம் அடித்த 5-வது இந்திய வீரர் என்ற பெருமையை சூர்யகுமார் யாதவ் பெற்றார்.
    • சூர்யகுமார் யாதவிற்க்கு தற்போது பல்வேறு தரப்பிலும் இருந்தும் பெரிய அளவில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

    இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடந்தது. இதில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணி தோல்வியடைந்திருந்தாலும் தொடரை கைப்பற்றியது. இந்த போட்டியில் சூர்ய குமாரின் பேட்டிங் மிரட்டலாக இருந்தது. அவர் அடித்த ஒவ்வொரு ஷாட்டும் அற்புதமாக இருந்தது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

    இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ் அடித்த இந்த சதத்தின் மூலம் மேலும் சில சாதனைகளுக்கு அவர் சொந்தக்காரராக மாறியுள்ளார். நான்காவது இடத்தில் களமிறங்கிய இந்திய அணியின் முன்னணி வீரரான ராகுலுக்கு பிறகு சதம் அடித்த ஒரே வீரர் இவர்தான் என்ற சாதனையையும் சூர்யகுமார் படைத்துள்ளார்.

    ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நான்காவது வீரராக களமிறங்கிய ராகுல் சதம் அடித்து அசத்தியிருந்தார். அதனை தொடர்ந்து அதே நான்காவது இடத்தில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 48 பந்துகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த சதத்தினை பூர்த்தி செய்தார். டி20 கிரிக்கெட்டில் சேசிங்கில் சதம் அடித்த 5-வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.ரோஹித் சர்மாவின் அதிகபட்ச ரன்கள் (118 ரன்கள்) என்கிற சாதனையை ஒரு ரன்னில் அவர் தவற விட்டு ஆட்டமிழந்து வெளியேறினார்.

    சூர்யகுமார் யாதவிற்க்கு தற்போது பல்வேறு தரப்பிலும் இருந்தும் பெரிய அளவில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ஏற்கனவே இப்போட்டி முடிந்து சூர்யகுமார் யாதவின் ஆட்டம் குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் மற்றும் ஆட்டநாயகன் ரீஸ் டாப்லீ ஆகியோர் பாராட்டிய வேளையில் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

    ×