என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "suspends"

    • சிலர் ஜெயசித்ராவை விடுவிக்குமாறு ரகளையில் ஈடுபட்டனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் கெங்கவல்லி-தம்மம்பட்டி தேசிய நெடுஞ்சாலை அருகே ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை அருகே பகலில் மது விற்றது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவரது மனைவி ஜெயசித்ரா (35) என்பவரை போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். அவரிடம் இருந்து மது பாட்டில்கள் மற்றும் பணமும் பறிமுதல் செய்யப்பட்டன.

    அப்போது அங்கு வந்த சிலர் ஜெயசித்ராவை விடுவிக்குமாறு ரகளையில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக ராஜா மற்றும் அவரது நண்பர்களான ஜெயச்சந்திரன் (51), நீலகண்டன் (50) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    இவர்களில் ஜெயச்சந்திரன் அரசு போக்குவரத்து கழகத்தில் தம்மம்பட்டி பணி மனையில் கண்டக்டராகவும், நீலகண்டன் சேலம் மெய்யனூர் பணி மனையில் டிரைவராகவும் பணியாற்றி வருகின்றனர். இதையடுத்து அவர்கள் 2 பேர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுத்து 2 பேரையும் சஸ்பெண்டு செய்து அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் கோபாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

    இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் நுவான் ஜோய்சா, அவிஷ்கா குணவர்த்தனே ஆகியோர் சூதாட்ட புகாரில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
    துபாய்:

    இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நுவான் ஜோய்சா, முன்னாள் பேட்ஸ்மேன் அவிஷ்கா குணவர்த்தனே ஆகியோரை சூதாட்ட புகாரின் பேரில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இடைநீக்கம் செய்தது.

    கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த 10 ஓவர் லீக் போட்டியில் பங்கேற்ற அவர்கள் இருவர் மீதும் எழுந்த சூதாட்ட புகாரை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீதான புகார் என்ன? என்பது வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை.

    தங்கள் மீதான புகாருக்கு 14 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி இருவரும் உத்தரவிடப்பட்டுள்ளது. நுவான் ஜோய்சா கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் சூதாட்ட புகார் காரணமாக ஏற்கனவே இடைநீக்கம் செய்யப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    இந்திய தேர்தல் ஆணையம் பெயரில் இயங்கிய 2 போலி கணக்குகளை டுவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #IndianElectionCommision #Twitter
    புதுடெல்லி:

    பல்வேறு அரசியல் தலைவர்கள், பிரபல பாலிவுட் பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் ஆகியோர் அன்றாட நிகழ்வுகள் குறித்த தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.  அதில் டுவிட்டர் வலைத்தளமும் ஒன்று.

    ஆனாலும், பிரபலங்களின் பெயர்களில் போலி அக்கவுண்ட் வைத்து செயல்பட்டு வருபவர்களை கண்டறிந்து டுவிட்டர் நிறுவனம் அவர்களது கணக்குகளை நீக்கி வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக, இந்திய தேர்தல் ஆணையம் பெயரில் 2 போலி கணக்குகள் செயல்பட்டு வந்ததை கண்டறிந்த டுவிட்டர் நிறுவனம் இன்று அந்த கணக்குகளை இன்று அதிரடியாக நீக்கியுள்ளது.



    இதுதொடர்பாக, தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறுகையில், இந்திய தேர்தல் ஆணையம் பெயரில் போலியாக 2 டுவிட்டர் கணக்குகள் இயங்கி வந்தன.  @Election Comm மற்றும் @DalitFederation என்று தனித்தனியான பெயரில் இயங்கி வந்த இந்த கணக்குகளை ஆயிரக்கணக்கானோர் பின்பற்றி வந்துள்ளனர்.

    இந்திய தேர்தல் ஆணையத்திற்கு என்று அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு எதுவும் இல்லை. இது மக்களை தவறாக வழிநடத்த கூடும் என்பதால், டுவிட்டர் நிறுவனத்திடம் தக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டு கொண்டது. அதன்படி இந்திய தேர்தல் ஆணையம் பெயரில் போலியாக செயல்பட்டு வந்த 2 கணக்குகளை டுவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது என தெரிவித்தனர். #IndianElectionCommision #Twitter
    இலங்கையில் பிரதமர் பதவி மாற்றம் தொடர்பான பனிப்போர் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில் பாராளுமன்றத்தை தற்காலிகமாக முடக்கி அதிபர் சிறிசேனா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். #MaithripalaSirisena #RanilWickremesinghe #MahindaRajapakse
    கொழும்பு:

    இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா, அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக நியமித்து, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    இந்த விவகாரம் சர்வதேச அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தன்னை பிரதமர் பதவியில் இருந்து நீக்கம் செய்தது செல்லாது. நாட்டின் பிரதமராக நான் தொடர்ந்து நீடிக்கிறேன் என  விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். தன்னை பதவிநீக்கம் செய்ய பாராளுமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    மேலும், பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் நவம்பர் மாதம் 5-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், பிரதமர் மாற்றம் தொடர்பாக விவாதிப்பதற்காக அவசரமாக பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் என சபாநாயகர் கரு ஜெயசூர்யாவுக்கு விக்கிரமசிங்கே கடிதம் அனுப்பினார்.



    பாராளுமன்றம் அவசரமாக கூட்டப்பட்டால் அங்கு அதிபர் மைத்ரிபாலா சிறிசேனாவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர விக்கிரமசிங்கே திட்டமிட்டிருந்தார்.

    இந்நிலையில், நவம்பர் 16-ம் தேதிவரை பாராளுமன்றத்தை முடக்கம் செய்து அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா இன்று பிற்பகல் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதை தொடர்ந்து இலங்கை அரசியலில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது.   #MaithripalaSirisena  #RanilWickremesinghe #MahindaRajapakse
    ×