என் மலர்
முகப்பு » Suzuki GSX S750
நீங்கள் தேடியது "Suzuki GSX S750"
சுசுகி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்தியாவில் 2019 சுசுகி GSX S750 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. #Suzuki
சுசுகி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்தியாவில் 2019 GSX S750 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. புதிய 2019 சுசுகி GSX S750 மோட்டார்சைக்கிள் விலை ரூ.7.46 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய மோட்டார்சைக்கிளில் பல்வேறு காஸ்மெடிக் மாற்றங்கள் மற்றும் இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கிறது.
2019 சுசுகி GSX S750 மோட்டார்சைக்கிள் மெட்டாலிக் மேட் பிளாக் மற்றும் பியல் கிளேசியர் வைட் என இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கிறது. இரண்டு நிறங்களிலும் புதிய கிராஃபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக இதே மோட்டார்சைக்கிள் பிப்ரவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டு தற்சமயம் இந்தியாவிலும் இது கிடைக்கிறது.
காஸ்மெடிக் மாற்றங்கள் தவிர புதிய மோட்டார்சைக்கிளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. 2019 சுசுகி GSX S750 மோட்டார்சைக்கிளில் 749 சிசி இன்-லைன், 4-சிலிண்டர், லிக்விட்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 114 பி.ஹெச்.பி. பவர், 81 என்எம் டார்கியூ @9000 ஆர்.பி.எம்.-இல் வழங்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.
சஸ்பென்ஷனிற்கு முன்புறம் 41 எம்.எம். அப்சைடு-டவுன் ஃபோர்க்களும், பின்புறம் பிரீ-லோடு அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் இரண்டு சக்கரங்களிலும் ஏ.பி.எஸ். வசதி கொண்ட டிஸ்க் பிரேக்கள் வழங்கப்பட்டுள்ளன.
இவைதவிர 2019 சுசுகி GSX S750 மாடலில் 3-மோட் டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், ஆர்.பி.எம். அசிஸ்ட், எல்.இ.டி. ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லைட் போன்றவை வழங்கப்பட்டுள்ளது.
×
X