search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Swadeshi mill"

    • புதுவை மறைமலையடிகள் சாலையில் சுதேசி மில் சுற்றுச்சுவரை ஒட்டி பூ, பழம், குளிர்பானம், இலை என பல்வேறு கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.
    • அப்போது வியாபாரிகள் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை மறைமலையடிகள் சாலையில் சுதேசி மில் சுற்றுச்சுவரை ஒட்டி பூ, பழம், குளிர்பானம், இலை என பல்வேறு கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே புதுவை நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை போலீசார் உதவியுடன் புதுவையின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக  சுதேசி மில் சுவரை ஒட்டியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்தனர்.

    அப்போது வியாபாரிகள் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகள் 2 நாள் கால அவகாசம் கொடுத்தனர். 2 நாட்களுக்குள் ஆக்கிரமிப்புகளை தாமாக முன்வந்து அகற்றிக்கொள்ள வேண்டும்.

    இல்லையென்றால் பொக்லைன் எந்திரம் வைத்து அகற்றப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். இதனை வியாபாரிகள் ஏற்றுக்கொண்டு கலைந்து சென்றனர்.இதேபோல் நகர பகுதிகளில் பல்வேறு இடங்களில ஆக்கிரமிப்பு அகற்றம் நடந்தது.

    மடுகரை பஸ் நிலையத்தில் நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்துக்கு சொந்தமான 20கடைகளும், மரக்காலீஸ்வரர் தேவஸ்தான கமிட்டிற்கு சொந்தமாக 30-க்கும் மேற்பட்ட கடைகளும் இயங்கி வருகின்றன. கொம்யூன் பஞ்சாயத்தின் கீழ் 10கடைகள் ஏலம்விடப்பாடாமல் பூட்டியே கிடக்கின்றதது.

    பஸ் நிலைத்தில் வணிக கடை நடத்தி வருபவர்கள் அவர்களின் கடைகளுக்கு வெளியே சீமைஓடுகள் மற்றும் தகர சீட்டுகள் அமைத்து கடையை நீட்டிப்பு செய்துள்ளனர்.

    கடலூர், விழுப்புரம், புதுவை என 3 மார்க்கங்களுக்கும் பஸ்கள் மடுகரையில் இருந்து செல்கின்றது. வணிக கடை வைத்திருப்பர்கள் கடையை நீட்டிப்பு செய்துள்ளதால், பஸ்கள் திரும்புவதற்கு இடையூறாக உள்ளது. மேலும் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களது மோட்டார் சைக்கிளை கடையின் வாசலிலே விட்டு செல்வதாலும், பஸ் டிரைவர்களுக்கு மிகுந்த சிரமாக உள்ளது.

    பொதுப்பணித்துறை அதிகாரிகள் போலீசாரன் உதவியோடு, மடுகரை பஸ்நிலையத்தில் உள்ள கடைகளில் நீட்டிப்பு செய்துள்ள பகுதிகளை அதிரடியாக இடித்து தள்ளினர். இதனால் மடுகரை பஸ்நிலையத்தில் பெரும் பரபரப்பு நீடித்தது. வியாபாரிகளுக்கு முன்கூட்டியே எந்தவித அறிவிப்பு இல்லாமல் பொதுப்பணித்து றையினர் செய்த நடவடிக்கைக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். வணிகர்கள் சார்பில் 2 நாட்கள் அவகாசம் கேட்டுள்ளதால், பொதுப்பணித்துறையினர் பணியை பாதியில் விட்டு சென்றனர்.

    ×