என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Swati"

    • ரன்வீர் அல்லாபாடியாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
    • சர்ச்சை கருத்து கூறியதற்காக யூடியூபர் ரன்வீர் அல்லாபாடியா மன்னிப்பு கேட்டார்.

    புதுடெல்லி:

    பிரபல யூடியூபர் ரன்வீர் அல்லாபாடியா. பீர்பைசெப்ஸ் என அறியப்படும் நிகழ்ச்சியில் தெரிவித்த கருத்தால் சர்ச்சையில் சிக்கினார்.

    சமீபத்தில் Indias Got Tatent நிகழ்ச்சியில் பங்கேற்ற ரன்வீர் போட்டியாளர் ஒருவரிடம், "உங்கள் வாழ்நாள் முழுக்க பெற்றோர் ஒவ்வொரு நாளும் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா? அல்லது அதை பார்ப்பதை நிறுத்த ஒருமுறை அவர்களுடன் அதில் பங்கேற்பீர்களா? இரண்டில் எதை தேர்ந்தெடுப்பீர்கள்?'' என கேட்டார்.

    ரன்வீரின் இந்தக் கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இவருக்கு எதிராக பல்வேறு காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. இதற்கிடையே, சர்ச்சை கருத்து கூறியதற்காக யூடியூபர் ரன்வீர் அல்லாபாடியா மன்னிப்பு கேட்டார்.

    இந்நிலையில், நகைச்சுவை நடிகை ஸ்வாதி சச்தேவா ஸ்டாண்ட்-அப் நிகழ்ச்சியின் ஒரு கிளிப் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

    வீட்டில் ஒரு வைப்ரேட்டரைக் கண்டுபிடித்தது குறித்து தனது தாயின் எதிர்வினையை ஸ்வாதி நகைச்சுவையாகக் கூறுகிறார். ஒரு வைப்ரேட்டரைக் கண்டுபிடித்த பிறகு, தனது அம்மா தன்னுடன் வெளிப்படையாகப் பேச முயற்சித்ததைப் பற்றி நகைச்சுவையாகக் கூறிய ஸ்வாதி, தனது அம்மா வைப்ரேட்டரை ஒரு கேஜெட் மற்றும் பொம்மை என்று எப்படி சங்கடமாகக் குறிப்பிட்டார் என்பதையும் விளக்கினார்.

    ஸ்வாதி சச்தேவாவின் இந்தக் கருத்துக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நகைச்சுவை என்ற பெயரில் ஸ்வாதி ஆபாசத்தைப் பரப்புவதாக குற்றம்சாட்டிய நெட்டிசன்கள், அவரது கருத்து வெட்கக் கேடானது எனவும் காட்டமாக விமர்சித்து வருகின்றனர்.

    சுப்ரமணியபுரம் படம் வெளியாகி 10வது வருடத்தை கொண்டாடி வரும் நிலையில், இயக்குனர் சசிகுமாருக்கு நடிகர் ஜெய் நன்றி சொல்லியிருக்கிறார். #10yearsofsubramaniyapuram
    2008ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘சுப்ரமணியபுரம்’. இப்படத்தை சசிகுமார் இயக்கி நடித்திருந்தார். மேலும் ஜெய், சமுத்திரகனி, ஸ்வாதி, கஞ்சா கருப்பு, உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

    தமிழ் திரைப்படங்களில் முக்கிய இடத்தைப் பெற்ற இப்படம் வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வெளியாகி இன்று 10 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ள நிலையில் இயக்குனர் சசிகுமாருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்தவண்ணம் உள்ளன. மேலும் ரசிகர்கள் இப்படத்தின் புகைப்படங்களை வெளியிட்டு சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு கொண்டாடி வருகிறார்கள்.

    இந்நிலையில், பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் தனது ட்விட்டர் பக்கத்தில், சசிகுமார் சுப்ரமணியபுரம் போன்ற படத்தைக் கொடுத்து இன்றுடன் 10 வருடங்களாகிவிட்டன. ஆனால் இப்போது நீங்கள் நடிகராகி விட்டீர்கள். சுப்ரமணியபுரம் போன்ற படங்களை தாருங்கள் என கோரிக்கை வைத்துள்ளார். மேலும் இப்படம் தான் கேங்ஸ் ஆஃப் வாஸேப்பூர் படம் எடுக்க தனக்கு ஊக்கமாக அமைந்ததாகவும் அனுராக் காஷ்யப் கூறியுள்ளார்.



    தற்போது இப்படத்தில் கதாநாயகனாக நடித்த ஜெய், ‘சுப்ரமணியபுரம் படத்தில் இருந்து அழகர் வந்து 10 வருடங்கள் ஆகிவிட்டது. என்னுடைய ரசிகர்கள் என்னை நடிகராக நிலைக்க வைத்திருக்கிறார்கள். நீங்கள் இல்லையென்றால் நான் ஒன்றும் இல்லை. இயக்குனர் சசிகுமாருக்கு சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. நன்றி. எப்பவும் ரசிகர்கள் பாராட்டும் படத்தை கொடுத்திருக்கிறார். எல்லோருக்கும் நன்றி’ என்று பதிவு செய்திருக்கிறார்.
    ×