என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Sweat"
- வெயில் காலத்தில் வறுத்து சாப்பிடும் உணவுகளை தவிர்க்கலாம்.
- பழச்சாறுகளை எடுத்து கொள்வது வியர்க்குரு பிரச்சனைக்கு நல்ல தீர்வாக இருக்கும்.
கோடைக்காலத்தில் பெரும்பாலானோர் பாதிக்கப்படுவது வியர்க்குரு பிரச்சனையில் தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த பிரச்சனை உள்ளது. வியர்குரு அதிகாமாக வருவதற்கு காரணம் என்னவென்றால் வியர்வை காரணமாக வரும் பாக்டீரியல் கிருமியின் அதிகப்படியான உற்பத்தி தான் இந்த வியர்குரு வருவதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
இந்த வியர்குருவில் இருந்து நாம் தப்பிக்க வேண்டுமானால் தினமும் மூன்று நேரம் குளியல் என்ற நடைமுறையை இந்த காலத்தில் கொண்டு வரவேண்டும். இவ்வாறு மூன்று வேலை குளிக்கும் போதும் நமது உடலில் வியர்வையால் ஏற்படும் பாக்டீரியாவில் இருந்து விடுபடலாம்.
அதையும் தாண்டி உங்களுக்கு வியர்குரு வந்தால் நல்ல ஆன்டி பாக்டீரியல் பவுடரையும் பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கு மிகவும் லேசான காட்டன் உடைகளை பயன்படுத்துதல் நல்லது.
அதிக படியான இந்த வெயில் காலத்தில் வறுத்து சாப்பிடும் உணவுகளை தவிர்க்கலாம். அதிக கார உணவுகளையும் தவிர்க்க வேண்டும். இதன் மூலம் வியர்வை பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
அதிகப்படியான பழம், பழச்சாறுகளை எடுத்து கொள்வது வியர்குரு பிரச்சனைக்கு நல்ல தீர்வாக இருக்கும்.
- வியர்வை சுரப்பிகள் நமது உடலெங்கும் உள்ள தோலில் இருக்கின்றன.
- உடலின் வெப்ப நிலையை பராமரித்து காப்பவை வியர்வை சுரப்பிகள்.
வியர்வை சுரப்பிகள் நமது உடலெங்கும் உள்ள தோலில் இருக்கின்றன. உதடு, வெளிக்காது, நகத்தின் அடிப்பகுதி, ஆண்கள்- பெண்களின் பிறப்புறுப்பு ஆகிய இடங்களில் மட்டும் தான் வியர்வை சுரப்பிகள் இல்லை. உடலின் வெப்ப நிலையை பராமரித்து காப்பவை வியர்வைச் சுரப்பிகள்.
தட்பவெப்ப சீதோஷ்ண நிலை, வெயிலில் அதிக நேரம் இருப்பது. அதிக வியர்வை வரும் வேலைகளை செய்வது. இறுக்கமான ஆடைகளை அணிவது. காற்றோட்டம் அதிகம் இல்லாத இடத்தில் அதிக நேரம் இருப்பது போன்றவை வியர்க்குருவை உண்டாக்கும் சில காரணங்களாகும்.
1) இளநீர், தர்ப்பூசணி, வெள்ள ரிக்காய், கிர்ணிப்பழம், பனை நுங்கு போன்ற பழங்களை அதிகமாக சாப்பிட லாம்.
2) வேப்பிலை, சந்தனம், மஞ்சள் இந்த மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்து, வியர்க்குரு இருக்கும் இடங்களில் தேய்த்து, சுமார் ஒரு மணி நேரம் ஊற விட்டு பின்பு குளிக்கலாம். இதுபோல சந்த னத்தை உடலெங்கும் தேய்த்துக்கொள்ளலாம். கற்றாழைச் சாறு தடவினால் நல்ல பலன் கிடைக்கும். ஐஸ் கட்டிகளை ஒரு துணியில் கட்டி வைத்துக் கொண்டு வியர்க்குரு இருக்கும் இடங்களின் மேல் தடவினால் எரிச்சல், அரிப்பு குறைந்துவிடும்.
3) வெயில் காலத்தில் வழக்கமாக குடிப்பதைவிட சற்று அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
4) முடிந்தவரை வெயில் கடுமையாக இருக்கும் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். பருத்தியால் செய்யப்பட்ட ஆடைகளை வெயில் காலத்தில் உடுத்தவும். காற்றோட்டமான இடத்தில் இருக்கப் பழகுங்கள்.
4.கற்றாழை ஜெல் அனைத்து சரும பிரச்சனைக்கும் தீர்வு தருகிறது. சரும பிரச்சனையை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் வியர்குருவிற்கும் சிறந்ததாக விளங்குகிறது. கற்றாழையில் இருக்கும் ஜெல்லை வியர்க்குரு ஏற்பட்டு இருக்கும் இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்த பின்னர் நன்றாக குளிர்ந்த நீரில் குளித்து வந்தால் கண்டிப்பாக இந்த வியர்க்குரு போன்ற பிரச்சனை உடனடியாக நீங்கும்.
5. வியர்க்குரு, அரிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த வீட்டு வைத்தியம் என்னவென்றால் ஃப்ரிட்ஜில் இருக்கும் ஐஸ் கட்டி தான். இந்த ஐஸ் கட்டிகளை வியர்க்குரு உள்ள பகுதிகளில் தேய்த்து வந்தால் வியர்க்குரு போன்ற பிரச்சனைகள் நீங்கும்.
6. சந்தன பவுடரை பன்னிருடன் கலந்து வியர்க்குரு எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கு தடவ வேண்டும். நன்றாக தடவிய பிறகு சிறிது நேரம் கழித்து நீரால் கழுவ வேண்டும். இந்த முறையை பின்பற்றினால் வியர்க்குரு தொல்லை அறவே இருக்காது.
7. வியர்க்குருவை தடுக்க வெள்ளரிக்காயை நறுக்கி அரைத்து வைத்து கொள்ளவும். பிறகு அரைத்து வைத்த வெள்ளரிக்காய் விழுதை வியர்க்குரு உள்ள இடங்களில் 2 அல்லது 3 மணிநேரம் தடவி நன்றாக காயவைக்க வேண்டும். நன்றாக காய்ந்த பிறகு குளிர்ந்த நீரில் குளித்தால் வியர்க்குரு நீங்கி விடும்.
வியர்வை ஏன்?
நமது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் விதமாகவும், உடலின் வெப்பநிலையை சீர்படுத்தும் ஒரு அமைப்பாகவும் வியர்த்தல் நிகழ்வு உடலில் நடக்கிறது. உடல் தோலின் அடிப்பகுதியில் காணப்படும் வியர்வைச் சுரப்பிகள் வியர்வையை உருவாக்கி வெளியேற்றுகின்றன. சில சத்துக்கள் மிகுந்தால் கழிவுடன் கலந்து வெளியேற்றப்படுவது உண்டு.
வாசனை கிடையாது
வியர்வைக்கு உண்மையில் வாசனை கிடையாது. ஆனால் சருமத்தில் வாழும் பாக்டீரியாக்கள் அதனுடன் கலந்து நாற்றத்தை உருவாக்குகிறது. இதுவே சிலருடைய வியர்வை கெட்ட நாற்றம் அடிக்க காரணமாகும்.சைவ உணவு சாப்பிடுபவர்களின் வியர்வை அதிகமாக நாற்றம் அடிப்பதில்லை என்று ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
வியர்வையும், வெப்பமும்
வெளியில் வெப்பம் அதிகமாக இருந்தால், அந்த வெப்பம் உடலைத் தாக்காதவாறு தற்காத்துக் கொள்வதற்காக அதிகமாக வியர்வை வெளியேற்றப்படும். அதனால்தான் இந்த வெயில்காலத்தில் நம்மை வியர்வை பாடாய்ப்படுத்துகிறது. வியர்வையால் உடலின் நீர்ச்சத்து வெகுவாக குறைந்துவிடுவதால் தாகம் எடுக்கும். தண்ணீர் குடித்தாலும் தாகம் தீர்ந்ததுபோல உணர முடியாது. அதனால் தாதுக்கள் நிறைந்த ஜூஸ் மற்றும் பானங்களை பருகினால் உடலின் தாதுத் தேவை ஈடுகட்டப்படும். பழரசங்கள் மற்றும் இயற்கை குளிர் பானங்களை பருகி கோடையை சமாளிக்கலாம்.
வியர்வை எவ்வளவு?
வியர்வையின் அளவு ஒவ்வொருவரின் உடல் வெப்பம் மற்றும் சுற்றுப்புற வெப்பநிலைக்கு ஏற்ப மாறுபடும். 85 டிகிரி வெப்பநிலையிலும், 40 சதவீத ஈரப்பதத்திலும் ஒரு மனிதர் சராசரியாக 1.8 லிட்டர் வியர்வையை ஒரு மணி நேரத்தில் வெளியேற்றுவார் என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வியர்வை வியாதி
சிலருக்கு அதிகமாக வியர்த்துக் கொட்டும். இப்படி அதீத வியர்வை வெளியேற்றப் பாதிப்பு ‘கைபர்விட்ராசிஸ்’ எனப்படுகிறது. உலகில் 3 சதவீதம் பேருக்கு இப்படி அதீத வியர்வைப் போக்கு பாதிப்பு இருக்கிறதாம்.
அதேபோல சில மனிதர்களுக்கு, நீர்யானைபோல ரத்தச் சிவப்பில் வியர்ப்பது உண்டு. இது ஹீமடோஹைட்ராசிஸ் எனப்படுகிறது. இந்த பாதிப்பு உள்ளவர்களின் வியர்வைச் சுரப்பியானது, ரத்த செல்களை சேதப்படுத்துவதால் வியர்வையுடன் கலந்து ரத்தமும் வெளியேறுகிறது. அதிக மன அழுத்தத்தால் இதுபோன்ற பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.
லட்சக்கணக்கில் வியர்வை சுரப்பிகள்
மனித உடலில் கண், வாய், வாய், மூக்கு உள்ளிட்ட நவ துவாரங்கள் இருப்பதாக கூறப்படுவது உண்டு. வியர்வை வெளியேறும் வழிகளும் உடலின் துவாரங்களே. ஆனால் அவை சாதாரணமாக கண்களுக்குத் தெரிவதில்லை. வியர்வையை வெளியேற்றுவதற்காக உடலில் பல லட்சம் நுண்துளைகள் உள்ளன. 25 லட்சம் முதல் 50 லட்சம் வரையிலான வியர்வை சுரப்பிகள் இவற்றின் அடியில் இருந்துசெயல்பட்டு வியர்வையை வெளியேற்றுகின்றன.
மஞ்சள் வியர்வை
கை உடலுடன் இணையும் பகுதியின் அடிப்புறம் அக்குள் எனப்படுகிறது. அதிகமாக வியர்க்கும் பகுதிகளில் இதுவும் ஒன்று. இந்த பகுதியில் வழியும் வியர்வையால் உடையில் மஞ்சள் கறை தோன்றினால் உடலில் புரதம் மற்றும் கொழுப்பு அமிலங்கள் மிகுந்துவிட்டதாக அர்த்தம்.
சிவப்பு வியர்வை
நமது வியர்வைக்கு நிறம் கிடையாது. ஆனால் சில பொருட்களின் சேர்க்கையால் வியர்வை நிறம் மாறுவது உண்டு. உதாரணமாக நீர் யானைகளின் வியர்வை சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. ஆரம்ப காலத்தில் அதை வியர்வை என்று அறியாமல் பலவித கதைகள் புனையப்பட்டன. நவீன அறிவியல் அவற்றின் சிவப்பு வியர்வைக்கு காரணத்தை கண்டறிந்து கூறி உள்ளது. வியர்வையுடன் சிவப்பு நிறமிப் பொருளும் கலந்து வெளியேறுவதே அதன் வியர்வை சிவப்பாக இருக்கக் காரணமாகும். மேலும் அவற்றின் சிவப்பு வியர்வை, சூரிய வெப்ப தாக்குதலை மிகுதியாக கட்டுப்படுத்துவதும், தீமை செய்யும் பாக்டீரியா கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
உணவும், வியர்வையும்...
சாப்பிடுவது வியர்வையை தூண்டும். சாப்பிடும்போது வளர்ச்சிதை மாற்றங்கள் அதிகமாகிறது. அப்போது உடல் வெப்பம் அதிகரிக்கிறது. எனவே உடலை குளிர்விக்கும் விதமாக வியர்வை அதிகமாக சுரக்கத் தொடங்குகிறது.
வியர்வையில் உப்பு
ஆண்களுக்கு பெண்களைவிட அதிகமாக வியர்க்கும். ஆண்களுக்கு சுமார் 40 சதவீதம் அதிகமாக வியர்க்கிறதாம். மேலும் ஆண்களின் வியர்வையில் உப்புத்தன்மையும் சற்று அதிகமாக இருக்கும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்