search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sweeper"

    • அரியானா மாநிலத்தில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது.
    • தூய்மை பணியாளர் வேலைக்கு 6,000க்கும் மேற்பட்ட முதுகலை பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.

    அரியானா மாநில அரசு அலவலகங்களில் குப்பைகளை அகற்றும் தூய்மை பணியாளர் வேலைக்கு 6,000க்கும் மேற்பட்ட முதுகலை பட்டதாரிகள், சுமார் 40,000 இளங்கலை பட்டதாரிகள் மற்றும் 12ம் வகுப்பு வரை படித்தவர்கள் என 1.2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

    மாதம் 15,000 ரூபாய் சம்பளம் கிடைக்கும் இந்த வேலைக்கு ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அரியானாவில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மையை ஆளும் மாநில பாஜக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    • தெலுங்கானா அரசு சார்பில் டெல்லி குடியரசு தின விழாவில், 7 பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
    • நேரம் கிடைக்கும் போதெல்லாம், ராமாயணம், பகவத் கீதை குறித்து நாட்டு பாடல்களை பாடி அசத்தி வருகிறார்.

    டெல்லி குடியரசு விழா அணிவகுப்பில், ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் அம்மாநிலத்தின் பெருமையை விளக்கும் வகையில் வாகன ஊர்வலம் நடைபெறும்.

    இந்த முறை தெலுங்கானா அரசு சார்பில் டெல்லி குடியரசு தின விழாவில், 7 பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    அதில், கடந்த 22 ஆண்டுகளாக ஐதராபாத் மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளராக பணியாற்றும் நாராயணம்மா என்பவரும் கலந்துகொள்கிறார்.

    ரங்காரெட்டி மாவட்டம், யாச்சாரம் பகுதியை சேர்ந்த இவர் கடந்த 22 ஆண்டுகளில் நாள் தவறாமல் பணியாற்றி வருவதுடன், கூடுதல் நேரம் ஒதுக்கி துப்புரவு தொழிலை அக்கறையுடன் செய்து வருகிறார்.

    மேலும், நேரம் கிடைக்கும் போதெல்லாம், ராமாயணம், பகவத் கீதை குறித்து நாட்டு பாடல்களை பாடி அசத்தி வருகிறார். இதற்காக நாராயணம்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இதேபோன்று, சூர்யாபேட்டை மாவட்டம், கோதாடா பகுதியை சேர்ந்தவர் நாகலட்சுமி. பட்டதாரியான இவர் தினமும் காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை ஒரு ஆட்டோவில், கூண்டு போல் ஏற்பாடு செய்யப்பட்ட மொபைல் கழிப்பறையை இணைத்து ரெயில் நிலையம், பஸ் நிலையம், மார்க்கெட், சினிமா அரங்குகள் போன்ற மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் நிறுத்தி வைப்பார். இது பெண்கள் மட்டுமே பயன்படுத்தக் கூடியதாகும்.

    இதை யார் வேண்டுமானாலும் இலவசமாக உபயோகிக்கலாம். இதுபோன்ற சேவையை நாகலட்சுமி தவறாமல் செய்து வருகிறார்.

    சிறப்பாக செயலாற்றி வரும் சைலஜா, அனிதா ராணி, சுரேகா, ரமாதேவி, லட்சுமி ஆகிய 5 பெண் ஊராட்சி மன்ற தலைவிகளையும் தெலுங்கானா அரசு தேர்வு செய்துள்ளது.

    • பகலில் கழிவு நீர் கால்வாய்களை சுத்தம் செய்கிறார்.
    • மாலையில் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி பெறுகிறார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் ராஜமகேந்திராவரத்தை சேர்ந்தவர் ஆர்ஜித பாலகிருஷ்ணா. இவர் நகராட்சியில் துப்புரவுப் பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.

    மும்பையில் நடந்த தேசிய சீனியர்ஸ் மற்றும் மாஸ்டர்ஸ் கிளாசிக் வலுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் 74 கிலோ பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

    பகலில், ராஜ மகேந்திர வரம் நகரில் உள்ள கழிவு நீர் கால்வாய்களை சுத்தம் செய்கிறார். மாலையில் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி பெறுகிறார். துப்புரவு பணியாளர் ஆர்ஜித பாலகிருஷ்ணா மாவட்ட மற்றும் மாநில அளவிலான வலுதூக்கும் போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளார்.

    "நான் வேலைக்குச் செல்வதற்காக அதிகாலை 4 மணிக்கு எழுந்திருக்கிறேன். நான் ஒப்பந்தத் தொழிலாளி, மாதச் சம்பளம் ரூ.15,000. வலுதூக்கும் போட்டி ஒரு விலையுயர்ந்த விளையாட்டு. என்னிடம் ஒரு பைசா கூட மீதம் இல்லாத நாட்கள் உண்டு.

    ஆனால் எனது நண்பர்கள் கடினமான காலங்களில் எனக்கு ஆதரவளித்துள்ளனர். சுமார் 22,000 ரூபாய்க்கு ஆடைகளை வாங்குவதற்கு அவர்கள் எனக்கு கடன் கொடுத்துள்ளனர்.

    10-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். வறுமை காரணமாக மேற்கொண்டு படிப்பை தொடர முடியவில்லை எனது தந்தை கூலி தொழிலாளி, எனது சகோதரர் ஆட்டோ ஓட்டுகிறார். என் மனைவி, மகன் மற்றும் நோய்வாய்ப்பட்ட தாயை நான் ஆதரிக்க வேண்டும். இதனால், என்னால் சத்தான உணவை உட்கொள்ள முடியவில்லை.

    துப்புரவு பணிகளை முடித்துவிட்டு ஜிம்மிற்கு சென்று பயிற்சி எடுத்து வருகிறேன். சாய் பவர் ஜிம்மில் எனது பயிற்சியாளர் சத்யநாராயணா மற்றும் வாலிபால் பயிற்சியாளர் சதீஷ் ஆகியோர் எனக்கு ஆதரவாக நின்று நிதி சிக்கல்களை சமாளிக்க உதவினார்கள்.

    மாநில அரசு நிதியுதவி அளித்து விளையாட்டில் அதிக இலக்குகளை அடைய உதவ வேண்டும் என்றார்.

    ×