என் மலர்
நீங்கள் தேடியது "Swiggi"
- புதிய விதிகளின்படி வேலை பார்க்கும் நேரம் 16 மணி நேரம் வரை அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு
- பழைய நடைமுறையின்படி ஊக்கக் தொகை மற்றும் சம்பளத்தை வழங்க வேண்டும் என்று கோரிக்கை
உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விகியில் பணிபுரிபவர்களுக்கு வாரம் ஒரு முறை ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. தற்போது ஸ்விகியின் புதிய நடைமுறையில் இது போன்ற ஊக்கத்தொகைகள் முழுவதுமாக தவிர்க்கப்படுவதாகவும், வேலை பார்க்கும் நேரம் 16 மணி நேரம் வரை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், சென்னையில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கனவே இருந்த வேலை நேரப்படி 12 மணி நேரம் வேலை பார்த்தால் வாரம் ரூ.14500 வரை கிடைக்கும். ஆனால் தற்போது 16 மணி நேரம் பார்த்தால் கூட12000 ஆயிரம் ரூபையை கூட பெற முடியாது. எங்களுக்கான பெட்ரோல் செலவு, உணவு செலவு, வாகன செலவு போக வாரம் 7 ஆயிரம் ரூபாய் மட்டுமே எங்களுக்கு கிடைக்கும். புதிய விதிகளின் படி எவ்வளவு வேலை பார்த்தாலும் குறிப்பிட்ட அளவு மட்டுமே சம்பளம் வழங்கபட உள்ளதாகவும், மேலும் பழைய நடைமுறையின்படி ஊக்க தொகை மற்றும் சம்பளத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
சென்னையில் சுவிகி உணவு விநியோகம் செய்யும் பகுதிகள் மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பிட்ட மண்டலங்களில் இந்த புதிய நடைமுறை அமலுக்கு கொண்டு வந்ததாகவும் தெரிவித்த அவர்கள், மீதமுள்ள மண்டலங்களிலும் புதிய சம்பள நடைமுறையை கொண்டு வருவார்கள் எனவும் தெரிவித்தனர். தற்போது நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய விதிமுறைகளின் படி தங்களுக்கு பணிச்சுமை அதிகரிப்பதாகவும் வருமானம் குறைவதாகவும் வருத்தம் தெரிவித்தனர். முன்பு வழங்கப்பட்டது போலவே வார ஊக்கத் தொகையை வழங்கும் வரை தாங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்தனர்.