search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "T Nagar"

    • முறையான அறிவிப்பு பலகைகளும், போலீசாரும் இல்லை.
    • ஒலிமாசு, வணிக நெருக்கடி, ஆக்கிரமிப்பு உள்பட பல்வேறு நெருக்கடிகள்.

    சென்னை:

    சென்னையின் மிகப்பெரிய வர்த்தக பகுதியான தி.நகர் நெரிசல் மிகுந்த பகுதி. இந்த பகுதியில் மெட்ரோ ரெயில் பணிகளுக்காக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் உஸ்மான் ரோட்டில் மேம்பாலம் அமைக்கப்படுவதால் கூடுதலாக மேலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த இரண்டு சிக்கல்களால் இடியாப்ப சிக்கலில் சிக்கிய நிலையில் தி.நகர் வாசிகள் திணறுகிறார்கள்.

    முறையற்ற இந்த மாற்று திட்டங்களால் பல தெருக்களில் வசிப்பவர்கள் வெளியே வர முடியாமல் திணறுகிறார்கள்.

    முக்கியமாக ரங்கன் தெரு, ராமசாமி தெரு, மகாலெட்சுமி தெரு, மோதிலால் தெரு, சரோஜினி தெரு, வெங்கடேசன் தெரு, பிஞ்சலா சுப்பிரமணியன் தெரு, மங்கேஷ் தெரு, ராமநாதன் தெரு, நடேசன் தெரு, தண்டபாணி தெரு ஆகிய தெருக்களில் வசிப்பவர்கள் இதை சமாளிக்க முடியாமல் திணறுகிறார்கள்.

    அவசரத்துக்கு எந்த வாகனங்களும் இந்த தெருக்களுக்குள் சென்று விட முடியாது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முறையான அறிவிப்பு பலகைகளும், போலீசாரும் இல்லை என்பது பெரும் குறை.

    தி.நகர் குடியிருப்போர் நலச்சங்க செயலாளர் கண்ணன் கூறும்போது, குடியிருப்பவர்கள் தங்கள் வீடுகளுக்கு எளிதில் செல்ல முடியாத இக்கட்டான நிலையில் இருக்கிறோம். போக்குவரத்து மாற்றத்தை அமல்படுத்துவற்கு முன்பு பொதுமக்களை கலந்து கருத்து கேட்டு இருக்கலாம். இந்த சிக்கலுக்கு ஓரளவு நிவாரணம் பெற ஐகோர்ட்டை நாட முடிவு செய்துள்ளோம் என்றார்.

    ஒலிமாசு, வணிக நெருக்கடி, ஆக்கிரமிப்பு உள்பட பல்வேறு நெருக்கடிகளை ஏற்கனவே அனுபவித்து வருவதாகவும் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் போலீசார் புதிய போக்குவரத்து மாற்றங்கள் செய்து இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். சிலர் வீடுகளை காலி செய்து விட்டு நெருக்கடி இல்லாத இடத்துக்கு சென்று விட யோசிக்கிறார்கள்.

    மோதிலால் தெருவை சேர்ந்தவர்கள் கூறும்போது, `உள்ளூர் மக்களுக்கு நடமாடவே கஷ்டமாக உள்ளது. நாங்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் இல்லை. அதற்காக உள்ளூர் வாசிகள் என்ன விலை கொடுக்க வேண்டும்?

    உள்ளூர் வாசிகள் சந்திக்கும் பிரச்சினை பற்றி அவர்களுக்கு எந்த கவலையும் இல்லை. டிசம்பருக்குள் மேம்பால பணியை முடிப்போம் என்கிறார்கள். நம்ப முடியவில்லை என்றனர்.

    ரங்கன் தெருவில் இரு பக்கமும் போலீசார் தடுப்பு அமைத்து இருப்பதால் அலுவலகங்களில் இருந்து வீடு திரும்புவதே சிரமமானதாக இருப்பதாக கூறும் இந்த தெருவாசிகளை பக்கத்தில் உள்ள ராமேஸ்வரம் பாதை வழியாக செல்லலாம் என்றால் அந்த பகுதி முழுவதும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டி ருப்பதாக கூறுகிறார்கள்.

    நாமநாதன் தெருவும், ரங்கன் தெருவும் கனரக வாகனங்களால் நிரம்பி வழிகின்றன. போக்குவரத்து மாற்றுப் பாதையில் செல்வதால் உள்ளூர் வாசிகள் ஆட்டோக்களில் கூட செல்ல முடியவில்லை என்கிறார்கள்.

    வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பஸ் நிலையம் செல்லும் வாகனங்கள் உஸ்மான் ரோடு பாலம் வழியாக செல்ல முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.

    தியாகராயநகரில் மாநகர பஸ் மோதி சிறுவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை தியாகராய நகரில் இருந்து மாநகர பஸ் முகப்பேருக்கு புறப்பட்டு சென்றது. பஸ்சை டிரைவர் சங்கர் ஓட்டிச் சென்றார். தி.நகர் தணிகாசலம் சாலையில் சென்றபோது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்து இருந்த 8 வயது சிறுவன் தருண்ரோ‌ஷன் பரிதாபமாக உயிர் இழந்தான். மோட்டார் சைக்கிளை ஓட்டிய ஆனந்த விகன் படுகாயம் அடைந்தார். பாண்டிபஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் சங்கரை கைது செய்தனர்.

    தீபாவளி பண்டிகையொட்டி சென்னையில் பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர். #Diwali
    சென்னை:

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே உள்ளதால் சென்னையில் உள்ள பிரபல ஜவுளி மற்றும் நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

    இன்று முதல் தீபாவளி பண்டிகை வரை தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் அனைத்திற்கும் விடுமுறை விடப்பட்டதால் தீபாவளி துணிமணிகள் வாங்க மக்கள் குவிந்தனர்.

    சென்னை தி.நகரில் உள்ள ரெங்கநாதன் தெரு, பாண்டிபஜார் உள்ளிட்ட அனைத்து முக்கிய விதிகளும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன. குடும்பம் குடும்பமாக மக்கள் பஸ், ரெயில்களில் பயணம் செய்து இறுதி கட்ட கொள்முதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    2 நாட்கள் மழை இல்லாமல் இருந்ததால் தீபாவளி விற்பனை மும்முரமாக இருந்தது. ஜவுளி மட்டுமின்றி வீட்டிற்கு தேவையான எலக்ட்ரானிக் பொருட்கள், தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்க தி.நகரை நோக்கி மக்கள் படையெடுக்கிறார்கள். சிறிய சிறிய துணிக்கடைகள், பிளாட்பார கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.

    நகை, ஜவுளி, எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனையாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்து உள்ளதால் ஒவ்வொரு கடைகளிலும் கூட்டம் நிரம்பி காணப்படுகின்றன. தற்போது அரசு நிறுவனங்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டு இருப்பதால் தீபாவளி ஜவுளி வாங்குவதற்காக சாரை சாரையாக தி.நகர் மட்டுமின்றி புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, பாரிமுனை, அண்ணாநகர், பெரம்பூர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் திரண்டு வருவதால் போலீசார் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தீபாவளி நெரிசலை பயன்படுத்தி சமூக விரோதிகள், பிக்பாக்கெட் திருடர்கள் கைவரிசை காட்டக்கூடும் என்பதால் பாதுகாப்பு முன் ஏற்பாடுகள் சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் நகரம் முழுவதும் செய்யப்பட்டுள்ளன. பிரதான வணிக நிறுவனங்கள், கடைகள் நிறைந்த பகுதியான தி.நகரில் மட்டும் 500 போலீசாரும் 100 ஆயுதப் படை போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வீதியிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    மேலும் கண்காணிப்பு கேமராக்கள், ஹெலிகேம் மூலமும் பிக்பாக்கெட் திருடர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள். மக்கள் கூட்டம் அதிகமுள்ள பகுதியில் போலீசார் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கடை விதியை கண்காணிக்கிறார்கள்.

    பாரிமுனை, வண்ணாரப்பேட்டை, தாம்பரம், புரசைவாக்கம் போன்ற பகுதியிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்கள் செல்லவும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் தீபாவளி பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பயணிகள் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள வசதியாக விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளனர். பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால் பாதுகாப்பு பணியில் 700 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    ஆம்னிபஸ்கள், அரசு பஸ்கள் கோயம்பேடு பகுதியில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு புறப்பட்டு சென்றதால் நேற்றிரவு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வட பழனி 100 அடி சாலை, மதுர வாயல் சாலை, பூந்தமல்லி சாலை உள்ளிட்ட முக்கியமான சாலைகளில் நெரிசல் ஏற்பட்டது.

    கோயம்பேட்டில் இருந்து மதுரவாயல் வரை போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்கள் செல்ல 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    கோயம்பேடு பஸ் நிலையத்தில் திருடர்களை கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணித்து வருகின்றனர். பஸ் நிலையம் முழுவதும் போலீசார் இரவு பகலாக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். #Diwali
    கோடம்பாக்கம்-தி.நகரில் கார் கண்ணாடியை உடைத்து செல்போன்-பணம் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை தி.நகர் தெற்கு போக் ரோட்டில் வசித்து வருபவர் இக்னேசியஸ். இவர் தனது வீட்டு முன்பு தனக்கு சொந்தமான காரை நிறுத்தி இருந்தார். கார் கண்ணாடியை உடைத்து அதில் இருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணத்தை யாரோ திருடிச் சென்றுவிட்டனர். இதுபற்றி மாம்பலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதே போல கோடம்பாக்கத்தில் கால்டாக்சி டிரைவர் சூரியபிரகாஷ், தனது காரை சாலையோரமாக நிறுத்தி விட்டு தூங்கினார். அவரது கார் கண்ணாடியை உடைத்து 2 செல்போன்கள் திருடப்பட்டன. இதுபற்றி கோடம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    தீயினால் சேதமடைந்து பின்னர் முழுவதும் இடிக்கப்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டுமான பணிக்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. #ChennaiSilks
    சென்னை:

    சென்னை தி நகரில் இருந்த சென்னை சில்க்ஸ் கட்டிடம் கடந்தாண்டு ஜூன் மாதம் ஏற்பட்ட தீ விபத்தில் பலத்த சேதமடைந்தது. பின்னர், கட்டிடம் முழுமையாக இடிக்கப்பட்டது. தற்போது, அங்கு புதிய கட்டிடத்தை கட்டும் பணி நடந்து வருகிறது.

    இது தொடர்பான வழக்கை இன்று விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதிகள், “எதன் அடிப்படையில் கட்டுமானத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது?” என அரசுக்கு கேள்வி எழுப்பினர். 

    கட்டட அனுமதி வழங்கிய பின்னர் 20 நாளில் 40% கட்டடம் கட்டப்பட்டது ஆச்சரியமளிக்கிறது என கூறிய நீதிபதிகள், கட்டுமான பணிக்கு தடை விதித்து உத்தரவிட்டனர். இது தொடர்பாக அரசு பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    ×