search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "T Rajendran"

    • நடிகர் விஜய் நேற்று தனது கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் வைத்துள்ளதாக அறிவித்தார்.
    • 2026-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதே நம் இலக்கு

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு இணையாக பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்து வருகிறார். அரசியல் கட்சிகளில் இருப்பது போல் இயக்கத்தில் பல அணிகளும் உருவாக்கப்பட்டு மக்கள் பணிகள் செய்யப்பட்டு வந்தது. சமீபத்தில் புயல் மழையால் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.


    இதை தொடர்ந்து விஜய் நேரில் சென்று பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவித்தொகை மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கினார். இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் நேற்று தனது கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் வைத்துள்ளதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து 2026-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதே நம் இலக்கு என்று குறிப்பிட்டிருந்தார். இவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


    இந்நிலையில், விஜய்யின் அரசியல் வருகை குறித்து நடிகர் டி. ராஜேந்திரனிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, "அரசியல் என்பது பொது வழி அந்த பொது வழியில் யார் வேண்டுமானாலும் வரலாம். யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். விஜய்க்கு வாழ்த்துகள். அவரைப் பற்றி பண்ண விரும்பவில்லை விமர்சனம், நான் கடவுளிடம் கேட்பது தமிழ்நாட்டு மக்களுக்கு விமோச்சனம்" என்று பேசினார்.

    விசா கிடைப்பதில் தாமதம் ஆனதால், அமெரிக்கா செல்லும் திட்டமும் தள்ளிப்போயுள்ளது.
    நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்திரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு நெஞ்சு வலி காரணமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், அவருக்கு வயிற்றுப் பகுதியில் ரத்த கசிவு ஏற்பட்டது தெரியவந்தது. இதனால் மேல்சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால் விசா கிடைப்பதில் காலதாமதம் ஆனது. இதனால், அமெரிக்கா செல்லும் திட்டமும் தள்ளிப்போனது.

    இந்நிலையில், டி.ராஜேந்திரனுக்கு விசா கிடைத்துள்ளதை அடுத்து, அவர் இன்னும் இரண்டு நாட்களில் மேல்சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.

    இதையும் படியுங்கள்.. நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்- ஆளுநரிடம் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
    ×