என் மலர்
நீங்கள் தேடியது "செல்வராகவன்"
- 7ஜி ரெயின்போ காலனி 2ம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் செல்வராகவன் வெளியிட்டார்.
- 7ஜி ரெயின்போ காலனி 2ம் பாகத்திற்கும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான படம் 7ஜி ரெயின்போ காலனி. ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால், சுமன் ஷெட்டி, மனோரமா, மயூரி மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகி படமும் மாபெரும் வெற்றி பெற்றது.
7ஜி ரெயின்போ காலனி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாம் பாகம் விரைவில் வெளிவரவுள்ளது.
இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் செல்வராகவன் வெளியிட்டு அறிவித்தார், இந்தப் படத்திற்கும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்நிலையில், 7ஜி ரெயின்போ காலனி படம் குறித்து நேர்காணல் ஒன்றில் இயக்குனர் செல்வராகவன் பேசியுள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது:-
7ஜி ரெயின்போ காலனி பாகம் 2ன் படப்பிடிப்பு 50 சதவீதம் முடிந்துவிட்டது. இன்னும் 50 சதவீத படப்பிடிப்பு பணி மட்டுமே உள்ளது. அமைதியாக வேலைகள் நடந்துக் கொண்டிருக்கிறது.
இந்தப் படம் முதல் பாகத்தைப்போன்று ஹீரோ ஹீரோயினை துரத்தும் படமாக இது இருக்காது. கதிர் கதையைதான் 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் எடுக்கப்போகிறேன். ஆனால், காலம் மாறிவிட்டது. 10 ஆண்டுகள் கழித்து என்ன என்பது தான் படம்.
2ம் பாகத்தின் கதை என்னவாக இருக்கும் என்பது முதல் பாகத்தின் முடிவுலேயே இருக்கிறது.
படங்கள் வெளியிட தேதி கிடைப்பது தீபாவளி, பொங்கலுக்கு தேதி கிடைப்பது போன்று ஆகிவிட்டது. பான் இந்தியா படங்கள், பெரிய பட்ஜெட் படங்களுக்கு மத்தியில் இதுபோன்று சின்ன படங்கள் வெளியிடுவதற்கு போராட வேண்டி இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’.
- இந்த திரைப்படம் ரூ.450 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

பொன்னியின் செல்வன்
இப்படத்தில் நடித்த நடிகர்களுக்கு திரையுலகினர் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் ரூ.450 கோடிக்கு மேல் வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது. இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

பொன்னியின் செல்வன்
இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன் 'பொன்னியின் செல்வன்' படத்தின் பாடல்கள் குறித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "என்னுடைய அனுபவத்தில் பெஸ்ட் மியூசிக் ஆல்பம், ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் மணிரத்னம் சாரின் பொன்னியின் செல்வன் என்பதில் சந்தேகமே இல்லை. மிகச் சிறிய இடத்தில் கூட கவனம் செலுத்துவது பிரம்மிக்க வைக்கிறது" என குறிப்பிட்டுள்ளார்.
The best music album in my experience is with out doubt @arrahman and #maniratnam sir's ponniyin Selvan ! The attention to detail in even the minutest sounds is astounding!
— selvaraghavan (@selvaraghavan) October 26, 2022
- இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பகாசூரன்'.
- இப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடித்துள்ளார்.
பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதன்பின்னர் இவர் இயக்கிய 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்கள் வரவேற்பை பெற்று சில சர்ச்சைகளையும் கிளப்பியது. இப்படங்களை தொடர்ந்து இவர் இயக்கியுள்ள 'பகாசூரன்' படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள்.

பகாசூரன்
இந்த படத்திற்கு சாம்.சிஎஸ் இசையமைக்கிறார். 'பகாசூரன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

பகாசூரன்
இளம் பெண்களை மிரட்டி பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்துவதை எதிர்த்து கேள்வி கேட்பது போன்று உருவாகியுள்ள இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது
- தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர் செல்வராகவன்.
- இவர் நடித்துள்ள 'பகாசூரன்’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.
தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனரான செல்வராகவன் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் இயக்கிய 'நானே வருவேன்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இவர் தற்போது 'பழைய வண்ணாரப்பேட்டை', 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்களை இயக்கிய மோகன் ஜி இயக்கத்தில் 'பகாசூரன்' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

செல்வராகவன்
இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "எத்தனையோ நாள் நாம் நிம்மதியாய் இருந்திருக்கிறோம். கடவுளின் அருள். ஆனால் அதை பெரிதாய் பொருட்படுத்துவதில்லை. என்றோ ஒரு நாள் பிரச்சனை என்றால் " ஐயோ அம்மா கடவுளே காப்பாத்து" தான்" என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவிற்கு ரசிகர்கள் 'கஷ்டத்தில் தான் கடவுள் நியாபகம் வருகிறது' என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
எத்தனையோ நாள் நாம் நிம்மதியாய் இருந்திருக்கிறோம். கடவுளின் அருள். ஆனால் அதை பெரிதாய் பொருட்படுத்துவதில்லை. என்றோ ஒரு நாள் பிரச்சனை என்றால் " ஐயோ அம்மா கடவுளே காப்பாத்து" தான் .
— selvaraghavan (@selvaraghavan) December 8, 2022
- இயக்குனர் செல்வராகவன் தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘பகாசூரன்’.
- இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது.
பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதன்பின்னர் இவர் இயக்கிய 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்கள் வரவேற்பை பெற்று சில சர்ச்சைகளையும் கிளப்பியது. இப்படங்களை தொடர்ந்து இவர் இயக்கியுள்ள 'பகாசூரன்' படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள்.

பகாசூரன் போஸ்டர்
இந்த படத்திற்கு சாம்.சிஎஸ் இசையமைக்கிறார். 'பகாசூரன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்த போஸ்டரை இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
🤓🤓🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 https://t.co/VfUEBGVtET
— selvaraghavan (@selvaraghavan) December 10, 2022
- செல்வராகவன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான நானே வருவேன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
- தற்போது செல்வராகன் புதிய படக்கும் இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார்.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான செல்வராகவன், சமீபத்தில் தனுஷ் நடிப்பில் நானே வருவேன் படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இவர் தற்போது புதிய படம் இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார்.

செல்வராகவன்
இந்நிலையில் செல்வராகவன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பது கவனம் பெற்றிருக்கிறது. அதில், "இங்குத் தடுக்கி விழுந்தால் நம்மை யாரும் தூக்கி விட மாட்டார்கள். நாம்தான் அழுது புரண்டு, நமக்கு நாமே ஆறுதல் அடைந்து ,எதையாவது பிடித்துக் கொண்டு, நொண்டி நிமிர்ந்து நிற்க வேண்டும். யாரையாவது எதிர்பார்த்து விழுந்து கிடந்தால் வாழ்க்கை முழுக்க விழுந்து கிடக்க வேண்டியதுதான்" என்று குறிப்பிட்டிருப்பது திரையுலக வட்டாரத்தில் கவனிக்கப்பட்டு வருகிறது.
- தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன்.
- இவர் தற்போது பகாசூரன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான செல்வராகவன், சமீபத்தில் தனுஷ் நடிப்பில் நானே வருவேன் படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத்தொடர்ந்து இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் 'பகாசூரன்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

செல்வராகவன்
மேலும், இவர் தற்போது புதிய படம் இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், செல்வராகவன் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "இதான் மண்டய பிச்சுகிட்டு எழுதுறது" என்று புகைப்படம் ஒன்றை பகிர்ந்து குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவிற்கு சீக்கிரம் ஸ்கிரிப்ட் எழுதி முடியுங்கள் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதான் மண்டய பிச்சுகிட்டு எழுதுறது 😎😎🤓🤓 pic.twitter.com/pZ7wQ67pIh
— selvaraghavan (@selvaraghavan) December 21, 2022
- இயக்குனர் செல்வராகவன் நடிப்பில் தற்போது ‘பகாசூரன்’ திரைப்படம் உருவாகியுள்ளது.
- செல்வராகவன் பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான செல்வராகவன், சமீபத்தில் தனுஷ் நடிப்பில் நானே வருவேன் படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத்தொடர்ந்து இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் 'பகாசூரன்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

செல்வராகவன்
மேலும், இவர் தற்போது புதிய படம் இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், செல்வராகவன் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "தனியாகத்தான் வந்தோம். தனியாகத்தான் போவோம். நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது ? துணை என்பது கானல் நீர். நெருங்க நெருங்க தூரம் ஓடும்" என தத்துவமாக பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
தனியாகத்தான் வந்தோம். தனியாகத்தான் போவோம். நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது ? துணை என்பது கானல் நீர். நெருங்க நெருங்க தூரம் ஓடும்.
— selvaraghavan (@selvaraghavan) December 27, 2022
- இயக்குனர் செல்வராகவன் புதிய படம் இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார்.
- இவர் தற்போது வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான செல்வராகவன், சமீபத்தில் தனுஷ் நடிப்பில் நானே வருவேன் படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத்தொடர்ந்து இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் 'பகாசூரன்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

செல்வராகவன்
மேலும், இவர் தற்போது புதிய படம் இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், செல்வராகவன் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "எவ்வளவோ திறமை இருந்தும் சோம்பேறித்தனத்தால் முடங்கி கிடந்து , வாழ்க்கையில் ஜாலியாய் இருக்க வேண்டும் என சுற்றித் திரிந்து , காலம் முழுவதையும் வீணடித்து விட்டு " கடவுள் எனக்கு மட்டும் ஏன் கொடுக்கலன்னு தெரியல " என மீதி வாழ்க்கையையும் தொலைத்து விடாதீர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

செல்வராகவன்
இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தொடர்ந்து இயக்குனர் செல்வராகவன் இது போன்று பதிவுகளை பகிர்ந்து வருவதால் ரசிகர்கள் கவலையை விடுங்கள் மகிழ்ச்சியான காலங்கள் திரும்ப வரும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
எவ்வளவோ திறமை இருந்தும் சோம்பேறித்தனத்தால் முடங்கி கிடந்து , வாழ்க்கையில் ஜாலியாய் இருக்க வேண்டும் என சுற்றித் திரிந்து , காலம் முழுவதையும் வீணடித்து விட்டு " கடவுள் எனக்கு மட்டும் ஏன் கொடுக்கலன்னு தெரியல " என மீதி வாழ்க்கையையும் தொலைத்து விடாதீர்கள்.
— selvaraghavan (@selvaraghavan) December 31, 2022
~~~அனுபவம்.
- இயக்குனர் செல்வராகவன் புதிய படம் இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார்.
- இவர் தற்போது வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான செல்வராகவன், சமீபத்தில் தனுஷ் நடிப்பில் நானே வருவேன் படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத்தொடர்ந்து இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் 'பகாசூரன்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. மேலும், இவர் தற்போது புதிய படம் இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார்.

செல்வராகவன்
செல்வராகவன் தனது சமூக வலைதளத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். நேற்று முன்தினம் செல்வராகவன் பதிவிட்டது, "எவ்வளவோ திறமை இருந்தும் சோம்பேறித்தனத்தால் முடங்கி கிடந்து, வாழ்க்கையில் ஜாலியாய் இருக்க வேண்டும் என சுற்றித் திரிந்து, காலம் முழுவதையும் வீணடித்து விட்டு" கடவுள் எனக்கு மட்டும் ஏன் கொடுக்கலன்னு தெரியல" என மீதி வாழ்க்கையையும் தொலைத்து விடாதீர்கள்" என்று பதிவிட்டிருந்தார்.

செல்வராகவன்
இந்நிலையில் செல்வராகன் தற்போது புதிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வாழ்க்கையில் என்ன பிரச்சனை வந்தாலும் நம் மனநிலை இப்படித்தான் இருக்க வேண்டும்! என்று குறிப்பிட்டு, அவர் இயக்கிய புதுப்பேட்டை படத்தில் கொக்கி குமாராக நடித்த தனுஷின், வலிக்கல கொஞ்சம் கூட வலிக்கல என்ற வசனத்தின் வீடியோவை பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு ரசிகர்களை குழப்பமடைய செய்துள்ளது. தொடர்ந்து செல்வராகவன் இதுபோன்ற பதிவுகளை பதிவிட்டு வருவதால் ரசிகர்கள், செல்வராகவனுக்கு என்ன ஆனது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
வாழ்க்கையில் என்ன பிரச்சனை வந்தாலும் நம் மனநிலை இப்படித்தான் இருக்க வேண்டும்! pic.twitter.com/Oy08fs42ji
— selvaraghavan (@selvaraghavan) January 2, 2023
- இயக்குனர் செல்வராகவன் தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘பகாசூரன்’.
- ’பகாசூரன்’ திரைப்படம் அடுத்த மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதன்பின்னர் இவர் இயக்கிய 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்கள் வரவேற்பை பெற்று சில சர்ச்சைகளையும் கிளப்பியது. இப்படங்களை தொடர்ந்து இவர் இயக்கியுள்ள 'பகாசூரன்' படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள்.

பகாசூரன்
இந்த படத்திற்கு சாம்.சிஎஸ் இசையமைக்கிறார். 'பகாசூரன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்நிலையில், 'பகாசூரன்' படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.

பகாசூரன் போஸ்டர்
மேலும், 'பகாசூரன்' திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளதாகவும் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
#Bakasuran censored with U/A and its a february release.. Official release date will be announced soon..
— selvaraghavan (@selvaraghavan) January 16, 2023
Trailer linkhttps://t.co/gUZQhrP8nx pic.twitter.com/N0Ad6z6Fn4
- இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பகாசூரன்’.
- இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதன்பின்னர் இவர் இயக்கிய 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்கள் வரவேற்பை பெற்று சில சர்ச்சைகளையும் கிளப்பியது. இப்படங்களை தொடர்ந்து இவர் இயக்கியுள்ள 'பகாசூரன்' படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள்.

பகாசூரன் போஸ்டர்
இந்த படத்திற்கு சாம்.சிஎஸ் இசையமைக்கிறார். 'பகாசூரன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்நிலையில், 'பகாசூரன்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
தனுஷ் நடித்துள்ள 'வாத்தி' திரைப்படம் பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
See you all Feb 17 th in theatres !
— selvaraghavan (@selvaraghavan) January 27, 2023
Protect what's yours ! pic.twitter.com/EneRC5OKbH