search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுவன்"

    • 30-க்கும் மேற்பட்ட பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை பெற்றுள்ளார்.
    • நோபல் உலக சாதனை புத்தகத்திலும் இவரது படம் இடம் பெற்றுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டி ஊராட்சியை சேர்ந்தவர் யோகராஜ். இவரது மனைவி பிரியா.

    இவர்களுக்கு சித்தார்த் (வயது 5) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    இதில் சித்தார்த் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 1ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்நிலையில் சித்தார்த் இரண்டரை வயதில் இருந்தே யோகா பயிற்சி, சிலம்பம், வில் அம்பு, டேக்வாண்டோ, பாக்சிங் ஆகிய தற்காப்பு கலைகளை ஆர்வமாக விடாமுயற்சியுடன் கற்று வருகிறார்.

    இதுவரை மூன்று நோபல் உலக சாதனை செய்து சான்றிதழ் பெற்றுள்ளார்.

    அதில் மூன்று வயதில் முட்டையின் மேல் அர்த்த சமகோண ஆசனத்தில் 25 நிமிடம் தொடர்ந்து அமர்ந்து யோகாசனம் செய்து சாதனை படைத்துள்ளார்.

    இதுவரை 30-க்கும் மேற்பட்ட பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை பெற்றுள்ளார்.

    நோபல் உலக சாதனை புத்தகத்திலும் இவரது புகைப்படம் இடம் பெற்றுள்ளது.

    சிறு வயதிலிருந்தே இவரது பெற்றோர் மற்றும் யோகா சிலம்பக்கலை மாஸ்டர்

    முகமதுசபீர் ஆகியோரின் ஆக்கமும் ஊக்கமும் மற்றும் பெரும் முயற்சியால் சித்தார்த் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறார்.

    தேசிய அளவிலான யோகா போட்டி கடந்த மே மாதம் கொடைக்கானலில் நடைபெற்றது.

    அதில் யோகா போட்டியில் சித்தார்த் கலந்து கொண்டு 8 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் தேர்வு பெற்றுள்ளார்.

    இந்த தேர்வின் மூலம் வரும் செப்டம்பர் மாதம் தாய்லாந்தில் உலகளவில் நடைபெறும் யோகா போட்டியில் தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் யோகா பவுண்டேஷன் சார்பில் சித்தார்த் இந்தியா வீரராக போட்டியில் பங்கேற்க உள்ளார்.

    மேலும் வில் அம்பு போட்டியில் தமிழ்நாடு அணி தேர்வுக்காக அக்டோபர் மாதம் நடைபெறும் போட்டியில் சித்தார்த் பங்கேற்க உள்ளார்.

    இந்த போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பேன் என்று சிறுவன் சித்தார்த் நம்பிக்கையுடன் கூறினார்.

    இதுகுறித்து சித்தார்த்தின் பெற்றோர் யோகராஜ் கூறும்போது, செப்டம்பர் மாதம் உலக அளவில் நடைபெறும் யோகா போட்டியில் பங்கேற்க தாய்லாந்துக்கு சித்தார்த் செல்ல உள்ளார்.

    அதற்கான தீவிர பயிற்சி தற்போது மேற்கொண்டு வருகிறார்.

    இந்த போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்று இந்தியாவிற்கு பெருமையை பெற்று தருவார் என்ற நம்பிக்கை உள்ளது. ஒலிம்பிக் வரை சென்று சாதனை படைப்பார் என்றார்.

    மாட்டை அழைத்து சென்ற சிறுவன் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
    மேலூர்

    அழகர் கோவில் கோட்டைவாசல் பகுதியை சேர்ந்த அம்மாசி.  வேன் டிரைவர். இவரது மனைவி சுனிதா. 

    இந்த தம்பதியினருக்கு 2 மகள், 1 மகன் உள்ளனர்.   நேற்று இரவு 7 மணியளவில் மழை பெய்தது. இதனால் மாட்டை பிடித்து கட்டுவதற்காக வீட்டுக்கு வெளியே அம்மாசி, மனைவி சுனிதா, மகன்  அர்ஜூன் (6) ஆகியோர் சென்றனர்.

     அப்போது  பயங்கர சத்தத்துடன் மின்னல் தாக்கியதில்,  3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் அம்மாசியும், சுனிதாவும் காயமின்றி தப்பினர். சிறுவன் அர்ஜூன் பரிதாபமாக உயிரிழந்தான். 

    இதுகுறித்து மேலவளவு போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர்.
    ஜேடர்பாளையம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த சிறுவன் போக்சோவில் கைது.
    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் பகுதியை சேர்ந்த  17 வயது சிறுமி வெளியில் செல்வதாக கூறி சென்றார். அங்கிருந்து திரும்ப வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் மற்றும் பல்வேறு பகுதிகளில்  சிறுமியை தேடிப்பார்த்தனர். இருப்பினும் கண்டுபிடிக்க முடியவில்லை. 

    இது குறித்து ஜேடர்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது.புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யாக்கண்ணு வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தார். 

    இந்த நிலையில் போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த சிறுமியை  ஈரோடு மாவட்டம் கருமாண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த   17 வயது சிறுவன் கடத்தி  பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது.  

    இதையடுத்து அவரை போலீசார்  போக்சோ சட்டத்தில் கைது செய்து  நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    ஓமலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் 7 வயது சிறுவனை பைக் ஓட்ட வைத்த தந்தை மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சேலம்:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா நாச்சனம்பட்டி பிரிவை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 40), பைக் மெக்கானிக்.  இவரது மனைவி செல்வராணி. இவர்களுக்கு கீர்த்திகா (15), கேசிகா (13) என்ற மகள்களும்,  மோகித் (7) என்ற மகனும் உள்ளனர்.

    இந்த நிலையில் தந்தையிடம் மகன் மோகித் பைக் கேட்டார். இதனால் தங்கராஜ்    பழைய பைக்கை வாங்கி அவற்றை மகன் ஓட்டும்படி சிறியதாக  மாற்றி வடிவமைத்தார்  .  கியர் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோலில்  40 கி.மீ. தூரம் செல்லும் படி 55 ஆயிரம் ரூபாய் மதிப்பில் ரேஸ் பைக் போல  அதனை உருவாக்கினார். ெதாடர்ந்து மகனுக்கு அதனை பரிசாக வழங்கினார்.

    இந்த நிலையில்   சேலம்பெங்களூரு தேசிய நெடுஞ் சாலையில்  ஓமலூர் அருகே 7 வயது சிறுவனான   மோகித் பைக்கை ஓட்ட தங்கராஜ் பின்னால் அமர்ந்து சென்ற வீடியோ சமூக வலை தளங்களில் பரவியது. இதனை பார்த்த சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  

    இதற்கிடையே  தீவட்டிப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ராமசந்திரன் தீவட்டிப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதில் சிறுவன் தந்தையை அமர வைத்து பைக் ஓட்டும் வீடியோ பரவியதால் அதை பார்க்கும் சிறுவர்கள் இது போன்ற அபாய செயலில் ஈடுபட வாய்ப்புள்ளது.

    அதனால் தங்கராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.   அதன்படி தங்கராஜ் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ்   போலீசார்   வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    ×