என் மலர்
நீங்கள் தேடியது "ஆந்திரா"
- குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் அவர்கள் பற்றிய தகவல் தெரியவில்லை.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் சகினேடிபள்ளி மண்டலம் அந்தர் வேதிபலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீனு (வயது 43). இவருடைய மனைவி கங்கா பவானி ( 35) தம்பதியின் மகள் தேவக்னா (6) மகன் மாதவ் (4).
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீனு மனைவி குழந்தைகளுடன் உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் நடந்து வரும் கும்பமேளாவுக்கு செல்வதாக கூறிவிட்டு பைக்கில் அவர்களை அழைத்துச் சென்றார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.
குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் அவர்கள் பற்றிய தகவல் தெரியவில்லை. இந்த நிலையில் அவருடைய தம்பி புல்லையா என்பவர் ஸ்ரீனு வீட்டிற்கு சென்றார்.
அங்கு ஸ்ரீனு எழுதிய கடிதம் ஒன்று கிடைத்தது. அதில் நாங்கள் கடன் தொல்லையால் குடும்பத்துடன் கும்பமேளா நடைபெறும் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்வோம் என எழுதப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த புல்லையா இது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் பிரயாக்ராஜ் நகர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதுவரை குழந்தைகளுடன் மாயமான தம்பதி என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை. இது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கடந்த 45 நாட்களில் சுமார் 4 லட்சம் கோழிகள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- போபால் மற்றும் விஜயவாடாவில் உள்ள உயர் பாதுகாப்பு ஆய்வகத்துக்கு கோழிகளின் மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன.
அமராவதி:
ஆந்திரா மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கோழிகள் மர்மமான நோய் பாதிப்புக்கு ஆளாகி இறந்தன. அங்கு கடந்த 45 நாட்களில் சுமார் 4 லட்சம் கோழிகள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து, போபால் மற்றும் விஜயவாடாவில் உள்ள உயர் பாதுகாப்பு ஆய்வகத்துக்கு கோழிகளின் மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன. இதுபற்றி கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநர் தாமோதர் நாயுடு கூறுகையில், "பறவை காய்ச்சல் தொற்று குறித்த சந்தேகம் உள்ளது. அதை கண்டறிய மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன" என கூறினார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், காக்கிநாடா, வேலங்கி பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணா (வயது 75). இவர் அங்குள்ள சிறிய குடிசையில் தங்கி இருந்து கோவில்களில் பிச்சை எடுத்து வந்தார்.
உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் நேற்று இறந்தார். ராமகிருஷ்ணாவுக்கு உறவினர்கள் யாரும் இல்லாததால் அங்குள்ள போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்கள் அவரது உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர்.
ராமகிருஷ்ணா குடிசை வீட்டில் சோதனை செய்தபோது ரூபாய் நோட்டுகள் சிறிய மூட்டைகளாக கட்டி வைக்கப்பட்டு இருந்தது.
மூட்டைகளை அவிழ்த்து பார்த்தபோது 2000, 500, 200, 100 ரூபாய் நோட்டுகள் மற்றும் சில்லறை நாணயங்கள் இருந்தன. அவற்றை எண்ணி பார்த்த போது ரூ.3 லட்சத்து 49 ஆயிரத்து 500 ரூபாய் இருந்தது.
இதையடுத்து முதியவர் உடலை தகனம் செய்துவிட்டு அவர் வைத்திருந்த பணத்தை சமூக அறக்கட்டளைக்கு வழங்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.