என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 101815"

    ரூ.3.12 கோடி அபராத தொகையை செலுத்த சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு செபி மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
    புதுடெல்லி:

    கடந்த 2013-ம் முதல் 2016 ஆண்டு வரை தேசிய பங்கு சந்தையான (என்எஸ்.இ.) நிர்வாக இயக்குனராகவும், தலைமை செயல் அதிகாரியாகவும் சித்ரா ராமகிருஷ்ணா பதவி வகித்தார்.

    அப்போது என்.எஸ்.இ. அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து கோ-லொகேஷன் என்ற வசதி மூலம் சில பங்குசந்தை தரகர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    தேசிய பங்கு சந்தை விவரங்களை ஏஜண்டு களால் முன்கூட்டியே கசிய விட்ட முறைகேடு பண மோசடி செய்ததாக சித்ரா ராமகிருஷ்ணன் கடந்த மாதம் 6-ந் தேதி சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

    திகார் சிறையில் இருக்கும் அவரிடம் அமலாக்கத்துறையினர் நேற்று வாக்குமூலம் பெற்றனர். பண மோசடி தடுப்பு சட்டத்தின் குற்றவியல் பிரிவுகளி கீழ் இந்த வாக்குமூலம் பெறப்பட்டது.

    பங்கு சந்தை விவரங்களை வெளிநபரிடம் பகிர்ந்ததால் சித்ரா ராமகிருஷ்ணா ரூ.3.12 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்று இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

    கடந்த பிப்ரவரி மாதம் 11-ந் தேதி இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால் இந்த அபராதத்தை செலுத்த அவர் தவறிவிட்டார்.

    இந்த நிலையில் ரூ.3.12 கோடி அபராத தொகையை செலுத்த அவருக்கு செபி மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    15 தினங்களுக்குள் இந்த அபராத தொகையை செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    அபராதம் செலுத்த தவறினார் என்றால் சொத்துக்கள் முடக்கப்படும் என்று சித்ரா ராம கிருஷ்ணாவுக்கு செபி எச்சரிக்கை விடுத்துள்ளது.
    சி.பி.ஐ. சம்மனை ஏற்று இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்பிய கார்த்தி சிதம்பரம், டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார்.
    புதுடெல்லி:

    காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடந்த 2011-ம் ஆண்டு மத்திய உள்துறை மந்திரியாக இருந்தபோது, அவரது மகன் கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கை பயன்படுத்தி சட்டவிரோதமாக 263 சீனர்களுக்கு விசா பெற்றுக் கொடுத்ததாக சி.பி.ஐ. குற்றம் சுமத்தி உள்ளது.

    இதற்காக கார்த்தி சிதம்பரம் ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக கூறி அவர் மீது சி.பி.ஐ. சமீபத்தில் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர  ராமன் கைது செய்யப்பட்ட நிலையில், சி.பி.ஐ. சம்மனை ஏற்று கார்த்தி சிதம்பரம் நேற்று இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்பினார். 

    இன்று காலை 8 மணிக்கு கார்த்தி சிதம்பரம் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்கு சென்று சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு ஆஜரானார். அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் ஏராளமான கேள்விகள் கேட்டு விசாரணை நடத்தினார்கள்.  விசாரணை முடிவில் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகின. 

    இந்நிலையில், கார்த்தி சிதம்பரத்தை மே 30ம் தேதி வரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது, நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. முன்ஜாமீன் மீதான அடுத்தகட்ட விசாரணை மே 30ம்தேதி நடைபெறும் என நீதிபதி தெரிவித்தார். 

    பொய் வழக்கு போட்டு பாராளுமன்றத்தில் தனது குரலை ஒடுக்க சி.பி.ஐ. முயற்சி செய்து வருகிறது என சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    கடந்த 2011-ம் ஆண்டு 263 சீனர்களுக்கு முறைகேடாக விசா பெற்று தர முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகனும், எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் ரூ.50 லட்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.

    இந்த புகார் தொடர்பாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. மேலும் சமீபத்தில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    பின்னர் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமனை சி.பி.ஐ. கைது செய்தது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு கார்த்தி சிதம்பரம் சார்பில் டெல்லி சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    ஆனால் முன்ஜாமீன் வழங்க மறுத்த கோர்ட்டு, கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டில் இருந்து திரும்பியதும் 16 மணி நேரத்தில் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

    இதற்கிடையே நேற்று காலை கார்த்தி சிதம்பரம் சி.பி.ஐ. தலைமையகத்தில் விசாரணைக்காக ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசா முறைகேடு தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்டனர்.

    கார்த்தி சிதம்பரத்திடம் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் இன்றும் நேரில் ஆஜராகும்படி சி.பி.ஐ. அதிகாரிகள் அவரிடம் தெரிவித்தனர்.

    இதற்கிடையே விசா முறைகேடு தொடர்பாக அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் பதிந்துள்ள வழக்கில் முன் ஜாமீன் கேட்டு கார்த்தி சிதம்பரம் தரப்பில் டெல்லி சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில் அவரை கைது செய்ய 30-ந்தேதி வரை இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் இன்று 2-வது நாளாக கார்த்தி சிதம்பரம் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜரானார். காலை டெல்லி சி.பி.ஐ. தலைமையகத்துக்கு அவர் நேரில் சென்றார்.

    கார்த்தி சிதம்பரத்திடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் பாராளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கார்த்தி சிதம்பரம் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான் முற்றிலும் சட்ட விரோதமான மற்றும் சாசனத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறேன். எனக்கு எந்த தொடர்பும் இல்லாத குற்றச்சாட்டில் சி.பி.ஐ. டெல்லியில் உள்ள எனது வீட்டில் சோதனை நடத்தியது.

    சோதனையின்போது சி.பி.ஐ. அதிகாரிகள் சிலர் நான் உறுப்பினராக உள்ள தகவல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான பாராளுமன்ற நிலைக்குழு தொடர்பாக மிகவும் ரகசியமான மறறும் முக்கியமாக எழுதி வைக்கப்பட்ட குறிப்புகள், ஆவணங்களை கைப்பற்றினர்.

    ஒரு பாராளுமன்ற உறுப்பினராக எனது கடமைகளில் தலையிடும் சி.பி.ஐ.யின் இந்த நடவடிக்கைகள் பாராளுமன்றத்தால் நிறுவப்பட்ட ஜனநாயக கோட்பாடுகளின் மீதான நேரடித் தாக்குதலாகும்.

    இந்த விவகாரம் எனது பாராளுமன்ற சிறப்புரிமையை அப்பாட்டமாக மீறுவதாகும். சபை உறுப்பினரை இலக்கு வைத்து மிரட்டுவது சிறபுரிமையை மீறிவதாகும்.

    பொய் வழக்கு போட்டு பாராளுமன்றத்தில் எனது குரலை ஒடுக்க சி.பி.ஐ. முயற்சி செய்து வருகிறது. பாராளுமன்றத்தில் எனது செயல்பாடுகளை தடுக்க நினைக்கிறது.

    இவ்வாறு கடிதத்தில் கூறி உள்ளார்.

    பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.
    சண்டிகர்:

    பஞ்சாப் மாநில பிரபல பாடகரும் காங்கிரஸ் பிரமுகருமான சித்து மூஸ்வாலா நேற்று சுட்டுக்கொல்லப்பட்டார். அவருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு பாதுகாப்பை ஆம் ஆத்மி அரசு திரும்ப பெற்ற மறுநாள் அவரை கொலை செய்துள்ளனர்.  இச்சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 

    பஞ்சாப்பில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி செய்யும் தார்மீக அதிகாரத்தை இழந்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.

    இந்நிலையில், பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா மரணம் குறித்து சிபிஐ மற்றும் தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும் என அவரது தந்தை பால்கவுர் சிங் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு அவர் கடிதம் எழுதி உள்ளார்.

    அவரது கோரிக்கையை முதல்வர் பகந்த் மான் ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், பாடகல் சித்து மூஸ் வாலாவின் பாதுகாப்பை குறைப்பது தொடர்பான முடிவு குறித்து விசாரணை நடத்தவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். விசாரணைக்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என கூறி உள்ள அவர், குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது என்றார்.
    கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கை பயன்படுத்தி சட்டவிரோதமாக 263 சீனர்களுக்கு விசா பெற்றுக் கொடுத்ததாக சி.பி.ஐ. குற்றம் சுமத்தி உள்ளது.
    புதுடெல்லி:

    விசா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகனும் காங்கிரஸ் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் கடந்த வாரம் விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின. 

    ஆனால் கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை விசாரித்த சிபிஐ நீதிமன்றம், கார்த்தி சிதம்பரத்தை மே 30ம் தேதி வரை கைது செய்யக்கூடாது என இடைக்கால தடை விதித்தது. முன்ஜாமீன் மனு மீதான அடுத்தகட்ட விசாரணையை மே 30ம்தேதிக்கு ஒத்திவைத்தது.

    அதன்படி, முன்ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், ஜூன் 3ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்தார். அதுவரை கார்த்தியை கைது செய்வதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை தொடரும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

    காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடந்த 2011-ம் ஆண்டு மத்திய உள்துறை மந்திரியாக இருந்தபோது, கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கை பயன்படுத்தி சட்டவிரோதமாக 263 சீனர்களுக்கு விசா பெற்றுக் கொடுத்ததாக சி.பி.ஐ. குற்றம் சுமத்தி உள்ளது. இதற்காக கார்த்தி சிதம்பரம் ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக கூறி அவர் மீது சி.பி.ஐ. சமீபத்தில் வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
    கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக அவகாசம் கேட்டு கடிதம் அனுப்பி உள்ளார்.
    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலத்தில் சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கை முறையாக நடத்தவில்லை என்று கூறி கொல்கத்தா போலீஸ் கமிஷனராக இருந்த ராஜீவ் குமாரிடம் சி.பி.ஐ. விசாரிக்க சென்றது. அப்போது சி.பி.ஐ. அதிகாரிகளை போலீசார் கைது செய்ததும், அதை தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக முதல்-மந்திரி மம்தா பானர்ஜி போராட்டம் நடத்தியதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கைது நடவடிக்கைக்கு எதிராக ராஜீவ் குமார் முன்ஜாமீன் பெற்றார்.

    இதனிடையே 27-ந் தேதி (நேற்று) விசாரணைக்கு ஆஜராகுமாறு ராஜீவ் குமாருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. மேலும் அவர் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க ‘லுக்அவுட்’ நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் ராஜீவ் குமார் நேற்று சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகவில்லை. அதற்கு பதிலாக அவர் சி.பி.ஐ.க்கு அனுப்பிய கடிதத்தில், “தற்போது விடுமுறையில் இருப்பதால் விசாரணைக்கு ஆஜராக மேலும் சில நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
    பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திருநாவுக்கரசு உள்ளிட்ட 5 பேர் மீது சி.பி.ஐ. இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
     
    இது தொடர்பாக நிதி நிறுவன அதிபர் திருநாவுக்கரசு, என்ஜினீயர் சபரிராஜன், சதிஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கை முதலில் பொள்ளாச்சி கிழக்கு போலீசார் விசாரித்து வந்தனர். பின்னர் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு அதன் பிறகு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் கோவை மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 5 பேர் மீது சி.பி.ஐ. இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

    இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் உள்ளிட்ட 5 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
    பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக சபரிராஜன் பெற்றோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதிஷ், வசந்த குமார், மணிவண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த வழக்கு விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. இதை தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் தனித்தனி குழுவாக முகாமிட்டு ரகசிய விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடந்த 14-ந் தேதியன்று சின்னப்பம் பாளையத்தில் உள்ள திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    அவரது வீட்டின் அருகே உள்ள குடியிருப்பு வாசிகளிடமும் விசாரணை மேற்கொண்டனர். சபரி ராஜன் வீட்டில் சில நாட்களுக்கு முன் சி.பி.ஐ. அதிகாரிகள் ஒன்றரை மணி நேரம் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்து சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றி சென்றதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணியளவில் பொள்ளாச்சி ஜோதி நகரில் உள்ள சபரிராஜன் வீட்டிற்கு சி.பி.ஐ. அதிகாரிகள் 2 பேர் போலீஸ் வாகனத்தில் வந்தனர்.

    அவர்கள் சபரிராஜன் வீட்டிற்குள் சென்றதும் காம்பவுண்டு கதவு மற்றும் வீட்டின் முன் பக்க கதவை பூட்டினார்கள். பின்னர் வீட்டில் சோதனையை மேற்கொண்டனர்.

    சபரிராஜன் பெற்றோரிடமும் விசாரணை நடத்தினார்கள். திருநாவுக்கரசுக்கும், சபரி ராஜனுக்கும் எந்த வகையில் பழக்கம் ஏற்பட்டது. என்ன தொழில் செய்து வந்தனர்.

    சபரிராஜனுக்கு வேறு யாருடனும் பழக்கம் உள்ளதா? அவர்கள் யார்? யார்? என்றும் விசாரணை நடத்தினார்கள். 30 நிமிடம் இந்த விசாரணை நடைபெற்றது. பின்னர் சி.பி.ஐ. அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

    சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையின் போது சபரிராஜன் வீட்டில் இருந்து பென் டிரைவ், ஹார்டு டிஸ்க், செல்போன் உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றியதாக தெரிகிறது.

    ஏற்கனவே சபரிராஜன் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர். தற்போது 2-வது கட்டமாக சோதனை நடத்தி சபரிராஜன் பெற்றோரிடம் விசாரணை நடத்தி பல தகவல்களை பெற்று உள்ளதால் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் சிலர் சிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    சபரி ராஜனை தொடர்ந்து சதிஷ், மணிவண்ணன், வசந்த குமார் ஆகியோரது வீட்டிற்கும் சென்று சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்துவதுடன் அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்த உள்ளனர்.

    இதற்காக சி.பி.ஐ. அதிகாரிகள் தொடர்ந்து பொள்ளாச்சியில் முகாமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. பொள்ளாச்சி பாலியல் வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிரப்படுத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசிடம் கடன் பெற்றவர்களின் பட்டியலையும் சேகரித்து அவர்களிடமும் விசாரணை நடத்த சிபிஐ போலீசார் முடிவு செய்துள்ளனர்.
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் பைனான்ஸ் அதிபர் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதிஷ், வசந்த குமார், மணிவண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கை முதலில் பொள்ளாச்சி போலீசார் விசாரித்து வந்தனர். பின்னர் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. அதன் பின்னர் சி.பி.ஐ. வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் பொள்ளாச்சி, கோவையில் முகாமிட்டு தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

    பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் பிப்ரவரி மாதம் 12-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்றவர்கள் பட்டியலை சி.பி.ஐ. அதிகாரிகள் பெற்று சென்று உள்ளனர்.

    அந்த பட்டியலில் நோயாளிகளின் பெயர், முகவரி, சிகிச்சை விவரங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அந்த பட்டியலில் இளம் பெண்கள் யாராவது தற்கொலை முயற்சி செய்திருக்கிறார்களா? தற்கொலை செய்து உள்ளார்களா? அவர்கள் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்டவர்களா ? என்ற கோணத்தில் சி.பி.ஐ. போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

    முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு செல்போன்கள் வாங்கிய கடை உரிமையாளர்களிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருநாவுக்கரசு பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். அவரிடம் பணம் பெற்றவர்களுக்கும் பாலியல் விவகாரத்துக்கும் தொடர்பு இருக்குமா? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    அதன் அடிப்படையில் திருநாவுக்கரசிடம் கடன் பெற்றவர்களின் பட்டியலையும் சேகரித்து அவர்களிடமும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

    எனவே இந்த வழக்கில் மேலும் சிலரையும் கைது செய்து விசாரணை நடத்த சி.பி.ஐ. போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனால் பொள்ளாச்சி பாலியல் வழக்கு சூடு பிடித்துள்ளது.
    பொள்ளாச்சி பாலியல் வழக்குகளை பெண் போலீஸ் அதிகாரி விசாரிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கும், சி.பி.ஐ., இணை இயக்குனருக்கும் நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #PollachiAbusecase
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில் ராதிகா என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், கூறியிருப்பதாவது:-

    பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக பிப்ரவரி மாதம் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக காவலில் எடுத்து விசாரிக்கவில்லை. உண்மை குற்றவாளிகளை தப்பிக்க வைக்கும் வகையில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் புலன் விசாரணை நடத்தினர்.

    பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களின் வீட்டுக்கு சாதாரண உடையில் சென்று விசாரிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளத்தை வெளியிடக் கூடாது என்ற விதிகளை காவல் துறையினர் பின்பற்றவில்லை.

    புதிதாக வெளியான நான்கு வீடியோக்கள் தொடர்பாக தனி தனி வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். இந்த விசாரணை சி.பி.ஐ. பெண் போலீஸ் அதிகாரி தலைமையில் நடைபெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி வி.கே.தஹில்ரமானி, நீதிபதி எம்.துரைசாமி ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கும், சி.பி.ஐ., இணை இயக்குனருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். #PollachiAbusecase
    வங்கி கடனை 100 சதவீதம் திருப்பி செலுத்திவிடுகிறேன் என விஜய் மல்லையா மீண்டும் உறுதியளித்துள்ளார். #VijayMallya
    இந்திய வங்கிகளுக்கு ரூ. 9000 கோடி திருப்பிச் செலுத்த வேண்டிய வழக்கில் விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு கொண்டுவர இந்திய அரசு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. விஜய் மல்லையாவை நாடு கடத்த இங்கிலாந்து உள்துறை செயலாளரும் கையெழுத்திட்டுள்ளார். இதனை எதிர்த்து விஜய் மல்லையா மேல் முறையீடு செய்துள்ளார். இதற்கிடையே மீண்டும், வங்கி கடனை 100 சதவீதம் திருப்பி செலுத்திவிடுகிறேன் என விஜய் மல்லையா உறுதியளித்துள்ளார். 

    விஜய் மல்லையா டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில்,  “ஜெட் ஏர்வேஸ் வீழ்வு தொடர்பான டிவி தொலைக்காட்சிகளின் விவாதங்களை பார்த்துக்கொண்டிக்கிறேன், ஊழியர்கள் சம்பளம் பெறாத விவகாரம், வேலையின்மை, வேதனை, கஷ்டம், வங்கியிலிருக்கும் செக்யூரிட்டி, மீட்டெழுவதற்கான வாய்ப்பு குறித்து விவாதம் நடக்கிறது. ஆனால் இங்கு நான் 100 சதவீதம் வங்கி கடனை திருப்பி செலுத்திவிடுகிறேன் என உறுதியாக கூறுகிறேன், ஆனால் வங்கிகள் அதனை எடுத்துக்கொள்ளவில்லை ஏன்? 

    இந்தியாவில் கிங்பிஷர் உள்பட பல்வேறு விமான நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன. முன்னர் எதிர்பார்க்கவே முடியாத நிலையில் இருந்த ஜெட் ஏர்வேசும் சரிவை சந்தித்துள்ளது. இவையெல்லாம் வர்த்தக தோல்விகளாகும். ஆனால் சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு என் மீது மட்டும் குற்ற வழக்குகளை தொடர்ந்துள்ளன. 100 சதவிதம் திரும்ப செலுத்திவிடுகிறேன் என்ற பின்னரும் இது நடக்கிறது. ஏன் என்னை மட்டும்? என்பது மிகவும் ஆச்சர்யம் அளிக்கிறது,” எனக் கூறியுள்ளார். #VijayMallya
    தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவங்கள் தொடர்பான அனைத்து ஆவணங்களும் இன்று சி.பி.ஐ.யிடம் ஓப்படைக்கப்பட்டதாக சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் தெரிவித்தனர். #CBCIDdocuments #Pollachiharassmentcase #CBI
    சென்னை:

    பொள்ளாச்சியில் இளம்பெண்களை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த வழக்கு தொடர்பாக உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் நியாயம் கிடைக்காது என்று அப்பகுதி மக்களும், அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

    இவ்வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி. சூப்பிரண்ட் நிஷா பார்த்திபன் 40 சாட்சிகளின் வாக்குமூலம் மற்றும் பல்வேறு தடயவியல் ஆதாரங்களை திரட்டினார்.

    இந்த வழக்கில் கைதாகி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திருநாவுக்கரசு உள்பட 4 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரித்தனர்.

    இதற்கிடையே, இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதற்கு தமிழக அரசும் சம்மதித்து சி.பி.ஐ.க்கு  வழக்கை மாற்றுவது தொடர்பாக அரசாணை வெளியிட்டது.

    இதைதொடர்ந்து, பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் கைதான 7 பேர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து சிபிஐ கடந்த 27-ம் தேதி விசாரணையை தொடங்கியது. 

    இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவங்கள் தொடர்பான அனைத்து ஆவணங்களும் இன்று சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஓப்படைக்கப்பட்டதாக சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் தெரிவித்தனர். #CBCIDdocuments #Pollachiharassmentcase #CBI
    ×