என் மலர்
நீங்கள் தேடியது "பிசிசிஐ"
- சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரை 0-3 என இழந்தது.
- ஆஸ்திரேலியாவில் 1-3 என 5 போட்டிகள் கொண்ட தொடரை இழந்தது.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 0-3 என இழந்தது. அதன்பின் ஆஸ்திரேலியா சென்று ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த தொடரை 1-3 என இழந்தது.
இதனால் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாமல் போனது. தோல்வி குறித்து பிசிசிஐ இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், கேப்டன் ரோகித் சர்மா, தலைமை தேர்வாளர் அகர்கர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தியது.
பின்னர் ஐபிஎல் தொடங்கியதால் ஆலோசனைக்குப் பின் நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று துணை பயிற்சியாளர் மற்றும் பீல்டிங் பயிற்சியாளரை அதிரடியாக நீக்கியுள்ளது. அவர்களுடைய ஒப்பந்தம் முடிவடையாத நிலையில், இடையிலேயே ஒப்பந்தத்தை முறித்துள்ளது.
துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயர், பீல்டிங் பயிற்சியாளர் டி. திலிப், strength and conditioning பயிற்சியாளர் சோஹம் தேசாய் ஆகியோரை அதிரடியாக நீக்கியுள்ளது.
- ஐதராபாத் தொழில் அதிபர் ஒருவர் சூதாட்ட கும்பலுடன் தொடர்பு ஏற்படுத்தியுள்ளார்.
- ரசிகர் என்ற போர்வையில் வீரர்களை அணுக வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையாக இருக்க பிசிசிஐ உஷார்.
உலக அளவில் நடைபெறும் டி20 லீக்கில் சிறப்பு வாய்ந்ததாக இந்தியன் பிரீமியர் லீக் (IPL) விளங்குகிறது. இதில் ஏராளமான சர்வதேச வீரர்கள் விளையாடுகிறார்கள். கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டும் விளையாட்டாக இது உள்ளது.
ஐபிஎல் தொடரை வைத்து கோடிக்கணக்கான ரூபாய்க்கு சூதாட்டம் நடைபெறுகிறது. சூதாட்ட கும்பல் உடன் தொடர்புள்ள சில தொழில் அதிபர்கள் கிரிக்கெட் வீரர்களுடன் ரசிகர்கள் போன்று அறிமுகமாகி, அவர்களுக்கு பணம் அல்லது பரிசு வழங்கி நட்பு ஏற்படுத்திக் கொள்வார்கள். அதன்பின் போட்டி தொடர்பான சில தகவல்களை பெற்று சூதாட்டக்காரர்களுக்கு அதை வழங்கி விடுவார்கள்.
இதுபோன்ற நபர்களிடம் வீரர்கள், அணி உரிமையாளர்கள், சப்போர்ட் ஸ்டாஃப் உள்ளிட்டோர் சிக்கிவிடக் கூடாது என்பதில் பிசிசிஐ கவனமாக உள்ளது.
இதற்காக ஊழல் தடுப்பு பாதுகாப்பு குழுவை {Anti-Corruption Security Unit (ACSU)} அமைத்துள்ளது. இந்த குழு சந்தேகத்திற்குரிய வகையில் யாராவது வீரர்களை அணுகுகின்றனரா? என ரகசியமாக கண்காணிப்பார்கள்.
இந்த நிலையில் சூதாட்ட கும்பலுடன் தொடர்புடைய ஐதராபாத்தை சேர்ந்த ஒரு தொழில் அதிபர், வீரர்களை அணுக முயற்சி செய்வதாக இந்த குழு எச்சரித்துள்ளது.
இதனால் வீரர்கள் மற்றும் அணியில் உள்ள அனைவரும் ரசிகர்கள் போர்வையில் தங்களை தனி நபர் யாராவது அணுகினால் உஷாராக இருங்கள். அது தொடர்பாக உடனடியாக தகவல் தெரிவிக்கவும். அவர்கள் உங்களுக்கு மட்டுமல்ல, உங்கள் குடும்பத்தினருக்கும் பரிசு போன்ற பொருட்கள் கொடுத்து வலை விரிப்பார்கள். இதனால் உஷாராக இருங்கள் எனத் தெரிவித்துள்ளார்.
மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- ஐபிஎல்-இல் மும்பை இந்தியன்ஸ் அணியின் முதல் 4 போட்டிகளில் பும்ரா பங்கேற்கவில்லை.
- ஐபிஎல் 2-வது பாதியில் பும்ரா விளையாடுவார் என்று கூறப்பட்டது.
ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் இந்தியா 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இந்த தொடரின் கடைசி டெஸ்ட்டின் போது பும்ராவுக்கு காயம் ஏற்பட்டது.
இதனால் அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இடம்பெறவில்லை. அதனை தொடர்ந்து ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் விளையாட வாய்ப்பு இல்லை எனவும் 2-வது பாதியில் விளையாடுவார் என்றும் கூறப்பட்டது.
இதனால், ஐபிஎல்-இல் மும்பை இந்தியன்ஸ் அணியின் முதல் 4 போட்டிகளில் பும்ரா பங்கேற்கவில்லை
இந்நிலையில், காயத்தில் இருந்து மீண்ட பும்ரா மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்துள்ளார். இதனை மும்பை இந்தியன்ஸ் அணி வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.
காயத்தில் இருந்து குணமடைந்து அணியில் இணைந்தாலும் நாளைய போட்டியில் பும்ரா விளையாட மாட்டார் தகவல் வெளியாகியுள்ளது.
- வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது.
- தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக மூன்று வடிவிலான தொடரிலும் விளையாடுகிறது.
இந்திய சீனியர் கிரிக்கெட் அணி இந்தியாவில் விளையாடும் கிரிக்கெட் தொடர்பான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
முதலில் வெஸ்ட் இண்டீஸ் அக்டோபர் மாதம் இந்தியா வருகிறது. அக்டோபர் 2ஆம் தேதியில் இருந்து அக்டோபர் 15ஆம் தேதி வரை இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
அதன்பின் நவம்பர் மாதம் தென்ஆப்பிரிக்கா அணி இந்தியா வருகிறது. தென்ஆப்பிரிக்கா அணி இரண்டு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது.
டெஸ்ட் தொடர் நவம்பர் 14ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஒருநாள் தொடர் நவம்பர் 30ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 6ஆம் தேதி வரை நடக்கிறது. டி20 தொடர் 9ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை நடக்கிறது.
- பும்ராவின் காயம் சற்று கடுமையானது.
- பும்ராவுக்கு மீண்டும் எலும்பு முறிவு ஏற்படுவதை மருத்துவக் குழு விரும்பவில்லை.
ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் இந்தியா 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இந்த தொடரின் கடைசி டெஸ்ட்டின் போது பும்ராவுக்கு காயம் ஏற்பட்டது.
இதனால் அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இடம்பெறவில்லை. அதனை தொடர்ந்து ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் விளையாட வாய்ப்பு இல்லை எனவும் 2-வது பாதியில் விளையாடுவார் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் அவருக்கு மீண்டும் ஒரு பிரச்சனை வந்துள்ளது. அவரது முதுகில் மீண்டும் ஒரு எழும்பு முறிவு ஏற்படும் என அஞ்சப்படுகிறது. இதனால் அவர் அணிக்கு திரும்புவது தாமதமாகிறது.
அவர் காயம் குறித்து பிசிசிஐ வட்டாரங்கள் தரப்பில் இருந்து சில தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில், பும்ராவின் காயம் சற்று கடுமையானது. அவருக்கு மீண்டும் எலும்பு முறிவு ஏற்படுவதை மருத்துவக் குழு விரும்பவில்லை. பும்ரா கூட இதில் கவனமாக இருக்கிறார்.
காயம் குணமடைந்து பும்ரா பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பந்து வீச்சு பயிற்சியில் ஈடுபட்டார். ஆனால் முழு வீச்சில் இன்னும் பந்து வீசவில்லை. அதற்கு சில காலம் ஆகலாம்.
அவர் அணிக்கு திரும்புவதற்கு காலக்கெடு எதுவும் இல்லை. அவர் ஏப்ரல் 2-வது வாரத்திற்குள் அணிக்கு திரும்புவார். குறிப்பாக இங்கிலாந்து எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3 போட்டிகளில் மட்டுமே விளையாட முடியும் என கூறப்படுகிறது.
இதனால் ஐபிஎல் தொடரில் அவர் விளையாட வாய்ப்பு இல்லை என தெளிவாக தெரிகிறது. இது மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு சோகமான செய்தியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
- அனைத்து வடிவங்களிலும் விளையாடும் வீரர்களுக்கு மட்டுமே A+ பிரிவில் இடம் பெறுவார்கள்
- கோலி, ரோகித் ஆகியோர் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் A+ பிரிவில் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்திய ஆண்கள் அணிக்கான வருடாந்திர மத்திய ஒப்பந்த பட்டியலில் ரோகித், கோலி ஆகியோர் A+ பிரிவில் தக்கவைக்கப்பட உள்ளனர். இது அனைத்து வடிவங்களிலும் விளையாடும் வீரர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்ட மிக உயர்ந்த மற்றும் பொதுவான பிரிவாகும்.
ஆனால் கோலி, ரோகித் ஆகியோர் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் A+ பிரிவில் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.
அதே நேரத்தில் உள்ளூர் போட்டிகளை தவறவிட்டதாக கூறப்பட்டு முந்தைய மத்திய ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட ஷ்ரேயாஸ் மீண்டும் பட்டியலில் மீண்டும் இடம் பெறுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஐ.பி.எல். சீசன் தொடங்கியது முதல் கடந்த 18 ஆண்டுகளாக தொடர்ந்து விளையாடி வருகிறார்.
- தோனியை கவுரவிக்கும் வகையில் பிசிசிஐ செயலாளர் தேவஜித் நினைவு பரிசு வழங்கினார்.
கவுகாத்தி:
கவுகாத்தியில் நேற்று நடந்த 11-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 182 ரன்கள் எடுத்தது. நிதிஷ் ரானா 81 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து ஆடிய சிஎஸ்கே 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. ராஜஸ்தான் சார்பில் ஹசரங்கா 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஆட்ட நாயகனாக நிதிச்ஷ் ரானா தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, எம்.எஸ்.தோனிக்கு பி.சி.சி.ஐ. நினைவு பரிசு வழங்கி கவுரவித்தது.
ஐபிஎல் சீசன் தொடங்கியது முதல் கடந்த 18 ஆண்டுகளாக தொடர்ந்து விளையாடி வரும் தோனியை கவுரவிக்கும் வகையில் பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா நினைவு பரிசு வழங்கினார்.
- வருடாந்திர மத்திய ஒப்பந்த பட்டியலில் ரோகித், கோலி மற்றும் ஜடேஜா ஆகியோர் தற்போது A+ பிரிவில் உள்ளனர்.
- கடந்த ஆண்டு ஒப்பந்தப் பட்டியலில் இருந்து நீக்கிய ஷ்ரேயாஸ் இந்த முறை இடம் பிடிப்பார்.
இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான புதிய ஒப்பந்த பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. அதில் 'ஏ' கிரேடில் உள்ள வீராங்கனைகளுக்கு ஆண்டுக்கு ரூ.50 லட்சமும், 'பி' பிரிவுக்கு ரூ.30 லட்சமும், 'சி' பிரிவுக்கு ரூ.10 லட்சமும் வழங்கப்படும்.
இந்நிலையில் இந்திய ஆண்கள் அணிக்கான வருடாந்திர மத்திய ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ தீவிரமாக ஆலோசித்து வருகிறது. கடைசியாக அறிவித்தபோது, உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்ற வாரியத்தின் கோரிக்கையை நிறைவேற்றாததற்காக, ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷானை நீக்கியது. மேலும் ஐயர் மற்றும் கிஷானை மத்திய ஒப்பந்தங்களில் இருந்து நீக்குவதில் வாரியம் எந்த தயக்கமும் காட்டவில்லை .
இந்த முறை அவர்கள் பெயர் பட்டியலில் இடம் பிடித்தாலும் அதே அளவில் எதிர்பார்க்கலாம். ஷ்ரேயாஸ் ஒப்பந்தப் பட்டியலில் இடம் பிடித்தாலும் இஷான் கிஷான் இடம் பெறுவது உறுதிப்படுத்த முடியாது நிலையில் உள்ளது.
இந்நிலையில் வருடாந்திர மத்திய ஒப்பந்த பட்டியலில் ரோகித், கோலி மற்றும் ஜடேஜா ஆகியோர் தற்போது A+ பிரிவில் உள்ளனர். இது அனைத்து வடிவங்களிலும் விளையாடும் வீரர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்ட மிக உயர்ந்த மற்றும் பொதுவான வகையாகும்.
இப்போது கோலி, ரோகித் மற்றும் ஜடேஜா ஆகியோர் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், அவர்களை A வகைக்கு மாற்ற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த பட்டியலில் இளம் வீரர்களான நிதிஷ் ரெட்டி மற்றும் அபிஷேக் சர்மா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- 30 பக்கங்கள் கொண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது.
- சர்வதேச கிரிக்கெட் நிதி உகந்ததாக இல்லை.
சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் நவீன கிரிக்கெட் எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகளை விளக்கியுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு 30 பக்கங்கள் கொண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) வருவாய் பகிர்வு முறை எப்படி வளைந்துள்ளது என்பதையும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) 38.5 சதவீத வருவாயை எடுத்துக் கொள்வதாக எடுத்துரைத்துள்ளது. மேலும், சர்வதேச கிரிக்கெட் நிதி உகந்ததாக இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கையில், பிசி.சி.ஐ. ஏன் ஐ.சி.சி.யின் வருவாய் பகிர்வில் அதிக பங்குகளை எடுத்துக் கொள்கிறது என்பது பற்றிய காரணங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. மேலும், இந்த அறிக்கையில் ஐ.சி.சி. வருவாயில் பி.சி.சி.ஐ. பங்களிப்புகள் என்னென்ன என்பது பற்றியும் எந்த தகவலும் இடம்பெறவில்லை.
இதுதவிர இந்திய சந்தைக்கான ஒளிபரப்பு உரிமம் எவ்வளவு தொகைக்கு விற்பனையாகிறது என்பது பற்றியும் எந்த தகவலும் இல்லை. மேலும், இந்த தொகை காரணமாக ஐ.சி.சி.க்கு கிடைக்கும் நிதி எவ்வளவு என்பது பற்றியும் குறிப்பிடப்படவில்லை. இந்திய அணி போட்டிக்காக விளம்பரதாரர்கள் எந்தளவுக்கு வரிசையில் நிற்கின்றனர் என்பது பற்றியும் இந்த அறிக்கையில் எந்த தகவலும் இடம்பெறவில்லை.
இந்த அறிக்கையின் முக்கிய அம்சமாக ஐ.சி.சி. வருவாயில் பெரும் பங்கு பி.சி.சி.ஐ.க்கு செல்வதும் கிட்டத்தட்ட 50 சதவீத தொகை முதல் மூன்று பெரிய நாடுகளுக்கு மட்டுமே வழங்கப்படுவதும் எடுத்துரைக்கப்பட்டு உள்ளது. இது தவிர பி.சி.சி.ஐ.-க்கு வழங்கப்படும் 38.5 சதவீத நிதியை 10 சதவீதமாக குறைக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.
அறிக்கை குறித்து சந்தை வல்லுநர்கள் கூறும் போது, பால் மார்ச் தலைமையிலான ஆணையம் வழங்கியுள்ள பரிந்துரைகள் ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருப்பதாகவும், ஒட்டுமொத்த விளையாட்டியின் வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு என்ன என்பதை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது என்று தெரிவித்தனர்.
- ‘ஏ’ கிரேடில் உள்ள வீராங்கனைகளுக்கு ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வழங்கப்படும்.
- ஹர்லீன் தியோல், மேகனா சிங், ராஜேஸ்வரி கெய்க்வாட், தேவிகா வைத்யா, அஞ்சலி சர்வானி உள்ளிட்டோருக்கு இடமில்லை.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான புதிய ஒப்பந்த பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது. இதன்படி 'ஏ' கிரேடில் உள்ள வீராங்கனைகளுக்கு ஆண்டுக்கு ரூ.50 லட்சமும், 'பி' பிரிவுக்கு ரூ.30 லட்சமும், 'சி' பிரிவுக்கு ரூ.10 லட்சமும் வழங்கப்படும்.
'ஏ' கிரேடில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மா ஆகியோர் மாற்றமின்றி நீடிக்கிறார்கள். வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங், அதிரடி பேட்டர் ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், ஷபாலி வர்மா 'பி' கிரேடிலும், ஸ்ரேயங்கா பட்டீல், திதாஸ் சாது, அருந்ததி ரெட்டி, அமன்ஜோத் கவுர், உமா சேத்ரி, யாஸ்திகா பாட்டியா, ராதா யாதவ், சினே ராணா, பூஜா வஸ்ட்ராகர் ஆகியோர் சி பிரிவிலும் உள்ளனர். ஹர்லீன் தியோல், மேகனா சிங், ராஜேஸ்வரி கெய்க்வாட், தேவிகா வைத்யா, அஞ்சலி சர்வானி உள்ளிட்டோருக்கு இடமில்லை.
- இரண்டு அணிகளும் சமமான ஸ்கோரை பெற்றால் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்படும்.
- சூப்பர் ஓவரில் வெற்றி பெறும்வரை தொடர்ந்து நடத்தப்படும்.
ஐபிஎல் 2025 கிரிக்கெட் சீசன் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. ஈடன் கார்டனில் நடைபெறும் முதல் போட்டியில் கொல்கத்தா- ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஐபிஎல் நிர்வாகம் 10 அணி கேப்டன்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தியது. அதன்பின் ஐபிஎல் விதிமுறைகளில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
பந்தை பளபளப்பாக்க எச்சில் பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு போட்டியின்போது 2-வது இன்னிங்சில் 10 ஓவருக்குப் பிறகு புதிய பந்து பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவு காரணமாக பந்து ஈரமாகிவிடுதால் பந்து வீச்சாளர்கள் பந்து வீச சிரமப்படுவதாக கூறியதன் அடிப்படையில் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சூப்பர் ஓவர் குறித்து ஐபிஎல் நிர்வாகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இரண்டு அணிகளும் சமமான ஸ்கோர் எடுத்திருந்தால் போட்டி டை என அறிவிக்கப்பட்டு, சூப்பர் ஓவர் முறை பயன்படுத்தப்பட்டும். இதில் ஒவ்வொரு அணியின் 3 பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்ய முடியும். 6 பந்துகள் வீசப்படும். இரண்டு விக்கெட் இழந்தால் அணியின் பேட்டிங் முடிவுக்கு வரும்.
ஒருவேளை சூப்பர் ஓவரின்போது இரண்டு அணிகளும் சமநிலையான ஸ்கோரை பெற்றால், மீண்டும் சூப்பர் ஓவர் பயன்படுத்தப்படும். இப்படி ஒரு வெற்றி பெறும் வரை சூப்பர் ஓவர் சென்று கொண்டே இருக்கும்.
இந்த நிலையில் சூப்பர் ஓவருக்கு ஒரு மணி நேரம்தான் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ஒரு மணி நேரத்திற்குள் எத்தனை முறை வேண்டுமென்றால் சூப்பர் ஓவர் விளையாட முடியும் எனத் தெரிவித்துள்ளது.
- பந்தின் மீது எச்சிலை தேய்ப்பதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது.
- இம்பேக்ட் வீரர் விதிமுறை இன்னும் 2 ஆண்டுகள் (2027-ம் ஆண்டு வரை) தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.
ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் நாளை (22-ம் தேதி) தொடங்க உள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன.
இதன் தொடக்க போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதுகிறது.
இதனையொட்டி 10 அணிகளின் கேப்டன்களுடன் பி.சி.சி.ஐ. ஆலோசனை கூட்டம் மும்பையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பந்தின் மீது எச்சிலை தேய்ப்பதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. அத்துடன் இம்பேக்ட் வீரர் விதிமுறை இன்னும் 2 ஆண்டுகள் (2027-ம் ஆண்டு வரை) தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.
மேலும் நடப்பு சீசனில் புதிய விதி ஒன்றும் அமல்படுத்தப்பட உள்ளது. அதன்படி, இரவு நேர ஆட்டங்களில் 2-வது இன்னிங்சின்போது பனிப்பொழிவின் தாக்கத்தால் பந்து ஈரமாகி விடுகிறது. ஈரமான பந்தை பவுலர்களால் சரியாக பிடித்து துல்லியமாக வீச முடிவதில்லை. இதனால் பேட்ஸ்மேன்கள் எளிதில் ரன்குவித்து விடுகிறார்கள். இதை கருத்தில் கொண்டு இந்த ஐ.பி.எல்.-ல் இரண்டு பந்து பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதாவது 2-வது இன்னிங்சில் 10-வது ஓவருக்கு பிறகு பந்து வீசும் அணியின் கேப்டன் பந்து அதிகம் ஈரமாகி விட்டதாக நினைத்தால் நடுவரிடம் புதிய பந்து கேட்கலாம். பனியின் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை நடுவர் ஆராய்ந்து, அதற்கு ஏற்ப பந்தை மாற்றுவது குறித்து முடிவு செய்வார். இந்த புதிய விதி நடப்பு சீசனில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.