search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாதா"

    ஆலயத்திற்கு வந்த சப்பரத்தை நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி முழங்கால் இட்டு சுற்றி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    தாடிக்கொம்புவை அடுத்த மறவபட்டி புதூரில் பழமையான புனித சலேத் மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் 137-ம் ஆண்டு திருவிழா நடைபெற்றது. கடந்த 13-ந்தேதி நவநாள் நிகழ்ச்சிகளுடன் திருவிழா தொடங்கியது. ஒவ்வொரு நாளும் புனித சலேத் மாதாவின் திருவுருவம் தாங்கிய கொடி ஊர்வலமும், திருப்பலி நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

    21-ந்தேதி புனித சலேத் மாதாவின் திருவுருவம் தாங்கிய கொடி ஏற்றி வைக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு திருவிழாவில் புதுநன்மை திருப்பலி மறவபட்டி பங்குத்தந்தை லியோ ஜோசப் தலைமையில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து புனித சலேத் மாதா உள்ளிட்ட புனிதர்களின் சொரூபங்கள் மின்ரத பவனி நடைபெற்றது.

    இதையடுத்து நேற்று நடந்த பகல் திருவிழாவில் புனித சலேத் மாதாவின் பெரிய சப்பர பவனி நடைபெற்றது. முடிவில் ஆலயத்திற்கு வந்த சப்பரத்தை நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி முழங்கால் இட்டு சுற்றி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை ஊர் பெரிய தனக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

    சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலியும், வேண்டுதல் சப்பரபவனியும், வாணவேடிக்கை மற்றும் மேளதாளத்துடன் ஆடம்பர சப்பர தேர்பவனி நடைபெற்றது.
    புள்ளம்பாடியில் உள்ள நூற்றாண்டு பழமைவாய்ந்த புனித அன்னாள் ஆலய திருவிழா, கடந்த 17-ந் தேதி பங்குத்தந்தை சூசைமாணிக்கம், உதவி பங்குத்தந்தை அருள்தொன்போஸ்கோ ஆகியோர் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் அருட்தந்தையர்கள் தலைமையில் கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெற்று, நவநாள் சப்பரம் ஆலயத்தை சுற்றி வலம்வந்தது.

    கடந்த 24-ந் தேதி சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலியும், வேண்டுதல் சப்பரபவனியும், நேற்று முன்தினம் வாணவேடிக்கை மற்றும் மேளதாளத்துடன் ஆடம்பர சப்பர தேர்பவனி நடைபெற்றது. நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியாக புனித அன்னாள் சிலை தாங்கிய தேர்பவனி நடைபெற்றது. தேரினை மறைவட்ட முதன்மை குரு பீட்டர்ஆரோக்கியதாஸ் புனிதப்படுத்தி தொடங்கி வைத்தார்.

    பேரூராட்சி தலைவர் ஆலிஸ் செல்வராணி ஜோசப் செல்வராஜ், செயல் அலுவலர் ஜவஹர் மற்றும் வார்டு கவுன்சிலர்கள், அருட்தந்தையர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து இரவில் ஆலயத்தை வந்தடைந்தது.
    சேலம் செவ்வாய்ப்பேட்டை தூய ஜெயராக்கினி அன்னை இணை பேராலய திருவிழாவை முன்னிட்டு தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
    சேலம் செவ்வாய்ப்பேட்டை தூய ஜெயராக்கினி அன்னை இணை பேராலய திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் நவநாள் திருப்பலி நடந்து வந்தது. முக்கிய நாளான நேற்று மாலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி நடந்தது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் தூய ஜெயராக்கினி அன்னை சொரூபம் வைக்கப்பட்டது.

    தேர்பவனியை சேலம் மறைமாவட்ட முதன்மை குரு அருளப்பன் சிறப்பு பிரார்த்தனை செய்து தொடங்கி வைத்தார். தேவாலயத்தில் இருந்து தொடங்கிய தேர்பவனி, செவ்வாய்பேட்டையின் முக்கிய பகுதிகள் வழியாக சென்று மீண்டும் தேவாலயத்தை வந்தடைந்தது.

    இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை தேவாலய பங்கு தந்தை அழகுசெல்வன், உதவி பங்குதந்தை அருள்வழவன், துணைத்தலைவர் சகாயராஜ், செயலாளர் அமல்ராஜ், பொருளாளர் ஜேக்கப் மற்றும் விமல் ஆகியோர் செய்திருந்தனர்.
    ×