search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடி"

    • மதுரை-எல்லீஸ் நகரில் அருளும் தேவி கருமாரியம்மனை அனைத்து மதத்தினரும் வழிபட்டு நலம் பெறுகிறார்கள்.
    • கரூர் மகாமாரியம்மன், வழக்கு, வியாபார சிக்கல் நீங்க, காணாமல் போன பொருட்கள் திரும்பக் கிடைக்க அருள்கிறாள்.

    * விருதுநகரில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் சிவாம்சம் கொண்டவள். அதனால் கருவறையில் தேவிக்கு முன் சிங்கத்திற்குப் பதிலாக நந்தி வீற்றருள்கிறார். கண் நோய் உள்ளோர் தேவிக்கு அபிஷேகம் செய்த நீரால் கண்களைக் கழுவ நோய் நீங்குகிறது.

    * மதுரை சோழவந்தானில் உள்ளது ஜெனகை மாரியம்மன். அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பிரசாதமான தீர்த்தத்தை அருந்த நோய் மறைகிறது.

    * மதுரை-எல்லீஸ் நகரில் அருளும் தேவி கருமாரியம்மனை அனைத்து மதத்தினரும் வழிபட்டு நலம் பெறுகிறார்கள்.

    * புதுக்கோட்டை-நார்த்தாமலையில் முத்து மாரியம்மன் திருவருள் புரிகிறாள். இங்கு அக்கினி காவடி எடுத்தால் தீராத நோய் தீர்கிறது. மழலை வரம் வேண்டுவோர் கரும்புத் தொட்டில் கட்டுகிறார்கள்.

    * நீலகிரி, குன்னூரில் தந்திமாரியம்மன் அருளாட்சி புரிகிறாள். தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டால் இந்த மாரியிடம் மனமுருக வேண்டிக்கொள்ள, உடனே பெருமழை பெய்கிறது.

    * ஊட்டியில் மகாமாரி, மகாகாளி இருவரும் ஒரே கருவறையில் அருள்கின்றனர். இங்குள்ள காட்டேரியம்மன் சந்நதியில் மந்திரித்துத் தரும் முடிக்கயிறு, தோஷங்கள், நோய்கள், பில்லி சூனியம் விலக்குகின்றனவாம்.

    * நாமக்கல்-ராசிபுரத்தில் நித்யசுமங்கலி மாரியம்மனை தரிசிக்கலாம். வருடம் முழுதும் அம்பிகையின் எதிரே சிவாம்சமான கம்பம் நடப்பட்டிருப்பதால் இப்பெயர். ஐப்பசி மாதம் புதுக் கம்பம் நடும்போது தயிர்சாதம் நிவேதிப்பர். அந்த தயிர்சாத பிரசாதத்தை உண்பவர்களுக்கு அடுத்த வருடமே மழலைப் பேறு கிட்டுகிறது.

    * கோவையில் ஆட்சிபுரியும் தண்டு மாரியம்மன், குடும்ப வளம் பெருகவும் தீராத நோய்கள் தீர்ந்திடவும் அருள்கிறாள்.ஃ"

    * சமயபுரம் மாரியம்மன், மாசி மாதம் தன் பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சைப்பட்டினி விரதம் இருப்பவள். தாலிவரம் வேண்டும் பெண்கள் தங்கள் தாலியை நேர்த்திக்கடனாகச் செலுத்துகிறார்கள்.

    * திருச்சி மணப்பாறையிலுள்ள மாரியம்மன் கோயிலில் திருமணத்தடை உள்ளவர்கள் மஞ்சள் கயிறு வாங்கி அம்மன் சந்நதியின் பின்னே உள்ள வேப்பமரத்தில் கட்டி நேர்ந்து கொள்ள, விரைவில் மணவாழ்வு கிட்டுகிறது.

    * கோடீஸ்வரி மாரி என்ற கோட்டைமாரி திருப்பூரில் அருள்கிறாள். கருவறையில் அம்மனின் இரு புறங்களிலும் லட்சுமி, சரஸ்வதி இருவரும் அம்மனைப் போலவே சுயம்புவாக எழுந்தருளியிருக்கிறார்கள். இந்த அன்னையிடம் பூவாக்கு கேட்பது இந்த ஆலயத்தின் தனிச் சிறப்பு.

    * தேனி-பெரிய குளத்தில் உள்ள கௌமாரியம்மனுக்கு விவசாயம் செழிக்க தானியங்கள், காய்கறிகள், கனிகளைப் படைக்கின்றனர்.

    * கரூர் மகா மாரியம்மன், வழக்கு, வியாபார சிக்கல் நீங்க, காணாமல் போன பொருட்கள் திரும்பக் கிடைக்க அருள்கிறாள்.

    * திண்டுக்கல்-கோட்டை மாரியம்மனை பிரார்த்தித்து உப்பையும் மஞ்சளையும் கொடிமரத்தில் சமர்ப்பிக்க, வேண்டுதல் நிறை வேறுகிறது.

    * தஞ்சை-புன்னைநல்லூர் மாரியம்மன், துளஜா மன்னர் மகளின் கண் நோய் தீர்த்தவள். புற்றுருவாய் இருந்த இந்த அம்மனுக்கு யந்திரப் பிரதிஷ்டை செய்தவர் நெரூர் சதாசிவப் பிரம்மேந்திரர்.

    * காரைக்குடி, முத்துப்பட்டினம், மீனாட்சிபுரத்திலுள்ள முத்து மாரியம்மனுக்கு தக்காளிப் பழத்தை காணிக்கையாக்கி, தக்காளி பழச்சாறால் அபிஷேகம் நடத்தப்படுகிறது.

    * கோவை- உடுமலைப்பேட்டை மாரியம்மன் ஆலயத்தில், மார்கழி திருவாதிரையன்று 108 தம்பதியருக்கு மாங்கல்ய பூஜை செய்யப்பட்டு சுமங்கலிகளுக்கு மஞ்சள் கயிறு வழங்கப்படுகிறது.

    * ஈரோடு- பெரிய மாரியம்மன், வெப்பநோய்களை நீக்குகிறாள். அம்மை நோய் கண்டவர்களை அன்னை குணப்படுத்துகிறாள்.

    * கோபிசெட்டிபாளையம் சாரதா மாரியம்மன் ஆலயத்தில் மண் சட்டியில் நெருப்பை ஏந்தி பூசாரி வருவதை தரிசித்தால் வாழ்வு வளம் பெறுவதாக நம்பிக்கை நிலவுகிறது.

    * ஈரோடு-கருங்கல்பாளையம், சின்ன மாரியம்மன் மழலை வரம் அருள்கிறாள். இத்தல விபூதி பிரசாதத்தை நெற்றியில் பூசியும் தண்ணீரில் கரைத்து அருந்தவும் நோய்கள் நீங்குகின்றன.

    • ஆடி வளர்பிறை துவாதசி அன்று விஷ்ணு வழிபாடு நடத்தப்படுகிறது. '
    • இதனால் வாழ்வில் செல்வவளம் சிறக்கும் என்று கருதப்படுகிறது.

    ஆடிப்பெருக்கு என்பது விவசாயிகள் நதி அன்னையிடம் வேளாண்மை சிறக்க துணை செய்யுமாறு மேற்கொள்ளப்படும் வழிபாடாகும்.

    இவ்விழா காவிரி நதிக்கரையோர மக்களால் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.

    மேலும் ஆடிப் பெருக்கன்றே விதைகள் விதைக்கப் படுகின்றன.

    ஆடி மாதப் பருவநிலை விவசாயத்திற்கு உகந்தது. எனவே தான் ஆடிப் பட்டம் தேடி விதை என்ற பழமொழி வழக்கத்தில் உள்ளது.

    ஆடிப் பெருக்கன்று எந்த வித செயலைத் தொடங்கினாலும் அது சிறப்பாக வளரும் என்ற நம்பிக்கை மக்களிடம் நிலவுகிறது.

    காவிரிக்கரையில் பெண்கள் அதிகாலையில் குளித்து கரையோரத்தில் வாழை இலை விரித்து கருகமணி, பழங்கள், வெற்றிலை, பாக்கு சித்ரான்னங்கள், காப்பரிசி, மஞ்சள் தடவிய நூல் ஆகியவற்றை படைத்து அகல் விளக்கேற்றி காவிரியை வணங்குகின்றனர்.

    பின்னர் மஞ்சள் நூலை கழுத்தில்கட்டிக் கொள்கின்றனர்.

    ஸ்ரீரங்கநாதரும் ஆடிப்பெருக்கன்று காவிரியில் எழுந்தருளி காவிரிக்கு சீர்பொருட்களை வழங்குவார்.

    ஆடிப்பெருக்கு ஒவ்வோர் ஆண்டில் ஆடி-18ல் கொண்டாடப்படுகிறது.

    ஆடி மாதத்தில் வளர்பிறை சதுர்த்தி நாகசதுர்த்தி என்றும் வளர்பிறை பஞ்சமி கருட பஞ்சமி என்றும் கொண்டாடப்படுகின்றன.

    வளர்பிறை தசமி அன்று திக்வேதா விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. திசை தெய்வங்களுக்கு அன்று வழிபாடு நடத்தப்படுகிறது.

    ஆடி வளர்பிறை ஏகாதசி அன்று அன்னதானம் செய்தல், பசுவிற்கு அகத்திக்கீரை அளித்தல் போன்றவற்றால் தீவினைகள் நீங்குவதாகக் கருதப்படுகிறது.

    ஆடி வளர்பிறை துவாதசி அன்று விஷ்ணு வழிபாடு நடத்தப்படுகிறது. '

    இதனால் வாழ்வில் செல்வவளம் சிறக்கும் என்று கருதப்படுகிறது.

    கிராமங்களில் கிராம எல்லையில் உள்ள காவல் தெய்வங்களுக்கு வழிபாடு நடத்தப்படுகிறது.

    கருடாழ்வார், சுந்தரநாயனார், கலிய நாயனார், புகழ்சோழ மூர்த்தி நாயனார், ஆளவந்தார், புண்டரிகாவுர், கந்தாடை, தோழப்பர், பத்ரிநாராயண ஆழ்வார் போன்றோர் ஆடியிலே அவதரித்தவர்கள் ஆவார்.

    • அன்று இரவு கனவில் தோன்றி பெருமாள் உம்பெண் உணர்வால் மட்டுமல்ல மனதாலும் என்னை ஆண்டாள்.
    • எனவே எனக்கு அவள் சூட்டிய மாலையையே அணிவிப்பீர் என்று கூறினார்.

    ஆடிப்பூரத்தில் தான் திருநெல்வேலி காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெறுகிறது.

    இந்நிகழ்ச்சியில் அம்மனுக்கு பக்தர்களால் வழங்கப்பட்ட கண்ணாடி வளையல்களை கொண்டு அலங்காரம் செய்யப்படுகிறது.

    3 நாட்கள் கழித்து பக்தர்களுக்கு கண்ணாடி வளையல்கள் விநியோகம் செய்யப்படுகிறது.

    இவ்வளையல்களை அணிவதால் குழந்தைப்பேறு கிட்டும்: மாங்கல்ய பலம் கூடும் என்று கருதப்படுகிறது.

    ஆடிப்பூரத்தில் தான் பொறுமையின் வடிவமான பூமா தேவியின் அவதாரமாக ஆண்டாள் அவதரித்தார்.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழ்ந்து வந்த பெரியாழ்வாருக்கு குழந்தைப் பேறு இல்லை. இக்குறையை நீக்குமாறு அவர் தினமும் திருமாலை வேண்டினார்.

    அக்குறையை நீக்கும் பொருட்டு கோவில் நந்தவனத்தில் ஆடிப்பூர செவ்வாய் கிழமையில் துளசி செடிக்கு அடியில் பெண்குழந்தை ஒன்றைக் கண்டு எடுக்கும்படி திருமால் அருளினார்.

    அக்குழந்தைக்கு கோதை என்று பெயரிட்டு வளர்த்து வந்தார் பெரியாழ்வார்.

    கோதை அரங்கனையே மணாளனாகக் கருதி வளர்ந்து வந்தாள்.

    பெரியாழ்வார் வடபத்ரசாயி பெருமாளுக்கு கட்டும் மாலையை தினமும் அவர் அறியாத வண்ணம் அணிந்து மீண்டும் எடுத்த இடத்தில் வைத்து வந்தாள் கோதை.

    ஒருநாள் இச்செயலைக் கண்ட பெரியாழ்வார் அதிர்ச்சியுற்று கோதையைக் கடிந்து கொண்டு வேறு மாலையைத் தயார்செய்து பெருமாளுக்கு சூட்டினார்.

    அன்று இரவு கனவில் தோன்றி பெருமாள் உம்பெண் உணர்வால் மட்டுமல்ல மனதாலும் என்னை ஆண்டாள்.

    எனவே எனக்கு அவள் சூட்டிய மாலையையே அணிவிப்பீர் என்று கூறினார்.

    இதனால் கோதை அன்று முதல் சூடிக்கொடுத்த சுடர்கொடி, ஆண்டாள் என்று வழங்கப்பட்டாள்.

    ஆண்டாள் இயற்றிய திருப்பாவை, நாச்சியார் திருமொழி பாடல்கள் இன்றளவும் மக்களால் பாடப்படுகின்றன.

    ஆண்டாளை வணங்கினால் மன உறுதியுடன் நினைத்தது நிறைவேறும்.

    தம்பதி ஒற்றுமை ஏற்படும் என்று கருதப்படுகிறது. ஒவ்வொரு வருடம் ஆடிப்பூரத்தன்று ஸ்ரீவில்லிபுத்தூர் தேர்த் திருவிழா விமர்சையாக நடைபெறுகிறது.

    • ஹயக்கிரீவர் அவதார தினமும் இந்நாளே ஆகும்.
    • கல்விச் செல்வம் வேண்டி ஹயக்கிரீவர் வழிபாடும் ஆடிப்பௌர்ணமி அன்று மேற்கொள்ளப்படுகிறது.

    ஆடிப்பவுர்ணமி அன்று குரு வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.

    இது குரு பூர்ணிமா என்றும் வழங்கப்படுகிறது.

    மாணவர்கள் தங்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்த குருவை (ஆசிரியர்) வழிபடுவதுடன் தட்சிணா மூர்த்தி, கிருஷ்ணன், வேதவியாசர், ஆதிசங்கரர், இராமானுஜர், போன்றோரையும் வழிபடுகின்றனர்.

    ஹயக்கிரீவர் அவதார தினமும் இந்நாளே ஆகும். கல்விச் செல்வம் வேண்டி ஹயக்கிரீவர் வழிபாடும் ஆடிப்பௌர்ணமி அன்று மேற்கொள்ளப்படுகிறது.

    திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலில் ஆடிப் பௌர்ணமி அன்று ஆடித்தபசு நடைபெறுகிறது.

    உமையம்மை கோமதி என்ற திருநாமத்துடன் சங்கர நாராயணர் தரிசனம் வேண்டி சிவனை நோக்கி ஒற்றைக் காலில் இத்தலத்தில் தவமிருந்தாள்.

    கோமதி அம்மையின் வேண்டுகோளுக்கு இணங்க பொதிகை புன்னை வனத்தில் இறைவன் சங்கர நாராயணராக ஆடிப்பவுர்ணமியில் காட்சி அளித்தார்.

    இந்நிகழ்ச்சியை நினைவுபடுத்தும் விதமாக ஆடித் தபசு விழா இன்று கொண்டாடப்படுகிறது.

    12 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் 11-ம் நாள் தபசுக் காட்சி நடைபெறுகிறது.

    • ஆடி அமாவாசை அன்று தான் திருவையாற்றில் சிவபெருமான் திருநாவுக்கரசருக்கு கயிலைக் காட்சியளித்தார்.
    • இந்நிகழ்வை நினைவு கூறும் விதமாக இன்றும் இந்நிகழ்வு ஆடி அமாவாசை அன்று நிகழ்த்தப்படுகிறது.

    ஆடி அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்பணம் நீர் நிலைகளில் செய்யப்படுகிறது.

    அன்று பித்ருக்களுக்காக மக்கள் விரத முறையை மேற்கொள்கின்றனர்.

    பித்ரு பூஜை வருடத்தில் ஆடி அமாவாசை, தை அமாவாசை அன்று பெரும்பான்மையான மக்களால் நடத்தப்படுகிறது.

    வம்சம் தழைக்கவும், சுபிட்ச வாழ்வும் வேண்டி மக்கள் இவ்வழிபாட்டினை மேற்கொள்கின்றனர்.

    இராமேஸ்வரம், பாபநாசம் போன்ற இடங்களில் பித்ரு பூஜை செய்வது சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

    ஆடி அமாவாசை அன்று தான் திருவையாற்றில் சிவபெருமான் திருநாவுக்கரசருக்கு கயிலைக் காட்சியளித்தார்.

    இந்நிகழ்வை நினைவு கூறும் விதமாக இன்றும் இந்நிகழ்வு ஆடி அமாவாசை அன்று நிகழ்த்தப்படுகிறது.

    • ஆடிக்கிருத்திகை அன்று எல்லா முருகன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
    • அன்று முருகனுக்கு சிறப்பு அபிசேகங்கள், ஆராதனைகள் செய்யப்படுகின்றன.

    ஆடிக்கிருத்திகை அன்று எல்லா முருகன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும்.

    அன்று முருகனுக்கு சிறப்பு அபிசேகங்கள், ஆராதனைகள் செய்யப்படுகின்றன.

    ஆடிக்கிருத்திகைக்கு விரத முறை மேற்கொள்ளப்பட்டு முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்கள் நினைவு கூறப்படுகின்றனர்.

    ஆடி நவராத்திரி

    இம்மாதத்தில்தான் வாராஹி அம்மனை நினைத்து ஆஷாட நவராத்திரி கொண்டாடப்படுகிறது.

    • கோவில்களில் விளக்கு பூஜை என்ற கூட்டு வழிபாட்டினை பெண்கள் மேற்கொள்கின்றனர்.
    • ஆடிச்செவ்வாய் மற்றும் ஆடி வெள்ளிக் கிழமைகளில் ஆடிக் கூழ் ஊற்றப்படுகிறது.

    ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் அம்மன் வழிபாட்டிற்கு உகந்ததாகக் கருதுகின்றனர்.

    கோவில்களில் விளக்கு பூஜை என்ற கூட்டு வழிபாட்டினை பெண்கள் மேற்கொள்கின்றனர்.

    ஆடிச்செவ்வாய் மற்றும் ஆடி வெள்ளிக் கிழமைகளில் ஆடிக் கூழ் ஊற்றப்படுகிறது.

    கேப்பை அல்லது கம்பு மாவினைக் கொண்டு கூழ் தயார் செய்யப்படுகிறது.

    அதனுடன் சிறு வெங்காயம் சேர்த்து மக்களுக்கு வழங்கப்படுகிறது.

    ஆடி மாதத்தில் கோடை வெப்பம் முடிந்து காற்றோடு சாரல் மழை பெய்யும்.

    இதனால் அம்மை நோய் பரவும். கேப்பை மற்றும் கம்பு தானியம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும்.

    சின்ன வெங்காயம் அம்மை நோய் கிருமியை கட்டுப்படுத்தும்.

    இதனாலே நம் முன்னோர்கள் கோவில்களில் கூழ் தயார் செய்து மக்களுக்கு பிரசாதமாக வழங்கி இருக்கின்றனர். இன்றளவும் இம்முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

    • இவ்வழிபாட்டில் ஆண்கள் மற்றும் ஆண்குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது.
    • மேலும் பிரசாதக் கொழுக்கட்டைகளை பெண்கள் மற்றும் பெண்குழந்தைகள் மட்டுமே உண்பர்.

    ஆடிச்செவ்வாய் ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்கிழமைகளில் அம்மன் வழிபாடு வீட்டிலும், கோவில்களிலும் மேற்கொள்ளப்படுகிறது.

    ஆடிச்செவ்வாய் அன்று பெண்கள் அவ்வையார் விரதம் மேற்கொள்வார்கள்.

    ஆடிச்செவ்வாய் இரவு ஊரில் உள்ள வயதில் மூத்த பெண்மணி தனது வீட்டில் மற்ற பெண்களுடன் இணைந்து பச்சரிசி மாவினைக் கொண்டு உப்பில்லா கொழுக்கட்டையை தயார் செய்து அவ்வையாருக்குப் படைத்து தேங்காய் உடைத்து அவ்வையாரின் கதையை மற்ற பெண்களுக்கு கூறி வழிபாடு நடத்துவார்.

    இவ்வழிபாட்டில் ஆண்கள் மற்றும் ஆண்குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது.

    மேலும் பிரசாதக் கொழுக்கட்டைகளை பெண்கள் மற்றும் பெண்குழந்தைகள் மட்டுமே உண்பர்.

    இவ்விரதத்தினை மேற்கொள்வதால் வளமையான வாழ்வும், நீண்ட ஆயுளும், மாங்கல்ய பலனும் கிடைப்பதாக கருதப்படுகிறது.

    • ஆடி மாதத்தின் முதல் நாள் தலை ஆடி என்று அழைக்கப்படுகின்றது.
    • புதிதாக மணமான தம்பதியினர் மணப்பெண்ணின் தாய் வீட்டிற்கு அழைக்கப்படுவர்.

    ஆடி மாதத்தின் முதல் நாள் தலை ஆடி என்று அழைக்கப்படுகின்றது.

    புதிதாக மணமான தம்பதியினர் மணப்பெண்ணின் தாய் வீட்டிற்கு அழைக்கப்படுவர். அங்கு மாப்பிள்ளைக்கு விருந்துடன் தேங்காய் பால் வழங்கப்படும்.

    சில இடங்களில் தலை ஆடிக்கு மணமக்களுக்கு புது ஆடைகள் பரிசாக மணப்பெண்ணின் தாய் வீட்டிலிருந்து வழங்கப்படுகிறது.

    பின் மணப் பெண் மட்டும் தாய் வீட்டில் தங்கிவிடுகிறாள்.

    தாயிடம் இருந்து பொறுமை, அரவணைப்பு, விட்டுக் கொடுத்தல், சூழ்நிலையை சமாளித்தல் போன்றவற்றை திருமணமான பின்பு கற்றுக் கொள்கிறாள்.

    மேலும் ஆடியில் கருவுற்றால் சித்திரையில் குழந்தை பிறக்கும்.

    சித்திரை வெயில் குழந்தைக்கும், தாயுக்கும் உடல் மற்றும் மனரீதியாக அசவுகரியத்தைக் கொடுக்கும்.

    எனவே தான் தலை ஆடிக்கு வரும் புது மணப்பெண் தாய் வீட்டில் ஆடி மாதம் முழுவதும் தங்கிவிடுகிறாள்.

    • இம்மாதம் முழுவதும் பெண் தெய்வ வழிபாடே பெரும்பாலும் நடத்தப்படுகின்றது.
    • பொதுவாக இம்மாதத்தில் திருமணம் போன்ற தனி மனித விழாக்கள் நடத்தப்படுவதில்லை.

    ஆடி மாதம் பிறந்து விட்டாலே பெண்கள் மகிழ்வுடன் கொண்டாடும் பண்டிகைகள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து வரத் தொடங்கிவிடும்.

    ஆடிப்பெருக்கு, ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி அஷ்டமி, ஆடிக்கிருத்திகை, ஆடி சதுர்த்தி, ஆடிப்பஞ்சமி, ஆடி அமாவாசை, ஆடிப் பவுர்ணமி, ஆடித்தபசு, ஆடிப்பூரம் என ஆடி மாதம் முழுவதும் தெய்வங்கள் மற்றும் முன்னோர்கள் வழிபாடு செய்யப்படுகின்றனர்.

    இம்மாதம் முழுவதும் பெண் தெய்வ வழிபாடே பெரும்பாலும் நடத்தப்படுகின்றது.

    பொதுவாக இம்மாதத்தில் திருமணம் போன்ற தனி மனித விழாக்கள் நடத்தப்படுவதில்லை.

    இறைவழிபாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது இருப்பதால், இல்லத்து விழாக்களை பெரும்பாலும் வைத்துக் கொள்வதில்லை.

    • ஆடி க்யூ 6 இ ட்ரான் இடது பக்கம் அமர்ந்து டிரைவ் டிரைவ் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
    • இண்டீரியரில் Q6 e-tron 11.9-இன்ச் டிரைவர் டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

    இந்தியாவில் பலராலும் அதிகம் விரும்பப்படும் கார் நிறுவனங்களில் ஆடியும் ஒன்று. ஆடி என்றாலே விலையுயர்ந்த மற்றும் சொகுசு வசதிகள் கொண்ட கார்களை தயாரிக்கும் நிறுவனம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

    இந்த நிலையில், நடப்பு ஆண்டின் இறுதியில் புதிய க்யூ 6 இ ட்ரானை அறிமுகப்படுத்துவதற்கு ஆடி திட்டமிட்டுள்ளது. இதற்கு முன் அந்த காருக்கான சோதனையை இந்தியாவில் செய்ய துவங்கியது.

    முன்னதாக வெளியான க்யூ 6 இ ட்ரான் தொடர்பான புகைப்படங்களை சோதனைக் காரின் ஒரு யூனிட்டை முற்றிலும் மறைக்காமல் வெளிப்படுத்தின.


    ஆடி க்யூ 6 இ ட்ரான் இடது பக்கம் அமர்ந்து டிரைவ் டிரைவ் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் சர்வதேச அளவில் விற்கப்படும் மாடலுடன் ஒப்பிடுகையில், முன் மற்றும் பின்பக்க பம்பர்களில் சில்வர் இன்சர்ட்கள் மற்றும் புதிய அலாய் வீல்கள் உட்பட சிறிய வேறுபாடுகளைப் பெறுகிறது.

    புதிய Q6 e-tron இன் சில குறிப்பிடத்தக்க வடிவமைப்பு அம்சங்களில் மேட்ரிக்ஸ் LED ஹெட்லேம்ப்கள், பிளாங்க்-ஆஃப் கிரில், OLED டெயில் லைட்கள், ரூஃப் ரெயில்கள், ஷார்க்-ஃபின் ஆண்டெனா, உயர் பொருத்தப்பட்ட ஸ்டாப் லேம்புடன் கூடிய ஒருங்கிணைந்த ஸ்பாய்லர் மற்றும் ஒரு LED லைட் பார் ஆகியவை அடங்கும்.

    இண்டீரியரில் Q6 e-tron 11.9-இன்ச் டிரைவர் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதனை ஆடி நிறுவனம் விர்ச்சுவல் அதாவது மெய்நிகர் காக்பிட் என்று அழைக்கிறது, 14.5-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், முன் பயணிகளுக்கான 10.9-இன்ச் டிஸ்ப்ளே, டச்-அடிப்படையிலான புதிய ஸ்டீயரிங் கட்டுப்பாடுகள், ஆக்மென்டட் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே மற்றும் மூன்று-டோன் இன்டீரியர் தீம் கொண்டுள்ளது.

    ஹூட்டின் கீழ், ஆடி க்யூ6 இ-ட்ரான் இரட்டை மின்சார மோட்டார்களுடன் இணைக்கப்பட்ட 100கிலோவாட் பேட்டரி பேக் மூலம் இயக்கப்படுகிறது. 270கிலோவாட் சார்ஜர் உதவியுடன் 21 நிமிடங்களில் 10-80 சதவீதம் வரை சார்ஜ் செய்யக்கூடிய இந்த பேட்டரி, ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 625கிமீ தூரம் வரை செல்லும் என்று கூறப்படுகிறது.

    • 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
    • மணிக்கு அதிகபட்சம் 250 கி.மீ. வேகத்தில் செல்லும்.

    ஆடி நிறுவனம் இந்திய சந்தையில் Q7 போல்ட் எடிஷன் மாடலை அறிமுகம் செய்தது. முன்னதாக ஆடி இந்தியா நிறுவனம் ஆடி Q3 போல்ட் எடிஷன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்த நிலையில், தற்போது Q7 எஸ்.யு.வி.-இன் ஸ்பெஷல் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஆடி Q7 போல்ட் எடிஷன் விலை ரூ. 97 லட்சத்து 84 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    லிமிட்டெட் எடிஷன் ஆடி Q7 கார்- கிளேசியர் வைட், மித்தோஸ் பிளாக், நவெரா புளூ மற்றும் சாமுராய் கிரே என நான்குவித நிறங்களில் கிடைக்கிறது. இந்த காரின் வெளிப்புறத்தில் பிளாக் ஸ்டைலிங் செய்யப்பட்டு கார் ஸ்போர்ட் தோற்றம் கொண்டிருக்கிறது. இத்துடன் கிளாஸ் பிளாக் கிரில், பிளாக்டு அவுட் செய்யப்பட்ட ஆடி லோகோ, பிளாக்டு-அவுட் விண்டோ சரவுண்ட்கள், ORVMகள், ரூஃப் ரெயில்கள் வழங்கப்பட்டுள்ளன.

     


    புதிய Q7 போல்ட் எடிஷன் மாடலில் 3.0 லிட்டர் V6 எஞ்சின் மற்றும் 48 வோல்ட் மைல்ட்-ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 335 ஹெச்.பி. பவர், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் மற்றும் AWD சிஸ்டம் வழங்கப்படுகிறது.

    ஆடி Q7 போல்ட் எடிஷன் மாடல் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 5.6 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டிருக்கிறது. இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 250 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும். 

    ×