என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆடை"
- இந்தியாவுடன் ஒப்பிடும் போது வங்கதேசம் மிகச்சிறிய நாடு.
- ஆடைகள் 100 ரூபாய் என்றால் வங்கதேச ஆடை 70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
திருப்பூர்,ஜூலை.31-
இந்தியாவுடன் ஒப்பிடும் போது வங்கதேசம் மிகச்சிறிய நாடு. பருத்தி உள்ளிட்ட மூலப்பொருள் அதிகம் கிடைக்காது என்பதால் சீனா உட்பட பிற நாடுகளில் இருந்தே இறக்குமதி செய்து ஜவுளி உற்பத்தி செய்யப்படுகிறது. இருப்பினும் சீனாவுக்கு அடுத்தபடியாக உலக அளவில் அதிக அளவில் ஜவுளி ஏற்றுமதி செய்யும் நாடு என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது.
காரணம் பொருளாதா ரத்தில் பின்தங்கிய நாடு என்ற அடிப்படையில் உலக நாடுகளுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் உருவா னதுதான். இந்தியாவுடன் 2011ல் ஒப்பந்தம் ஏற்பட்டது. இதனால் வங்கதேச ஜவுளி இந்தியாவுக்குள் வராதபடி கவுன்டர் வெய்லிங் வரி விதிக்கப்பட்டது.
ஜி.எஸ்.டி., அமலான பின் அந்த வரி விலக்கப்பட்டதால், எவ்வித தடையுமில்லாமல் வங்கதேச வர்த்தகர்கள், தமிழகத்தின் தென் மாவட்ட எல்லை வரை கடை விரிக்க துவங்கியுள்ளனர். இறக்குமதி வரியும் இல்லாததால் 30 முதல் 40 சதவீதம் குறைவான செலவுடன் இந்தியாவுக்குள் இறக்குமதி செய்கிறது.
இவ்வாறு கடந்த ஒரே ஆண்டில் வங்கதேச இறக்குமதி, 113 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது உள்நாட்டு சந்தைகளை பதம்பார்த்துவிட்டது. இதனால் உள்நாட்டு சந்தைகளில் வங்கதேச ஆடைகளுடன் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் போராடி வெற்றி கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் வாயிலாக சீனாவின் வர்த்தகர்களும், வங்கதேசம் வழியாக இந்தியாவுக்குள் ஆடை இறக்குமதி செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடு என்று பரிதாபம் காட்டியது இன்று உள்நாட்டு பனியன் மார்க்கெட்டுக்கே பெரிய சவாலாக விஸ்வரூபம் எடுத்துள்ளது வங்கதேசம்.
குறிப்பிட்ட பொருள் இறக்குமதியால் உள்நாட்டில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக கவுன்டர் வெய்லிங் வரி விதிக்கப்படுகிறது. உள்நாட்டு விவசாயிகள் பாதுகாப்புக்காக பஞ்சு இறக்குமதிக்கு வரி விதிப்பதும் அத்தகைய வரிதான். வங்கதேச ஆயத்த ஆடை இறக்குமதிக்கும் 12 சதவீதம் வரை வரிவிதிக்கப்பட்டது. 2016 முதல் விலக்கி கொள்ளப்பட்டது. இதற்கும் ஜி.எஸ்.டி.,க்கும் சம்பந்தமில்லை. உள்நாட்டு சந்தைகளை பாதுகாக்கும் நோக்கில் மத்திய அரசு மீண்டும் கவுன்டர் வெய்லிங் வரி விதிப்பை தற்காலிகமாக அமலாக்க முடியும்.
இது குறித்து திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் கூறுகையில், உள்நாட்டு விற்பனை பனியன் உற்பத்தி, நுால்விலை குறைந்த பின் சீராகி விட்டது. இருப்பினும், கடந்த ஓராண்டாக பல்வேறு பிரச்னைகளை சந்திக்கிறோம். நுால் விலை உயர்ந்து இருந்த போது, உள்நாட்டு தயாரிப்பு பாதிக்கப்பட்டது. அப்போது, வங்கதேச இறக்குமதியை பலரும் ஊக்குவித்தனர். அதன் விளைவு, தற்போது உள்நாட்டு தயாரிப்புகளுக்கு, உள்நாட்டு சந்தைகளிலேயே மதிப்பில்லாமல் போய்விடும். மலிவான விலையில் வங்கதேச ஆடையை வழங்குகின்றனர். வரிச்சலுகை தவறாக பயன்படுத்தப்படுகிறது.
திருப்பூர் காதர்பேட்டை கடைகளில் வங்கதேச ஆடைகள் ஆக்கிரமித்துள்ளன. சீனாவில் இருந்து வங்கதேசம் வந்து அங்கிருந்து திருப்பூருக்கு ஆடைகள் வருகின்றன. இது சீனாவின் தலையீடாகவும் மாறியுள்ளது. உற்பத்தி செலவில் 30 சதவீதம் வரை குறைவு என்பதால் வங்கதேச ஆடை குறைவான விலைக்கு கிடைக்கிறது. உள்ளூரில் தயாரித்த ஆடைகள் 100 ரூபாய் என்றால் வங்கதேச ஆடை 70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. எனவே வங்கதேச இறக்குமதியை கட்டுப்படுத்தி, தொழிலை பாதுகாக்க வேண்டுமென மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வலுத்து வருகிறது.
வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் வாயிலாக, சீனாவின் வர்த்தகர்களும் வங்கதேசம் வழியாக இந்தியாவுக்குள் ஆடை இறக்குமதி செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடு என்று பரிதாபம் காட்டியது இன்று உள்நாட்டு பனியன் மார்க்கெட்டுக்கே பெரிய சவாலாக விஸ்வரூபம் எடுத்துள்ளது வங்கதேசம்.
- பெண்களிடையே துணி ஒட்டியாணம் அணிவது தற்போது பேஷனாக இருக்கிறது.
- இளம்பெண்கள் புடவை அல்லது கவுன் அணியும்போது 'ஹிப் பெல்ட்'அணிய விரும்புகிறார்கள்.
இளம்பெண்கள் புடவை அல்லது கவுன் அணியும்போது 'ஹிப் பெல்ட்' என்ற துணி ஒட்டியாணம் அணிவது தற்போது பேஷனாக இருக்கிறது. அதை எளிதாக வீட்டிலேயே தயாரிக்க முடியும். அதற்கான குறிப்புகள் இங்கே...
தேவையான பொருட்கள்:
சில்க் காட்டன் துணி - ¼ மீட்டர்
1.50 அங்குல லேஸ் - 19 அங்குலம்
1.25 அங்குலம் எலாஸ்டிக் - 9 அங்குலம் (2 துண்டுகள்)
கொக்கி செட் - 1
செய்முறை:
படம் 1: 36 அங்குல இடுப்பளவு உள்ள பெல்ட் தயாரிப்பதற்கு முதலில் துணியை 19 x 4 அங்குல நீள அகலம் கொண்ட 3 துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். எலாஸ்டிக்கை 9 அங்குல நீளம் கொண்ட 2 துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
படம் 2: மூன்று துண்டு துணிகளையும் ஒன்றோடு ஒன்று (நீளவாக்கில்) இணைத்து தையல் போடவும். இரண்டு தையல்கள் போட்டால் பிரியாமல் இருக்கும். (இதில் 1 மற்றும் 3-வது துண்டுகளின் உள்ளே எலாஸ்டிக்கை நுழைக்க வேண்டும். நடு துண்டின் மேலே 'லேஸ்' வைத்து தைக்க வேண்டும்).
படம் 3: படத்தில் காட்டி இருப்பதுபோல துணிகளை இரண்டாக மடித்து தையல் போட வேண்டும். இரண்டாவது துண்டை இணைத்து இருக்கும் ஜாயிண்ட் வரை தையல் போட்டால் போதும்.
படம் 4: அந்த துண்டை படத்தில் காட்டி இருப்பதுபோல லூப் டர்னர் அல்லது சேப்டி பின் கொண்டு வெளிப்புறமாக திருப்பவும்.
படம் 5: ஒரு துண்டு எலாஸ்டிக்கின் ஒரு முனையில் சேப்டி பின்னை இணைத்து இதற்குள் நுழைத்து உள்ளே தள்ளவும்.
படம் 6: இரண்டு துணி துண்டுகளை இணைப்பதற்காக போடப்பட்ட தையலின் மீது எலாஸ்டிக்கை வைத்து தையல் போடவும். இதே போல மற்றொரு பக்கமும் செய்ய வேண்டும்.
படம் 7: நடுதுண்டு துணியின் ஓரத்தை உள்புறமாக மடித்து மேலே தையல் போடவும்.
படம் 8: லேஸ் துணியை நடு துண்டின் மீது வைத்து, நீளவாக்கிலும், அகல வாக்கிலும் தையல் போடவும். அகலவாக்கில் தைக்கும்போது, லேஸ் முனைகளை உட்புறமாக மடித்து அதன் மேலே தையல் போடவும்.
படம் 9 & 10: இரண்டு முனைகளிலும் எலாஸ்டிக்கை துணியின் விளிம்பு வரை கொண்டு வந்து சேப்டி பின்னை அகற்றிவிட்டு, துணியோடு சேர்த்து சதுர வடிவில் தையல் போடவும்.
படம் 11: இரண்டு பக்கங்களிலும் உள்பக்கம், கொக்கி செட்டை பொருத்தவும். இதன்மூலம் இடுப்பு அளவுக்கு ஏற்றபடி ஹிப் பெல்ட்டை அணிந்துகொள்ள முடியும்.
படம் 12: இப்போது அழகான 'ஹிப் பெல்ட்' தயார்.
- கோடைக்கால ஆடைகள் அதிக அளவில் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
- தீபாவளி பண்டிகை கால ஆடை தயாரிப்பு ஆர்டர்கள் வருகையால் பின்னலாடை துறை எழுச்சி பெறும்.
திருப்பூர்:
கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவ மழை, நாடு முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. மும்பையில் நாளுக்கு நாள் மழை தீவிரமடைந்து வருகிறது.இது குறித்து லகு உத்யோக் பாரதி தேசிய இணை பொதுச்செயலர் மோகனசுந்தரம் கூறியதாவது:-
திருப்பூரில் உள்நாட்டு சந்தைக்கான பின்னலாடை உற்பத்தி சில மாதங்களாக சற்று வேகமெடுத்துள்ளது. ஏப்ரல் முதல் இம்மாதம் வரை கோடைக்கால ஆடைகள் அதிக அளவில் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. திருப்பூரின் ஆடை வர்த்தகத்தில் 30 சதவீதம் மும்பை சந்தையை சார்ந்துள்ளது. மழையால் தற்போது மும்பையில் ஆடை வர்த்தகம் சரிந்துள்ளது.
இதனால் திருப்பூரிலிருந்து ஆடை கொள்முதல் செய்வதை மும்பை வர்த்தகர்கள் குறைத்து வருகின்றனர். மழை தீவிரமடையும் போது வழித்தடங்கள் பாதிக்கப்பட்டு சரக்கு அனுப்புவதும் தடைபடும். வெயில் நீடிப்பதால் ஆந்திரா, டில்லி, பீஹார், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்கு கோடைக்கால ஆடை ரகங்கள் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகின்றன.
பருவமழை தீவிரமடைந்து செப்டம்பர் வரை திருப்பூரின் உள்நாட்டு ஆடை வர்த்தகத்தை பாதிக்க செய்யும். அதன் பின் தீபாவளி பண்டிகை கால ஆடை தயாரிப்பு ஆர்டர்கள் வருகையால் பின்னலாடை துறை எழுச்சி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.
ஒல்லியாக இருப்பவர்களுக்கு... மெலிந்த தோகம் கொண்டவர்களுக்கு பெரும்பாலான உடைகள் பொருத்தமானதாக இருக்கும். பென்சில் வகை பேண்ட்கள் கால்களை அழகாக காட்டும். ஒல்லியான உடல்வாகு கொண்டவர்கள் நீளமான பாவாடைகள் அணியலாம். சுடிதான் மற்றும் ரவிக்கை அணியும் போது குட்டையான கைப்பகுதிகளை கொண்ட ஆடைகளை தவிர்க்க வேண்டும்.
உயரமாக இருப்பவர்களுக்கு..
உயரமாக இருப்பவர்கள் அவர்களின் உயரத்தை காட்டும் வகையில் இருக்கும் நீளமான ஆடைகளை அணியலாம். லெகங்கா, நீளமான பாவாடைகள், கவுன் போன்றஉடைகள் பொருத்தமாக இருக்கும். கால் பாதம் வரை மறைக்கும் போஹோ ஸ்கர்ட் அழகை அதிகரிக்கும். உயரத்தை குறைத்துக்காட்ட விரும்புபவர்கள் பாவாடை கிராப் டாப் போன்றவற்றை அணியலாம்.
உயரம் குறைவாக இருப்பவர்களுக்கு...
உயரம் குறைவாக இருப்பவர்கள் டாப் ஒரு வண்ணத்திலும், பாட்டம் மற்றொரு வண்ணத்திலும் இருக்குமாறு உடை அணியலாம். ஸ்கர்ட். கிராப் டாப் என்று பிரித்து அணியக்கூடிய உடைகள் உயரத்தை குறைத்து காட்டும் அணிவது உயரத்தை அதிகரித்து காட்டும். கால்கள் தெரிவது போன்ற ஆடைகளும் உயரத்தை அதிகரித்து காட்டும்.
பருமனாக இருப்பவர்களுக்கு..
அடர்ந்த நிறம் கொண்ட ஆடைகளை தேர்ந்தெடுத்து அணிவதன் மூலம் ஒல்லியாகத்தெரியலாம். பச்சை, கருப்பு, மெரூன் போன்ற நிறங்கள் பருமனான தோற்ம் கொண்டவர்களுக்கு பொருத்தமாக இருக்கும். அதிக வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஆடைகள், பல லேயர்கள் கொண்ட ஆடைகள், பருத்தி ஆடைகள் மேலும் பருமனாக காட்டும் என்பதால் அவற்றை தவிர்த்துவிடலாம். கிரேப் சில்க், ஷிபான் போன்ற உடலோடு ஒட்டும் ஆடைகளை அணியலாம்.
இவ்வாறு எடைக்கும், தோற்றத்தைக்கும் ஏற்றவாறு உடை அணிவதன் மூலம், அழகோடும், தன்னம்பிக்கையோடும் மிளிரலாம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்