என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிலங்கள்"

    நெற்குப்பையில் நீர்ப்பிடிப்பு பகுதி ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கும் பணி நடந்தது.
    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சியில் உள்ள நவனி கண்மாய் சுமார் 18 ஹெக்டர் பரப்பளவு கொண்ட கண்மாய் ஆகும்.

    இந்த கண்மாயில் இருந்து பாசனம் பெறும் ஆயக்கட்டு தாரர்கள் 100-க்கும் மேற்பட்டோர் இருந்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக நல்ல மழை பெய்து அதிகப்படியான தண்ணீர் கண்மாய்க்கு வரத்து கால்வாய் மூலம் வந்தபோதிலும் ஆக்கிரமிப்பு மற்றும் சீமை கருவேல மரங்களால் கண்மாய் முழு கொள்ளவை எட்ட முடியாமல் கலிங்குகளின் பாதை வழியாக அதிகப்படியான தண்ணீர் வீணாக சென்று விட்டது என இந்தப்பகுதி விவசாயிகள் குறை கூறி னர். 

    இந்த நிலையில் தமிழக அரசு மற்றும் நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின் பேரில் கண்மாயின் கரைப் பகுதிகளில் கால்நடை பராமரிப்பு, தோட்டம் முதலிய ஏனைய காரணங்களுக்காக நிலங்களை ஆக்கிரமிப்பு செய்த 14-க்கும் மேற்பட்ட வர்களுக்கு  ஆக்கிரமிப்பை அகற்றி கொள்ளும்படி நீர்வள பாசன ஆதார துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 

    இந்தநிலையில் நீர்வள ஆதார உதவி பொறியாளர் நாகராஜன் வருவாய் துறையினர் உதவியோடு ஜே.சி.பி. மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்த நபர்களால் சிறிது நேரம் தாமதம் ஏற்பட்ட போதிலும் ஆக்கிரமிப்புக்கு செய்யப்பட்ட அனைத்து பகுதிகளிலும் இருந்து வந்த வேப்பமரம், வாழைமரம், எலுமிச்சை, கொய்யா, போன்ற பல மரங்களும் இன்னும் ஏனைய பூச்செடி களும் முற்றிலுமாக அகற்றப்பட்டது. 

    இதுகுறித்து உதவி பொறியாளர் கூறுகையில் தொடர்ந்து நீர்நிலைப் பகுதிகள், வரத்து கால்வாய்க ளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலங்கள் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு படிப்படியாக விரைந்து மீட்கப்படும் என்றார். 

     இதில் நீர்வள பாசன உதவியாளர் முரளி, வருவாய் ஆய்வாளர் வேல்முருகன், கிராம நிர்வாக அலுவலர்களான ரிஹானா பேகம், முனிஸ் குமார், கிராம உதவியாளர் முகமது அலி, மற்றும் பாதுகாப்பு பணிக்காக நெற்குப்பை காவல் நிலைய காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

    • அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம் அனல்மின் நிலக்கரி திட்டத்திற்கு கையகப்படுத்திய நிலத்தை நிலம் கொடுத்த விவசாயிகளிடமே அரசு திரும்ப ஒப்படைத்து அவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றி உள்ளது.
    • விவசாயிகளுக்கு சொந்தமான 3 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களை சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதாக கூறி கையகப்படுத்திய நிலங்களை விவசாயிகளிடம் திரும் ஒப்படைத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் மா.கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் கலையரசி தலைமை வகித்தார்.

    கூட்டத்தில் அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம் அனல்மின் நிலக்கரி திட்டத்திற்கு கையகப்படுத்திய நிலத்தை நிலம் கொடுத்த விவசாயிகளிடமே அரசு திரும்ப ஒப்படைத்து அவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றி உள்ளது.

    அதே போல பெரம்பலூர் மாவட்டத்தில் திருமாந்துறை, எறையூர் சர்க்கரைஆலை, பெருமத்தூர், மிளாகநத்தம், லெப்பைகுடிகாடு, அயன்பேரையூர் உள்ளிட்ட 8க்கும் மேற்பட்ட கிராமங்களிலுள்ள விவசாயிகளுக்கு சொந்தமான 3 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களை சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதாக கூறி கையகப்படுத்திய நிலங்களை விவசாயிகளிடம் திரும் ஒப்படைத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.

    ஜூலை 17ம்தேதி பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள அரசியல் விளக்க நிதியளிப்பு பொதுக்கூட்டத்திற்கு வருகை தரும் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணனுக்கு சிறப்பான முறையில் வரவேற்பு அளிப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் நிர்வாகிகள் ராஜேந்திரன், கருணாநிதி, சிவானந்தம், செல்லமுத்து, செல்லதுரை உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • ஆறு மற்றும் கால்வாய்களை ஆதாரமாகக் கொண்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • அணை மூலமாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    மடத்துக்குளம்,

    உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வனப்பகுதியில் உற்பத்தியாகி வருகின்ற ஆறுகளைத்தடுத்து அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. அணைக்கு கேரள மாநிலத்தில் உள்ள மூணார் மறையூர் பகுதியில் உற்பத்தியாகி ஆறுகள் பிரதான நீர் வரத்தை அளித்து வருகிறது. அத்துடன் தமிழக வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற சிற்றாறுகளும் ஓடைகளும் அணைக்கு கை கொடுத்து உதவி வருகிறது. இந்த அணை மூலமாக திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன திட்டத்தின் கீழ் பிரதான கால்வாய் மற்றும் அமராவதி ஆறு, குளம், கல்லாபுரம் வாய்க்கால் மூலமாக 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

    அதுதவிர சுற்றுப்புற கிராமங்கள் பயன்பெறும் வகையில் ஆறு மற்றும் கால்வாய்களை ஆதாரமாகக் கொண்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில் வனப்பகுதியில் சாரல் மழை பெய்து வருவதாக தெரிகிறது. இதன் காரணமாக கணிசமான அளவு நீர்வரத்து ஏற்பட்டு உள்ளது. ஆனாலும் அடிவாரப்பகுதி வறட்சியின் பிடியில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகிறது. இதனால் பச்சை பசேலென்று வளமுடன் காணப்பட்ட அணைப்பகுதி பொழிவை இழந்து பரிதவித்து வருகிறது.அணைக்கு பெரிதளவில் நீர்வரத்து இல்லாததால் விவசாயிகள் சாகுபடி பணிகளை மேற்கொள்வதிலும் சிக்கல்கள் நிலவி வருகிறது.

    90 அடி உயரம் கொண்ட அமராவதி அணையில் தற்போதைய நிலவரப்படி 62.77அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 489 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அதேபோன்று பி.ஏ.பி. பாசனத் திட்டத்தின் உயிர்நாடியாக விளங்கி வருகின்ற திருமூர்த்தி அணையும் நீர்வரத்து இன்றி தவித்து வருகிறது.

    இந்த அணை மூலமாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. அதுமட்டுமின்றி தளி கால்வாயை ஆதாரமாகக்கொண்டு சுற்றுப்புற கிராமங்கள் பயன்பெறும் வகையில் கூட்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அணைக்கு வனப் பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள் கைகொடுத்து உதவுவது இல்லை. அதைத்தொடர்ந்து பி.ஏ.பி. தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் மூலமாக தண்ணீர் கொண்டுவரப்படுகிறது. அணையின் நீர் இருப்பு உயர்ந்த பின்பு சுழற்சி முறையில் 4 மண்டலங்கள் மற்றும் தளி வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.கோடை வெப்பத்தின் தாக்கத்தால் பி.ஏ.பி. தொகுப்பு அணைகளுக்கும் நீர்வரத்து குறைந்து விட்டது.இதனால் காண்டூர் கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்பட்டு விட்டது. தற்போதைய நிலவரப்படி 60 அடி உயரம் கொண்ட அணையில் 30.05 கன அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.அணையில் இருந்து வினாடிக்கு 28 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை பெய்வதற்கான வாய்ப்புகள் நிறைய வருகிறது.இதனால் விவசாயிகள் நிலத்தை உழுது பண்படுத்தி விட்டு பருவ மழையை எதிர்பார்த்து உள்ளனர்.

    ×