என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமையலறை"

    • வீடாக இருந்தாலும் சமைக்கும்போது முன்புற பாதுகாப்பு ஆடை (ஏப்ரன்) கட்டிக்கொள்ளலாம்.
    • பிரிட்ஜில் அதிக காய்கறிகள், இறைச்சி வகைகளை நாட்கணக்கில் சேர்த்து வைப்பது தவறு.

    அக்னி மூலையில் சமையலறை அமைப்பது மட்டுமல்லாமல் அதை மாடுலர் கிச்சன் என்று நவீனமாக அமைப்பதை இல்லத்தரசிகள் விரும்புகிறார்கள். நீரும், நெருப்பும், உணவுப்பொருளும் புழங்கும் இடம் என்பதால் அங்கு சுத்தத்திலும், சுகாதாரத்திலும் கவனம் கொள்வது அவசியம்.

    காய்கறிகள் மற்றும் உணவுப்பொருள்கள் அனைத்தும் ரசாயனங்களை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுவதோடு, சில இடங்களில் செயற்கை முறையில் பதப்படுத்தபட்ட பின்பு விற்பனைக்கு வருவதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

    வீடாக இருந்தாலும் சமைக்கும்போது முன்புற பாதுகாப்பு ஆடை (ஏப்ரன்) கட்டிக்கொள்ளலாம். தலைமுடியை கவர் செய்து கட்டிக்கொள்வது சிறந்தது. சமைக்கும்போது கை நகங்கள் வெட்டப்பட்டு சுத்தமாக இருப்பதுடன் அதிக ஆபரணங்கள் இல்லாதிருப்பதும் நல்லது. சமையலறையில் இ-கோலை, சால்மொனெல்லா, காம்பைலோபாக்டர் போன்று பல வித கிருமிகள் இருக்கின்றன. அவை பெரும்பாலும் கைகள், துணிகள், உணவுப்பொருட்கள் ஒன்றோடு ஒன்று புழங்குவதாலும், சமையலறைக்குள் வரும் வளர்ப்பு பிராணிகள் மூலமாகவும் பரவுகின்றன.

    அதனால் வாரம் ஒருமுறை சமையலறை முழுமையாக சுத்தம் செய்யப்படவேண்டும். குளிர்சாதனப்பெட்டி, பாத்திரம் கழுவும் சிங்க் ஆகியவற்றில் கிருமிகள் இருக்கலாம். சமையலறை டஸ்ட் பின் வெளிப்புறமாக வைக்கப்படுவது முக்கியம். பாத்திரங்கள் அல்லது உணவுப்பொருட்களில் பூஞ்சை படர்ந்திருந்தால் அவற்றை உபயோகப்படுத்துவதை உடனடியாக தவிர்க்க வேண்டும்.

    கைகளில் வெட்டுக்காயங்கள் இருந்தால், சமைப்பதை தவிர்க்க வேண்டும். அதனால் பாக்டீரியாக்கள் உணவில் பரவுவதை தடுக்கலாம். அவ்வப்போது கைகளை சோப்பு அல்லது ஹேண்ட்வாஷ் கொண்டு சுத்தம் செய்வதோடு துணியால் துடைக்கலாம். அடுப்பில் இருக்கும் பாத்திரத்தின் மீது எப்போதுமே கவனம் இருப்பது முக்கியம். துடைக்கும் துணிகள், பிளாஸ்டிக் கவர் போன்றவற்றை எரியும் அடுப்புக்கு அருகில் வைக்க வேண்டாம்.

     

    பிரிட்ஜில் அதிக காய்கறிகள், இறைச்சி வகைகளை நாட்கணக்கில் சேர்த்து வைப்பது தவறு. காய்கறிகளை சுத்தப்படுத்தும் சமையலறை சிங்க்-ல் இறைச்சியை கழுவாமல் கிச்சனுக்கு வெளியே கழுவ வேண்டும். இறைச்சி, காய்கறிகளை நறுக்குவதற்காக தனித்தனியாக கத்திகள் மற்றும் கட்டிங் போர்டு பயன்படுத்துவது சுகாதாரம்.

    மார்க்கெட்டிலிருந்து வாங்கப்படும் பழ வகைகள் அல்லது சில ஆர்கானிக் பொருட்கள் மீது புரூட் பிளை என்ற பழ ஈக்கள் உட்காரும் காரணத்தால் அசுத்தமாக ஏற்படும். அதனால் பழங்களை நன்றாக கழுவிய பின்பு உண்ணலாம் அல்லது பிரிட்ஜில் வைக்கலாம். சமைக்கப்பட்ட பொருட்கள் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக அறை வெப்பத்தில் வைக்காமல் பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம். பிரிட்ஜில் வைக்கும்போது சமைக்காத உணவையும், சமைத்த உணவையும் ஒன்றாக வைப்பதை தவிர்க்க வேண்டும்.

    வீட்டு வேலைகளை முடித்ததும் சில பெண்களுக்கு விரல்கள் மரத்துவிடும். இதற்கு முக்கியமான காரணம் சமையல் அறையை வடிவமைப்பதில் நாம் செய்யும் சின்னச் சின்னத் தவறுகள்தான்.
    30 வயதைக் கடந்த பெண்கள் பலரும் முதுகு, இடுப்பு மற்றும் கழுத்து வலியால் அடிக்கடி சிரமப்படுவார்கள். வீட்டு வேலைகளை முடித்ததும் சில பெண்களுக்கு விரல்கள் மரத்துவிடும். கழுத்தைத் திருப்பவே முடியாத அளவுக்கு வலி இருக்கும். அந்த வலி, மற்ற பாகங்களுக்கும் பரவும். இதற்கு முக்கியமான காரணம் சமையல் அறையை வடிவமைப்பதில் நாம் செய்யும் சின்னச் சின்னத் தவறுகள்தான். இதில் கவனிக்க வேண்டிய சில விஷயங்களைப் பார்க்கலாம்.

    பல வீடுகளில் சமையல் அறை மிகவும் சிறியதாக இருக்கும். இத்தகைய சமையலறை அமைப்பு, உணவுப் பொருட்கள் கீழே தவறி விழுவது, சூடான பாத்திரங்களில் கைகளை சுட்டுக் கொள்வது போன்ற விபத்துகள் ஏற்பட காரணமாகிறது. எனவே சமையல் அறையை போதிய இட வசதியோடு அமைப்பது நல்லது.

    கிருமி நாசினியான சூரிய ஒளி, சமையல் அறையில் நன்றாக படும்படி ஜன்னல்களை அமைக்க வேண்டும். சமையல் அறையை வண்ணங்கள் நிறைந்ததாக அமைத்துக் கொள்ளுங்கள். இதனால் அங்கு சமைப்பவர்களின் சிந்தனை மேம்படும். இதற்காக பார்வையை ஈர்க்கும் அழகான இயற்கைக் காட்சி நிறைந்த படங்களை ஒட்டலாம்.

    சமையல் அறையில் அமைக்கப்படும் ‘சிங்க்’, பாத்திரங்களைப் போட்டு சுத்தப்படுத்துவதற்கு பயன்படுத்தும் இடம் என்பதால் அகலமான, ஆழம் குறைந்த, பராமரிக்க எளிதாக இருக்கும் வகையில் அமைக்க வேண்டும். மின்சாதனங்களை இணைப்பதற்கான வசதிகளை சமையல் அறையில் திட்டமிட்டு ஏற்படுத்த வேண்டும். பிரிட்ஜ், மிக்சி, கிரைண்டர், மைக்ரோவேவ் அவன் போன்ற சாதனங்களுக்கு தனியாக சுவிட்ச் அமைப்பது அவற்றின் பயன்பாட்டை எளிதாக்கும்.

    சமையல் அறையில் போதுமான எண்ணிக்கையில் அலமாரிகள் இருப்பது அவசியம். சமையலறை ‘சிங்க்’ பகுதியில் இருந்து வெளிப்புறம் செல்லும் குழாயை கொசு வலை கொண்டு மூடுவதன் மூலம் எலி, கரப்பான் பூச்சி போன்றவை கிச்சனில் நுழைவதை தடுக்க முடியும்.

    சமையலறை வடிவமைப்பில் தரை பகுதிக்கு அடர் நிறங்களில் டைல்ஸ், மாடுலர் கிச்சனுக்கு வெளிர் நிறங்களில் மைக்கா அமைத்தால் சுத்தம் செய்ய எளிதாக இருக்கும். சமையலறை அமைப்பில் சிங்க், அடுப்பு, குளிர்சாதனப் பெட்டி ஆகியவற்றை சுலபமாக அணுகி பயன்படுத்தும் வகையில் அமைக்க வேண்டும். சமையல் மேடையின் உயரம், நமது உயரத்துக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும்.
    • கியாஸ் சிலிண்டருக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை மட்டுமே ஆயுட்காலம் உண்டு.
    • காலாவதியான சிலிண்டரில் கியாசை மீண்டும், மீண்டும் நிரப்பி வினியோகம் செய்து வருகின்றன.

    காலாவதியான கியாஸ் சிலிண்டரை கண்டுபிடிப்பது எப்படி என்பது குறித்து பார்க்கலாம். இதில் காலாவதியான சிலிண்டர் என்பது என்னவென்றால் நமது வீடுகளுக்கு வினியோகம் செய்யப்படும் கியாஸ் சிலிண்டருக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை மட்டுமே ஆயுட்காலம் உண்டு.

    ஆனால் அதை மாற்றாமல் சில கியாஸ் நிறுவனங்கள் காலாவதியான சிலிண்டரில் கியாசை மீண்டும், மீண்டும் நிரப்பி வினியோகம் செய்து வருகின்றன. இதனால் கியாஸ் கசிவு ஏற்பட்டு ஆபத்தை விளைவிக்கும். அதனை கண்டுபிடிப்பது ரொம்ப சுலபமானது. சிலிண்டரில் மேல் பகுதியில் மூன்று கம்பிகள் இருக்கும். அது கழுத்து பகுதியாகும்.

    அதில் ஒரு கம்பியின் உள்பகுதியில் காலாவதியாகும் மாதம் ஆங்கிலத்திலும், வருடம் எண்களிலும் பொறிக்கப்பட்டிருக்கும். அதாவது ஆங்கிலத்தில் ஏ.பி.சி.டி. என நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, 'ஏ' என்றால் மார்ச் மாதம் (முதல் காலாண்டு), 'பி' என்றால் ஜூன் மாதம் (இரண்டாவது காலாண்டு), 'சி' என்றால் செப்டம்பர் மாதம் (மூன்றாவது காலாண்டு), 'டி' என்றால் டிசம்பர் மாதம் (நான்காவது காலாண்டு) ஆகும். உதாரணத்திற்கு ஏ- 16 என்று சிலிண்டரில் பொறிக்கப்பட்டிருந்தால் மார்ச்-2016 என்பதை குறிக்கிறது. இதை வைத்து காலாவதியான சிலிண்டரை கண்டுபிடித்துவிடலாம்.

    • பழுதடைந்த மின்சாதனங்களை உபயோகப்படுத்துவதை தவிர்ப்பதே நல்லது.
    • ஒரு சாதனம் பழுதாவதற்கு முன்பே, அதன் இயக்கத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    மின்சாதனங்களை பாதுகாப்பான முறையில் கையாளாதபோது, ஆபத்துகளை சந்திக்க நேரிடலாம். அவற்றை கவனமாக பயன்படுத்துவதற்கான சில வழிமுறைகள் இதோ…

    தேவையற்ற நேரங்களில் மின்சாதனங்களை, இணைப்பில் இருந்து துண்டித்துவிட வேண்டும். இதன் மூலம் அவை அதிக வெப்பமடைந்து விபத்து ஏற்படுவதைத் தவிர்க்க முடியும். மின்சாதனங்களை பயன்படுத்தும்போது மின் கசிவு ஏற்படுவதை உணர்ந்தால், உடனே மின்னியல் வல்லுனரை அணுகி சரி செய்ய வேண்டும்.

    பழுதடைந்த மின்சாதனங்களை உபயோகப்படுத்துவதை தவிர்ப்பதே நல்லது. மின் உபகரணங்களை குறிப்பிட்ட காலவரையறையில் சர்வீஸ் செய்ய வேண்டியது முக்கியம். ஒரு சாதனம் பழுதாவதற்கு முன்பே, அதன் இயக்கத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    இதனால் சிறிய மாற்றத்தையும் கண்டுபிடித்து, ஆரம்பத்திலேயே சரி செய்ய முடியும். புதிய உபகரணம் வாங்குவதற்கான செலவுகளையும் குறைக்க முடியும். மின்சாதனப் பொருட்களை வாங்கும்போது, அதில் குறிக்கப்பட்டிருக்கும் மின்சார பயன்பாட்டு அளவுகளை கருத்தில் கொள்ள வேண்டும்.

    இது ஒரு மணி நேரத்தில் அவற்றால் பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் அளவாகும். இதை கருத்தில் கொண்டு மின்சாதனங்களை பயன்படுத்துவதன் மூலம், மின்சாரத்தை சேமித்து மின்கட்டணத்தைக் குறைக்க முடியும். வெளியூருக்கு செல்லும்போது மெயின் சுவிட்சை அணைத்து விட்டு செல்வது சிறந்தது.

    இதனால் எதிர்பாராத மின்கசிவு ஏற்படுவதைத் தவிர்க்கலாம். தரமான தயாரிப்புக் கொண்ட மின் உபகரணங்களை பயன்படுத்துவதன் மூலம் பாதுகாப்பு உறுதிசெய்யப்படுவதோடு, அவை சேதமடையாமல் நீடித்து உழைக்கவும் செய்யும். சேதமடைந்த மின்கம்பிகளை அவ்வப்போது சரிபார்த்து மாற்றி விடுவது நல்லது.

    மின்சாதனங்களை சரியான கால இடைவெளியில் பழுதுநீக்கம் செய்வதன் மூலம் ஆபத்துகளை தவிர்த்து, அவற்றின் ஆயுட்காலத்தை நீட்டிக்கலாம். பழுதான மின் உபகரணங்களை தனிப்பட்ட முறையில், நீங்களாகவே சரி செய்ய முயற்சிப்பது ஆபத்தானது.

    • பிளாஸ்டிக் பொருட்களை அடுப்பின் அருகில் வைத்திருக்கக் கூடாது.
    • சமைக்கும்போது, நைலக்ஸ் புடவை கட்டிக்கொண்டு சமைக்கக் கூடாது.

    வீட்டில் பெண்கள் அதிகமாக நேரத்தை செலவிடும் இடம் சமையலறை. பரபரப்பாக சமையல் செய்வது, மற்ற வேலைகளை முடித்த களைப்போடு சமையல் வேலைகளில் ஈடுபடுவது என அவர்கள் மேற்கொள்ளும் வேலைக்கு ஏற்றவாறு, அந்த அறையின் அமைப்பு மற்றும் வசதிகள் இருக்க வேண்டும். தண்ணீர், மின்சாரம், நெருப்பு இவை மூன்றையும் ஒன்றாக பயன்படுத்தும் இடம் என்பதால், சமையல் அறையில் பாதுகாப்பை உறுதி செய்வது முக்கியமானது. அதைப் பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.

    தரை:

    பெரும்பாலான வீடுகளில் 'டைல்ஸ்' பதிக்கப்பட்ட தரை உள்ளது. இதில், எந்த வகையான திரவங்கள் சிந்தினாலும் எளிதாகக் கண்டுபிடிக்க முடியாது. எதிர்பாராமல், அதில் கால் வைக்க நேர்ந்தால் வழுக்கி விழும் அபாயம் உள்ளது. எனவே, கீழே சிந்தும் திரவங்களை அவ்வப்போது துடைத்து, சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். கண்ணாடி பாட்டில்கள் ஏதேனும் உடைந்தால், அதைத் துணியால் துடைத்து எடுக்க வேண்டும்.

    தீ அணைக்கும் கருவி:

    சமையல் அறையில், சிறிது கவனக்குறைவாக இருந்தாலும், பர்னர்கள் அல்லது பிளம்பீட் டெசர்ட் ஆகியவற்றில் இருந்து தீப்பிழம்புகள் வந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. சமைக்கும் பாத்திரத்தில் திடீரென தீப்பற்ற நேர்ந்தால், அதில் தண்ணீர் ஊற்றக் கூடாது. இது தீயை மேலும் அதிகரிக்கக்கூடும். பாத்திரத்தை ஒரு தட்டை போட்டு மூடி, அதன் மீது சிறிது பேக்கிங் சோடாவைப் போடலாம். இதனால், தீ உடனடியாக கட்டுக்குள் வரும். சமையல் அறையில், தீயணைக்கும் கருவியை வைத்திருப்பதும், அதைக் கையாளத் தெரிந்திருப்பதும் அவசியம்.

    சமையல் உபகரணங்கள்:

    கத்தி, அரிவாள், அரிவாள்மனை போன்ற கூர்மையான பொருட்களை சமையல் அறையின் பாதுகாப்பான இடத்தில் வைத்துப் பயன்படுத்த வேண்டும். பாத்திரங்களில் திருகுகள் உள்ள கைப்பிடிகள் தளர்வாக இருப்பதைக் கவனித்து உடனே அவற்றை சரி செய்வதன் மூலம், விபத்துகளைத் தவிர்க்கலாம்.

    தினசரி கவனம்:

    தினமும் இரவில் குக்கரின் கேஸ்கட், வெயிட் முதலியவற்றை நன்றாக சுத்தம் செய்வதுடன், குக்கர் மூடியில் உள்ள சேப்டி வால்வையும் சரிபார்ப்பது அவசியம். அடுப்பை அணைப்பதோடு, எரிவாயு சிலிண்டரையும் மூடிய பின்னரே சுத்தம் செய்ய வேண்டும். குழம்பு தாளிக்கும் போது, குமிழ் வைத்த மூடியால் மூடியபடி தாளித்தால், கடுகு போன்ற பொருட்கள் தெறித்து விழுந்து சூடுபடாமல் இருக்கும். சமைக்கும்போது, நைலக்ஸ் புடவை கட்டிக்கொண்டு சமைக்கக் கூடாது. இது எளிதில் தீப்பிடிக்கும் தன்மை கொண்டது.

    மேலும், குழந்தைகள் அடுப்பிற்கு அருகில் சென்று கேஸ் குழாய்களை திருப்பாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை அடுப்பின் அருகில் வைத்திருக்கக் கூடாது. இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு ரெகுலேட்டரும், அடுப்பின் வால்வும் மூடி உள்ளதா என்பதை சரி பார்ப்பது அவசியம். பாத்திர அலமாரிகளோ, மற்ற பொருட்களோ அடுப்பிற்கு மேல் பகுதியில் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதை எடுக்க முயலும் போது, ஆடையில் தீப்பிடிக்கும் வாய்ப்புள்ளது. ஆடையில் நெருப்பு பற்றினால், உடனே உடலைச் சுற்றி கம்பளியை போர்த்தி, நெருப்பை அணைக்கலாம்.

    ×