என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆலோசனை"
- தரும்புரி மாவட்டத்தில் கணக்கெடுப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் தடைபெற்றது.
- கலெக்டர் சாந்தி , கணக்கெ டுப்பாளர்க ளுக்கான பயிற்சி கையேடுகளை வழங்கினார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் சார்பில் தமிழ்நாடு அரசின் மாற்றுத்தி றனாளி களுக்கான உரிமைகள் திட்டத்தின் மாவட்ட அளவிலான குழு கூட்டம் மற்றும் தேசிய அறக்கட்டளை உள்ளுர் குழு கூட்டம் தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.
உலக வங்கி நிதியு தவியுடன் மாற்றுத்தி றனாளிகளுக்கு சேவைகள் புரிவதற்கு, தமிழ்நாடு அரசு மூலம் உரிமைகள் திட்டம் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் மாற்றுத்தி றனாளி களுக்கான சேவைகள் முழுமையாக கிடைத்திடும் வகையில் ஒவ்வொரு உட்கோட்டத்தில் ஒருங்கிணைந்த சேவை மையங்கள் மற்றும் வட்டார அளவில் துணை சேவை மையங்கள் அமைத்து பணிகள் மேற்கொள்ளுதல், சமூக தரசுகளை உருவாக்குதல், திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல் மற்றும் முன் மாதரி திட்டங்கள் செயல்படுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்ப டவுள்ளது.
இக்கூட்டத்தில் மாற்றுத்தி றனாளிகள் கணக்கெடுப்பு தொடர்பான விழிப்புணர்வு பதாகைகளை மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டு, கணக்கெ டுப்பாளர்களுக்கான பயிற்சி கையேடுகளை வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சாந்தி தமிழ்நாடு அரசின் மாற்றுத்திற னாளிகளுக்கான உரிமை கள் திட்டத்தின் மூலம் மாற்றுத்திற னாளிக ளுக்கான கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்ப டவுள்ளது எனவும், இப்பணி மகளிர் திட்ட களப்பணியாளர்கள் மூலம் மாவட்டம் முழுவதும் வருகின்ற 29 -ம் தேதி முதல் அடுத்த மாதம் 22-ம் தேதி வரை நகர்பு றத்தில் நடைபெற வுள்ளதா கவும் தெரிவித்தார்.
மேலும், இக்க ணக்கெடுப்பில் ஒரு மாற்றுத்திறனாளியும் விடுபடாமல் கணக்கெடுப்பு பட்டியலில் சேர்க்கும் பொருட்டு, அனைத்துறை அலுவலர்களின் கட்டுப்பாட்டில் உள்ள களப்பணியாளர்கள் மூலம் கணக்கெடுப்பு தொடர்பான தகவலை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், அனைத்து வட்டாரங்களிலும் துணை சேவை மையங்கள் அமைப்பதற்கு ஏதுவாக துணை இயக்குநர் சுகாதார பணிகள் கட்டுபாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள கட்டடங்களில் காலியாக உள்ள கட்டடங்களை வழங்கு மாறும் அலுவலர்க ளுக்கு அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் யசோதா, இணை இயக்குநர் சாந்தி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்ப திவாளர் ராமதாஸ், தணித்துணை கலெக்டர் நசீர் இக்பால், துணை இயக்குநர் சுகாதார பணிகள் விஜயா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், முன்னோடி வங்கி மேலாளர் கண்ணன், மாவட்ட சமூக நல அலுவலர் பவித்ரா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கௌரிசங்கர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வம், மாவட்ட மாற்றுத்தி றனாளிகள் நல அலுவலர் செண்பகவல்லி, மாநில திட்ட மேலாளர்கள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்சி அலுவலர், தொண்டு நிறுவன பிரதிநிதிகள், மாற்றுத்திறனாளிகள் நலசங்கங்களின் பிரதி நிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்
- தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும்.
- அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து முன்னேற்பாடுகளை துவக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
உடுமலை:
கேரளாவில்தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் மேற்கு மற்றும் தெற்கு மண்டலங்களுக்கு உட்பட்ட மாவட்டங்களில், தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பருவமழை தீவிரமடையும்போது, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும்.வருவாய்த்துறை, போலீசார், தீயணைப்புத்துறையினர் மற்றும் தன்னார்வலர் அடங்கிய தாலுகா அளவிலான மீட்பு குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். மழை சேதம் தொடர்பாக தகவல் கிடைத்ததும் விரைந்து மீட்பு பணியை துவக்க வேண்டும்.மழைப்பொழிவு, மழை சேதம் விவரங்களை தினமும் பெற்று சேதங்களுக்கு, நிவாரணம் வழங்கப்பட வேண்டும். பேரிடர் தடுப்பு பணிகளுக்கு 1077 என்ற கட்டணமில்லா எண்ணை செயல்படுத்த வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து திருப்பூர் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகள் கூறுகையில், தாலுகா அலுவலகங்களில் 24 மணி நேரமும், கண்காணிப்பு பணி நடக்கும் வகையில், சுழற்சி முறையில் பணி நேரம் மாற்றி அமைக்கப்படும்.தமிழக அரசு வழிகாட்டுதல்களை பின்பற்றி, தாலுகாவுக்கு ஒரு துணை கலெக்டர் நிலை அதிகாரிகள் தலைமையில் பேரிடர் மேலாண்மை குழு அமைத்து கண்காணிக்கப்படும். விரைவில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து முன்னேற்பாடுகளை துவக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்