search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அசாம் கனமழை"

    • கடந்த 24 மணி நேரத்தில் மழை மற்றும் வெள்ளப்பெருக்கிற்கு மேலும் ஐந்து பேர் உயிரிழந்தனர்.
    • 27 மாவட்டங்களில் கிட்டத்தட்ட 14 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    வடகிழக்கு மாநிலங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் அசாம் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அபாயகரமான நிலை நீடித்து வருகிறது. அசாம் மாநிலத்தில் 28 மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.

    அசாமில் மழை வெள்ளத்திற்கு நேற்று முன்தினம் வரை 79 பேர் பலியாகி இருந்தனர்.

    இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மழை மற்றும் வெள்ளப்பெருக்கிற்கு மேலும் ஐந்து பேர் உயிரிழந்தனர். வெள்ளம் தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கையை 84 ஆக உயர்ந்துள்ளதாக அசாமின் பேரிடர் மற்றும் தகவல் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.

    27 மாவட்டங்களில் கிட்டத்தட்ட 14 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,580 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. 365 நிவாரண முகாம்களில் மொத்தம் 1,57,000 பேர் தஞ்சமடைந்துள்ளனர்.

    பிரம்மபுத்திரா நதியின் நீர்மட்டம் நேமாதிகாட், தேஜ்பூர், கவுகாத்தி மற்றும் துப்ரி ஆகிய இடங்களில் அபாய அளவை தாண்டி பாய்ந்து வருகிறது.

    • குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் 22 லட்சத்து 74 ஆயிரத்து 289 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
    • பிரம்மபுத்ரா நதியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    கவுகாத்தி:

    அசாமில் வெளுத்து வாங்கிய மழையால் மாநிலத்தில் 28 மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் 22 லட்சத்து 74 ஆயிரத்து 289 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மழைக்கு ஏற்கனவே 70 பேர் பலியான நிலையில், நேற்று மேலும் 8 பேர் பலியாகி உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது.

    269 நிவாரண முகாம்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர். பிரம்மபுத்ரா நதியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அபாய அளவை தாண்டி நீர் ஓடுவதால் கரையோர மக்களுக்கு மீண்டும் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மற்ற நதிகளிலும் வெள்ளப்பெருக்கால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதற்கிடையே வெள்ள பாதிப்புகளை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி இன்று நேரில் பார்வையிடுகிறார். லத்திபூர் பகுதிக்கு சென்று மக்களிடம் குறைகளை கேட்டறிகிறார்.

    • பிரம்மபுத்ரா உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
    • இதுவரை 62 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

    கவுகாத்தி:

    அசாமில் இடைவிடாது பெய்த மழையால் மாநிலமே மிதக்கிறது. பிரம்மபுத்ரா உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அபாய அளவை தாண்டி நீர் பெருக்கெடுத்து செல்கிறது. திப்ரூகாரில் பல குடியிருப்புகள் மழை நீரில் மிதக்கின்றன. கடந்த 8 நாட்களாக மின் வினியோகம் இல்லாததால், மக்கள் இருட்டில் வாழ்ந்து வருகிறார்கள். வெள்ள பாதிப்பு பகுதிகளை மாநில முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா நடந்து சென்று பார்வையிட்டார்.

    அப்போது அவர், 'திப்ரூகாரில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண வல்லுனர்கள், உள்ளூர்வாசிகளுடன் இணைந்து தீர்வு காணப்படும்' என்று தெரிவித்தார்.

    மழை வெள்ள பாதிப்பால் 29 மாவட்டங்களை சேர்ந்த 22 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 62 பேர் பலியாகி இருக்கிறார்கள். 3 பேர் மாயமாகி இருக்கிறார்கள்.

    • கனமழையால் 29 மாவட்டங்களில் 21.13 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • 194 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

    அசாம்... இந்த வருடம் கனமழைக்கு மிகப்பெரிய அளவில் இந்தியாவில் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக திடீர் கனமழையால் அசாம் மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டன.

    இந்திய ராணுவ வீரர்கள் களத்தில் இறங்கி மீட்புப்பணியை மேற்கொண்டனர். துண்டிக்கட்ட கிராமங்களை செயற்கை பாலங்கள் உருவாக்கி மீட்டனர். இதனால் மக்கள் விரைவாக பழைய நிலைக்கு திரும்ப முடிந்தது. இந்த நிலையில் தற்போது 2-வது முறையாக கனமழை பெய்து வருகிறது.

    இந்த கனமழையால் 29 மாவட்டங்களில் 21.13 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 194 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும் மழை வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52-ஆக உயர்ந்துள்ளது என்று மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

    • கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது.
    • பிரம்மபுத்திரா உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டியுள்ளது.

    அசாம்... இந்த வருடம் கனமழைக்கு மிகப்பெரிய அளவில் இந்தியாவில் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக திடீர் கனமழையால் அசாம் மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. இந்திய ராணுவ வீரர்கள் களத்தில் இறங்கி மீட்புப்பணியை மேற்கொண்டனர். துண்டிக்கட்ட கிராமங்களை செயற்கை பாலங்கள் உருவாக்கி மீட்டனர். இதனால் மக்கள் விரைவாக பழைய நிலைக்கு திரும்ப முடிந்தது.

    இந்த நிலையில் தற்போது 2-வது முறையாக கனமழை பெய்து வருகிறது. அசாம் மாநிலத்தில் ஓடும் பிரம்மபுத்திரா உள்ளிட்ட 13 முக்கிய ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இன்னும் கனமழை பெய்யும் என பல மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தள்ளது.

    இந்த கனமழையால் 20 மாவட்டங்களில் 6.71 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திப்பர்காரின் சார் (சந்த்பார்) பகுதியில் சிக்கித் தவித்த 13 மீனவர்களை விமானப்படையினர் மீட்டுள்ளனர். அசாம் மாநில தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் வேண்டுகோளை ஏற்று விமானப்படை மீட்பு பணியில் ஈடுபட்டது.

    தேமாஜி மாவட்டத்தில் நேற்று வெள்ளத்தில் சிக்கிய 7 மாநில தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரையும், வருவாய்த்துறை அதிகாரி ஒருவரையும் இந்திய விமானப்படை மீட்டுள்ளது.

    தற்போது கனமழையால் திப்ருகார் மாவட்டம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுளளது. அசாமின் மேற்பகுதியில் உள்ள முக்கிய நகரங்கள் கூட இந்த ஆறுநாள் கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

    பிஸ்வானத், கசார், சராய்டியோ, தராங், சிராங், தெமாஜி, திப்ருகார், கோலாகத், ஜோர்ஹத், கம்ருப், லகிம்பூர், சிவசாகர், சோனிட்புர், மோரிகயோன், நயகோன், மஜுலி, கரிம்கஞ்ச், தமுல்புர், தின்சுகியா, நல்பாரி மாவட்டங்களில் 6,71,167 மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கடந்த 24 மணி நேரத்தில் மழைக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். மழை வெள்ளம், புயல், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளனர். ஜொர்காத், சோனிட்புர், கம்ருப், துப்ரி மாவட்டங்களில் பிரம்மபுத்திரா ஆற்றில் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டி ஓடுகிறது.

    72 முகாம்களில் 8,142 மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 54 இடங்களில் 614 மாநில தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் குவிக்கப்பட்டுள்ளனர். புகழ்பெற்ற கசிரங்கா தேசிய பூங்காவில் 233 வன முகாம்களில் 95 வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஹைலகண்டி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒருவர் வெள்ள நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
    • நேற்று இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் 3 சிறுவர்கள் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

    அசாம் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் இடைவிடாத மழை பெய்து வருகிறது. அசாமில் கடந்த 4 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் 15 மாவட்டங்களில் 1.61 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர். அசாமில் வெள்ள நிலைமை இன்னும் மோசமாக உள்ளது.

    அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அறிக்கையின்படி, ஹைலகண்டி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒருவர் வெள்ள நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

    அசாம் மாநிலம் கரீம்கஞ்ச் படர்பூர் பகுதியில் தொடர் மழை காரணமாக நேற்று இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் 3 சிறுவர்கள் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளதாக கரீம்கஞ்ச் காவல் துறை கண்காணிப்பாளர் பார்த்த ப்ரோதிம் தாஸ் தெரிவித்துள்ளார்.

    • அசாமில் 25 மாவட்டங்கள் வெள்ளம் நில சரிவுகளால் சிக்கி பாதிக்கப்பட்டு உள்ளன.
    • 11.09 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளதுடன், கடந்த 24 மணி நேரத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

    கவுகாத்தி:

    அசாம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    அசாமின் கம்ரூப் மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்நிலையில், அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்வி நிலையங்களையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு நாள் மூடும்படி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    எனினும், முன்பே திட்டமிடப்பட்ட தேர்வுகளை நடத்த விதிவிலக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்கு கம்ரூப் மாவட்ட பேரிடர் மேலாண் கழகத்தின் துணை ஆணையாளர் மற்றும் தலைவரின் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ×