என் மலர்
நீங்கள் தேடியது "பொங்கலூர்"
- வருவாய் திட்டத்தின் கீழ் தமிழக அரசு ரூ.3 கோடியே 45 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது.
- ஒன்றிய அலுவலர்கள் குடியிருப்பு பகுதியில் புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள பொங்கலூரில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு இட பற்றாக்குறை உள்ளதால், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் கீழ் தமிழக அரசு ரூ.3 கோடியே 45 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது.
இதையடுத்து கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொங்கலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் உள்ள ஒன்றிய அலுவலர்கள் குடியிருப்பு பகுதியில் புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் புதிய கட்டட பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் வக்கீல் எஸ். குமார் தலைமை வகித்து புதிய அலுவலகம் கட்டுவதற்கான பணிகளை தொடங்கி வைத்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் இணை இயக்குனர் மற்றும் திட்ட இயக்குனர் லட்சுமணன், ஒன்றிய குழு துணை தலைவர் அபிராமி அசோகன், வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஒன்றிய ஆணையாளர் விஜயகுமார் வரவேற்றார்.இந்த விழாவில்,ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத் தலைவர்கள், ஒன்றிய அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- மண் சாலையை தார் சாலையாக அமைத்து தர வேண்டும்.
- 100 நாள் வேலை திட்டத்தில் 7 வாரங்களாக பயனாளிகளுக்கு இன்னும் சம்பளம் தரப்படவில்லை.
பல்லடம் :
பல்லடம் அருகே பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் வக்கீல் எஸ்.குமார் தலைமையில் துணைத்தலைவர் அபிராமி அசோகன் முன்னிலையில் கூட்டரங்கில் நடைபெற்றது. ஒன்றிய ஆணையாளர் விஜயகுமார் வரவேற்றார். இந்த கூட்டத்தில் கவுன்சிலர் லோகுபிரசாத் (திமுக) பேசுகையில்: கள்ளகிணறு கருப்பராயன் கோயில் முதல் லட்சுமி நகர் வரை தார் சாலை அமைத்தல் பணி முடிந்து அதனை தொடர்ச்சியாக உள்ள மண் சாலை வழியாக, ஒரு பாலம் அமைத்து கொடுத்து மண் சாலையை தார் சாலையாக அமைத்து தர வேண்டும்.
ஜோதி பாசு(இ.கம்யூ) : கடகம்திருடியபாளையத்திலிருந்து டி. ஆண்டிபாளையம் வரையிலும், வேலம்பட்டியில் இருந்து மசநல்லாம் பாளையம் வரையிலும் பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். தொங்குட்டிபாளையம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் 7 வாரங்களாக பயனாளிகளுக்கு இன்னும் சம்பளம் தரப்படவில்லை. இதில் மொத்தம் 1400 பயனாளிகளில் 400 பயனாளிகளின் ஆதார் கார்டு இணைப்பு ஆகவில்லை என வேலைக்கு அனுமதிக்காத நிலை உள்ளது. இதனை உடனடியாக சீர் செய்ய வேண்டும். டி. ஆண்டிபாளையத்தில் பகுதி நேர ரேஷன் கடைக்கு அனுமதி வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதை உடனடியாக செய்து தர வேண்டும்.
சுப்பிரமணி(தி.மு.க) : பொல்லிக்காளிபாளையம் செல்லும் பள்ளி மாணவர்களின் வசதிக்காக நல்ல காளிபாளையம் வழியாக பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். .ஒன்றிய குழு தலைவர் வக்கீல் எஸ்.குமார் பேசுகையில்: பொங்கலூர் ஒன்றியத்தில் கோடை காலத்தில் குடிநீர் பிரச்சனையை சமாளிக்கும் வகையில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் எடுத்த முயற்சியால் ஒன்றிய பகுதியில் அரசால் நிர்ணயக்கப்பட்ட அளவில் 75 சதம் குடிநீர் விநியோகம் சீரான முறையில் நடைபெற்று வருகிறது. அதற்காக குடிநீர் வடிகால் அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 15வது நிதிக்குழு மானியம் நிதியில் அனைத்து ஒன்றிய குழு வார்டு பகுதிகளிலும் 7 பணிகள் தேர்வு செய்யப்பட்டு கிராமப்புற அடிப்படை மேம்பாட்டு வேலைகள் நடைபெறவுள்ளது. முதலமைச்சரின் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 19.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை பணிகள் நடைபெறவுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். கூட்ட முடிவில் வட்டார வளர்ச்சி அதிகாரி (கிராம ஊராட்சி) மீனாட்சி நன்றி கூறினார்.
- பொங்கலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதயம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
- கருவலூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
திருப்பூர் :
தெற்கு அவினாசிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் பொங்கலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிழக்கு பகுதிகளில் நாளை (வெள்ளிக்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கொடுவாய், வெள்ளியம்பாளையம், வினோபா நகர், கொசவம்பாளையம், கருணைபாளையம் பிரிவு, செங்கோடம்பாளையம், அய்யம்பாளையம், பள்ளிபாளையம், கோவில்பாளையம், தொட்டிபாளையம், பொல்லிக்காளிபாளையம், தெற்கு அவினாசிபாளையம், வடக்கு அவினாசிபாளையம் ஒரு பகுதி, அலகுமலை ஒரு பகுதி மற்றும் உகாயனூர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை பல்லடம் மின்வாரிய செயற்பொறியாளர் ரத்தினகுமார் தெரிவித்துள்ளார்.
இதுபோல் அவினாசியை அடுத்த கருவலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை இந்த துைண மின்நிலையத்தில் மின்சாரம் நிறுததம் செய்யப்படுகிறது. அதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த துணை மின்நிலையத்துக்குட்பட்ட கருவலூர், அரசப்பம்பாளையம், நைனாம்பாைளையம், ஆரியக்கவுண்டம்பாளையம், அனந்தகிரி, எலச்சிபாளையம், மருதூர், காளிபாளையம், நம்பியாம்பாளையம், உப்பிலிபாளையம், மனப்பாளையம், காரைக்கால்பாளையம், முறியாண்டம்பாளையம், குரும்பாளையம், பெரியகாட்டுப்பாளையம், செல்லப்பம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.
இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் விஜயஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.