என் மலர்
நீங்கள் தேடியது "யோகிபாபு"
- மல்யுத்த வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ளது.
- ம் கொரோனா உள்ளிட்ட பல காரணங்களால் தள்ளிப்போனது.
இயக்குநர் ஹோசிமின் இயக்கத்தில் சுமோ என்கிற திரைப்படத்தில் நாயகனாக சிவா நடித்துள்ளார். இப்படத்தில் பிரியா ஆனந்த் நாயகியாகவும் நடித்துள்ளார்.
இப்படத்தில் யோகிபாபு, வி.டி.வி. கணேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மல்யுத்த வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ள இப்படத்தில், மல்யுத்த வீரர் யோஷினோரி தாஷிரோவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டே வெளியாக வேண்டிய இத்திரைப்படம் கொரோனா உள்ளிட்ட பல காரணங்களால் தள்ளிப்போனது.
இந்நிலையில், 'சுமோ' திரைப்படம் படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
அதன்படி சுமோ படம் வரும் ஏப்ரல் 25 ஆம் தேதி வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் எண்டர்டெயின்மெண்ட் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
- தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகிபாபு.
- பணம் வாங்கிகொண்டு நடிக்க மறுப்பதாக பட அதிபர் சங்கத்தில் யோகிபாபு மீது தயாரிப்பாளர் கின்னஸ் கிஷோர் புகார் அளித்துள்ளார்.
'தாதா' என்ற பெயரில் தயாராகி உள்ள படத்தில் யோகிபாபு, நிதின் சத்யா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். நாயகியாக காயத்ரி மற்றும் நாசர், மனோபாலா, சிங்கமுத்து, புவனேஸ்வரி ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி கின்னஸ் கிஷோர் தயாரித்து இயக்கி உள்ளார். தாதா படத்தில் நான் கதாநாயகன் இல்லை என்று யோகிபாபு சமீபத்தில் மறுப்பு வெளியிட்டார்.

யோகிபாபு
இதுகுறித்து தாதா படத்தின் தயாரிப்பாளர் கின்னஸ் கிஷோர் பட விழாவில் பேசும்போது, ''யோகிபாபுவுக்கு எவ்வளவோ உதவி செய்திருக்கிறேன். அந்த நன்றிகூட இல்லாமல் நடந்துகொள்கிறார். இந்தப் படத்தில் யோகிபாபு 4 சீனில் நடித்திருந்தால் நான் சினிமாவை விட்டே போய்விடுகிறேன். அதுவே 40 சீன்களுக்கு மேல் நடித்திருந்தால் அவர் சினிமாவை விட்டு போய்விடுவாரா? தாதா படத்தை வாங்காதீர்கள் என்று பலருக்கு போன் செய்து தடுக்கிறார். எனக்கு இன்னொரு படம் நடித்து தருவதாக பணம் வாங்கி கொண்டு நடிக்கவும் முன்வரவில்லை, பணத்தையும் திருப்பி தரவில்லை. எனக்கு படம் நடித்துக் கொடுக்காதவரை வேறு எந்தப் படத்திலும் நடிக்கக்கூடாது என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளேன். விரைவில் இதுபற்றி நடவடிக்கை எடுப்பதாக சொல்லியிருக்கிறார்கள்" என்றார்.
- சினிமாப்பட விநியோகஸ்தர் மதுராஜ் ஏ.வி.எம். அவின்யூ பகுதியில் அலுவலகம் நடத்தி வருகிறார்.
- இவரது ஊழியர்கள் இரண்டு பேரை மர்ம கும்பல் கடத்தி சென்றுள்ளனர்.
சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் மதுராஜ். சினிமாப்பட விநியோகஸ்தர். விருகம்பாக்கம் ஏ.வி.எம். அவின்யூ பகுதியில் அலுவலகம் நடத்தி வருகிறார். போரூர் பகுதியை சேர்ந்த கோபி, பென்சீர் ஆகியோர் ஊழியர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.
இதையடுத்து நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடித்த "ஷூ" என்கிற சினிமா படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடவும், சேட்டிலைட் உரிமம் ஆகியவற்றை ரூ.1கோடியே 10 லட்சத்துக்கு பேசி ரூ.17 லட்சம் முன்பணம் கொடுத்து மீதமுள்ள தொகையை 2 தவணைகளாக 90 நாட்களுக்குள் கொடுத்து விடுவதாக மலேசியாவைச் சேர்ந்த பட தயாரிப்பாளரிடம் மதுராஜ் ஒப்பந்தம் போட்டுள்ளார்.
இதனிடையே மதுராஜ் தனது மனைவியின் பிரசவத்திற்காக சொந்த ஊரான மதுரைக்கு சென்று விட்டதாக தெரிகிறது இதனால் அவர் சொன்னபடி தயாரிப்பாளருக்கு பணம் கொடுக்க காலதாமதம் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மதுராஜ் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோர் இடையே மோதல் ஏற்பட்டு வந்தது.

ஷூ
இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி மதுராஜ் அலுவலகத்திற்குள் புகுந்த 13 பேர் கொண்ட மர்ம கும்பல் அங்கிருந்த ஊழியர்கள் கோபி, பென்சீர் ஆகிய இருவரையும் சரமாரியாக அடித்து உதைத்து கத்தி முனையில் காரில் ஏற்றி கடத்தி சென்றனர். தாம்பரம் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அடைத்து வைத்து பணம் கேட்டு மிரட்டிய கும்பல், அவர்கள் ஏ.டி.எம் கார்டு மற்றும் செல்போன்களையும் பறித்துக் கொண்டனர்.
பின்னர் அவர்களை தாம்பரம் ரெயில் நிலையம் அருகே இறக்கிவிட்டு மிரட்டல் விடுத்து தப்பி சென்றுவிட்டனர். மேலும் ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ.70 ஆயிரத்தை எடுத்துக் கொண்டனர். இதுபற்றி அறிந்த சினிமா வினியோகஸ்தர் மதுராஜ் விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். உதவி கமிஷனர் கவுதமன், இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த கடத்தல் தொடர்பாக தாம்பரம் அருகே பதுங்கி இருந்த நாகராஜ், வினோத் குமார், சொக்கலிங்கம், பிரசாந்த் ஆகிய 4 பேரை இன்று அதிகாலை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய நபர்களை தொடர்ந்து தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட நாகராஜ், வினோத் குமார் இருவரும் வக்கீல்கள் என்பதும் சொக்கலிங்கம் கல்லூரி மாணவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
- முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகிபாபு, தற்போது கதாநாயகனுக்கு முக்கியதுவமுள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
- இவர் நடித்துள்ள புதிய படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகிபாபு, தற்போது கதாநாயகனுக்கு முக்கியதுவமுள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் தற்போது அறிமுக இயக்குனர் முருகேஷ் இயக்கத்தில் மலை என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் யோகிபாபுவுடன் இணைந்து லக்ஷ்மி மேனன் நடிக்கிறார். லெமன் லீஃப் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளார்.

மலை
இந்நிலையில் மலை படத்தின் போஸ்டரை இசையமைப்பாளர் டி.இமான் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். லக்ஷ்மி மேனன் மற்றும் யோகிபாபு இடம்பெற்றுள்ள அந்த போஸ்டர் படத்தின் ஒரு சிறிய தொகுப்பை உள்ளடக்கியது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.
- தற்போது தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு
- விஜய் நடிப்பில் வெளியான ‘வாரிசு’ திரைப்படத்தில் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் யோகி பாபு. சமீபத்தி விஜய் நடிப்பில் வெளியான 'வாரிசு' திரைப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள யோகி பாபு, தற்போது தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார்.

மிஸ் மேகி
தற்போது இவர் இயக்குனர் லதா ஆர் மணியரசு இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தில் 'மெஹந்தி சர்க்கஸ்' மாதம்பட்டி ரங்கராஜ், ஆத்மிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன் தயாரிக்கும் இந்த படத்திற்கு கார்த்திக் இசையமைக்கிறார்.

மிஸ் மேகி
இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு 'மிஸ் மேகி' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. ஆங்கிலோ இந்தியன் பாட்டி கெட்டப்பில் வித்தியாசமான லுக்கில் யோகி பாபு இடம் பெற்றுள்ள இந்த டீசர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- யோகிபாபு மற்றும் பிரமோத் ஷெட்டி இருவரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் படம் சன்னிதானம் பிஓ.
- இப்படத்தை சபரிமலையில் கிளாப் அடித்து விக்னேஷ் சிவன் துவங்கி வைத்துள்ளார்.
யோகிபாபு மற்றும் பிரமோத் ஷெட்டி இருவரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் படம் சன்னிதானம் பிஓ. ராஜீவ் வைத்யா இயக்கும் இப்படத்தை சர்வதா சினி கேரேஜ் மற்றும் ஷிமோகா கிரியேஷன்ஸ் சார்பில் மதுசூதன் ராவ் மற்றும் ஷபீர் பதான் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

சன்னிதானம் பிஓ
இப்படத்தின் துவக்க விழா பூஜை மகரவிளக்கு ஜோதி தினத்தில் சபரிமலை சன்னிதானத்தில் நடைபெற்றது. பிரபல இயக்குனரும், நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் இந்த படத்தின் முதல் கிளாப்பை அடித்து துவங்கி வைத்தார். திருவிதாங்கூர் தேவசம் போர்டின் தலைவரான அட்வகேட் அனந்தகோபன் இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

விக்னேஷ் சிவன் - சன்னிதானம் பிஓ
சபரிமலை பின்னணியில் உருவாக இருக்கும் இந்த படம் பான் இந்தியா படமாக உருவாகிறது. சபரிமலை சன்னிதானம், அங்கே பணிபுரியும் டோலி தூக்கும் பணியாளர்கள் மற்றும் சன்னிதானத்தில் அமைந்துள்ள போஸ்ட் ஆபீஸ் இவற்றை பின்னணியாக வைத்து இந்த படம் உருவாகிறது. இந்திய சினிமா வரலாற்றிலேயே ஒரு திரைப்படத்தின் பூஜை மகர ஜோதி நாளில் சபரிமலை சன்னிதானத்தில் நடைபெறுவது இதுதான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
- இயக்குனர் ஷான் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘பொம்மை நாயகி’.
- இப்படம் அடுத்த மாதம் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் 'பொம்மை நாயகி'. இயக்குனர் ஷான் எழுதி, இயக்கியுள்ள இந்த படத்தில் முன்னணி காமெடி நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு கே எஸ் சுந்தர மூர்த்தி இசையமைக்க, அதிசயராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பொம்மை நாயகி
சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாவது பாடலான 'கடற்கர காத்து வீசுதே' பாடல் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் பாடல் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
- 'தோனி என்டர்டெயின்மெண்ட்' சார்பில் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி தமிழ் படத்தை தயாரிக்கவுள்ளார்.
- இப்படத்தின் தலைப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் தோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் தோனியும் இணைந்து 'தோனி என்டர்டெயின்மெண்ட்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். ஏற்கெனவே, 'தி ரோர் ஆஃப் தி லயன்' என்ற ஆவணப்படத்தைத் தயாரித்திருக்கும் இந்நிறுவனம் தமிழில் திரைப்படம் ஒன்றை தயாரிக்கின்றனர். சாக்ஷி சிங் தோனியின் கருத்தாக்கத்தை மையமாக கொண்டு, குடும்ப பொழுதுபோக்கு படமாக தயாராகும் இப்படம் விரைவில் தொடங்குகிறது. காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகவுள்ள இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார்.

லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married)
தோனியின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ள முதல் படத்தின் அப்டேட் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் டைட்டிலை, மோஷன் போஸ்டர் வீடியோவாக படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் நடிகை நதியா, ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இவானா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவானா - ஹரிஷ் கல்யாண்
மேலும் இப்படத்திற்கு லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married) என்று பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோஷன் போஸ்டர் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகி பாபு நேற்று இரவு கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றார்.
- அவருக்கு கோவில் நிர்வாகத்தினர் வரவேற்றனர்.
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகி பாபு நேற்று இரவு கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றார். யோகிபாபுவை கோவில் நிர்வாகத்தினர் வரவேற்றனர். பின்னர் யோகி பாபு கோவிலில் உள்ள ஸ்ரீ காலபைரவர் சன்னதி, ஸ்ரீ ஆஞ்சநேயர் சன்னதி, ஸ்ரீ தியாக சவுந்தரி அம்மன் சன்னதி, மூலஸ்தான கருவறையில் அமைந்துள்ள பகவதி அம்மன் சன்னதி, இந்திர காந்த வினாயகர் சன்னதி, ஸ்ரீ பாலசவுந்தரி அம்மன் சன்னதி, ஸ்ரீ தர்மசாஸ்தா அய்யப்பன் சன்னதி, ஸ்ரீ சூரிய பகவான், ஸ்ரீ நாகராஜர் சன்னதி ஆகிய சன்னதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

நடிகர் யோகிபாபு சாமி தரிசனம் செய்ய வந்த செய்தி அந்த பகுதியில் காட்டுதீபோல் பரவி, அவரை காண ரசிகர்கள் திரண்டனர். யோகிபாபுவை முற்றுகையிட்டு அவருடன் செல்போன் மூலம் புகைப்படம் எடுத்துக் கொண்டு செல்பியும் எடுத்து கொண்டனர்.
- இயக்குனர் ஷான் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘பொம்மை நாயகி’.
- இப்படம் அடுத்த மாதம் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் 'பொம்மை நாயகி'. இயக்குனர் ஷான் எழுதி, இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் சுபத்ரா, ஸ்ரீமதி, ஜி.எம் குமார், அருள்தாஸ், ஹரிகிருஷ்ணன், ஜெயச்சந்திரன், இயக்குனர் எஸ்.எஸ் ஸ்டான்லி, லில்லி ஜான், ராக்ஸ்டார் ரமணியம்மா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் வருகிற பிப்ரவரி-3ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், நடிகர் யோகிபாபு, அதியன் ஆதிரை, பிராங்க்ளின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில் யோகிபாபு பேசியதாவது, "இந்த படத்தில் இயக்குனர் ஷான் என்னை காமெடி பண்ண விடவே இல்லை. பா.ரஞ்சித்தின் அட்டகத்தி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்த சமயத்தில் திடீரென இருபது நாட்கள் கால்ஷீட் கேட்டார்கள். அந்த சமயத்தில் நான் சுந்தர்.சியின் கலகலப்பு படத்திற்காக தேதிகள் கொடுத்திருந்ததால் அந்த வாய்ப்பு மிஸ் ஆனது. ஆனால் பரியேறும் பெருமாள் படம் மூலமாக நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் நடிக்கும் வாய்ப்பை என்னை அழைத்து தந்த இயக்குனர் மாரி செல்வராஜுக்கு நன்றி.

இந்த படம் தந்தை மகள் கதை என்பதால் ஒரு அப்பாவின் வலி என்ன என்பதை உணர்த்தும் விதமாக இந்த படம் உருவாகியுள்ளது. கடந்த ஐந்து மாதங்களாக ஒரு அப்பாவாக நானும் அதை உணர்கிறேன். சினிமாவில் ஆரம்ப காலத்திலிருந்து எவ்வளவோ அவமானங்களை தாண்டித்தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன். நான் எப்போதுமே காமெடி நடிகன் தான். அதேசமயம் இந்த முகத்தில் கூட ஏதோ ஒன்று தெரிகிறதே என நினைத்து என்னை நம்பி அழைத்தால் நடிக்க தயாராக இருக்கிறேன். தாராளமாக வாங்க" என்றார்.
- இயக்குனர் ஷான் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘பொம்மை நாயகி’.
- இப்படம் அடுத்த மாதம் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் 'பொம்மை நாயகி'. இயக்குனர் ஷான் எழுதி, இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் சுபத்ரா, ஸ்ரீமதி, ஜி.எம் குமார், அருள்தாஸ், ஹரிகிருஷ்ணன், ஜெயச்சந்திரன், இயக்குனர் எஸ்.எஸ் ஸ்டான்லி, லில்லி ஜான், ராக்ஸ்டார் ரமணியம்மா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் வருகிற பிப்ரவரி-3ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், நடிகர் யோகிபாபு, அதியன் ஆதிரை, பிராங்க்ளின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பா.ரஞ்சித்
இந்த நிகழ்வில் தயாரிப்பாளரும் இயக்குனருமான பா.ரஞ்சித் பேசும்போது, "இந்த படத்திற்கு யோகிபாபுவை அழைத்து நடிக்க வைக்கலாம் என இயக்குனர் ஷான் என்னிடம் கூறியபோது முதலில் தயங்கினேன். காரணம் எனக்கு யோகிபாபுவை பரியேறும் பெருமாள் படம் பார்த்ததிலிருந்து அந்த கதாபாத்திரம் ரொம்பவே பிடித்திருந்தது. அதேசமயம் பிசியான நடிகர்களின் பின்னால் போய் நிற்பது எனக்கு கொஞ்சம் டென்ஷனான விஷயம். அதனால் யோகிபாபுவிடம் நான் பேசமாட்டேன், அவர் இந்த கதை பிடித்து சம்மதித்து வந்தால் எனக்கு எந்த மறுப்பும் இல்லை என்று ஷானிடம் கூறினேன்.
பரியேறும் பெருமாள் படத்தில் பார்த்த யோகிபாபு கதாபாத்திரத்தின் நீட்சியாக தான் இந்த படத்தில் அவரது கதாபாத்திரம் அமைந்துள்ளது. இந்த படத்திலும் அதே போல நன்றாக நடித்துள்ளார். இந்த கதையை படிக்க சொன்னபோது பலரும் இந்த படம் குறித்து நெகட்டிவ் ஆகவே என்னிடம் கூறினார்கள். அப்போதே இந்த படத்தை தயாரிக்க முடிவு செய்து விட்டேன். இந்த படத்தில் முக்கியமான ஒரு பிரச்சனையை கூறினாலும் அதை கழிவிரக்கத்துடன் கூறுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. கழிவிரக்கம் பேசாத படமாக இது இருக்க வேண்டும் என விரும்பினேன். நீலம் தயாரிப்பு நிறுவனம் மூலமாக படம் தயாரிக்கும்போது எனக்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது.

பொம்மை நாயகி
இரண்டரை வருடங்களுக்கு முன்பு சின்ன படங்களுக்கு ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருந்தன. ஆனால் இப்போது சின்ன பட்ஜெட் படங்களை அவ்வளவு எளிதில் ஓடிடியில் விற்க முடியாது. பெரிய படங்களைத்தான் அவர்கள் வாங்குகிறார்கள். எனக்கு கொஞ்சம் பின்புலம் இருப்பதால் ஒடிடியில் வெளியிடுவது எளிதுதான். அதேசமயம் நிலைமை அப்படியே மாறி தியேட்டரில் வெளியிடுவதை விட ஓடிடியில் படங்களை வெளியிடுவது கஷ்டம் என ஆகிவிட்டது. அதேபோல சிறிய படங்களுக்கும் மக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டுவதில்லை. ஒடிடியில் வரட்டும் பார்த்து கொள்ளலாம் என்கிற மனப்பான்மை உருவாகிவிட்டது" என்று கூறினார்.
- இயக்குனர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் யோகிபாபு நடிக்கும் திரைப்படம் 'லக்கி மேன்'.
- இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் யோகி பாபு. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள யோகி பாபு, தற்போது தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'பொம்மை நாயகி' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

யோகிபாபு
தற்போது இயக்குனர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் யோகிபாபு நடிக்கும் திரைப்படம் 'லக்கி மேன்'. இப்படத்தில் வீரா, ரேச்சல் ரெபேக்கா, அப்துல் லீ, ஆர்.எஸ். சிவாஜி, அமித் பார்கவ், சாத்விக் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திங்க் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

லக்கி மேன் போஸ்டர்
உண்மையான அதிர்ஷ்டம் என்றால் என்ன என்பதைக் கண்டறியும் ஒரு மனிதனின் அதிர்ஷ்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது. 'லக்கி மேன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. இதையடுத்து இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.