search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேமியா சமையல்"

    • பிள்ளைகளுக்கு மதிய உணவிற்கு இதை செய்து கொடுக்கலாம்.
    • 20 நிமிடத்தில் இந்த ரெசிபியை செய்து முடிக்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    பாசுமதி அரிசி - 2 கப்

    பன்னீர் - 200 கிராம்

    புதினா - 1 கட்டு

    கிராம்பு - 4

    பட்டை - 1 இன்ச்

    வெங்காயம் - 2

    பச்சை மிளகாய் - 3

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    தண்ணீர் - 4 கப்

    செய்முறை :

    பன்னீரை துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.

    புதினாவை நன்றாக கழுவி, மிக்ஸியில் போட்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு நைசாக அரைத்துக் கொள்ளுங்கள்.

    அரிசியை நன்கு கழுவி உதிரியாக வடித்து வைத்துக்கொள்ளுங்கள்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கி வைத்துள்ள பன்னீர் துண்டுகளை 3 நிமிடம் வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    அதே வாணலியில் சிறிது எண்ணெய் சேர்த்து காய்ந்ததும், பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து தாளித்த பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து, பொன்னிறமாக வரும் வரை வதக்குங்கள்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும், அரைத்து வைத்திருக்கின்ற புதினா மற்றும் உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்குங்கள்.

    புதினா பச்சை வாசனை போனவுடன் இறுதியில் வறுத்து வைத்துள்ள பன்னீர் துண்டுகள் மற்றும் வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து, மீண்டும் 5 நிமிடம் பிரட்டி, இறக்கி விட வேண்டும்.

    தற்போது சுவை நிறைந்த புதினா பன்னீர் புலாவ் ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • உப்புமாவில் காய்கறிகளை சேர்த்து செய்வதால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்கும்
    • உப்புமாவில் சேமியா உப்புமா மிகவும் சுவையாக இருக்கும்.
    • காலையில் சமைத்து சாப்பிட சேமியா உப்புமா தான் சிறந்தது.

    தேவையான பொருட்கள்:

    சேமியா - 1 பாக்கெட்

    வெங்காயம் - 1

    பச்சை பட்டாணி - 1/2 கப்

    கேரட் - 1

    தக்காளி - 1

    பச்சை மிளகாய் - 3

    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

    கடுகு - அரை டீஸ்பூன்

    உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

    கடலைப் பருப்பு - 1/2 டீஸ்பூன்

    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது

    வரமிளகாய் - 1

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

    தண்ணீர் - 1 1/2 கப்

    செய்முறை:

    வெங்காயம், தக்காளி, கேரட், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சேமியாவை போட்டு பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளித்த பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் அத்துடன் மஞ்சள் தூள், கேரட், பச்சை பட்டாணி, பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.

    பிறகு அதில் வறுத்து வைத்துள்ள சேமியாவை சேர்த்து, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, 10 நிமிடம் மிதமான தீயில் தண்ணீர் வற்றும் வரை வேக வைத்து கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கினால், சேமியா வெஜிடபிள் உப்புமா ரெடி!!!

    ×