என் மலர்
நீங்கள் தேடியது "உதவி இயக்குனர்"
- இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக இருந்த மதிமாறன் புகழேந்தி இயக்கவுள்ளார்.
- விடுதலை 1, விடுதலை 2 ஆகிய படங்கள் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியானது.
வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமான நடிகர் சூரி, அடுத்தகட்ட முயற்சியாக கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் விடுதலை. இந்தப் படத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்திருந்தனர். இந்தப் படத்தின் முதல் பாகத்தில் சூரி, விஜய் சேதுபதியுடன் கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன், பவானி ஸ்ரீ, இளவரசு போன்ற நடிகர்கள் நடித்திருந்தனர்.
சூரியின் திரைப்பயணத்தில் இப்படம் திருப்பு முனையாக அமைந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல்வேறு தரப்பினரால் பாராட்டப்பட்டது. இளையராஜாவின் இசையில் வெளியான பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இதைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை இரண்டாம் பாகமும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. இதிலும் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், அட்டக்கத்தி தினேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். விடுதலை 2 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக இருந்த மதிமாறன் புகழேந்தி இயக்கவுள்ளார்.
இந்த படத்தை தயாரிக்கும் ஆர்எஸ் இன்போடெய்ன்மென்ட், சூரி நடிப்பில் மதிமாறன் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது" என அறிவித்துள்ளது.
இயக்குனர் மதிமாறன் புகழேந்தி இதற்கு முன்பு செல்ஃபி என்கிற படைத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தகது.
- நல்ல தரமான பயிறு வகைகளை விதைப் பண்ணைகளில் உற்பத்தி செய்ய முன்வர வேண்டும்.
- சுற்று வட்டார பயிறு வகை சாகுபடி விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.
வெள்ளகோவில் :
முத்தூர் அருகே வேலம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட மங்களப்பட்டி மற்றும் நத்தக்கடையூர் அருகே உள்ள பழையகோட்டை ஊராட்சிக்குட்பட்ட குட்டப்பாளையம் கிராம பகுதிகளில் விவசாயிகள் பாசிப்பயறு, உளுந்து பயிறு, ஆதார நிலை 2 உள்ள பயறு வகைகளை சாகுபடி செய்து விதைப்பண்ணைகளாக அமைத்து உள்ளனர்.
முத்தூர் பகுதிகளான மங்களப்பட்டி, வேலம்பாளையம், ஊடையம் மற்றும் நத்தக்காடையூர் பகுதிகளான குட்டப்பாளையம் ஆகிய கிராம பகுதிகளில் விவசாயிகளின் பயிறு வகை விதைப்பண்ணைகளுக்கு மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககசான்று உதவி இயக்குனர் பி.அ.மாரிமுத்து நேரில் வந்து ஆய்வு செய்தார்.
அப்போது அவர் விவசாயிகளிடம் கூறியதாவது:-
பயிறு வகை சாகுபடி செய்ய உள்ள விவசாயிகள் விதைப்பண்ணைகள், வயல் தர நிலைகளில் தேர்ச்சி பெற்ற நல்ல தரமான பயிறு வகைகளை விதைப் பண்ணைகளில் உற்பத்தி செய்ய முன்வர வேண்டும். நன்கு தேர்ச்சி பெற்ற பயிறுவகை விதை குவியல்கள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு, அரசு அங்கீகாரம் வழங்கி விதை சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்படும். விதைசுத்திகரிப்பு நிலையங்களில் விதைச்சான்று அலுவலர்களால் பயிறு வகை மாதிரி சேகரிக்கப்பட்டு, நல்ல தரமான விதை குவியல்களுக்கு சான்று அட்டை பொருத்தப்பட்டு தரமான விதை குவியல்களாக வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது காங்கயம் வட்ட விதை சான்று அலுவலர் ஸ்ரீ காயத்ரி, உதவி நிலை அலுவலர் கிருபானந்தன் மற்றும் சுற்று வட்டார பயிறு வகை சாகுபடி விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
- வருடத்தில் 3 தவணைகளாக தலா ரூ. 2ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.6ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.
- ஆவணங்களை சரிபார்ப்பு பணிகளை வரும் 31-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும்.
மூலனூர் :
மூலனூர் வேளாண்மை உதவி இயக்குனர் நிர்மலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- பாரத பிரதமரின் விவசாயிகளுக்கான கவுரவ ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் வருடத்தில் 3 தவணைகளாக தலா ரூ. 2ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.6ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. மூலனூர் வட்டாரத்தில் 5 ஆயிரம் விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர். இந்த ஆண்டு மே மாதம் வரை பயனாளிகளில் வங்கிக் கணக்கில் தொகை செலுத்தப்பட்டுள்ளது.
ஆகவே விவசாயிகள் தங்களின் நில உடமைகளுக்கான பட்டா, சிட்டா, ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தின் நகல் ஆகிய கிராமத்திற்கு சரிபார்ப்பு பணிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களை சந்தித்து பதிவேற்றம் செய்ய வேண்டும். இதில் மூலனூர் எடைக்கல்பாடி மற்றும் தூரம்பாடி வருவாய் கிராமங்களுக்கு சசிகுமார், கிளாங்குன்டல், குமாரபாளையம் கிராமங்களுக்கு தேசிங்கு, பொன்னிவாடி, பெரமியம், வெள்ளவாவிபுதூர் வருவாய் கிராமங்களுக்கு பாலசுப்பிரமணி, கன்னிவாடி, எரசினம் பாளையம், முளையாம்பூண்டி ,சேனாபதி பாளையம், தட்டாரவலசு வருவாய் கிராமங்களுக்கு வெங்கடேஷ், அரிக்கரன் வலசு, நஞ்சை தலையூர் ,புஞ்சை தலையூர் வருவாய் கிராமங்களுக்கு குமார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
காளிபாளையம் வருவாய் கிராமத்திற்கு செல்வராஜ், சின்னமருதூர் வருவாய் கிராமத்திற்கு அப்துல் ஜலீல் ராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆகவே அந்தந்த கிராம விவசாயிகள் தங்களுக்கு நியமிக்கப்பட்ட அலுவலர்களை சந்தித்து ஆவணங்களை சரிபார்ப்பு பணிகளை வரும் 31-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.