என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி"

    • தேனி மாவட்டத்தில் நீண்டநாட்களுக்கு பிறகு பரவலாக பெய்த கனமழையினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்
    • மேலும் பருவமழை நீடிக்கும் பட்சத்தில் அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    கூடலூர் :

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும். அதனைதொடர்ந்து தேனி மாவட்டத்தில் பருவமழை பெய்யும். ஆனால் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி 10 நாட்களுக்கு மேலாகியும் தேனி மாவட்டத்தில் குறிப்பிட்ட அளவு மழை பெய்யவில்லை. அவ்வப்போது ஒருசில இடங்களில் மட்டும் மழை பெய்துவிட்டு நின்றுவிடும்.

    இந்நிலையில் நேற்று தேனி, கூடலூர், ஆண்டிபட்டி, பெரியகுளம், அரண்மனைப்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்த கனமழையினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல்போக நெல்விவசாயம் தொடங்கி உள்ள நிலையில் தற்போது பெய்துள்ள மழை விவசாயத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்பிக்கை அடைந்துள்ளனர்.

    மேலும் பருவமழை நீடிக்கும் பட்சத்தில் அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    பெரியாறு அணையின் நீர்மட்டம் 130.80 அடியாக உள்ளது. அணையில் இருந்து 511 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4884 மி.கனஅடியாக உள்ளது.

    வைகை அணை நீர்மட்டம் 57.30 அடி, திறப்பு 869 கனஅடி, இருப்பு 3106 மி.கனஅடி.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 43.60 அடி, வரத்து 94 கனஅடி, சோத்துப்பாறை நீர்மட்டம் 82 அடி, வரத்து 8 கனஅடி, திறப்பு 3 கனஅடி.

    பெரியாறு 2.8, தேக்கடி 3, கூடலூர் 3, உத்தமபாளையம் 2.1, வைகை அணை 10, சோத்துப்பாறை 4, பெரியகுளம் 52, ஆண்டிப்பட்டி 29.6, அரண்மனைப்புதூர், வீரபாண்டி, மஞ்சளாறு மற்றும் போடியில் தலா 1 மி.மீ மழையளவு பதிவுவாகி உள்ளது.

    ×