என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திருப்பூர் செய்திகள்"
திருப்பூர்:
அவிநாசி ராயம்பாளையம் காலனியில் வசித்து வந்த பரிமளா என்ற பேரூராட்சி தற்காலிக கொசு ஒழிப்பு பணியாளர் கந்து வட்டி, கடன் சுமை தாங்காமல் தற்கொலை செய்துகொண்டது அவிநாசி பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. வேலைக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டாலோ, வருமானம் தடைபடும் போது, வட்டி செலுத்த முடியாத நிலைக்கு சிலர் தள்ளப்படுகின்றனர். இதனால் அவர்களது கடன் தொகை அதிகரித்து வட்டி சுமையும் அதிகரிக்கிறது.
திருப்பூரில் உள்ள சில சந்தைகளுக்கு வரும் வியாபாரிகள் பலர் தினமும் 30 ரூபாய் வட்டிக்கு பணம் கொடுத்து அளவுக்கு அதிகமான பணத்தை வசூலிக்கின்றனர். அதாவது காலையில் 1,000ரூபாய் கடன் வாங்கினால் மாலையில் 1,300 ஆக திருப்பி கொடுக்க வேண்டும்.இவ்வாறு நாள் வட்டி, மீட்டர் வட்டி, ஹவர்வ ட்டி என பல முறைகளில் வட்டித்தொழில் அவிநாசி, சேவூர் உட்பட திருப்பூர் மற்றும் மாவட்டம் முழுவதும் கொடி கட்டி பறக்கிறது.
கந்துவட்டி தொழிலில் யாரும் ஈடுபடக்கூடாது. கந்து வட்டியில் சிக்கி மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலையை தவிர்க்க, கிராமம் தோறும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்பாதிப்பு வந்தபின்அவர்களுக்காக குரல் கொடுப்பதை காட்டிலும், கந்துவட்டியில் சிக்கி தவிக்கும் குடும்பத்தினரை முன் கூட்டியேமீட்டெடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில்,கந்து வட்டிக்கு கடன் வாங்கி டார்ச்சருக்கு உள்ளாவோர் போலீசில் புகார் கொடுக்கலாம். அதன் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கந்துவட்டி மட்டுமின்றி, போதை பொருள் புழக்கம், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தவிர்ப்பது தொடர்பாகவும் கிராமங்கள் தோறும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இத்தகையவிழிப்புணர்வு தொடர்ந்து வழங்கப்படும்.துணிந்து புகார் அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பூர்:
மங்களூரு - சென்னை செல்லும் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (எண்.22638) கூடுதலாக 1 படுக்கை வசதி பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. இது போல் சென்னை - மங்களூரு செல்லும் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ் பிரஸ் ரெயிலில் (எண்.22637) நாளை 4-ந் தேதி முதல் 1 படுக்கை வசதி பெட்டி இணைக்கப்படும். சென்னை - மங்களூரு செல்லும் ரெயிலில் (எண்.12601) நேற்று (வியா ழக்கிழமை) முதல் கூடுதலாக 1 படுக்கை வசதி பெட்டி இணைக்கப்பட்டுள்ளது.
அதுபோல் மங்களூரு - சென்னை செல்லும் ரெயிலில் (எண்.12602) இன்று முதல் கூடுதலாக 1 படுக்கை வசதி பெட்டி இணைக்கப்படும். திருவனந்தபுரம் - சாலிமர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் (எண்.22641) இன்று முதலும், சாலிமர் - திருவனந்தபுரம் வாராந்திர எக்ஸ்பி ரஸ் ரெயிலில் (எண்.22642) வருகிற 5-ந் தேதி முதலும் 1 படுக்கை வசதி பெட்டி இணைக்கப்படுகிறது.
கன்னியாகுமரி-ஸ்ரீமாதா வைஷ்ணவ் தேவி கட்ரா வாராந்திர ரெயிலில் (எண். 16317) இன்று முதலும், ஸ்ரீமாதா வைஷ்ணவ் தேவி கட்ரா-கன்னியாகுமரி வராந் திர ரெயிலில் (எண். 16318) வருகிற 6-ந் தேதி முதலும் 1 படுக்கை வசதி பெட்டி கூடுதலாக இணைக்கப்படுகிறது. மேற்கண்ட 8 ரெயில்களிலும் நிரந்தரமாக 1 படுக்கை வசதி பெட்டி கூடுதலாக இணைக்கப்படுகிறது. இந்த ரெயில்கள் போத்தனூர், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக இயக்கப்படுகிறது. இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர்:
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தினரால் பொது மக்களுக்கு இலவசமாக செட்டாப் பாக்ஸ் குறைந்த தொகையில் உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட் டர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
சந்தாதாரர்களின் விருப்பம் இல்லாமல் அரசு செட்டாப் பாக்சை மாற்றி னாலோ அல்லது அரசு சிக்னல் இனி வராது என்று தவறான தகவலை ஆபரேட்டர்கள் கூறி மாற்றினால் உடனடியாக 0421 2971142 என்ற திருப்பூர் அரசு கேபிள் டி.வி. அலுவலகத்துக்கு புகார் தெரிவிக்கலாம்.
செட்டாப் பாக்ஸ் பழுதடைந்தாலோ, மாதாந்திர கட்டணம் செலுத்தாமல் துண்டித்திருந்தாலோ, வேறு இடத்துக்கு குடிபெயர்ந்தாலோ, தனிநபர் செட்டாப் பாக்ஸ் பயன்படுத்தினாலோ செட்டாப் பாக்ஸ், ஏ.வி. கார்டு, ரிமோட், பவர் அடாப்டர் ஆகியவற்றை உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டரிடம் ஒப்படைக்க வேண்டும்.
அவற்றை அரசு கேபிள் டி.வி. அலுவலகத்தில் ஒப்ப டைக்க வேண்டும். உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் வேறு நிறுவ னத்துக்கு செல்லும்போது, அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத்தொகை மற்றும் அரசிடம் இருந்து பெற்ற செட்டாப் பாக்ஸ்களை ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு செய்யாத ஆபரேட்டர்கள் மீது சட்டப்பூர்வமான நடவ டிக்கை எடுக்கப்படும்.
செயல்படாத செட்டாப் பாக்ஸ் கள், அனலாக் தொகை செலுத்தாமல் உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் இருக்கிறார்கள். இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை இறுதி வாய்ப் பாக கொண்டு வருகிற 20-ந் தேதிக்குள் செயல்படாத செட்டாப் பாக்ஸ்களை ஒப்படைக்க வேண்டும். அனலாக் தொகையை செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் உள்ளூர் ஆபரேட்டர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்