என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காலநிலை மாற்றம்"

    • சமீபத்தில் வெளியான கருத்துக்கணிப்பின்படி கமலா சற்று பின்தங்கியுள்ளார்.
    • தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

    உலக வல்லரசான அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்த்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளன. உக்ரைன் போர், பாலஸ்தீன போர்களுக்கு வரும் நவம்பர் 5 ஆம் தேதி நடக்க உள்ள வாக்குப்பதிவு உலக அரசியலுக்கே முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

    ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனல்டு டிரம்ப் போட்டியிடுகிறார். இரு தரப்புக்கும் பிரபலங்கள் தங்களின் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். டிரம்ப் பக்கம் தொழிலதிபர் எலான் மஸ்க் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். கமலா ஹாரிஸுக்கு பாடகி டெய்லர் ஷிப்ட் ஆகியோர் தங்கள் ஆதரவை தெரிவித்தனர். ஆனாலும் சமீபத்தில் வெளியான கருத்துக்கணிப்பின்படி கமலா சற்று பின்தங்கியுள்ளார்.

     

    இந்நிலையில் ஆஸ்கார் விருது வென்ற டைட்டானிக் பட நாயகன், ஹாலிவுட் முன்னணி நடிகர் லியோனார்டோ டி காப்ரியோ கமலா ஹாரிஸுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் பேசும் அவர், இந்த மாத தொடக்கத்தில் ப்ளோரிடா, ஜார்ஜியா, வட கரோலினா பகுதிகளில் ஹெலன் மற்றும் மில்டன் சூறாவளியால் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    அதி சக்தி வாய்ந்த இந்த அட்லாடிக் சூறாவளியால் மக்கள் தங்களின் வீடுகளையும் உறவுகளையும் இழந்துள்ளனர். 100 பில்லியன் டாலர் வரை சேதங்களை ஏற்படுத்திய இந்த அசாதாரணமான சூறாவளி காலநிலை மாற்றத்தின் விளைவே. ஆனால் டிரம்ப் காலநிலை மாற்றை தொடர்ந்து மறுக்கிறார்.

    அறிவியலையே அவர் மறுக்கிறார். பாரிஸ் காலநிலை தீர்மானத்திலிருந்து அமெரிக்காவை அவர் பின்வாங்கச் செய்தார். காலநிலை மாற்றம் நமது பூமியையும் பொருளாதாரத்தையும் அழித்துக்கொண்டிருக்கிறது. நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள நாம் செயலாற்றியாக வேண்டும். அதனால்தான் நான் கமலா ஹாரிஸ் -லி வாக்களிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • காலநிலை மாற்றத்திற்கு குழு அமைத்து இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக தமிழகம் உள்ளது.
    • கடல் அரிப்பை பாதுகாக்க அலையாற்றி காடுகள் உருவாக்கப்படுகின்றன.

    சென்னை தலைமைச்செயலகத்தில் தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக்குழுவின் 2-வது ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * காலநிலை மாற்றத்திற்கு குழு அமைத்து இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக தமிழகம் உள்ளது.

    * மனித குலம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாக காலநிலை மாற்றம் உருவெடுத்துள்ளது.

    * நீண்ட கடற்கரையை பாதுகாக்க நெய்தல் மீட்பு இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

    * கடல் அரிப்பை பாதுகாக்க அலையாற்றி காடுகள் உருவாக்கப்படுகின்றன.

    * பொருளாதார மீட்சியும், சுற்றுச்சூழல் பாதுகாப்பும் இரு கண்களாக கொண்டு செயல்பட்டு வருகிறோம் என்று கூறினார்.

    • ஒவ்வொரு ஆண்டும் காலநிலை மாற்றத்தால் உலக நாடுகள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன.
    • காலநிலை மாற்றத்தால் ஆண்டின் சராசரி வெப்ப நாட்களில் 41 நாட்கள் கூடுதலாகி உள்ளது.

    லண்டன்:

    ஒவ்வொரு ஆண்டும் காலநிலை மாற்றத்தால் உலக நாடுகள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. அந்த வகையில் காலநிலை மாற்றம் காரணமாக இந்த ஆண்டு மட்டும் (2024) உலகம் முழுவதும் 3,700 பேர் இறந்துள்ளதாக லண்டனை சேர்ந்த உலக வானிலை கண்காணிப்பகம் தகவல் தெரிவித்துள்ளது.

    மேலும், காலநிலை மாற்றத்தால் ஆண்டின் சராசரி வெப்ப நாட்களில் 41 நாட்கள் கூடுதலாகி உள்ளது. மேலும் கடும் வெயில், வறட்சி, காட்டுத்தீ, வெள்ளம் மற்றும் புயல் காரணமாக உலகநாட்டு மக்கள் கடும் அவதியடைந்து உள்ளனர். சூடான், நைஜீரியா, கேமரூன் ஆகிய நாடுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 2 ஆயிரம் பேர் இறந்துள்ளனர்.

    • பூமியின் மேற்பரப்பின் சராசரி வெப்பநிலை 1.2 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது.
    • இந்தியாவில் 700க்கும் மேற்பட்ட ஹீட்ஸ்ரோக் இறப்புகள் மற்றும் 40,000 க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகின

    இயற்கைப் பேரழிவுகள் எந்த காலத்திலும் இருந்து வரும் ஒன்று. ஆனால் சமீப காலங்களாக அதிகரித்து வரும் இயற்கை பேரழிவுகளுக்கு முக்கிய காரணமாக காலநிலை மாற்றம் விளங்குகிறது. தீவிர வானிலை நிலைமைகள், காலநிலை நெருக்கடிகளும் மக்களின் வாழ்வில் பெரும் தாக்கம் ஏற்படுத்தி வருகிறது.

    இந்த ஆண்டு மட்டும் (2024) உலகம் முழுவதும் 3,700 பேர் இறந்துள்ளதாக லண்டனை சேர்ந்த உலக வானிலை கண்காணிப்பகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், காலநிலை மாற்றத்தால் ஆண்டின் சராசரி வெப்ப நாட்களில் 41 நாட்கள் கூடுதலாகி உள்ளது.

    காலநிலை மாற்றம் என்றால் என்ன?

    காலநிலை மாற்றம் என்பது உலக அளவில் வானிலை மற்றும் வெப்பநிலையில் ஏற்படும் நீண்ட கால மாற்றமாகும். இது இயற்கையாக நிகழக்கூடியது என்றாலும், புதைபடிவ[fossil] எரிபொருட்களை எரிப்பது போன்ற மனித நடவடிக்கைகளால் 1800 களில் இருந்து காலநிலை மாற்றம் நிகழ்ந்து வருகிறது.

    ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, பூமியின் மேற்பரப்பின் சராசரி வெப்பநிலை 1.2 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது.

    உலகளாவிய வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியஸுக்கு மிகாமல் கட்டுப்படுத்தாத பட்சத்தில் ஆபத்துக்கு வழிவகுக்கும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் நூற்றாண்டின் இறுதியில் பூமி 3.1 டிகிரி செல்சியஸ் வரை வெப்பமடையும் என்று கணிக்கப்படுகிறது.

    இதற்கான முன்னறிவிப்பாக இந்த ஆண்டு உலகம் முழுவதிலும் வெப்ப அலைகள், காட்டுத்தீ, சூறாவளி, வறட்சி மற்றும் வெள்ளம் என பல்லாயிரக்கணக்கான உயிர்களை காலநிலை மாற்ற பேரழிவுகள் பலிகொண்டுள்ளது. 

    பேரழிவுகள்

    அட்லாண்டிக் கடலில், 11 சூறாவளிகள், 18 புயல்கள் ஏற்பட்டன. இதனால் அமெரிக்க பகுதிகளில், ஜூலையில் பெரில், ஆகஸ்டில் டெபி, செப்டம்பரில் ஹெலன் மற்றும் அக்டோபரில் மில்டன் ஆகிய கொடிய சூறாவளிகளால் 330-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். பில்லியன் டாலர்கள் வரை சேதம் ஏற்பட்டது.

    மே மாதம் பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 670 பேர் உயிரிழந்தனர். ஏப்ரல் வாக்கில் தெற்கு பிரேசிலில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் கிட்டத்தட்ட 60 பேர் உயிரிழந்தனர்.

    ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தானில் மே மாதத்தில் ஏற்பட்ட கனமழை, வெள்ளத்தில், 300 க்கும் மேற்பட்ட மக்களை பலிகொண்டது. 6,000 வீடுகள் முற்றாக அழித்தன.

    கேரளாவில் ஜூலையில், நிலச்சரி மற்றும் கனமழையால் வயநாடு மாவட்டத்தில் கிட்டத்தட்ட 400 பேர் இறந்தனர்.

    தென்கிழக்கு ஆசியாவில் செப்டம்பர் மாதம் ஏற்பட்ட யாகி என்ற சூப்பர் புயல், கிட்டத்தட்ட 600 பேரைக் பலிகொண்டது.

    அக்டோபர் பிற்பகுதியில் தென்கிழக்கு ஸ்பெயின் மற்றும் மேற்கு ஐரோப்பாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். வறண்ட பிரதேசமான மத்திய கிழக்கிலும் ஏப்ரலில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. துபாய் கடுமையான பாதிப்புகளை சந்தித்தது.

     

    பருவநிலை மாற்றம் வறட்சி, மழைப்பொழிவு மற்றும் வெப்பத்தால் பயிர்கள் சேதமடைந்து உணவுப் பற்றாக்குறை, உலகளவில் விவசாயத் தொழிலுக்கு இழப்புகளை அதிகரித்தது.

     வெப்ப அலை மரணங்கள்

    மழை வெள்ள பேரழிவுகளை தவிர்த்து, இந்த வருடம் கோடையில் உலகளவில் உணரப்பட்ட வெப்ப அலை ஆயிரக்கணக்கானோரை பலிகொண்டது.

    உலகளாவிய சராசரி மேற்பரப்பு காற்றின் வெப்பநிலை ஜனவரி முதல் செப்டம்பர் வரை சராசரியை விட 1.54 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது.

    உலகளாவிய சராசரி வெப்பநிலை ஜூலை 22 ஆம் தேதி 17.15 டிகிரி செல்சியஸை எட்டியது. இதுவே இந்த வருடம் பூமியில் வெப்பமான நாளாக பதிவுசெய்யப்பட்டது. ஜூலை 21 பதிவான 17.09 டிகிரி செல்ஸியஸ் இரண்டாவது வெப்பமான நாளாக பதிவானது.

    இந்தியா, வங்கதேசம், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், கம்போடியா மற்றும் மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் பருவநிலை மாற்றம் மற்றும் எல் நினோ விளைவு காரணமாக பல நாட்களாக 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலை நிலவியது. ஹீட்ஸ்ட்ரோக் வெப்ப அலைகளால் ஆசியா முழுவதும் நூற்றுக்கணக்கான இறப்புகள் பதிவாகியுள்ளன.

    ஹீட்வாட்ச் அமைப்பு வெளியிட்டுள்ள வெளியிட்ட அறிக்கைப்படி, இந்தியாவில் 700க்கும் மேற்பட்ட இறப்புகள் மற்றும் 40,000 க்கும் மேற்பட்ட ஹீட்ஸ்ரோக் பாதிப்புகள் பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்டதாகக் கூறுகிறது.

    ஜூன் மாதம் சவுதி அரேபியாவில் ஹஜ் யாத்திரையின் போது வெப்பநிலை 52 டிகிரி செல்சியஸாக உயர்ந்ததால் 1,300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    ஐரோப்பாவின் தெற்கு மற்றும் தென்கிழக்கு நாடுகளில் வெப்ப அலை காரணமாக 19 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன, குறிப்பாக கிரீஸ் மற்றும் இத்தாலியில் அதிக இறப்புகள் பதிவாகியுள்ளன.

    அமெரிக்காவின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகள் வெப்ப அலைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டு, 1,000க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவானது. வெப்பம் தொடர்பான நோய்களால் மெக்சிகோவில் 150 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளது. 

     தீர்வுதான் என்ன?

    காலநிலை மாற்றத்தால் மறைமுகமாக இதய நோய்கள், காற்று மாசுபாட்டால் ஏற்படும் சுவாச நோய்கள், பக்கவாதம், புற்றுநோய் மற்றும் காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய பல முக்கிய காரணங்கள் போன்ற கொடிய நோய்களால் உயிர்கள் பறிபோகின்றன.

    2024-ஐ திரும்பிப் பார்க்கும்போது, நாம் அவசர நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், ஒரு நாள் நமது கிரகம் மனிதகுலம் வாழத் தகுதியற்றதாக மாறும் என்பது நிரூபணமாகிறது.

    உலகளாவிய அமைப்புகளும் அரசாங்கங்களும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களுக்கு மாறுதல் மற்றும் புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதில் இருந்து பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தைக் குறைத்தல் போன்ற கடுமையான சுற்றுச்சூழல் நடவடிக்கைகளை செயல்படுத்துவதே தீர்வாகும். 

    • பேரழிவுகள் மற்றும் அவற்றின் விளைவுகளை காலநிலை மாற்றம் தீவிரப்படுத்தி வருவதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
    • உலகளாவிய சராசரியாக, கூடுதலாக 41 நாட்கள், 'ஆபத்தான வெப்பம்' பதிவாகி உள்ளது.

    2024 ஆம் ஆண்டில் வயநாடு நிலச்சரிவு உட்பட 26 உலகளாவிய பேரிடர்கள் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டவை என ஐநா சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.

    ஜூலை 2024 இல், கேரளாவின் வயநாட்டில் உள்ள சூரல்மலை மற்றும் முண்டகை பகுதிகளில் கனமழையால் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் 350 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்ததோடு ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்தனர்.

    ஐக்கிய நாடுகளின் பேரிடர் அபாயக் குறைப்பு அலுவலகம் (UNDRR), சர்வதேச காலநிலை மையத்துடன் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பேரழிவுகள் மற்றும் அவற்றின் விளைவுகளை காலநிலை மாற்றம் தீவிரப்படுத்தி வருவதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

    அதில் கடந்த 2024 ஆம் ஆண்டில் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட நிகழ்வுகளில் 3,700 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் அதிலும் வயநாடு நிலச்சரிவு உள்ளிட்ட  26 குறிப்பிடத்தக்க வானிலை நிகழ்வுகளில் லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும் காலநிலை மாற்றத்தின் காரணமாக 2024 ஆம் ஆண்டில் உலகளாவிய சராசரியாக, கூடுதலாக 41 நாட்கள், 'ஆபத்தான வெப்பம்' பதிவாகி உள்ளது.

    எல் நினோ போன்ற இயற்கை நிகழ்வுகளை விஞ்சி, கடந்த ஆண்டின் பல தீவிர வானிலை நிகழ்வுகளில் காலநிலை மாற்றம் மிகவும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதாக அறிக்கை கூறுகிறது.

    வரலாறு காணாத வகையில் அமேசானில் ஏற்பட்ட வறட்சி இதை பிரதிபலிக்கும் ஒரு எடுத்துக்காட்டாகும். மனித பயன்பாட்டால் ஏற்படும் புவி வெப்பமயமாதல் காலநிலை மாற்றத்திற்கான முக்கிய காரணமாக அறிக்கை குறிப்பிடுகிறது.  

    • காலநிலை மாற்றத்தை கல்வித்துறை மூலம் புகட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
    • காலநிலை மாற்றத்தால் ஏற்படக் கூடிய பிரச்சனைகளின் தீவிரத்தை உணர வேண்டும்.

    சென்னை:

    சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை சார்பில் 2 நாட்கள் தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்பின் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

    * காலநிலை மாற்றம் என்பது தற்போது உலக நாடுகள் எதிர்கொள்ளும் சவாலாக உள்ளது.

    * காலநிலை மாற்றத்தை கல்வித்துறை மூலம் புகட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

    * இந்தியாவிலேயே முதல் முறையாக கால நிலை மாற்றம் குறித்து ஆராய மாநாடு நடத்தியது தமிழ்நாடு மட்டும்தான். காலநிலை மாற்றம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். தற்போது வரை தமிழ்நாட்டில் இரு முறை காலநிலை உச்சிமாநாடுகள் நடைபெற்றுள்ளன.

    * தமிழ்நாட்டில் உள்ள எல்லா பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் ஏற்படுத்தப்படும். இயற்கை வளங்களை பாதுகாக்க அக்கறை கொண்ட சமூகமாக மாற வேண்டும்.

    * காலநிலை மாற்றத்தால் ஏற்படக் கூடிய பிரச்சனைகளின் தீவிரத்தை உணர வேண்டும்.

    * வயநாடு மற்றும் திருவண்ணாமலையில் ஏற்பட்ட நிலச்சரிவை மறந்திருக்க முடியாது.

    * வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவித்து அரசிதழில் வெளியிட்டுள்ளோம். வெப்ப அலை தாக்கத்தின் போது மாநில பேரிடர் மேலாண்மை நிதியை பயன்படுத்த நடவடிக்கை.

    * நீர்நிலைகள் மறுசீரமைப்பு, பல்லுயிர் பெருக்கம் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார். 

    • உலக வெப்பநிலையை தணிக்கக் கூடிய ‘லா நினோ’ வளிமண்டலப் போக்கு நிலவியது.
    • ஆர்க்டிக் கடல் பனி ஜனவரி மாதத்திற்கான மிகக் குறைந்த அளவை எட்டியது.

    உலகின் மிக வெப்பமான ஆண்டாக 2024 பதிவானது. இந்நிலையில் 2025 அந்த சாதனையை முறியடிக்க உள்ளது. ஆண்டில் தொடக்கத்திலேயே அதற்கான முன்னறிவிப்பாக ஜனவரி மாதத்தின் சாதனை அமைந்துள்ளது.

    ஐரோப்பிய யூனியன் நிதியுதவி பெற்ற கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்ற ஆய்வு நிறுவனம்(C3S) நேற்று வெளியிட்ட அறிக்கையின்படி ஜனவரி 2025 உலக வரலாற்றில் மிக வெப்பமான மாதமாக பதிவாகியுள்ளது.

    2025 ஜனவரியில் உலக வெப்பநிலையை தணிக்கக் கூடிய 'லா நினோ' வளிமண்டலப் போக்கு நிலவினாலும், புவியின் வெப்பநிலை இதுவரை எந்தவொரு ஜனவரி மாதமும் இல்லாத அளவில் பதிவாகியுள்ளது

    2025 ஜனவரி மாதத்தில் சராசரி வெப்பநிலை, தொழில்துறை புரட்சிக்கு முன் (1850 க்கு முன்) பூமியின் சராசரி வெப்பநிலையை விட 1.75 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது. 1991-2000 ஜனவரி சராசரி வெப்பநிலையை விட 2025 ஜனவரி சராசரி வெப்பநிலை 0.79 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது.

    ஆர்க்டிக் கடல் பனி ஜனவரி மாதத்திற்கான மிகக் குறைந்த அளவை எட்டியது. இது சராசரியை விட 6% குறைவாகும். "ஜனவரி 2025 விசித்திரனமான மாதம்" என்று C3S இன் துணை இயக்குநர் சமந்தா பர்கெஸ் தெரிவித்துள்ளார்.

    • நவ்ரு உலகின் மூன்றாவது சிறிய நாடாகும்.
    • நவ்ரு, மொத்தமாக 20 சதுர கிமீ பரப்பளவை மட்டுமே கொண்டுள்ளது.

    தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு சிறிய தீவு நாடான நவ்ரு, வெளிநாட்டினருக்கு 1,05,000 டாலர் இந்திய மதிப்பில் ரூ.91 லட்சத்திற்கும் மேல்) செலுத்தி நாட்டின் குடியுரிமையை வழங்கும் "தங்க பாஸ்போர்ட்" திட்டத்தை தொடங்கியுள்ளது.

    உலகின் மூன்றாவது சிறிய நாடான நவ்ரு, மொத்தமாக 20 சதுர கிமீ பரப்பளவை மட்டுமே கொண்டுள்ளது. பசுபிக் பெருங்கடலில் கடல் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் நவ்ரு நாட்டின் கடற்கரை பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    ஆதலால் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள நிதி திரட்டுவதற்காக நவ்ரு நாடு இந்த திட்டத்தை தொடங்கியுள்ளது.

    திரட்டப்படும் நிதியின் மூலம் நவ்ரு நாட்டின் 90% மக்களை மேடான இடத்திற்கு மாற்ற அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

    நவ்ரு நாட்டின் குடியுரிமை இருந்தால், இங்கிலாந்து, ஹாங்காங், சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட 89 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

    காலநிலை மாற்றத்தால் ஏற்படும் ஆபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவேதான் மைதானத்திற்குள் வந்ததாக தெரிவித்தார்.
    பாரிஸ்:

    பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் பிரெஞ்ச் ஓபன் போட்டியின் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டியில் நார்வே வீரர் காஸ்பர் ரூட், குரோஷிய வீரர் மரின் சிலிச் மோதினர்.

    இந்த போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது பெண் ஒருவர் மைதானத்திற்குள் நுழைந்து தனது கழுத்தை, டென்னிஸ் வலையில் கட்டிக்கொண்டார். அவரது ஆடையில் ‘இன்னும் 1028 நாட்கள் மட்டுமே இருக்கிறது’ என ஐநா குறிப்பிட்ட காலநிலை குறித்த எச்சரிக்கை வாசகம் அதில் எழுதியிருந்தது.

    இதையடுத்து அவரை பாதுகாப்பு அதிகாரிகள் அழைத்து சென்றனர். இதுகுறித்து அவரிடம் விசாரித்தபோது காலநிலை மாற்றத்தால் ஏற்படும் ஆபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவேதான் மைதானத்திற்குள் வந்ததாக தெரிவித்தார். 
    ×