என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Temple Renovation"

    • பணிகள் முடிந்து கோவிலின் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • அம்பாள் சன்னதி வெளிபிரகார பணிகளை சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கையில் பிரசித்தி பெற்ற மங்களநாதர் கோவில் உள்ளது. உலகில் முதலில் தோன்றிய கோவில் என்ற வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலில் மங்களநாதர் மற்றும் மங்களநாயகி அம்மன் ஆகியோர் எழுந்தருளி உள்ளனர். இந்த கோவிலின் மற்றொரு சிறப்பு இங்கு ஆடும் திருக்கோலத்திலான அபூர்வ மரகத நடராஜர் சிலை அமைந்துள்ளது. மத்தளம் முழங்க மரகதம் உடைபடும் என்பதால் ஆண்டு முழுவதும் இந்த சிலையின் மீது சந்தன கவசம் பூசப்பட்டு வருடத்தில் ஒருநாள் ஆருத்ரா தரிசனத்தன்று சந்தனம் களைந்து பக்தர்களின் தரிசனத்திற்கு வைக்கப்படும்.

    இந்த மங்களநாதர் கோவில் சுவாமி சன்னதி முதல் பிரகாரம் கடந்த சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக முழுமை பெறாமல் காட்சி அளித்து வந்தது. குறிப்பாக சுவாமி சன்னதி பிரகாரத்தில் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியிலும், வடக்கு மற்றும் தெற்கு பகுதியிலும் பெரும்பாலான தூண்கள் மற்றும் மேல் தளங்களில் கற்கள் இல்லாமலும் முழுமை பெறாமலேயே காட்சி அளித்து வந்தது.

    இந்தநிலையில் சுவாமி சன்னதியின் முதல் பிரகாரத்தில் நன்கொடை மூலம் ரூ.1 கோடியே 80 லட்சம் நிதியில் திருப்பணிகள் நடைபெற்று 4 ஆண்டுகளுக்கு பின்னர் நிறைவடைந்தன. தற்போது மங்களநாயகி அம்பாள் சன்னதி உள்பிரகாரம் சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கோவிலின் தூண்கள் மற்றும் சுவர்கள் சேதமடையாமல் அதன் தன்மை குறையாமல் சுண்ணாம்பு, கருப்பட்டி, கடுக்காய் உள்ளிட்டவைகளை கொண்டு சீரமைக்கப்பட்டு வருகின்றன.

    இந்த சீரமைப்பு பணிக்காக தேவைப்படும் மணல் தஞ்சையில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது. பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் பணிகள் முடிந்து கோவிலின் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்காக கிழக்கு ராஜகோபுரம், அம்மன் சன்னதி கோபுரம், நடராஜர் சன்னதி கோபுரம், ராஜ கோபுரம் ஆகியவற்றில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அம்பாள் சன்னதி வெளிபிரகார பணிகளை சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நந்தி மண்டப பிரகாரம் அதன் பழைமை மாறாமல் புதுப்பிக்கும் பணி முடிவடைந்துள்ளது.

    திருஉத்தரகோசமங்கை கோவிலின் மராமத்து மற்றும் சீரமைப்பு பணிகள் அனைத்தையும் விரைந்து முடித்து வரும் நவம்பர் அல்லது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானம் சார்பில் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

    • மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி தேவி கோட்டத்தில் வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது.
    • 7 நிலை ராஜகோபுரம் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது.

    மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி தேவி கோட்டத்தில் வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ராஜகோபுரம் இல்லாமல் இருந்தது. இந்தநிலையில் கோவில் நிதியில் இருந்து 7 நிலை ராஜகோபுரம் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் கட்டுமான பொருட்களின் விலை உயர்வு காரணமாக திருப்பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

    இந்தநிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆய்வு செய்து ராஜகோபுரம் அமைக்கும் பணி யை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். தொடர்ந்து கோவில் சார்பில் ராஜகோபுர பணிக்காக உபயதாரர்களின் உதவியை நாடினர். கோவை, திருப்பூர், ஈரோடு பகுதி உபயதாரர்கள் ராஜகோபுரம் அமைப்பதற்காக ரூ.5 கோடியே 30 லட்சம் நன்கொடை வழங்கினர்.

    இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின், 7 நிலை ராஜகோபுர திருப்பணிகளை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து தமிழக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் க.முரளிதரன் வழிகாட்டுதலின் பேரில், செயற்பொறியாளர் மதிவாணன், கோவை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் மண்டல ஸ்தபதி ராமகிருஷ்ணன் தலைமையில் கோவில் பரம்பரை அறங்காவலர் ஆர்.வசந்தா, கோவில் உதவி ஆணையரும், செயல் அலுவலருமான கைலாசமூர்த்தி ஆகியோர் மேற்பார்வையில் ராஜகோபுர ்பணிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக கற்கள் கொண்டு வரப்பட்டு 2-வது பகுதி பாத வர்க்கம் அமைப்பதற்காக கற்களில் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய வரி நேர்த்தியாக அமைக்கும் பணியில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    • உப்பளம் தொகுதி வாணரப்பேட்டையில் வலம்புரி சுந்தர விநாயகர் கோவில் உள்ளது.
    • இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதி வாணரப்பேட்டையில் வலம்புரி சுந்தர விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக முதல் கட்டமாக ஏற்கனவே இந்து அறநிலைத்துறை மூலம் ரூ. 1¾ லட்சம் நிதியை கென்னடி எம்.எல்.ஏ. பெற்று தந்தார்.

    இந்த நிலையில் 2-வது கட்டமாக கோவில் திருப்பணிக்கு நிதி வழங்க வேண்டும் என்று கென்னடி எம்.எல்.ஏ. முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் கோரிக்கை விடுத்தார். அதன்படி 2-வது கட்டமாக ரூ. 1¾ லட்சத்திற்கான காசோலையை முதல்-அமைச்சர் ரங்கசாமி கென்னடி எம்.எல்.ஏ.விடம் வழங்கினார்.

    இதனை கோவில் திருப்பணிக்குழு வினரிடம் கென்னடி எம்.எல்.ஏ. அளித்தார். நிகழ்ச்சியின் போது கோவில் நிர்வாகக்குழு கலியபெருமாள் செயலாளர் விஜயன், பொருளாளர் வாசு தொகுதி தி.மு.க. செயலாளர் சக்தி வேல் துணைச்செயலாளர் ராஜி, கிளைச்செயலாளர் செல்வம் மற்றும் காத்தலிங்கம், ராகேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

    • 6-ந்தேதி பாலாலய நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மக்கள் திரளாக கலந்துகொண்டு அங்காளம்மனை வழிபட்டனர்.

    திருப்பூர் மாவட்டம் அவினாசி தாலுகா மாட்டூர் என சுந்தரமூர்த்தி நாயன்மாரால் தேவார வைப்புத்தலமாக பாடல் பெற்றதும் நடுச்சிதம்பரம் என ஆன்மிகப் பெரியோர்களால் போற்றத்தக்கதுமான சேவூரில் வாலியினால் பூஜிக்கப்பட்ட ஸ்ரீவாலிஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இத்தகைய சிறப்புடைய, ஆன்மிக தலமான சேவூரில், தென்கரையில் பழங்கால தெய்வமான அங்காளம்மன் கோவில் உள்ளது. சேவூர் அங்காளம்மன் கோவில் குறித்து அதன் பரம்பரை பூசாரி பொ.ஈஸ்வரமூர்த்தி கூறியதாவது:-

    சேவூரின் தென்கரையில் பல குலத்தவருக்கு வேண்டுவோருக்கு வேண்டும் வரம் அளித்து வரும் சுமார் 850 ஆண்டுகளுக்கு முற்பட்ட தெய்வமான அங்காளம்மன் கோவிலில் பரிவார மூர்த்திகளாக விநாயகர், முருகர், பேச்சியம்மன், வராகி, வீரபத்திரர், கன்னிமார், அகோர வீரபத்திரர் ஆகிய மூர்த்திகள் அமையப்பெற்றது சிறப்பு வாய்ந்ததாகும்.

    அங்காளம்மனை வழிபடுவோருக்கு பசி பிணியை நீக்கி பசுமை வரம் அளிப்பவள். இக்கோவிலில் கும்பாபிஷேக திருப்பணி தொடங்குவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் கடந்த மாதம் 25-ந்தேதி நடைபெற்றது. இதில் திருப்பணி தொடங்கி விரைவில் கும்பாபிஷேகம் செய்வதற்காக, ஜூலை 6-ந் தேதி பாலாலய சிறப்பு பூஜை செய்வது என முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி 6-ந்தேதி கோவில் குடமுழுக்கு திருப்பணி செய்வதற்கான பாலாலய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விஷ்வக்சேன ஆராதனம், புண்ணியாவாசனை, கலச ஆவாஹனம், சுதர்சனஹோமம், திரவ்யாஹீதி, பூர்ணாஹீதி, சாற்றுமுறை, மஹாதீபாராதனை நடைபெற்று பாலாயம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில், குலதெய்வத்திற்கு சம்பந்தப்பட்ட அனைத்து சமுதாய மக்கள் திரளாக கலந்துகொண்டு அங்காளம்மனை வழிபட்டனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் சொல்லி யாக பூஜை நடத்தினர்.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    அவினாசியில் உள்ள அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மையானது.

    இங்கு கருணாம்பிகை சமேத அவினாசிலிங்கேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் பல்வேறு கல்வெட்டுகள் உள்ளன. சுந்தரமூர்த்தி நாயனாரால் பதிகம்பாடி முதலை உண்ட பாலகனை உயிருடன் மீட்ட அதிசயம் நடந்த திருத்தலமும் இதுவே.

    12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பது ஐதீகம். சிறப்பு வாய்ந்த இக்கோவில் கும்பாபிஷேகம் நடந்து 15 ஆண்டுகள் கடந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது

    அதன்படி கோவில் பரிவார சன்னதி விமானங்கள் பாலாலய பூஜை நேற்று இரவு 7 மணி அளவில் கோவில் மண்டபத்தில் யாகபூஜை நடந்தது.

    கோவில் சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் சொல்லி யாக பூஜை நடத்தினர்.

    இதில் குமரகுருபர சுவாமிகள், அவினாசி காமாட்சி தாச சுவாமிகள், கோவில் அறங்காவலர் குழு தலைவர் டாக்டர்ஆ.சக்திவேல், அறங்காவலர்கள் பொன்னுசாமி, ரவி, பிரகாஷ் ஆறுமுகம், கார்த்திகா, உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    வாலாந்தூர் அங்காள பரமேசுவரி கோவில் ராஜ கோபுரத்திற்கு ரூ. 35 லட்சத்தில் கதவு தயார் செய்யப்பட்டு உள்ளது. இதனை ஊர்வலமாக எடுத்துச்சென்று பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது வாலாந்தூர். இந்த ஊரில் புதிதாக கட்டப்பட்டு உள்ள அங்காளபரமேசுவரி கோவில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் 8-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதன் ஒரு பகுதியாக அந்த கோவிலில் கட்டப்பட்ட ராஜ கோபுரத்திற்கு ரூ.35 லட்சம் ரூபாய் மதிப்பில் தயாரிக்கப்பட்ட கதவை நாட்டாமங்கலத்தில் இருந்து ஆதிகால வழக்கப்படி ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. அப்போது பெண்கள் கையில் வேப்பிலையுடன் ஆடி வந்தனர்.

    மேலும் கொண்டுவரப்பட்ட கதவிற்கு பெண்கள் ஆரத்தி எடுத்து மஞ்சள் நீரை தெளித்து வரவேற்றனர். அதன் பின்னர் ராஜகோபுரத்தில் அந்த கதவை பொருத்தி ஏராளமான பக்தர்கள் வணங்கி வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

    மதுரையை அடுத்த அழகர்மலை நூபுர கங்கை ராக்காயி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்துக்காக பாலாலய பூஜையுடன் திருப்பணி தொடங்கியது.
    மதுரையை அடுத்த அழகர்மலை உச்சியில் கள்ளழகர் கோவிலின் உபகோவிலான பிரசித்தி பெற்ற ராக்காயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு வற்றாத நீரூற்றாக வழிந்து கொண்டிருப்பது நூபுர கங்கை எனும் புனித தீர்த்தமாகும். ராக்காயி அம்மன் திருப்பாதம் பகுதியில் மேற்கு திசைபார்த்து வழிந்து கொண்டிருக்கும் தீர்த்தம் அபூர்வமானது. இந்த திருத்தலத்தில் கும்பாபிஷேகம் நடத்த அரசும், அறநிலையத் துறையும் முடிவு செய்தது. அதன்படி பல ஆண்டு காலத்திற்கு பின்பு நேற்று முன்தினம் இந்த கோவிலில் பூர்வாங்க பூஜைகள் நடந்தன.

    இதை தொடர்ந்து நேற்று காலையில் புண்யாகவாசனம், மகாபூர்ணாகுதி உள்ளிட்ட பல்வேறு பூஜைகள், வேத மந்திரங்கள், மேள தாளம் முழங்க தொடங்கியது, மேலும் யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த நூபுர கங்கை புனித தீர்த்த குடங்களை கோவில் உள் பிரகாரத்திலே ஊர்வலமாக பட்டர்கள் எடுத்து சென்றனர். பின்னர் பாலாலய பூஜைகள், முகூர்த்தக்கால் நடும் பணியும் நடந்தது. இதை தொடர்ந்து திருப்பணி தொடங்கியது. இந்த பூஜைகள் நிகழ்வின்போது பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. பின்னர் காலை 11 மணிக்கு பிறகு காத்திருந்த ஏராளமான பக்தர்கள் நூபுர கங்கையில் நீராட ேகாவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    நீண்ட வரிசையில் சென்று நூபுர கங்கை தீர்த்தத்தில் புனித நீராடி, பாலாலய பூஜைகள் நடைபெற்ற யாகசாலையையும் பார்த்து தரிசனம் செய்து சென்றனர். விழாவில் முன்னதாக துணை ஆணையர் ராமசாமி, நகை சரிபார்க்கும் அலுவலர் சுவாமிநாதன், தக்கார் பிரதிநிதி நல்லதம்பி, கண்காணிப்பாளர்கள் சேகர், பிரதிபா, அருள்செல்வன், மற்றும் உபயதாரர்கள், கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
    ×