என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ragi Recipes"

    • கேழ்வரகில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று தட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு - அரை கிலோ,

    வறுத்த உளுந்து - 50 கிராம்,

    கடலைப் பருப்பு - 50 கிராம்,

    உப்பு, மிளகாய்த் தூள், எண்ணெய் - தேவையான அளவு.

    செய்முறை:

    * கேழ்வரகை அரைத்து மாவாக்கிக்கொள்ளவும்.

    * இந்த மாவுடன் வறுத்த உளுந்து சேர்த்து, நன்றாக அரைக்கவும்.

    * அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் உப்பு, மிளகாய்த் தூள், கடலைப் பருப்பைச் சேர்த்து, நன்றாகக் கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும்.

    * மாவை சிறிது எடுத்து சிறிய அளவில் உருண்டையாக உருட்டி, வாழை இலையில் போட்டு, மெல்லியதாகத் தட்டிக்கொள்ளவும்.

    * கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து தட்டி வைத்துள்ள தட்டைகளை ஒவ்வொன்றாகப் போட்டு, பொரித்து எடுக்கவும்.

    * சூப்பரான ஸ்நாக்ஸ் கேழ்வரகுத் தட்டுவடை ரெடி.

    * இதை காற்று போகாத டப்பாவில் போட்டு வைத்து 1 வாரம் வரை பயன்படுத்தலாம்.

    • கேழ்வரகில் சத்தான பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று கேழ்வரகு பக்கோடா செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - 100 கிராம்,

    அரிசி மாவு - ஒரு டீஸ்பூன்,

    தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன்,

    வெங்காயம் - 2

    பச்சை மிளகாய் - 1

    இஞ்சி - சிறிய துண்டு

    கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு,

    உப்பு - தேவையான அளவு,

    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

    செய்முறை :

    * வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவை போட்டு அதனுடன் அரிசி மாவு, தயிர், வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, இஞ்சி - கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கெட்டியாகக் கலக்கவும்.

    * கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை அதில் கிள்ளிப் போட்டு பக்கோடாக்களாக பொரித்துக் கொள்ளவும்.

    * சூப்பரான சத்தான கேழ்வரகு பக்கோடா ரெடி.

    • குழந்தைகளுக்கு இந்த டிபன் மிகவும் பிடிக்கும்.
    • கேழ்வரகில்(ராகி) அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.

    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு சேமியா - 1 பாக்கெட்

    உப்பு - தேவையான அளவு

    தேங்காய் - தேவையான அளவு

    ஏலக்காய் தூள் - கால் தேக்கரண்டி

    வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை - தேவையான அளவு

    செய்முறை :

    தேங்காயை துருவிக்கொள்ளவும்.

    கால் கப் தண்ணீரில் உப்பு கலந்து அதை கேழ்வரகு சேமியாவில் தெளித்து 5 நிமிடம் ஊற விடவும்.

    பின்னர் ஊறிய கேழ்வரகு சேமியாவை இட்லி தட்டில் வேக வைத்து கொள்ளவும்.

    வெந்ததும் அதில் வெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரை, ஏலக்காய் தூள், தேங்காய் துருவல் சேர்த்து கலந்து பரிமாறவும்.

    சத்தான கேழ்வரகு சேமியா புட்டு ரெடி.

    • கேழ்வரகில் பல்வேறு சத்தான ரெசிபிகளை செய்யலாம்.
    • கேழ்வரகில் ஆப்பம் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு - 1 கப்

    சாதம் - 1/4 கப்

    சோடா மாவு - 1/4 டீஸ்பூன்

    துருவிய தேங்காய் - 3/4 கப்

    நாட்டுச்சர்க்கரை அல்லது கருப்பட்டி - 1 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    கேழ்வரகு மாவை சலித்து அதை ஒரு கடாயில் கொட்டி மிதமான தீயில் சூடேற பிரட்டி எடுத்துக்கொள்ளுங்கள். அதை ஆற வையுங்கள்.

    பின் மிக்ஸியில் சாதம், தேங்காய், நாட்டுச்சர்க்கரை சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

    தற்போது அதில் பிரட்டி வைத்துள்ள மாவையும் சேர்த்து கொஞ்சம் தண்ணீரும் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

    தற்போது அதை ஒரு பாத்திரத்தில் கொட்டி சோடா மாவு மற்றும் உப்பு சேர்த்து கரைத்து மூடி ஓரமாக வையுங்கள்.

    இது 8 மணி நேரம் ஊற வேண்டும்.

    மறுநாள் நன்கு புளித்து மாவு தயார் நிலையில் இருக்கும். நன்கு கிளறி ஆப்ப சட்டியில் ஊற்றி சுட்டு எடுங்கள்.

    அவ்வளவுதான் கேழ்வரகு ஆப்பம் தயார்.

    இதற்கும் தேங்காய்பால் சூப்பராக இருக்கும்.

    • சிறுதானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
    • தினமும் சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது நல்லது.

    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு - 2 கப்

    சாதம் - அரை கப்

    சோடா மாவு - அரை டீஸ்பூன்

    துருவிய தேங்காய் - 1 1/2 கப்

    நாட்டுச்சர்க்கரை - 2 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    கேழ்வரகு மாவை சலித்து அதை ஒரு கடாயில் கொட்டி மிதமான தீயில் வாசனை வரும் வரை வறுத்து ஆற வையுங்கள்.

    மிக்ஸியில் சாதம், தேங்காய், நாட்டுச்சர்க்கரை சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

    பின்னர் அதனுடன் வறுத்த கேழ்வரகு மாவை போட்டு கொஞ்சம் தண்ணீரும் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

    தற்போது அதை ஒரு பாத்திரத்தில் கொட்டி அதில் சோடா மாவு மற்றும் உப்பு சேர்த்து கரைத்து 8 மணி நேரம் புளிக்க விடவும்.

    மறு நாள் நன்கு புளித்து மாவு தயார் நிலையில் இருக்கும்.

    ஆட்ட கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் தடவி மாவை ஊற்றி சுட்டு எடுங்கள்.

    அவ்வளவுதான் கேழ்வரகு ஆப்பம் தயார்.

    இதற்கும் தேங்காய்பால், முட்டை குருமா சூப்பராக இருக்கும்.

    • நீரிழிவு நோயாளிகள் கேழ்வரகை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. 
    • ஓட்ஸில் நார்ச்சத்து நிறைந்துள்ளது.

    தேவையான பொருட்கள் :

    ஓட்ஸ், கேழ்வரகு மாவு - தலா ஒரு கப்,

    மிளகாய்த் தூள் - கால் டீஸ்பூன்,

    பச்சை மிளகாய் - 2,

    பெரிய வெங்காயம் - ஒன்று

    கேரட் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்,

    தேங்காய் துருவல் - ஒரு டேபிள் ஸ்பூன்,

    பொட்டுக் கடலை மாவு - ஒரு டேபிள் ஸ்பூன்,

    கொத்தமல்லித்தழை - சிறிதளவு,

    தயிர் - ஒரு டேபிள் ஸ்பூன்,

    நெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    வெங்காயம், கொத்தமல்லித்தழை, ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ், கேழ்வரகு மாவை போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித்தழை, ப.மிளகாயை போட்டு நன்றாக கலக்கவும்.

    பின்னர் அதனுடன் கேரட் துருவல், தேங்காய் துருவல், பொட்டுக்கடலை மாவு, தயிர் சேர்த்து சிறிதளவு நீர் விட்டுக் கலந்து நன்கு கெட்டியாக பிசையவும். 

    கொஞ்சம் மாவை எடுத்து சிறு உருண்டயாக்கி, வாழையிலை (அ) பிளாஸ்டிக் கவரில் நெய் தடவி, அதன் மீது உருண்டையை வைத்து ரொட்டியாக தட்டவும்.

    தோசைக் கல்லை அடுப்பில் வைத்து நெய் தடவி சூடானதும் ரொட்டியைப் போட்டு, சுற்றிலும் நெய் விட்டு, வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

    இப்போது சூப்பரான ஓட்ஸ் கேழ்வரகு ரொட்டி ரெடி.

    இதற்கு தொட்டுக்கொள்ள தக்காளி சட்னி அருமையாக இருக்கும்.

    • இந்த ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
    • கேழ்வரகில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.

    தேவையான பொருட்கள்

    ராகி சேமியா - 100 கிராம்,

    உருளைக்கிழங்கு - 3,

    கேரட் - 1,

    வெங்காயம் - 1,

    கரம்மசாலாத்தூள், மஞ்சள் தூள், உப்பு, மிளகாய்த்தூள் - தேவைக்கு,

    வறுத்து ஒன்றிரண்டாகப் பொடித்த வேர்க்கடலை - 4 டீஸ்பூன்,

    சோம்பு - 1/4 டீஸ்பூன்,

    எண்ணெய் - 50 கிராம்,

    மைதா - 4 டேபிள்ஸ்பூன்,

    கொத்தமல்லி - சிறிது.

    செய்முறை

    உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாத்திரத்தில் மைதா மாவு, தண்ணீர், சிறிது உப்பு சேர்த்து தண்ணீராகக் கரைத்துக் கொள்ளவும்.

    ராகி சேமியாவை மிக்சியில் ரவை பதத்திற்குப் பொடித்துக் கொள்ளவும்.

    மசித்த உருளைக்கிழங்குடன் துருவிய கேரட், வெங்காயம், உப்பு, மிளகாய்த்தூள், கரம்மசாலாத்தூள், சோம்பு, பொடித்த வேர்க்கடலை, கொத்தமல்லி சேர்த்து நன்கு பிசைந்து சிறு உருண்டை அளவு எடுத்து விரும்பிய வடிவில் தட்டி வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் செய்து வைத்த கட்லெட்டுகளை மைதா கரைசலில் முக்கி, பொடித்த ராகி சேமியாயில் போட்டு பிரட்டி, சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    இப்போது சூப்பரான ராகி சேமியா வெஜிடபிள் கட்லெட் ரெடி.

    • டயட்டில் இருப்பவர்களுக்கு சிறந்த உணவு இது.
    • சர்க்கரை நோயாளிகளுக்கும் இந்த உணவு சிறந்தது.

    தேவையான பொருட்கள்

    கேழ்வரகு - 1 கப்

    கொள்ளு - கால் கப்

    ஜவ்வரிசி - 2 டீஸ்பூன்

    வெந்தயம் - 1 டீஸ்பூன்

    உப்பு - சுவைக்கு

    நெய் அல்லது நல்லெண்ணெய் - தேவைக்கு

    செய்முறை

    கேழ்வரகு, கொள்ளு, வெந்தயம், ஜவ்வரிசியை நன்றாக கழுவி தண்ணீர் ஊற்றி 8 மணிநேரம் ஊற வைக்கவும்.

    ஊற வைத்ததை மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.

    அரைத்த மாவில் உப்பு சேர்த்து புளிக்க விடவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து கல் சூடானதும் மாவை மெல்லிய தோசையாக வார்த்து சுற்றி நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு 1 நிமிடம் மூடி போட்டு வேக விட்டு எடுத்து பரிமாறவும்.

    இப்போது சூப்பரான கேழ்வரகு கொள்ளு தோசை ரெடி.

    இதற்கு தொட்டுக்கொள்ள சட்னி, தக்காளி சட்னி சூப்பராக இருக்கும்.

    • சிறுதானியங்களை அடிக்கடி சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
    • இந்த கஞ்சியை குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் அருந்தலாம்.

    தேவையான பொருட்கள்:

    சாமை, திணை, வரகு, சிவப்பரிசி, பாசிப்பருப்பு தலா - 50 கிராம்,

    மோர் - 3 கப்,

    தண்ணீர் - 4 கப்,

    சின்ன வெங்காயம் - 8,

    சீரகம் - 1 டீஸ்பூன்,

    கறிவேப்பிலை - தேவையான அளவு,

    பச்சைமிளகாய் - 3,

    கடுகு - 1 டீஸ்பூன்,

    நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்,

    கொத்தமல்லித்தழை,

    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    * சின்ன வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கொத்தமல்லிதழை, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * சாமை, தினை, வரகு, சிவப்பரிசி, பச்சைப்பருப்பு இவற்றைத் தனித்தனியாக கடாயில் வறுத்து சூடு ஆறியதும் மிக்ஸியில் போட்டு குருணையாகப் பொடிக்க வேண்டும்.

    * இதில் 4 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, குக்கரில் 3 விசில் வந்ததும் இறக்கவும்.

    * கடாயில் 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், பச்சை மிளகாய் தாளித்து சின்ன வெங்காயத்தைப் போட்டு, பொன்னிறமாக வதக்கி, கஞ்சியில் கொட்டவும்.

    * பிறகு அதில் மோர், கொத்தமல்லிதழை சேர்த்து நன்றாக கலந்து பருகவும்.

    * உடலுக்கு ஆரோக்கியம் இந்த கஞ்சியை குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் அருந்தலாம்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
    • பச்சை பயறு, கேழ்வரகில் நார்ச்சத்து, கால்சியம், புரதம் அதிகம் நிறைந்துள்ளது.

    தேவையான பொருட்கள்

    கேழ்வரகு - அரை கப்

    பச்சை பயறு - முக்கால் கப்

    இஞ்சி - சிறிய துண்டு

    சீரக தூள்- அரை டீஸ்பூன்

    ப.மிளகாய் - 2

    கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு

    தக்காளி - 1

    வெங்காயம் - 1

    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    கேழ்வரகு, பச்சை பயறை நன்றாக கழுவி 4 மணிநேரம் ஊறவைக்கவும்.

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஊறவைத்த கேழ்வரகு, பச்சை பயறை மிக்சிஜாரில் போட்டு அதனுடன் தோல் நீக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, ப.மிளகாய் சேர்த்து தோசை மாவு பதத்தில் அரைத்து கொள்ளவும்.

    அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதனுடன் சீரகத்தூள், நறுக்கிய வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை சற்று தடிமனாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    இப்போது சத்தான சுவையான கேழ்வரகு பச்சை பயறு தோசை ரெடி.

    இதற்கு தொட்டுக்கொள்ள கார சட்னி அருமையாக இருக்கும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • தினமும் கேழ்வரகை உணவில் சேர்த்து கொள்வது நல்லது.
    • பீட்ரூட்டை தினமும் உணவில் சேர்த்து வந்தால், இரத்த சோகை நோய் வருவதை தடுக்கலாம்.

    தேவையான பொருட்கள்

    கேழ்வரகு மாவு - 100 கிராம்

    அரிசி மாவு - ஒரு மேசைகரண்டி

    ரவை - ஒரு தேக்கரண்டி

    வெங்காயம் - 1

    துருவிய பீட்ரூட் - 3 மேசைகரண்டி

    ப.மிளகாய் - ஒன்று

    கொத்தும்மல்லி - சிறிதளவு

    உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    * வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவை போட்டு அதனுடன் அரிசி மாவு, ரவை, வெங்காயம், துருவிய பீட்ரூட், ப.மிளகாய், கொத்தும்மல்லி, உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

    * அடுத்து அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து 30 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.

    * தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்துஎடுத்து பரிமாறவும்.

    * இப்போது சூப்பரான கேழ்வரகு பீட்ரூட் தோசை ரெடி.

    * இதற்கு தொட்டு கொள்ள புதினா துவையல் மற்றும் இட்லி மிளகாய் பொடியுடன் சாப்பிட மிக அருமையாக இருக்கும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • கேழ்வரகில் நார்ச்சத்து அதிக அளவு உள்ளது.
    • கேழ்வரகில் கால்சியம் அதிகம் நிறைந்து இருப்பதால், எலும்புகள் வலுப்படும்.

    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - நான்கு கப்

    உளுந்து - முக்கால் கப் ,

    குடைமிளகாய் - 1,

    ப.மிளகாய் - 3

    கேரட் - 1,

    வெங்காயம் - 1,

    இஞ்சி - சிறிய துண்டு,

    பச்சைப் பட்டாணி - கால் கப்

    மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

    கொத்தமல்லித் தழை - தேவையான அளவு

    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    தாளிக்க

    கடுகு, பெருங்காயம், உளுந்தம் பருப்பு - தலா கால் டீஸ்பூன்,

    காய்ந்த மிளகாய் - மூன்று ,

    கறிவேப்பிலை - சிறிதளவு,

    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாய், குடைமிளகாய், கொத்தமல்லி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    பச்சை பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.

    கேழ்வரகு மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு கெட்டியாகக் கரைத்து வையுங்கள்.

    உளுந்தை நன்றாக கழுவி இரண்டு மணி நேரம் ஊற வைத்து நன்றாக அரைத்து கேழ்வரகு மாவில் சேர்த்து உப்பு போட்டு இட்லி மாவு பதத்தில் முதல் நாள் இரவே கரைத்து வையுங்கள். மறுநாள் நன்றாகப் பொங்கி விட்டிருக்கும். இந்த மாவை இட்லித் தட்டில் ஊற்றி 10 நிமிடங்கள் வேக வைத்து எடுத்து இட்லிகளை ஆற வைத்துச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வையுங்கள்.

    கடாயில் எண்ணெய் சேர்த்துக் கடுகு, பெருங்காயம், உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் குடைமிளகாய், கேரட் துருவல், வேகவைத்த பட்டாணி, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

    பிறகு கொஞ்சம் உப்பு சேர்த்து வெட்டி வைத்த இட்லித் துண்டுகளைப் போட்டு நன்றாகப் புரட்டி யெடுங்கள்.

    கடைசியாக கொத்தமல்லித் தழையைத் தூவி இறக்குங்கள்.

    இப்போது சூப்பரான கேழ்வரகு மசாலா இட்லி ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    ×