என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "telangana govt"

    • கிலோ கணக்கில் மாணவர்கள் நோட்டு, புத்தகங்களை சுமந்து செல்வதால் நாளடைவில் அவர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
    • இந்த கல்வியாண்டு முதல் பள்ளிகளில் மாதாந்திர ‘நோ பேக் டே’ திட்டம் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    குழந்தைகள் 5 வயது பூர்த்தியான பின்னர் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். அப்படியே பள்ளிக்கு அழைத்துச் சென்றாலும் அங்குள்ள ஆசிரியர் குழந்தைகளை தலையை சுற்றி காதை தொடுமாறு கூறுவார். அப்படி காதை தொட்ட குழந்தைகள் தான் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.

    ஆனால் இன்று காலம் மாறிவிட்டது. 2½ வயது ஆகிவிட்டாலே மழலையர் பள்ளிகளில் குழந்தைகள் சேர்க்கப்படுகின்றனர். அவர்களுக்கு புத்தகம் பை வீட்டு பாடம் என ஆரம்பத்திலேயே சுமைகள் அதிகரிக்கிறது.

    கிலோ கணக்கில் மாணவர்கள் நோட்டு, புத்தகங்களை சுமந்து செல்வதால் நாளடைவில் அவர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

    இதுதொடர்பாக பெற்றோர், பள்ளி நிர்வாகத்தினர் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் குறித்து டாக்டர்கள் எச்சரிக்கை எடுத்துள்ளனர்.

    பள்ளி மாணவர்களின் முதுகு எலும்பை பாதுகாப்பது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் முக்கிய கடமையாகும். மாணவர்களின் தோள் பையின் எடை அதிகரிப்பதால் கழுத்து வலி, முதுகுவலி, தோள் பட்டை வலி மற்றும் முதுகு எலும்பு வளைதல் ஆகிய உடல்நல பாதிப்புகள் உண்டாகின்றன.

    தவறான தோள் பையை பயன்படுத்துவது மற்றும் தோள் பையை தவறான முறையில் தொடர்ந்து பயன்படுத்துவதால் எதிர்காலத்தில் இளம் வயதிலேயே முதுகு கூன் விழுதல், சுவாச கோளாறு, முதுகு தண்டுவட சவ்வு விலகுதல் போன்ற பிரச்சனைகள் வரும் அபாயம் உள்ளது எனக் கூறியுள்ளனர்.

    பள்ளிக் குழந்தைகளின் புத்தக பை சுமையை குறைக்க தெலுங்கானா மாநில அரசு இந்த கல்வியாண்டில் புதிய திட்டம் ஒன்றை தொடங்கியுள்ளது.

    தெலுங்கானாவில் மாணவர்களின் சுமையை குறைக்க வாரத்தில் ஒரு நாள் 'நோ பேக் டே' புதிய திட்டத்தை அரசு அறிவித்துள்ளது.

    அதன்படி இந்த கல்வியாண்டு முதல் பள்ளிகளில் மாதாந்திர 'நோ பேக் டே' திட்டம் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இதில் ஒவ்வொரு மாதமும் 4-வது சனிக்கிழமையன்று இந்த 'நோ பேக் டே' கடைபிடிக்கப்படும்.

    அந்த நாட்களில் புத்தக பை கொண்டு செல்ல வேண்டாம்.

    ஆண்டு முழுவதும் மொத்தம் 10 பேக் இல்லாத நாட்கள் கடைபிடிக்கப்பட உள்ளது. இதன்மூலம் மாணவர்கள் புத்தக பையை சிரமத்தோடு சுமந்து வருவது தடுக்கப்பட்டுள்ளது.

    தெலுங்கானா மாநில கல்வி காலண்டர் வெளியிடப்பட்டது. அதில் ஜூன் 12, 2023 முதல் ஏப்ரல் 23, 2024 வரையிலான கல்வியாண்டில் 'நோ பேக் டே' நாளாக அறிவித்த தேதிகளை கோடிட்டு காட்டியுள்ளது.

    இந்த 'நோ பேக் டே' நாளில் மாணவர்களுக்கு வாசிப்பு பயிற்சி, யோகா மற்றும் தியானம் உள்ளிட்ட சிறப்பு வகுப்புகள் நடைபெறும்.

    இதுகுறித்து அந்த மாநில கல்விச் செயலாளர் கூறியதாவது:-

    இந்த 'நோ பேக் டே' நாளில் பள்ளி மாணவர்களுக்கு பாடங்களை தவிர மற்ற செயல்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது.

    இந்த 'நோ பேக் டே' நாள் கடைபிடிக்கப்படுவதால் யோகா, விளையாட்டு திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படும்.

    இதன்மூலம் மாணவர்கள் கற்றல் திறன் மற்றும் பொது அறிவு வளரும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திட்டத்திற்கு அரசு ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
    • உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் வரை காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

    தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டம் தொடங்கப்பட்ட உடனே தெலுங்கானா மாநிலத்தில் இருந்து அதிகாரிகள் தமிழகம் வந்தனர். அவர்கள் சென்னையில் உள்ள அரசு பள்ளிகளில் செயல்ப டுத்தப்படும் காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்தனர்.

    இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    வருகிற அக்டோபர் 24-ந் தேதி முதல் தெலுங்கானா மாநில அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் தொடங்கப்படுகிறது.

    இந்த திட்டத்திற்கு அரசு ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் வரை காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

    • ஒரு லட்சம் ரூபாய் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடி தொகை விவசாயிகள் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
    • இதற்கான 7 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது- தெலுங்கானா முதல்வர்.

    ஒரு லட்சம் ரூபாய் வரையிலான விவசாயிகள் பயிர்க்கடன்கள் நாளை தள்ளுபடி செய்யப்படும் என தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார். காங்கிரஸ் அரசின் வாக்குறுதிப்படி தள்ளுபடி செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ-க்கள், எம்எல்சி-க்கள், எம்.பி.க்கள் மற்றும் மற்ற அதிகாரிகள் இடையிலான ஆலோசனைக் கூட்டத்தின்போது மாநில அரசின் இரண்டு லட்சம் ரூபாய் பயிர்க்கடன் வாக்குறுதியின் ஒரு பகுதியாக நாளை முதல் படிப்படியாக விவசாயிகளின் கணக்கில் பணம் செலுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

    சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட இருக்கிறது. ஜூலை மாதம் இறுதியில் ஒன்றரை லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும். ஆகஸ்ட் மாதத்துடன் 2 லட்சம் ரூபாய் வரையிலான பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு முடிவடையும் எனவும் தெரிவித்துள்ளார்.

    ஒவ்வொரு விவசாயியையும் கடன் சுமையிலிருந்து விடுவிப்பதே காங்கிரஸ் அரசின் நோக்கம். கடந்த சந்திரசேகர் ராவின் பிஆர்எஸ் அரசு செய்ததைப் போல, கடன் தள்ளுபடி என்ற பெயரில், தனது அரசாங்கம் விவசாயிகளை ஏமாற்றவில்லை என ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.

    2 லட்சம் ரூபாய் பயிர்க்கடன் தள்ளுபடி ஒரே தவணையில் விவசாயிகள் கணக்கில் செலுத்தப்படும். மொத்தமாக 31 ஆயிரம் கோடி ரூபாய் இதற்காக தெலுங்கானா அரசு ஒதுக்கியுள்ளது.

    2022 தேர்தல் பிரசாரத்தின்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2 லட்சம் ரூபாய் வரை பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்தார். அதை நிறைவேற்றுவது அரசின் கடமை எனவும் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    • திட்டத்தின் கீழ் திருநங்கைகள் போக்குவரத்து மேலாண்மைக்கு பயிற்சியளிக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
    • திருநங்கைகளுக்கு தனித்தனியான சீருடைகளை உருவாக்கும் பணியிலும் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

    ஐதராபாத் போக்குவரத்து போலீசாருக்கு உதவியாக திருநங்கைகள் பணியமர்த்தப்படுகிறார்கள். அவர்களுக்கென்று தனித்தனி சீருடைகள் தயாரிக்கப்பட்டுள்ளது.

    ஒதுக்கப்பட்ட பிரிவினரின் வேலைவாய்ப்பை நிவர்த்தி செய்வதற்கான திட்டத்தின் கீழ் தெலுங்கானா அரசாங்கம் இந்தியாவின் முதல் திருநங்கைகள் சார்ந்த அரசு ஆட்சேர்ப்பு மற்றும் சமூக நலத் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் திருநங்கைகள் போக்குவரத்து மேலாண்மைக்கு பயிற்சியளிக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

    முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்த திட்டத்தின்படி, திருநங்கைகள் அடையாளம் காணப்பட்டு பணியமர்த்தப்பட்டவுடன், அவர்கள் ஐதராபாத் போக்குவரத்து காவல்துறைக்கு உதவ சிறப்புப் பயிற்சி பெறுவார்கள்.

    அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், திருநங்கைகள் பணியமர்த்தப்படுவதால் மென்மையான சாலை நிர்வாகத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. "அவன்/அவள்" மற்றும் "அவன்/அவள்" தனி நபர்களுக்கு தனித்தனியான வடிவமைப்புகளுடன், திருநங்கைகளுக்கு தனித்தனியான சீருடைகளை உருவாக்கும் பணியிலும் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

    கூடுதலாக, பணியமர்த்தப்பட்டவர்களுக்கு சமத்துவம் மற்றும் மரியாதையை உறுதி செய்வதற்காக சம்பளம் மற்றும் சலுகைகள் உள்ளிட்ட வேலைவாய்ப்பு விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டு வருவதாக கூறினார்.

    • தெலுங்கானாவில் தொழில்துறை படிப்புகளில் ஆந்திர மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது.
    • தெலுங்கானாவை சேர்ந்த மாணவர்களுக்கு 85 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது.

    ஆந்திரா, தெலுங்கானா மாநில பிரிவினையின் போது இரு மாநிலங்களுக்கு இடையே 10 ஆண்டுகளுக்கான கல்வி இட ஒதுக்கீடு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம் இந்த ஆண்டு முடிவடைகிறது.

    இதனால் வரும் கல்வியாண்டு முதல் தெலுங்கானாவில் தொழில்துறை படிப்புகளில் ஆந்திர மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது. தெலுங்கானாவை சேர்ந்த மாணவர்களுக்கு 85 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 15 சதவீத ஒதுக்கீடு வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது.

    இந்த அறிவிப்பின் மூலம் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் தெலுங்கானா கல்வி நிறுவனங்களில் இனி இட ஒதுக்கீட்டில் சேர்ந்து படிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    விவசாயிகள், தொழிலாளர்கள், ஏழை மற்றும் எளிய மக்களுக்கு செழிப்பைக் கொண்டு வருவதில் கவனம் செலுத்தும் ஒரு முன்மாதிரி மாநிலமாக உருவாகும்.
    ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம் பிப்ரவரி 2014-ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் போது தெலுங்கானா மாநிலம் இன்று உருவாக்கப்பட்டது.

    இந்நிலையில், தெலுங்கானா உருவான நாளையொட்டி அம்மாநில மக்களுக்கு காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ராகுல் காந்தி மேலும் கூறியதாவது:-

    இந்தியாவின் இளைய மாநிலமான தெலுங்கானா, சிறந்த எதிர்காலத்திற்கான மக்களின் ஆசைகளில் இருந்து பிறந்தது. காங்கிரஸ் கட்சியும் சோனியா காந்தியும் மக்களின் குரலுக்கு செவிசாய்த்து, தெலுங்கானா கனவை நனவாக்க தன்னலமின்றி உழைத்ததில் நான் பெருமைப்படுகிறேன்.

    கடந்த 8 ஆண்டுகளில் கேசிஆர்ரின்  தலைமையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சியால் தவறான நிர்வாகத்தை சந்தித்துள்ளது. தெலுங்கானா உருவான நாளில் புகழ்பெற்ற தெலுங்கானாவை உருவாக்குவதற்கான காங்கிரஸின் உறுதிப்பாட்டை நான் மீண்டும் உறுதிப்படுத்த விரும்புகிறேன்.

    குறிப்பாக, விவசாயிகள், தொழிலாளர்கள், ஏழை மற்றும் எளிய மக்களுக்கு செழிப்பைக் கொண்டு வருவதில் கவனம் செலுத்தும் ஒரு முன்மாதிரி மாநிலமாக உருவாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்..  புதிய பாராளுமன்ற கட்டிடம் நவம்பர் 26-ந்தேதி திறப்பு?
    ×