search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை ஐகோர்ட்"

    • சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக விஜயலட்சுமி போலீசில் புகார் அளித்திருந்தார்.
    • வழக்கை திரும்ப பெறுவதாக புகார்தாரர் கூறினாலும் காவல்துறை பாலியல் வன்கொடுமையை விசாரிக்க அதிகாரம் உள்ளது.

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011ம் ஆண்டு வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்திருந்தார்.

    இந்த புகாரின் அடிப்படையில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான், சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.

    அந்த மனுவில், "கடந்த 2011ம் ஆண்டு அளித்த புகாரை 2012ஆம் ஆண்டிலேயே திரும்பப் பெற்றுக் கொள்வதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த கடிதத்தின் அடிப்படையிலும், விசாரணையின் அடிப்படையிலும், போலீசார் வழக்கை முடித்து வைத்த நிலையில், தற்போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த வழக்கை ரத்து செய்யவேண்டும் என்று" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது விஜயலட்சுமி கொடுத்த புகாரை ரத்து செய்யமுடியாது எனக்கூறி சீமான் தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது

    இவ்வழக்கின் விசாரணையில் வழக்கை திரும்ப பெறுவதாக புகார்தாரர் கூறினாலும் காவல்துறை பாலியல் வன்கொடுமையை விசாரிக்க அதிகாரம் உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து இவ்வழக்கு விசாரணையை 12 வாரத்திற்குள் முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது.

    • சீமானின் புகைப்படம் குறித்த ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கூறி வந்தனர்.
    • பிரபாகரனை சந்தித்தது குறித்து யாருக்கு நிரூபிக்க வேண்டி இருக்கு. எனக்கு அவசியம் இல்லை.

    விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் உடன் சீமான் இருப்பது போன்ற புகைப்படத்தை எடிட் செய்ததே நான் தான் என்று இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கூறியது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

    இதனால் சீமானின் புகைப்படம் குறித்த ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கூறி வந்தனர்.

    இதனிடையே, 15 ஆண்டுகளுக்கு முன் வெளியான புகைப்படம் அது. 15 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்கள்.. பிரபாகரனுடன் நான் எடுத்த புகைப்படம் போலி என்கிறார்கள்.. அதற்கான ஆதாரத்தை வெளியிடுங்கள். பிரபாகரனை சந்தித்தது குறித்து யாருக்கு நிரூபிக்க வேண்டி இருக்கு. எனக்கு அவசியம் இல்லை என்று சீமான் கூறியிருந்தார்.

    இந்நிலையில் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் படத்தை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பயன்படுத்த தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    மனுவில், பிரபாகரன் படத்தை அரசியல் ஆதாயத்திற்காக சீமான் பயன்படுத்தி வருகிறார் என்றும் பிரபாகரன் படத்தை சீமான் பயன்படுத்த தடை விதிக்கக்கோரியும் வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார்.

    தமிழக அமைச்சரவை தீர்மானத்தின்படி இன்னும் எங்களை விடுதலை செய்யவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் நளினி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள நளினி தற்போது ஒரு மாதம் பரோலில் வெளியே வந்துள்ளார்.

    இந்நிலையில், தனது கணவர் முருகனுக்கு பரோல் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:

    ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் தனக்கு தமிழக அரசு பரோல் வழங்கியதால் தாய் பத்மாவுடன் தங்கியிருக்கிறேன். ஆனால், வேலூர் சிறையில் இருக்கும் எனது கணவர் முருகனுக்கு பரோல் வழங்கப்படவில்லை.

    31 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவிக்கும் எங்களை விடுதலை செய்வது தொடர்பான தமிழக அமைச்சரவை தீர்மானத்தின்படி இன்னும் எங்களை விடுதலை செய்யவில்லை . 

    மருத்துவக் காரணங்களுக்காக எனது கணவர் முருகனை 6 நாட்கள் பரோலில் செல்ல அனுமதிக்கக் கோரி கடந்த மே 26-ம் தேதி நானும், மே 21-ம் தேதி எனது தாய் பத்மாவும் தமிழக அரசிடம் மனு அளித்தோம். 

    அந்த மனுக்கள் இதுவரை பரிசீலிக்கப்படவில்லை. எனவே, எனது கணவர் முருகன் 6 நாட்கள் பரோலில் செல்ல அனுமதிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு நளினி தனது மனுவில் கோரியிருந்தார். 

    நளினி தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை வருகிறது.

    ×