என் மலர்
முகப்பு » tag 330789
நீங்கள் தேடியது "டெஸ்டிங் டிராக்"
ஹூண்டாய் நிறுவனம் தெலுங்கானா மாநிலத்தில் ரூ. 1400 கோடி முதலீடு செய்ய இருக்கிறது. இதற்கான அறிவிப்பு தெலுங்கானா தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப மந்திரி முன்னிலையில் வெளியானது.
ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் இந்தியாவில் புதிதாக டெஸ்டிங் டிராக் அமைக்க தெலுங்கானா மாநிலத்திற்கு உதவி செய்ய இருக்கிறது. மாநில அரசின் மொபிலிட்டி வேலி எனும் திட்டத்தின் கீழ் புதிதாக டெஸ்டிங் டிராக்குகள் அமைக்கப்பட உள்ளன. இந்த திட்டத்தில் ஹூண்டாய் நிறுவனம் ரூ. 1,400 கோடி முதலீடு செய்ய இருக்கிறது. மேலும் இந்த திட்டத்தில் பங்குதாரர் ஆக ஹூண்டாய் நிறுவனம் இடம்பெற இருக்கிறது.
முதலீடு பற்றிய அறிவிப்பின் போது ஹூண்டாய் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மூத்த அலுவலர் யாங்சோ சி மற்றும் தெலுங்கானா மாநிலத்துக்கான தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப மந்திரி கே.சி. ராமா ராவ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த அறிவிப்பு சுவிட்சர்லாந்தின் டாவோஸ் பகுதியில் நடைபெற்ற பொருளாதார சந்திப்பின் போது வெளியானது.
தெலுங்கானா மாநிலத்தின் போக்குவரத்து துறையை உறுதிப்படுத்த ஹூண்டாய் நிறுவனத்தின் பங்கு உதவியாக இருக்கும். தெலுங்கானாவில் அறிவிக்கப்பட்டு இருக்கும் மொபிலிட்டி வேலி என்ற திட்டம் நாட்டிலேயே முதல் முறையாக இங்கு தான் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டம் பற்றிய விரிவான தகவல்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இந்தியாவில் பல்வேறு ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் தங்களுக்கென சொந்தமாக டெல்டிங் டிராக்-களை வைத்துள்ளன. ஹூண்டாய் மோடடார், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா போன்ற நிறுவனங்கள் தங்களின் உற்பத்தி ஆலைக்கு மிக அருகில் டெஸ்டிங் டிராக்-களை அமைத்துள்ளன.
×
X